தேசிய அனல்மின் கழகம்

சனி, 30 ஜனவரி, 2010

தேசிய அனல்மின் கழகம்


வரும் நிதி ஆண்டில், விரிவாக்கத்துக்காக ரூ.29,000 கோடி முதலீடு செய்ய திட்டம்


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு


மும்பை
என்.டி.பி.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய அனல்மின் கழகம், வரும் 2010&11&ஆம் நிதி ஆண்டில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.29,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி., அதன் மின்சார உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் இந்த மாபெரும் முதலீட்டை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பங்கு வெளியீடு
என்.டி.பி.சி. நிறுவனம் இரண்டாவது பங்கு வெளியீட்டில் இறங்க தயாராகி உள்ளது. இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில், இந்நிறுவனத்தின் இயக்குனர் (நிதி) ஏ.கே.சிங்கால் இத்தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், Òவரும் நிதி ஆண்டில், நிறுவனம் மேலும் 4,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் அதன் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதனையடுத்து ரூ.29,481 கோடி முதலீடு செய்ய தயாராகி வருகிறதுÓ என்று தெரிவித்தார்.
நடப்பு 2009&10&ஆம் நிதி ஆண்டில், என்.டி.பி.சி. நிறுவனம் அதன் மின் உற்பத்தி திறனை 3,300 மெகா வாட் அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. எனினும் இந்நிறுவனத்தின் சிபாட் மின் திட்டத்தின் முதல் பிரிவு இவ்வாண்டு ஆகஸ்டு மாதத்தில்தான் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதனால் நடப்பு நிதி ஆண்டுக்கான இலக்கு எட்டப்படவில்லை. சிபாட் மின் திட்டம் 1,320 மெகா வாட் திறன் கொண்டதாகும். இத்திட்டம் தலா 660 மெகா வாட் திறன் கொண்ட இரண்டு பிரிவுகளாக உருவாக்கப்படுகிறது.
வணிக கடன்கள்
மாபெரும் முதலீட்டுச் செலவை மேற்கொள்ள முடிவு செய்துள்ள நிலையில், இத்தொகையின் ஒரு பகுதியை வெளிநாட்டு வணிகக் கடன்கள் மூலமாகவும், மற்றொரு பகுதியை இந்திய வங்கிகளிடம் கடன் பெற்றும் திரட்ட என்.டி.பி.சி. முடிவு செய்துள்ளது. இதில் வங்கிக் கடன்கள் சுமார் ரூ.26,000 கோடியாகவும், வெளிநாட்டு வணிக கடன்கள் ரூ.1,900 கோடியாகவும் இருக்கும்.
என்.டி.பி.சி. நிறுவனத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 30,644 மெகா வாட்டாக உள்ளது. இதனை, 2017&ஆம் ஆண்டுக்குள் 75,000 மெகா வாட்டாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. வரும் நிதி ஆண்டுக்குப் பிறகு, ஆண்டுதோறும் 4,500 முதல் 6,500 மெகா வாட் வரை மின் உற்பத்தி திறனை அதிகரிக்க உத்தேசித்துள்ளது.

நடப்பு ஜனவரி மாதத்தில் ரூ.30,820 கோடி திரட்டப்பட்டது


புதிய பங்கு வெளியீடுகளில் Ôபிரிக்Õ நாடுகள் முன்னிலை



பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை Ôபிரிக்Õ நாடுகளாகும். நடப்பு ஜனவரி மாதத்தில் புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொண்டதில் இந்த நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
26 நிறுவனங்கள்
இந்நாடுகளிலுள்ள 26 நிறுவனங்கள் நடப்பு ஜனவரி மாதத்தில் இதுவரையில் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக 670 கோடி டாலர் (ரூ.30,820 கோடி) திரட்டி உள்ளன. ஜனவரி மாதத்தில் நிறுவனங்கள் இந்த அளவிற்கு நிதி திரட்டியது இதுவே முதல் முறையாகும்.
நடப்பு ஜனவரி மாதத்தில் உலக அளவில் பங்கு வியாபாரத்தில் மந்தநிலை உருவாகி உள்ளபோதிலும், Ôபிரிக்Õ நாடுகளிலுள்ள நிறுவனங்கள் அதிக நிதியை திரட்டி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம் மற்றும் பங்கு வர்த்தகத்தில் எழுச்சி ஏற்பட்டிருந்த கடந்த 2007&ம் ஆண்டில் Ôபிரிக்Õ நாடுளில் உள்ள நிறுவங்கள் 23 புதிய பங்கு வெளிடுகள் வாயிலாக 390 கோடி டாலர் திரட்டி இருந்தன.
கடந்த 2008&ஆம் ஆண்டில் 22 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக 350 கோடி டாலர் திரட்டின. எனவே நடப்பு ஜனவரி மாதத்தில் Ôபிரிக்Õ நாடுகளிலுள்ள நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டு நடவடிக் கைகளில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இது, உலக அளவில் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட நிதியில் 76 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இது 5.6 சதவீதமாக இருந்தது.
Ôபிரிக்Õ நாடுகளில், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட நிதியில் சீனாவின் பங்களிப்பு 67 சதவீதமாகும். சீனா நாட்டு நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையில் பங்கு வெளியீடுகளை மேற்கொண்டுள்ளன. அதிக தொகைக்கு நிதி திரட்டியதில் ரஷ்யாவைச் சேர்ந்த உருக்கு உற்பத்தி நிறுவனமான ரூசால் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீடு வாயிலாக 220 கோடி டாலர் திரட்டி உள்ளது.
உலோக துறை
புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக நிதி திரட்டுவதில் உலோகத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. சென்ற 2009&ஆம் ஆண்டில் Ôபிரிக்Õ நாடுகளில் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக 6,300 கோடி டாலர் (ரூ.2,89,800 கோடி) திரட்டப்படன.

சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்


செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 52 கோடியை தாண்டியது



இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சென்ற டிசம்பர் மாதத்தில் 52 கோடியை தாண்டி உள்ளது. உலக அளவில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இது ஒரு மாபெரும் சாதனை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய அத்தியாயம்
சென்ற 2009&ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.76 கோடி அதிகரித்து இருந்தது. இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் புதிதாக செல்போன் சேவையில் 1.91 கோடி பேர் இணைந்து, செல்போன் சேவைத்துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி உள்ளனர். Ôடிராய்Õ அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது.
ஆக, சென்ற டிசம்பர் மாதம் வரையிலுமாக நாட்டில் செல்போன் சேவையை (சி.டீ.எம்.ஏ. மற்றும் ஜி.எஸ்.எம்.) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 52.52 கோடியாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நவம்பர் மாதத்தில் 50.60 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்தது.
பார்தி ஏர்டெல்
ஒரே வாடிக்கையாளர் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் இணைப்புகளை பெறுவது அதிகரித்துள்ளது. இதனால் சென்னை, புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் மக்கள்தொகை யையும் விஞ்சிடும் வகையில் செல்போன் இணைப்பு பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் செல்போன் சேவைத் துறையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்தில் இந்நிறுவனம் 28.50 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது 11.80 கோடி என்ற அளவில் உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சென்ற டிசம்பர் மாதத்தில் கூடுதலாக 28 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 9.40 கோடி என்ற அளவில் உள்ளது. இதனையடுத்து இத்துறையில் இந்நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில் உள்ள வோடாபோன் எஸ்ஸார் நிறுவனமும் சென்ற டிசம்பர் மாதத்தில் 27 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துக் கொண்டுள்ளது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 9.10 கோடியாக உள்ளது.
ஐடியா செல்லுலார் நிறுவனம் சென்ற நவம்பர் மாதத்தில் கூடுதலாக 25 லட்சம் வாடிக்கையாளர்களையும், டிசம்பர் மாதத்தில் 17 லட்சம் வாடிக்கையாளர்களையும் இணைத்துக் கொண்டது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 5.80 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் நான்காவது இடத்தில் உள்ளது.
இருப்பினும் கடந்த 5 மாதங்களாக அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் டாட்டா டெலி சர்வீசஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் சென்ற டிசம்பர் மாதத்தில் கூடுதலாக 30 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஒரு நொடிக்கு ஒரு காசு திட்டத்தை அறிவித்த பிறகு இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிறுவனம் சி.டீ.எம்.ஏ. மற்றும் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் செல்போன் சேவையை அளித்து வருகிறது.இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5.70 கோடியாக உயர்ந்துள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த எம்.டி.என்.எல். மற்றும் பீ.எஸ்.என்.எல். ஆகிய இரு நிறுவனங்களுமாக கூடுதலாக 20 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இவற்றுள் எம்.டி.என்.எல். நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 48 லட்சம் என்ற அளவிலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 6.28 கோடி என்ற அளவிலும் உள்ளது. செல்போன் சேவையில், இந்நிறுவனம் ஆறாவது இடத்தில் உள்ளது.
ஏர்செல்
ஏர்செல் நிறுவனம் சென்ற டிசம்பர் மாதத்தில் 16 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3.10 கோடியாக உள்ளது. செல்போன் சேவைத் துறையில் இந்நிறுவனம் ஏழாவது இடத்தில் உள்ளது.
அண்மையில் புதிதாக செல்போன் சேவையில் களமிறங்கிய சிஸ்டெமா ஷியாம் நிறுவனம் சி.டீ.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் சேவை அளித்து வருகிறது. இந்நிறுவனம் சென்ற டிசம்பர் மாதத்தில் புதிதாக நான்கு லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது.
யூனிநார் நிறுவனம்
யூனிநார் நிறுவனம் ஜி.எஸ்.எம். செல்போன் சேவையில் களமிறங்கி உள்ளது. இந்நிறுவனத்தை, இந்தியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக் குழுமமும், நார்வேயைச் சேர்ந்த டெலினார் நிறுவனமும் இணைந்து தொடங்கி உள்ளன. இந்நிறுவனம் சென்ற டிசம்பர் மாதத்தில் புதிதாக 12 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. சென்ற மாதத்தில் இந்நிறுவனம் ஏழு தொலைதொடர்பு வட்டங்களில் செல்போன் சேவையை தொடங்கி உள்ளது

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை


வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் 5.75 சதவீதமாக உயர்த்தப்பட்டது



இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான கடன் கொள்கை ஆய்வு அறிக்கையை பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ. சுப்பாராவ் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டார். அதில் சி.ஆர்.ஆர். என்றழைக்கப்படும் வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் 5 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டுக் கடன்
இந்த விகிதம் உயர்த்தப்பட்டுள்ள போதிலும் வீடு, வாகனம் மற்றும் கல்விக் கடனிற்கான வட்டிவிகிதத்தை வங்கிகள் உயர்த்தாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) உயர்த்தப்படவில்லை. மேலும் வங்கிகள், அவற்றின் உபரிநிதியை பாரத ரிசர்வ் வங்கியில் அவ்வப்போது இருப்பு வைப்பதற்காக பாரத ரிசர்வ் வங்கியால் வழங்கும் வட்டிக்கான விகிதத்திலும் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்திடும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி, இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் நிதி பற்றாக்குறை மிகவும் உயர்ந்துள்ளது. பணவீக்க விகிதமும் அதிகரித்து வருகிறது. இது, நாட்டிற்கு சவால்களாக அமைந்துள்ளன என்று சுப்பாராவ் தெரிவித்தார்.
வங்கிகள் அவற்றால் திரட்டப்படும் டெபாசிட்டுகளில் குறிப்பிட்ட சதவீதத்தை பாரத ரிசர்வ் வங்கியில் ரொக்கமாக இருப்பு வைக்க வேண்டும். இதற்கு வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் என்று பெயர். இந்த விகிதத்தை பாரத ரிசர்வ் வங்கி 0.75 சதவீதம் உயர்த்தி உள்ளது.
இரண்டு கட்டங்களில்...
முதற்கட்டமாக வரும் பிப்ரவரி 13&ந் தேதியிலிருந்து 0.50 சதவீதமும், இரண்டாவது கட்டமாக பிப்ரவரி 27&ந் தேதியிலிருந்து 0.25 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. இந்த நடவடிக்கையால், வங்கிகள் அவற்றால் திரட்டப்படும் டெபாசிட்டுகளில் கூடுதலாக ரூ.36,000 கோடியை வங்கிகளில் இருப்பு வைக்க வேண்டிய நிலை உருவாகும். இதனால் நாட்டில் பணப்புழக்கம் குறைந்து, பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.) உயர்த்தப்பட்டுள்ளது குறித்து, பட்டேல் இன்ஜினீயரிங் நிறுவனத்தின், தலைமை செயல்பாட்டு அதிகாரி சோனல் பட்டேல் கூறும்போது, Òபாரத ரிசர்வ் வங்கி, சி.ஆர்.ஆர். விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, பாரத ரிசர்வ் வங்கி இந்த விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தி உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது நாட்டில் பணப்புழக்கம் மிகவும் நன்றாக உள்ளது. எனவே கடனிற்கான வட்டிவிகிதம் உயர வாய்ப்பில்லைÓ என்று தெரிவித்தார்.
பணவீக்கம்
சர்க்கரை, உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருள்கள் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. எனவே உணவு பொருள்களுக்கான பணவீக்க விகிதம் ஜனவரி 16&ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 17.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து செப்டம்பர் மாதத்தில் 0.46 சதவீதமாக இருந்த, அனைத்து பொருள்களுக்கான பணவீக்க விகிதம், சென்ற டிசம்பர் மாதத்தில் 7.31 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பாரத ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என முன்பு மதிப்பீடு செய்து இருந்தது. தற்போது உணவு பொருள்களின் விலை மிகவும் உயர்ந்து வருவதால், இது 8.5 சதவீதமாக உயரும் என தற்போதைய ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, சென்ற 2008&ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2009&ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில் ரூ.1.60 லட்சம் கோடி அளவிற்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் மத்திய அரசும் மூன்றுமுறை சலுகை திட்டங்களை அளித்தது. இதுபோன்ற காரணங்களால் சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. நடப்பு 2009&10&ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி முன்னறிவிப்பு செய்துள்ளது. இதற்கு முன்னர் இது, 6 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டு இருந்தது.
கடன் வளர்ச்சி
நடப்பு நிதி ஆண்டில் வங்கிகளால் வழங்கப்படும் கடன் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்க வேண்டும் என பாரத ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளதார பின்னடைவிலிருந்து, உலக நாடுகள் இன்றும் முழுமையான அளவில் மீளவில்லை. எனவே பொருளதார வளர்ச்சியை நிலை நிறுத்துவதை லட்சியமாகக் கொண்டு பாரத ரிசர்வ் வங்கி, ரெப்போரேட் (4.75 சதவீதம்) மற்றும் ரிவர்ஸ் ரேப்போரேட் (3.25 சதவீதம்) ஆகியவற்றை உயர்த்தவில்லை.

பொளாதார நெருக்கடி காலம் முடிந்தது : ஒபாமா

வாஷிங்டன் : 2010ம் ஆண்டு தொடங்கியுள்ளதை முன்னிட்டு அமெரிக்க அ‌திபர் ஒபாமா தேசிய உரை ஆற்றினார். அப்போது அவர் பொருளாதார நெருக்கடி காலம் முடிந்து விட்டது என பெருமிதம் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி நீங்கி விட்டாலும், அது ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை சமாளிக்கும் பணி தொடரும் என்றார்.
மேலும், அவுட் சோர்சிங் தொழிலுக்கு அமெரிக்க அரசு இதுவரை அளித்து வந்த வரிவிலக்கு ரத்தாகிறது என்றார். இதனால், அவுட் சேர்சிங் எனப்படும் கால் சென்டர்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலக்கத்தில் உள்ளனர். அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்களுக்கு தான் இனி வரி சலுகை என ஒபாமா தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவது தான் அரசின் முழுமுதற் கொள்கை என ஒபாமா தெரிவிக்க கூட்டத்தில் கைதட்டல் பலமாக ஒலித்தது. எதிர்கட்சிகளால் சரமாரியாக விமர்சிக்கப்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் நிச்சயம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்றார்.

வங்கி இல்லா கிராமங்களில் சேவை செய்ய வங்கி முகவர்கள்

புதுச்சேரி: வங்கி இல்லாத ஊர்களிலும் வங்கிச் சேவையை வழங்கும் நோக்குடன் இந்தியன் வங்கி சார்பில் ஸ்மார்ட் கார்டு என்ற மின்னணு அட்டை புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டிலேயே முதன் முதலாக புதுச்சேரியில் உள்ள செட்டிப்பட்டு கிராமத்தில் முகவர்கள் மூலம் வங்கிச் சேவை வழங்கும் இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப உதவி அளித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் வி.எஸ்.தாஸ் இந்த ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில், 'வங்கி வசதியற்ற, வங்கி குறைவான பகுதிகளில் வங்கித் தொடர்பாளர் என்கிற முகவர்களுக்கு இந்தியன் வங்கி அனுமதி அளிக்கும். இவர்கள் வங்கியின் சிறிய அளவிலான பணப் பரிவர்த்தனைக்கான அதிகாரம் பெற்ற பிரதிநிதிகளாக செயல்படுவர். அந்தப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்கள், மளிகைக் கடைகள், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள், பொது தொலைபேசி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் போன்றவை வங்கித் தொடர்பாளர்களாக பணியாற்றலாம். வங்கித் தொடர்பாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வங்கிச் சேவை வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டை பயன்படுத்துவதற்கான கருவியை வங்கித் தொடர்பாளர் வைத்திருப்பார். இக்கருவி மூலம் முகவரிடமே பணம் செலுத்தலாம், பெறலாம். பணம் பெறும்போதும், செலுத்தும் போதும் உடனடியாக ரசீது வழங்கப்படும். அப்போது எவ்வளவு பணம் எடுக்கப்பட்டது மற்றும் செலுத்தப்பட்டது என்று கருவியில் குரல் ஒலிக்கும். இதனால் வாடிக்கையாளரை வங்கித் தொடர்பாளர்கள் ஏமாற்ற வாய்ப்பில்லை. எல்லா பணப் பரிமாற்றமும் இணையம் சார்ந்து இருப்பதால், அவை உடனடியாக வாடிக்கையாளர் கணக்குகளில் பதிவு செய்யப்படுகிறது. வங்கி கிளைகளிலும் இந்த கார்டைப் பயன்படுத்தலாம். பாமர மக்கள், சிறிய அளவிலான தொகையை பாதுகாப்பாக செலுத்தி, எடுக்க விரல்பதிவு முறையில் இந்த சேவை இயக்கும். வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு அருகிலேயே இந்த சேவை கிடைக்கும். அவர்கள் நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு வங்கிக் கிளைகளுக்கு செல்லவேண்டியதில்லை' என்றார்.

பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அதிரடி
மும்பை:பணவீக்கத்தை கட்டுப் படுத்தும் நடவடிக்கையாக, கட்டாய ரொக்க கையிருப்பு வீதத்தை, ரிசர்வ் வங்கி 75 புள்ளிகள் அதிகரித்துள்ளது. நிதிக் கொள்கைகள் குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி: குறுகிய கால கடன்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து, பிற வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை. இந்த நிதியாண்டில், 5 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தற்போது, 7.5 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. கட்டாய ரொக்க கையிருப்பு வீதத்தை, 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருப்பதன் மூலம், அதிகப்படியான பணப்புழக்கம் கட்டுப் படுத்தப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது. உணவுப் பொருட்கள் பணவீக்கம், பிற துறைகளுக்கு பரவுவதை கட்டுப் படுத்தவே, இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில் பணவீக்கம், 8.5 சதவீதத்தை எட்டும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6க்கு குட்பை சொல்கிறது கூகுள்!
இந்த ஆண்டுக்குள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6 (ஐஇ-6) பிரவுசருக்கு குட்பை சொல்கிறது கூகுள். இனி வரும் காலங்களில் ஐ.இ 7, பயர்பாக்ஸ் 3, கூகுள் குரோம் 4, சபாரி 3 மற்றும் அதன் மேம்பட்ட பிரவுசர்கள் மட்டுமே கூகுள் இணையதளங்களின் பிரவுசராக தொடருமாம்.

இதுகுறித்து கூகுள் அப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இணையதள பிரவுசர் தொழில்நுட்பத்தின் சிறந்த அம்சங்களையும், செயல்பாட்டையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

அதி நவீன பிரவுசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் குறிப்பாக அதி விரைவு ஜாவா ஸ்கிரிப்ட் பிராசசர் மற்றும் எச்டிஎம்எல்5 ஆகியவை உள்ளடக்கிய அம்சங்களுக்கு ஊக்கமளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆண்டுக்குள் ஐ.இ 6 பிரவுசர் கூகுள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும். அதேபோல இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பழைய வெர்சன்களும் கூட படிப்படியாக கைவிடப்படும். இதனால் இந்த பிரவுசர்களில் கூகுள் தளங்களை சரியாக பார்க்கவோ, 'இன்டர்ஆக்ட்' செய்வதோ முடியாது.

2010ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் கூகுள் டாக்குமென்ட் மற்றும் கூகுள் இணையதளங்கள் இந்த பிரவுசர்கள் செயல்படாது. இந்தக் கால கட்டத்திற்குப் பின்னர் மேற்கண்ட பிரவுசர்களில் கூகுள் இணையதளங்கள் சரிவர செயல்படாது.

இந்த ஆண்டின் பிற் பகுதியில், கூகுள் மெயில் மற்றும் கூகுள் காலண்டர் ஆகியவற்றுக்கும் இந்த பிரவுசர்கள் செயல்படாது.

அதே சமயம், ஐ.இ 7, பயர்பாக்ஸ் 3, கூகுள் குரோம் 4, சபாரி 3 மற்றும் அதன் மேம்பட்ட பிரவுசர்கள் மட்டுமே கூகுள் இணையதளங்களின் பிரவுசராக தொடர்ந்து செயல்படும்.

அடுத்த வாரம் முதல் பழைய பிரவுசர்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் டாக்குமென்ட் மற்றும் கூகுள் இணையதளங்களில் ஒரு செய்தி வெளியாகும். அதில், மேம்பட்ட வெர்சன்களுக்கு மாறிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படும். மேலும் மார்ச் 1ம் தேதிக்கு முன்பும் ஒரு ரிமைன்டர் கொடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலக தற்காலிகப் பணியிடங்கள் ரத்தாகிறது
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியிடங்கள் ரத்தாகும் எனக் கூறப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் 34 அரசுத் துறைகள் செயல்பட்டு வருகின்றன. அரசின் முக்கிய உத்தரவுகள், அறிவிப்புகள் உள்ளிட்டவை இங்கிருந்து வெளியாகின்றன.

நிரந்தரப் பணியிடங்களுடன் குறிப்பிட்ட அளவு தாற்காலிகப் பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படும். அடுத்த ஆண்டு கால நீட்டிப்புக்கான உத்தரவு ஒவ்வொடு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.

கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர், சார்பு செயலாளர் என பல்வேறு நிலைகளில் இந்த தாற்காலிகப் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களில் பணியாற்றுவார்கள். அவற்றில், 150-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய கால நீட்டிப்பு இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால், நடப்பாண்டில் இந்தப் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

கால நீட்டிப்பு வழங்கப்பட்டால் மட்டுமே தாற்காலிக பணியிடங்களுக்கு சம்பளம் அளிக்கப்படும். 150க்கும் மேற்பட்ட பணியிடங்களை நீட்டிக்காததால் அந்த இடங்களில் பணியாற்றுவோருக்கான ஜனவரி மாதச் சம்பளத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, ஜனவரி மாத சம்பளத்தை மட்டும் வழங்கக் கோரி சம்பளம் மற்றும் கணக்குகள் துறைக்கு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை கடிதம் எழுதியுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதத்துக்கு மட்டும் சம்பளத்தை வழங்கக் கோரியுள்ளதால், பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படுமா என்பது சந்தேகம். அதற்குள் அந்தப் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டு விடலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த நிலையில், சோனி எனப்படும் சார்பற்ற பிரிவு அலுவலர் பணியிடங்களை இந்த ஆண்டு நீட்டிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடையே எழுந்துள்ளது.

தாற்காலிகப் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் பட்சத்தில் சோனியை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

உதவிப் பிரிவு அலுவலர் நிலையில் இருந்து பிரிவு அலுவலர் பணியிடத்துக்கு பதவி உயர்வு அளிக்கப்படும்.

பதவி உயர்வு பட்டியலில் உள்ளதை விட, காலியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது சார்பற்ற பிரிவு அலுவலர் என்ற நிலை பின்பற்றப்படும். இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 100 பேர் பயன்பெற்று வந்தனர்.

கடந்த பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த ஆண்டில் இதுவரை அதை நீட்டிப்பதற்கான உத்தரவை அரசு வெளியிடவில்லை. சார்பற்ற பிரிவு அலுவலர் பணியிடங்களை உடனடியாக வழங்கவும் தலைமைச் செயலக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீண்டும் தள்ளிப் போகிறது 3 ஜி ஏலம்-அரசுக்கு ரூ.35,000 கோடி வருவாய் பாதிப்பு!
இந்த நிதியாண்டில் மத்திய அரசுரக்கு வரவேண்டிய ரூ.35,000 கோடி தள்ளிப் போயிருக்கிறது... காரணம் 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் உரிய காலத்தில் நடக்காததுதான்!

இந்த மாதம், அடுத்த மாதம் என தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வந்தது 3 ஜி எனப்படும் அடுத்த தலைமுறைக்கான தொலைபேசி அலைக்கற்றை ஏலம்.

இந்த ஏலம் எப்படி விட வேண்டும், எவ்வளவு அடிப்படை ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும் போன்றவற்றை தொலைத் தொடர்பு அமைச்சகம் மட்டும் நிர்ணயிக்காமல், நிதியமைச்சர் உள்ளிட்ட 5 துறை அமைச்சர்கள் பிரதமர் ஆலோசனையுடன் நிர்ணயிப்பார்கள் என மாற்றியமைக்கப்பட்டது.

இதில் பெரும் இழுபறி நிலவியது. ஒருவழியாக குறைந்தபட்ச ஏலத் தொகையை நிர்ணயித்தாலும், பாதுகாப்பு அமைச்சகம், எல்லைப் புறங்களில் அலைக் கற்றைகள் பரவாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட கால அவகாசம் கேட்க, அதிலும் கால தாமதம் ஏற்பட்டது.

ஒருவழியாக எல்லாம் முடிந்து இந்த பிப்ரவரி அவல்லது மார்ச் மாதமே 3 ஜி ஏலத்தை முடித்து அரசுக்கு வரவேண்டிய ரூ 35000 கோடியை வசூலித்துவிடுவோம் என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ ராசா கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

ஆனால் இப்போது 3 ஜி ஏலமே இந்த நிதியாண்டு நடைபெறாது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையான காரணம் என்ன?

"உண்மையில் பாதுகாப்புத் துறை இன்னமும் எல்லைப் புறங்களில் ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றைகளைத் தடுத்து நிறுத்தும் பணியை முற்றிலும் செய்து முடிக்கவில்லை. இது நமது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால் அந்தப் பணியை முழுமையாக முடிக்கும் வரை 3 ஜி ஏலம் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது. காத்திருக்கத்தான் வேண்டும். எப்படியும் இந்த ஆண்டு மத்தியில் ஆகஸ்ட்-செப்டம்பருக்குள் இந்தப் பணி முடிந்து விடும் எனத் தெரிகிறது... அதன் பிறகுதான் 3 ஜி ஏலம்" என்கிறார்கள் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள்.

இதுகுறித்து இன்னமும் தொலைத் தொடர்புத் துறை மற்றும் நிதித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 3ஜி ஏலத்துக்கு தலைமை வகிப்பவர் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

Read: In English
ஏற்கெனவே மொத்த உற்பத்தியில் 6.8 சதவீதம் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு நிதித் துறை தத்தளித்துக் கொண்டுள்ளது. இந்த சூழலில் குறித்த காலத்தில் 3 ஜி ஏலம் நடக்காததால் அரசுக்கு வரவேண்டிய ரூ.35.000 கோடி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு பட்ஜெட்டில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிஆர்ஆரை உயர்த்தியது ரிசர்வ் வங்கி!
டெல்லி: வணிக வங்கிகள் கட்டாயமாகக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகித அளவு 75 புள்ளிகள் அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.

இதன்படி தற்போது 5.75 சதவீதமாக இந்த மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம், அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவே என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் அளவுக்கதிகமான பணப்புழக்கம் உறிஞ்சப்படும். உபரி ரொக்கம் குறைவதால் விலைநிலை சற்று மட்டுப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிஆர்ஆர் மதிப்பு உயர்த்தப்பட்டிருந்தாலும், ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Read: In English
இதனால் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் வேலைக்கு ஆள் சேர்க்கும் சத்யம்!
மும்பை: மகிந்திரா சத்யம் நிறுவனம் 2000 புதிய பணியாளர்களை பணி நியமனம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. புதியவர்கள் மற்றும் அனுபவமிக்கவர்களின் கலவையாக இந்த நியமனம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வேலைக்குறைப்புக்கு வழிபார்த்துக் கொண்டிருந்த மகிந்திரா சத்யம் இப்போது புதிய ஆட்களை நியமிப்பது குறித்துப் பேசத் துவங்கிவிட்டது. காரணம், மீட்சிப் பாதையில் செல்லத் துவங்கியுள்ளதாம் இந்த நிறுவனம்.

"நிலைமை முன்பு போல மோசமாக இல்லை. வர்த்தகம் நல்ல நிலைக்குத் திரும்பத் துவங்கிவிட்டது. எதிர்காலம் தெளிவாகத் தெரிகிறது. எனவே இப்போது வருகிற வேலைக்கான ஆர்டர்களைச் சமாளிக்க புதிய பணியாளர் நியமனம் அவசியம். இதை இனியும் தள்ளிப் போடாமல் இப்போதே பணி நியமனங்களைச் செய்யப் போகிறோம்" என்கிறார் மகிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர்.

அடுத்த நிதியாண்டிலிருந்து கேம்பஸ் இன்டர்வியூவையும் மீண்டும் தொடங்கப் போவதாக சத்யம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே 2008ம் ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பலரை தேர்வு செய்தது சத்யம் நிறுவனம். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, தாங்கள் அளித்த வேலைவாய்ப்புக் கடிதங்களை அப்படியே விட்டுவிட்டது. இவர்களுக்கு மீண்டும் பணிநியமனம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் அந்த உயர் அதிகாரி.

இந்நிலையில் சமீபத்தில் 6000 மாணவர்களுக்கு தேர்வு வைத்து, அவர்களில் 3000 பேரைத் தேர்வு செய்து வைத்துள்ளது சத்யம். இவர்களை 50 பேர் கொண்ட குழுக்களாக தேர்வு எழுத வைத்து, தேவையானவர்களை இறுதிப் பட்டியலில் இடம் பெறச் செய்யும் திட்டம் உள்ளதாம்.

கங்கைகொண்டான்: படுவேகத்தில் உருவாகும் 'ஐடி' பூங்கா
நெல்லை: கங்கைகொண்டானில் ரூ.24 கோடியில் அமைய உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் வரும் செப்டம்பர் மாதத்தில் நிறைவு பெறும் என அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை கங்கைகொண்டானில் நடைபெற்றுவரும் தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

'தமிழக முதல்வரின் ஆணைப்படி இரண்டாம் நிலை நகரங்களான கோவை, நெல்லை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

இதன்படி கங்கைகொண்டானில் 54 ஆயிரம் சதுர அடியில் நிர்வாக கட்டிடங்கள் ரூ.14 கோடி மதிப்பிலும், உட்கட்டமைப்பு பணிகள் ரூ.10 கோடியிலும் நடந்து வருகின்றன. இப்பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவுபெறும்.

இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் வேலை வாய்ப்புக்களும் அதிகரிக்கும். சதர்ன் லேண்ட், குளோபல் நிறுவனங்களுக்கு தலா 5 ஏக்கரில் நிலம் ஓதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்ப பூங்கா மொத்தம் 389 ஏக்கர் நிலத்தில் அமைய உள்ளது. இதில் தற்போது 100 ஏக்கர் நிலத்தில் பணிகள் நடந்து வருகின்றன' என்றார்.

முட்டைக்கு மைனஸ் ரேட் வழங்கும் என்.இ.சி.சி., : அதிர்ச்சியில் புரோக்கர்கள், வியாபாரிகள்
நாமக்கல்: முட்டையின் தேவையைப் பொறுத்து, மைனஸ் ரேட் வழங்க என்.இ.சி.சி., முடிவு செய்வதால், முட்டை வியாபாரிகள், புரோக்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 800க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கிருந்து, தினமும், 2.50 கோடி முட்டைகள், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யும் முட்டைகளுக்கு, நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தேசிய முட்டை விலை நிர்ணயக்குழு (என்.இ.சி.சி.,) விலை நிர்ணயம் செய்கிறது. வாரத்தில் மூன்று நாள் வீதம், விலை நிர்ணயம் செய்யப்படும். எனினும், கோழிப் பண்ணைகளில் முட்டை எடுக்கும் புரோக்கர்கள், நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் இருந்து, சற்று விலையை குறைத்து முட்டை எடுப்பர். புரோக்கர்களின் ஆதிக்கம் காரணமாக, என்.இ.சி.சி., நிர்ணயம் செய்யும் விலை, கோழிப் பண்ணையாளர்களுக்கு கிடைக்காத சூழல் இருந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், சில நாட்களாக நாள்தோறும் என்.இ.சி.சி., முட்டை விலை நிர்ணயம் செய்து வருகிறது. முட்டையின் தேவையைப் பொறுத்தும் மைனஸ் ரேட் வழங்குவதை, என்.இ.சி.சி., முடிவு செய்கிறது. இது முட்டை வியாபாரிகள், புரோக்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முட்டை வியாபாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் முட்டைக்கு மைனஸ் ரேட் வழங்குவதில்லை. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் காலம், காலமாக மைனஸ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. அதனால், என்.இ.சி.சி., ஒரு விலை நிர்ணயம் செய்தாலும் கூட, புரோக்கர்கள் ஒன்று கூடி, ஒரு விலையை நிர்ணயித்து பண்ணைகளில் முட்டை எடுப்பர். உதாரணத்துக்கு, முட்டை 260 காசுக்கு விற்பனையானால், 40 முதல் 50 பைசா வரை, முட்டையை விலை குறைத்து பண்ணைகளில் புரோக்கர்கள் கொள்முதல் செய்வர். பின், அந்த முட்டையை மூன்று ரூபாய் வரை விற்பனை செய்வர். இதனால், முட்டை விலை உயர்ந்தாலும் பண்ணையாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. முட்டை விலையுடன் வாடகை கொடுத்தால், வியாபாரிகள் பயனடைவர். அதே நேரத்தில் முட்டையை வாங்கும் வியாபாரிகள், அதை கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லும்போது, ஒரு நாள் ஆகிவிடும். தற்போது, நாள்தோறும் முட்டை விலை நிர்ணயம் செய்வதால், முட்டை விற்பனைக்கு கொண்டு செல்லும் சமயத்தில், அதன் விலை குறைந்தால், அது வியாபாரிகளின் கையை கடிக்கும் விதத்தில் அமையும். விலை உயர்ந்தால் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாடுகளுக்கு பண பரிமாற்றம்: அஞ்சல் துறையின் புதிய வசதி
சென்னை: வெளிநாடுகளுக்கு மணியார்டர் மூலம் பண பரிமாற்றம் செய்யும் 'எம்.ஓ., விவேஷ்' திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் இருக்கும் நம் நாட்டை சேர்ந்தவர்கள், இங்குள்ள தங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு 'வெஸ்டர்ன் மணி டிரான்ஸ்பர்' திட்டத்தின் மூலம் பணம் அனுப்பி வந்தனர். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வந்த நிலையில், அஞ்சல் துறையும் தனது அலுவலகங்களில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்திய அஞ்சல் துறை உள்ளூர் பண பரிமாற்றத்திற்கான மணியார்டர் மூலம் வெளிநாடுகளிலும் பணப் பரிமாற்றம் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, 65 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ள இந்திய அஞ்சல் துறை இந்த புதிய திட்டத்திற்கு, 'எம். ஓ., விவேஷ்' என பெயரிட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, சென்னை மத்திய கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் கூறியதாவது:

வெளிநாடுகளில் சென்று சம்பாதித்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவோர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து படிக்கும் பிள்ளைகளுக்கு இங்கிருந்து பணம் அனுப்புவோர் வசதிக்காக இத்திட்டத்தை அஞ்சல்துறை வடிவமைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பந்தப்பட்டவர்கள் பணத்தை பெற முடியும். 'வெஸ்டர்ன் மணி டிரான்ஸ்பர்' அடிப்படையில் அனுப்பப்படும் இந்த பணம், அனுப்பும் அன்று உள்ள மதிப்பின்படி வழங்கப்படும். தொகையின் அடிப்படையில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். இத்திட்டத்தில், இந்தியாவில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரையில் ரொக்கமாகவும், அதற்கு மேற்பட்ட தொகை காசோலையாக அஞ்சல் அலுவலகங்களில் பெறப்படும். வெளிநாடுகளில் இருந்து 2,500 அமெரிக்க டாலர்கள் வரையில் அனுப்பலாம். இதற்காக மத்திய ஆப்ரிக்க நாடுகள், சிங்கப்பூர், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட 65 நாடுகளில் உள்ள அஞ்சல் துறைகளுடன் இந்திய அஞ்சல் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் இங்கு அடுத்த இரண்டு நாட்களுக்குள் பட்டுவாடா செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சென்னை நகர மண்டலத்தை பொறுத்தவரையில் மயிலாப்பூர், தி.நகர், பார்க்டவுன், அண்ணாசாலை, சென்னை ஜி.பி.ஓ., தாம்பரம், பரங்கிமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு வெங்கட்ராமன் கூறினார்.

ஆபிள் நிறுவனத்தின் புதிய ஐபாட் அறிமுகம்
சான்பிரான்சிஸ்கோ: ஆபிள் நிறுவனத்தின் புதிய வகை ஐபாட் சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகப் படுத்தப் பட்டது. இந்த ஐபாடில் வெப் பிரவுசிங், ரீடிங் அன்ட் சென்டிங் மெயில், வாட்ஜ் வீடியோஸ், லிசன் மியூசிக், ப்ளோயிங் கேம், ரீடிங் இ-புக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இது, ஹை-செலுஷன் மல்டி- டச் டிஸ்ப்ளே கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த ஐபாட் 0.5 இன்ச் அடர்த்தியும் 1.5 பவுண்ட் எடையும் கொண்டுள்ளது.


இந்த ஐபாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப் பட்ட 12 அப்ளிகேஷன்கள் இடம் பெற்றுள்ளன. மார்ச் மாதம் சந்தைக்கு வரும் இதன் விலை 499 அமெரிக்க டாலராகும்.

ஐபாட் இரண்டு வெர்சன்களில் வருகின்றன. அவற்றில் டபுல்யூ.ஐ-எப்.ஐ., மற்றொன்று டபுல்யூ.ஐ-எப்.ஐ.,யுடன் 3ஜி இணைந்தது. இத்துடன் 802.11 என் டபுல்யூ.ஐ, மற்றும் 3 ஜி வெர்சன்கள் இடம்பெற்றுள்ளன.

புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட இந்த ஐபாட்டின் ஸ்பீடு, ஹெச்.எஸ்.டி.பி.ஏ., ‌நெட்வெர்க்கில் 7.2 எம்.பி.பி.எஸ்., ஆகும்.

அக்.,-டிசம்பரில் 153 மில்லியன் டாலர் லாபம்: யாகூ
நியூயார்க்: இண்டர்நெட் என்றாலே முதலில் யாகூ என்பது தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு முன்னேறியுள்ள யாகூ நிறுவனம், தற்போது காலாண்டு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 153 மில்லியன் டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பில் இது ரூ. 693 கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்திற்கு நிகர நஷ்டமாக 303 மில்லியன் டாலர் ஏற்பட்டுள்ளது.

இதே போல, யாகூவின் வருவாய் 2009ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 1.73 பில்லியனாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 4 சதவீதம் உயர்வு.

இருப்பினும், கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் போது, இது 10 சதவீதம் அதிகமாகும்.

இந்தாண்டு நிகர லாபம் உயர்ந்திருப்பதற்கு, விளம்பர பிரிவில் ஏற்படுத்திய முன்னேற்றமே காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2009ம் முழு வருடத்தில், யாகூ நிறுவனத்தின் நிகர லாபம் 598 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு 419 மில்லியன் டாலராக இருந்தது.

நிறுவனத்தின் வருமானம் 7.2 பில்லியன் டாலரில் இருந்து 6.46 பில்லியன் டாலராக சரிந்துள்ளது.

மெர்சிடிஸ் பென்சின் புதிய வகை கார் அறிமுகம்
புதுடில்லி: மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா., நிறுவனத்தின் புதிய வகை கார் சீடன் எஸ்350 டில்லியில் அறிமுகப் படுத்தப் பட்டது.
இதன் விலை 80.5 லட்சம் ரூபாயில் இருந்து 82 லட்சம் வரை உள்ளது.

புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட இந்த வகை காரை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகைகளிலும் உள்ளது.

பெட்ரோல் பயன்படுத்தப் படும் கார் ரூ. 82 லட்சத்திற்கும் டீசல் பயன்படுத்தப் படும் கார் ரூ. 80.5 லட்சத்திற்கும் விற்பனை செய்யப் படுகிறது.

புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ள இந்த சீடன் எஸ்350 புதிய எஸ்-கிளாஸ் கார் நிச்சயம் அனைவரும் விரும்பும் விதமாக இருக்கும் என்று மெர்சிடிஸ் இந்தியா நிறுவன இயக்குனர் மற்றும் சி.ஈ.ஓ., வில்பிரைட் அல்பர் தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானி மீது பால்தாக்கரே பாய்ச்சல்
மும்பை: மும்பை இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று முன்னணி தொழிலதிபர்களின் ஒருவரான முகேஷ் அம்பானி கூறி இருந்தார். இதனால், முகேஷ் அம்பானியை சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடுமையாக சாடியுள்ளார். ' ரிலையன்ஸ் நிறுவனங்கள் மீது முகேஷ் அம்பானிக்கு உள்ள உரிமையைப் போன்று மராத்தி மக்களுக்கு மும்பை மீது உரிமை உள்ளது. மும்பை மகாராஷ்ட்ராவின் தலைநகரம்.தொடர்ந்து அவ்வாறே இருக்கும்.எனவே மும்பை மற்றும் மராத்தி மைந்தர்களின் பாதையில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று முகேஷ் அம்பானியை பால்தாக்கரே சாடியுள்ளார். மேலும், மும்பை, சென்னை மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம் என்று கூறும் முகேஷ் அகமதாபாத்,ஜாம்நகர் மற்றும் ராஜ்கோட் போன்ற நகரங்களை விட்டுவிட்டது ஏன்? 'என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது கட்சிக்கு சொந்தமான சாம்னா என்ற பத்திரிக்கையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு பால்தாக்கரே சாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஷாரூக்கானுக்கு ரூ. 1.38 கோடியில் மெழுகுசிலை
லண்டன்: லண்டனில் ரூ.1.38 கோடியில் நிறுவப்பட்ட பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மெழுகுச்சிலை திறக்கப்பட்டது. லண்டனில் உள்ள மாடேம் டஸ்சாட்ஸ் அருங்காட்சியகத்தில் சர்வதேச அளவிலான பிரபலங்களின் மெழுகுச்சிலைகளை நிறுவுவது வழக்கம். சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஓபாமாவும், அவரது மனைவி மிச்செலியும் அருகருகே நிற்பது போன்ற மெழுகுச்சிலை திறக்கப்பட்டது. தற்போது பாலிவுட் பிரபல நடிகர் ஷாரூக் கான் கைகளை கட்டியடி நிற்கும் மெழுகுச்சிலையை நிறுவப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே சிலை தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் அந்த சிலை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. லண்டனின் தனக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக ஷாரூக் கான் ஏற்கனவே அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனை நிரூபிப்பது போல ஏராளமான ரசிகர்கள் ஷாரூக் சிலை அருகே நின்று போட்டோ எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

சத்யம் ராஜு பரம ஏழை: நியூயார்க் நீதிமன்றம் ஏற்பு

நியூயார்க்: சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவை, பரம ஏழையாக அறிவித்ததோடு, அவர் கோர்ட் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளித்து, அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி குறித்து, அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு கடந் தாண்டு ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மற்றும் இவரது சகோதரர் மீது அமெரிக்க கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு ஒன்றில், தாங்கள் பரம ஏழை என்று ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் நிதி அலுவலர் ஸ்ரீநிவாஸ் வட்லமணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுவில், 'நாங்கள் பரம ஏழை என்பதால், அமெரிக்காவில் எங்களுக்காக வாதாட வக்கீல் நியமிக்கவோ, கோர்ட் கட்டணம் செலுத்தவோ அல்லது கோர்ட் விதிக்கும் பிற நிதி உத்தரவுகளை பூர்த்தி செய்யவோ இயலவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நியூயார்க் கோர்ட் நீதிபதி பார்பரா ஜோன்ஸ், தன் உத்தரவில் கூறியதாவது:

ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் நிதி அலுவலர் ஸ்ரீநிவாஸ் வட்லமணி ஆகியோர், தாங்கள் பரம ஏழைகள் என்பதற்கு போதுமான அளவு விளக்கமளித்துள்ளனர்.

அவர்களால் அமெரிக்க சட்டப்படி செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

எனவே, அவர்களுக்கு கோர்ட் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு பார்பரா ஜோன்ஸ் கூறினார்

விப்ரோ நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு கம்ப்யூட்டர்
சென்னை: தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ லிமிடெட் தற்போது மறு சுழற்சி செய்யும் வகையில் நச்சுத் தன்மை அற்ற கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய கம்ப்யூட்டர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இன்டல் டியூயல் கோர் தயாரிப்புகள் இதில் இடம்பெறும். இதன் மூலம் கார்சினோஜெனிக் எனப்படும் நச்சுத்தன்மை அற்ற கம்ப்யூட்டர்கள் சந்தைக்கு வந்துள்ளது. இவற்றை மறு சுழற்சி செய்யலாம். இதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். இந்த கம்ப்யூட்டர்கள் 2 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் தலைவர் அனுராக் பெஹர் தெரிவித்தார்

கலகலத்துப் போனதற்கு காரணம் யார்?

வியாழன், 28 ஜனவரி, 2010

சந்தை கலகலத்துப் போயிருக்கிறது. யாரால் சந்தை சமீபகாலமாக உயர்ந்து கொண்டு வந்ததோ அவர்களாலேயே சந்தை கலகலத்துப் போயிருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டுக் கம்பெனிகள், டிசம்பர் வரை இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்து வந்தன. ஆதலால், சந்தை மேலே சென்று கொண்டிருந்தது. அவர்கள், ஜனவரி மாதத்தில் வாங்குவதை குறைத்து, விற்பதை அதிகமாக்கி விட்டனர். அது சந்தையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. திங்களன்று சந்தை மிகவும் ஏற்ற இறக்கமாகவே இருந்தது. மகேந்திரா அண்டு மகேந்திரா கம்பெனி நல்ல முடிவுகளை தந்தும், சந்தையில் அதன் பங்குகள் மிகவும் கீழே தள்ளப் பட்டன. ஆதலால், சந்தையும் 79 புள்ளிகள் கீழே சென்று முடிந்தது. நேற்று சந்தை தொடர்ந்து ஆறாவது நாளாக சறுக்கியது. இந்தியா மட்டுமல்ல, ஆசிய சந்தைகளும் கீழே விழுந்து கொண்டிருக்கின்றன.

வட்டி விகிதங்கள் ஏற்றத் தாழ்வினால் பாதிக்கப்படும் பங்குகளான வங்கி, கட்டுமானத்துறை ஆகியவை நேற்று அதிகம் பாதிக்கப்பட்டன. ரிசர்வ் வங்கி தனது மானிடரி பாலிசி அறிவிப்பை நாளை அறிவிக்கவுள்ளது. அதில் வட்டி விகிதங்கள் கூட்டப்படலாம் என்றும் அல்லது சி.ஆர்.ஆர்., சதவீதம் கூட்டப்படலாம் என்றும் கருதப்படுவதால், சந்தையில் அது சார்ந்த பங்குகள், கீழே விழுந்தன. ஆதலால் பாதிப்பு அதிகமாக இருந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 490 புள்ளிகளை இழந்து, 16,289 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 154 புள்ளிகளை இழந்து, 4,853 புள்ளிகளுடனும் முடிந்தது. 18,000 புள்ளிகளை தாண்டும் என்று எதிர்பார்த்த சந்தை, தற்போது 16,000த்தின் விளிம்பில் வந்து நிற்கிறது; இது தான் பங்குச் சந்தை. புதிய வெளியீடுகள்: சந்தை மேலே சென்று கொண்டிருந்ததை வைத்து, பல புதிய வெளியீடுகள் வருவதாக அறிவித்து, வந்தும் கொண்டிருக்கின்றன. ஆனால், சந்தை திடீரென சறுக்கி விட்டது. என்.டி.பி.சி., ரூரல் எலக்டிரிபிகேஷன் போன்ற அரசு கம்பெனிகளும், வேறு சில தனியார் கம்பெனிகளும் தங்களது வெளியீடுகளை அறிவித்துள்ளன. ஆனால் விழும் சந்தையில் அவை எப்படி பரிணமிக்கப் போகின்றன என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


பணவீக்கம்: டிசம்பர் மாத பணவீக்கம், 7.31 சதவீதமாக இருந்தது. இது, 2008ம் ஆண்டு நவம்பரில், 4.78 சதவீதமாகவும், 2008 டிசம்பரில், 6.15 சதவீதமாகவும் இருந்தது. முக்கியமானப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். காய்கறி விலைகளும் பயமுறுத்துகின்றன. சமீபத்தில் ஒரு முருங்கைகாய் 26 ரூபாய் வரை சென்றது மிகவும் ஆச்சரியமான விஷயம். விலைகளை கட்டுப்படுத்தாத வரை, அது சந்தைகளை பாதிக்கும். காலாண்டு முடிவுகள்: இதுவரை வந்துள்ள, வந்து கொண்டிருக்கும் காலாண்டு முடிவுகள் மோசம் என்று சொல்லும் ரகமில்லை. ஆனால், பிரமாதம் என்று சொல்லும் அளவிற்கு குறிப்பிட்ட கம்பெனிகளே முடிவுகளை அறிவித்துள்ளன. ஒவ்வொரு காலாண்டும், கம்பெனிகளிடமிருந்து சிறப் பான முடிவுகள் வரும் என எதிர் பார்ப்பது தவறு. இது போன்ற எதிர்பார்ப்புகளால் சந்தை கீழே விழுந்து கொண்டிருக்கிறது. பல கம்பெனிகள் நல்ல காலாண்டு முடிவுகளை தந்தும் சந்தையில் நிற்கமுடியாமல் தவிக்கின்றன.


வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: ரிசர்வ் வங்கியின் மானிடரி பாலிசி, எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்க முடியாத காலாண்டு முடிவுகள், ஆசிய, உலக அளவு பங்குச் சந்தைகளில் சரிவு என்று பல, சந்தைகளை அசைத்துப் பார்த்துள்ளன. சந்தை நிறைய புள்ளிகளை இழந்துள்ளது. ஏறி வர இன்னும் சிறிது காலம் பிடிக்கும். சிறிது முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். சந்தையில் இது காத்திருக்க வேண்டிய காலம்.


- சேதுராமன் சாத்தப்பன் -


ஒயர்லெஸ் மூலம் இன்டர்நெட்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு
புதுடில்லி: ஒயர்லெஸ் மூலமாக, கிராமப்புறங்களுக்கும் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. முதற்கட்டமாக, 1,000 ரிசீவிங் மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. 'பிராட் பேண்ட்' இணையதள தொடர்பு ஏற்படுத்தித் தரும் நிறுவனங்களின் கருத்தரங்கு, நேற்று, டில்லியில் நடைபெற்றது. இதில், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜா கலந்து கொள்வதாக இருந்தது.

தவிர்க்க முடியாத காரணங்களால், அவர் பங்கேற்காமல் போனாலும், வாசிக்கப் பட்ட உரையில் கூறியிருப்பதாவது: கிராமப்புறங்களுக்கும் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்த, அரசு தீவிரமாக உள்ளது. அந்த வகையில், ஒயர்லெஸ் மூலம் கிராமப் புறங்களுக்கும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தித் தர, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக முதற்கட்டமாக, 1,000 ரிசீவிங் மையங்களும், இரண்டாம் கட்டமாக 7,000 ரிசீவிங் மையங்களும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையங்களில் இருந்தும், ஐந்து முதல் பத்து கி.மீ., வரை, தொடர்பு பெற முடியும்.


இதன்மூலம், ஒயர்லெஸ் இன்டர்நெட் வெகுவாக பிரபலமாகும் சூழ்நிலை, எதிர்காலத்தில் உருவாகும். தற்போது, 'பிராட் பேண்ட்' மூலம், எட்டு லட்சம் பேர், இன்டர்நெட் வசதியையும், ஒரு கோடியே 20 லட்சம் பேர், 'இன்டர்நெட் கபே' மூலம் இணையதள வசதிகளை பெறுகின்றனர். 'பிராட் பேண்ட்' மூலம், இரண்டு கோடி பேர், இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர் என்பதை, இன்னும் இரண்டு ஆண்டுகளில், 25 கோடி பேராக உயர்த்த வேண்டும். அதற்கான பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. 'பிராட் பேண்ட்' வசதியை பயன்படுத்துவோரின் எண் ணிக்கை உயராததற்கு, விலை தான் காரணம். கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும்; அதற்கு இன்டர்நெட் வசதி ஏற்படுத்தித் தரும் நீங்கள் தான், முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு ராஜா கூறியிருந்தார்.


தொலைத்தொடர்பு துறை செயலர் பி.ஜி.தாமஸ் பேசும் போது, 'இன்டர்நெட் போன்ற தொழில்நுட்பங்களை, கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக பொதுமக்களுக்கு ஏற்ற வகையில், கட்டணங்கள் அமைக்க வேண்டும். அதை, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி தரும் நிறுவனங்கள்தான், செய்ய வேண்டும். 'மொபைல் போன்கள் பிரபலமான அளவுக்கு, இன்டர்நெட் பிரபலம் ஆகாததற்கு இதுதான் காரணம்' என கூறினார்.

தொலைபேசி எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடில்லி: இந்தியாவில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த டிசம்பரில், 56.22 கோடியாக அதிகரித்திருப்பதாக, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) வெளியிட்டுள்ள தகவல்: டிசம்பரில், தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 3.5 சதவீதம் அதிகரித்து, 56.22 கோடியாக உயர்ந்தது. அதற்கு முந்தைய மாதம், தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 54.32 கோடியாக இருந்தது. 'ஒயர்லஸ்' வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த நவம்பரை விட, டிசம்பரில், 3.78 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், கடந்தாண்டு நவம்பரில், 3.71 கோடியாக இருந்த, 'ஒயர்லைன்' வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, டிசம்பரில், 3.70 கோடியாக குறைந்தது. பிராட்பேண்ட் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த நவம்பரில் இருந்ததை விட, டிசம்பரில், 3.16 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது

யூனியன் பாங்க் நிகரலாபம் சரிந்தது
மும்பை: யூனியன் பாங்க் ஆப் இந்தியா(யூ.பி.ஐ.,) டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வங்கியின் நிகர லாபம் 20.5 சதவீதம் சரிவினை கண்டுள்ளது. 2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டு கணக்கெடுப்பின் படி, வங்கியின் நிகரலாபம் 534.13 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இருப்பினும், மொத்த வருமானம் 3,653.79 கோடி ரூபாயில் இருந்து 3,758.32 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வங்கி வட்டி தொகையாக ரூ. 3,293.55 கோடி பெற்றுள்ளது. இது அதற்கு முந்தைய வருடம் ரூ. 3,258.40 கோடியாக இருந்தது.

2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த ஒன்பது மாத கணக்கெடுப்பின் படி, வங்கியின் நிகரலாபம் 1,261.49 கோடி ரூபாயில் இருந்து 1,481.42 கோடி ரூபாயாக சரிந்துள்ளது

ஐ.டி.எப்.சி., நிகர லாபம் 46% உயர்வு
மும்பை: இன்பராஸ்டக்சர் டெவலப்மென்ட் ‌பைனான்ஸ் கம்பெனியின்(ஐ.டி.எப்.சி.,) நிகர லாபம் 46 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஐ.டி.எப்.சி., நிறுவனம், 2009ம் ஆண்டு ‌டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது. இதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம், 46 சதவீதம் உயர்ந்து 269.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மொத்த வருமானம், 997.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு 865.20 கோடி ரூபாயாக இருந்தது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நிறுவத்தின் நிகர லாபம் 39.53 சதவீதம் உயர்ந்து 240 கோடி ரூபாயாக உள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக, மும்பை பங்குச்சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் 0.87 சதவீதம் உயர்வினை கண்டன.


சர்வதேச அளவில் வேலையில்லாதவர் எண்ணிக்கை உயர்வு
ஜெனீவா : உலகம் முழுவதிலும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 200 மில்லியனாக அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வில் 2009ம் ஆண்டில் 212 மில்லியன் மக்கள் வேலையில்லாதவர்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது 2007ம் ஆண்டை விட 19 சதவீதம் அல்லது 34 மில்லியன் அதிகமானதாகும்.


உலகில் வேலை உள்ளவர்களின் ஆண்டு புள்ளி விபரப்படி வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 2008ம் ஆண்டு இறுதியில் 0.9 சதவீதம் அதிகரித்ததாகவும், 2009ம் ஆண்டின் முடிவில் 6.6 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபர பட்டியலின் படி 1991ம் ஆண்டு வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை மிக அதிகபட்சமாக 13.4 சதவீதமாக இருந்தது. இளைஞர்களின் கடுமையான உழைப்பால் படிப்படியாக குறைந்து 2007ம் ஆண்டு 1.6 சதவீதமாக இருந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குனர் குவான் சோமாவியா கூறியதாவது : முடிவற்ற நிலையில் சென்று கொண்டிருக்கும் வங்கிகள் திவாலாகும் நிலையை தடுத்து நிறுத்தி, வேலை வாய்ப்‌பை உருவாக்கித் தருவதே, வேலையில்லாதோர் எண்ணிக்கையை குறைப்பதற்கான சரியான தீர்வாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



சரிவடைந்து வரும் சர்வதேச பொருளாதார நிலை இவ்வாண்டு முன்னேற்றகரமாக இருக்கும். ஐ.எம்.எஃப் நிறுவனம் ‌நேற்று உலக பொருளாதாரம் பற்றிய அறிக்கையில், 2010ம் ஆண்டு உலக பொருளாதாரம் 3.9 சதவீதம் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2010ம் ஆண்டு உலகில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.5 பில்லியன் மக்கள் வேலை இழக்கும் நிலையில் உள்ளதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயில் நிறுவனத்தின் 3ம் காலாண்டு நிகர லாபம் உயர்வு

புதுடில்லி: செயில் நிறுவனத்தி்ன் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,
2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த மாதத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் 1,675.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது அதற்கு முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 843.34 கோடி ரூபாயாக இருந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், நிகர விற்பனை 9,945.78 ‌கோடி ரூபாயில் இருந்து 10,447.63 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த ஒன்பது மாத கணக்கெடுப்பின் படி, ஸ்டீல் உற்பத்தியாளர்கள் நிகரலாபம் ரூ. 4,669.47 கோடியாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு ரூ. 4,688.13 கோடியாக இருந்தது.

டாவோஸில் இன்று உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம்
டாவோஸ்: உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம், சுவிட்சர்லாந்து டாவோஸில் இன்று தொடங்குகிறது. கடந்த ஆண்டு, வளர்ந்த நாடுகள் உட்பட பல நாடுகள் உலக பொருளாதார நெருக்கடியில் சிக்கி அவதிப்ப பட்டன. இந்நிலையில், உலக பொருளாதார நெருக்கடியை தீர்த்து, மீண்டும் இயல்பு நிலைக்கு எப்படி கொண்டுவருவது என்பது குறித்து ஆலேசிக்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், 30 நாடுகளின் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும், 1,400 தொழில், வர்த்தக அதிபர்களும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 100 பேர் பங்கேற்கின்றனர்.


அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு, ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும், அதை தொடர்ந்து ஏற்பட்ட சிக்கலுக்கு பிறகு, இந்த கூட்டம் நடை பெறுகிறது.


அத்துடன் தற்போது தீர்ந்துள்ள நெருக்கடியை தவறாக கையாண்டால், அடுத்த வருடத்தில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில்-வர்த்தக சமுதாயத்தினர் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


வசூலில் டைட்டானிக்கை முந்தியது அவதார்
லண்டன்: உலக அளவில் டிக்கெட் விற்பனையில் அவதார் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், வசூலில் டைட்டானிக்கையும் முந்தியது அவதார் திரைப்படம்.
1997ம் ஆண்டு வெளியாகி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட காதல் படம் டைட்டானிக். இது 1998ம் ஆண்டு வரை உலகம் முழுவதில் இருந்து 8,470 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.

ஆனால், தற்போது சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் அவதார் திரைப்படமோ, கடந்த வாரம் வரை மட்டுமே ரூ. 8,400 கோடியை வசூலாக குவித்துள்ளது.

கடந்த 7 நாட்களில் ரூ.103 கோடி குவித்து டைட்டானிக் சாதனையை முறியடித்து இத்திரைப்படம் முதலிடம் பிடித்தது.

இதுவரை உலக அளவில் அதிக வசூலைக் குவித்த ஹாலிவுட் படமாக டைட்டானிக் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனை அவதார் முறியடித்துள்ளது.


உலகின் முன்னணி 50 வர்த்தக தலைவர்கள் பட்டியலில் 9 இந்தியர்கள்

மும்பை : உலகின் முன்னணி ஐம்பது வர்த்தக தலைவர்கள் பட்டியலில் 9 இந்தியர்களி்ன் பெயர்கள் இடம்பிடித்துள்ளன.
இங்கிலாந்தை சேர்ந்த பைனான்சியல் டைம்ஸ் என்ற பொருளாதார பத்திரிகை, உலகின் டாப் ஐம்பது தொழிலதிபர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது தம்பி அனில் அம்பானி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர, ஹீரோ குழுமத்தின் பிரிஞ்மோகன் முஞ்சால், ப்யூச்சர் குழும தலைவர் கிஷோர் பியானி , ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சர், மகிந்திரா குழுமத்தின் கேசவ் மகிந்திரா, பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல், வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

இதில், சந்தா கோச்சர் உட்பட 3 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்

பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்


சர்வதேச செயல்பாடுகளை விரிவுபடுத்தும் உள்நாட்டு விமானச் சேவை நிறுவனங்கள்


நிர்பய் குமார்
புதுடெல்லி
விமானச் சேவைகளுக்கான தேவைப்பாடு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே உள்நாட்டு நிறுவனங்கள் அவற்றின் சர்வதேச செயல்பாடுகளை விரிவுபடுத்த ஆயத்தமாகி வருகின்றன.
உலக பொருளாதாரம்
உலக பொருளாதாரத்தின் மந்தநிலையாலும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் ஏற்றத் தாழ்வுகளாலும் சென்ற இரண்டு ஆண்டுகளாக இந்திய விமானச் சேவைத் துறை சோம்பிக் கிடந்தது. தற்போது உள்நாட்டிலும், உலக அளவிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குமான பயணிகள் போக்குவரத்து, சென்ற சில மாதங்களில் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏர் இந்தியா, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் பல்வேறு சர்வதேச வழித்தடங்களில் சேவையை தொடங்க முடிவு செய்துள்ளன.
ஜெட் ஏர்வேஸ்
தனியார் துறையில் மிகப் பெரிய நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், ஜோகன்ஸ்பர்க் மற்றும் நைரோபி ஆகிய இடங்களுக்கு விமான சேவையை தொடங்க உத்தேசித்துள்ளது. Òஜோகன்ஸ்பர்க் நகரத்துக்கு எதிர் வரும் கோடை காலத்தில் சேவை தொடங்கப்பட உள்ளது. நைரோபிக்கு, இவ்வாண்டு அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படலாம்Ó என ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜோகன்ஸ்பர்க் மற்றும் நைரோபி ஆகிய இரண்டு நகரங்களுமே தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவையாகும். இந்த இரண்டு இடங்களுக்கும் விமானச் சேவையை தொடங்கும் வகையில் இந்நிறுவனம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து சென்ற ஆண்டிலேயே ஒப்புதல் பெற்றிருந்தது. எனினும் பயணிகள் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு மற்றும் பொருளாதார மந்தநிலை போன்ற பல்வேறு காரணங்களால் அதன் திட்டத்தை ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோகன்ஸ்பர்க் நகரத்துக்கு சேவை தொடங்கும் முடிவில் இருந்த ஏர் இந்தியா அதன் எண்ணத்தை தற்போது கைவிட்டுள்ளது. இதுவும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ்
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், புதுடெல்லியிலிருந்து ஹாங்காங், துபாய் மற்றும் லண்டனுக்கு மீண்டும் அதன் விமானங்களை இயக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 89 விமானங்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் 68 விமானங்கள்தான் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
Òபெங்களூர்&லண்டன் வழித்தடத்தில் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளதால் நிறுவனத்தின் இரண்டு ஏ330 விமானங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்த விமானங்களை புதுடெல்லி&லண்டன் வழித்தடத்தில் இயக்க முடியும். குறைந்த தூரமுள்ள துபாய் மற்றும் பாங்காக் போன்ற சர்வதேச வழித்தடங்களில் நிறுவனத்தின் ஏ321 மற்றும் ஏ320 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்Ó என கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏர் இந்தியா
பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா, அதிக எண்ணிக்கையில் விமானங்களைக் கொண்டுள்ளது. விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்நிறுவனமே நாட்டின் மிகப் பெரிய விமானச் சேவை நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் உள்நாட்டில் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் மேலும் பல விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அளவில், பல புதிய வழித்தடங்களில் சேவை தொடங்கவும் முடிவு செய்துள்ளது. தற்போது இந்நிறுவனம் டெல் அவிவ், கெய்ரோ, மிலன் மற்றும் சிட்னி ஆகிய உலகப் புகழ் பெற்ற நகரங்களுக்கு விமானச் சேவைகளை தொடங்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
ஸ்பைஸ் ஜெட்
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனங்களுள் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிறுவனம் சர்வதேச அளவில் விமானச் சேவைகளை தொடங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் 19 விமானங்களைக் கொண்டுள்ளது. இவையனைத்தும் போயிங் 737 ரக விமானங்களாகும். நடப்பு ஆண்டில், மேலும் நான்கு புதிய விமானங்களை இணைத்துக் கொள்ள உள்ள இந்நிறுவனம், பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் இவ்வாண்டில் புதிதாக 150 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
ஏர் ஏஷியா
மலேசியாவைச் சேர்ந்த நிறுவனமான ஏர் ஏஷியா இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே ஆறு வழித்தடங்களில் சேவையை தொடங்க உள்ளது. நடப்பு ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில், இந்நிறுவனம் மலேசியாவில் இருந்து புதுடெல்லி, மும்பை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு தினமும் அதன் விமானங்களை இயக்க உள்ளது. கோலாலம்பூர்&மும்பை வழித்தடத்தில் மட்டும் வாரத்தில் நான்கு முறை சேவை அளிக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் பேங்க் 100% இடைக்கால டிவிடெண்டு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் பேங்க் (பி.என்.பீ) சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.1,011.31 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,005.82 கோடியாக இருந்தது.
இதே காலாண்டுகளில் இவ்வங்கியின் வட்டி வருவாய் ரூ.5,294.70 கோடியிலிருந்து ரூ.5,505.54 கோடியாக அதிகரித்துள்து. வங்கியின் வட்டிச் செலவினம் ரூ.3,327.35 கோடியிலிருந்து ரூ.3,176.44 கோடியாக குறைந்துள்ளது.
டிவிடெண்டு
இவ்வங்கி நடப்பு நிதி ஆண்டிற்கு (2009&10) அதன் பங்குதாரர்களுக்கு ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு ரூ.10&ஐ இடைக்கால டிவிடெண்டாக (100%) வழங்க முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கின் விலை தற்பொழுது ரூ.870 என்ற அளவில் விலைபோய் கொண்டுள்ளளது.

புதன்கிழமையன்று


3 தனியார் நிறுவனங்களின் பங்கு வெளியீடு தொடக்கம்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
மூன்று தனியார் நிறுவனங்களின் பங்கு வெளியீடு புதன்கிழமையன்று (நேற்று) தொடங்கியது. இந்த மூன்று வெளியீடுகளுமே இம்மாதம் 29&ந் தேதியன்று நிறைவடைகின்றன.
வாஸ்கான் இன்ஜினியர்ஸ், சின்காம் ஹெல்த்கேர் மற்றும் தங்க மயில் ஜுவல்லரி ஆகிய நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் களம் இறங்கியுள்ளன. அடிப்படைக் கட்டமைப்பு துறையைச் சேர்ந்த வாஸ்கான் இன்ஜினியர்ஸ் நிறுவனம் சுமார் ரூ.200 கோடி திரட்ட உத்தேசித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த மருந்து நிறுவனமான சின்காம் ஹெல்த்கேர் சுமார் ரூ.57 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆபரண நிறுவனமான தங்க மயில் ஜுவல்லரி சுமார் ரூ.29 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.
அக்வா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் பங்கு வெளியீடு இன்றுடன் நிறைவடைகிறது.

யுஎஸ் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி... மீண்டும் பொருளாதார நெருக்கடி
நியூயார்க்: அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார மந்தம் தோன்றும் என நிபுணர்கள் கணித்தது சரியாகிவிடும் போலிருக்கிறது.

மீண்டும் ரியல் எஸ்டேட் துறையில் விற்பனை மந்தமாகிவிட்டது. குறிப்பாக இந்த டிசம்பர் மாதம் விற்பனையில் அதிர்ச்சி தரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மீட்சி வரும் என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள் நினைப்பில் மண் விழுந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் விற்பனையான வீடுகள் எண்ணிக்கையைவிட டிசம்பர் மாதம் 16.7 சதவிகிதம் அளவு குறைந்துவிட்டதாம்.

இது மிகப்பெரிய சரிவாக அமெரிக்க நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. வரிச் சலுகை தரப்பட்டுள்ள இந்த சூழலில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது கவலை தருவதாக உள்ளது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம், இந்த சலுகைகள் நீக்கப்பட்டுவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சிறிய குடும்பத்துக்கான வீடுகள் விற்பனை 16.8 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே போல மத்திய மேற்கு பகுதியில் வீடுகள் விற்பனை 25.8 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அளவுக்கு நிலைமை மோசமில்லை என்கிறார்கள்.

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் விற்பனை சற்று மேம்பட்டதாக இருந்தாலும், இந்த ஆண்டும் வீழ்ச்சி முற்றிலும் நீங்கவில்லை. வடமேற்குப் பகுதியில் 19.5 சதவிகித வீடு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதே நேரம், 2009-ம் ஆண்டு 5,156,000 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது 2008-ம் ஆண்டை விட 4.9 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் அமெரிக்காவின் ஆட்டோமொபைல் துறை ஓரளவு நல்ல முன்னேற்றம் தெரிவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வீடுகள் விற்பனை சரிந்தாலும், ஆட்டோமொபைல் வளர்ச்சி சற்று ஆறுதல் தருவதாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்கு வெளியிட தயாராகும் பொதுத் துறை நிறுவனங்கள்

புதன், 27 ஜனவரி, 2010

அனுமதி வேண்டி ÔசெபிÕக்கு விண்ணப்பம்


பங்கு வெளியிட தயாராகும் பொதுத் துறை நிறுவனங்கள்


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
பொதுத் துறை நிறுவனங்களான என்.எம்.டீ.சி. மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்.இ.சி) ஆகிய நிறுவனங்கள் இரண்டாவது பங்கு வெளியீட்டில் களம் இறங்க தயாராகி உள்ளன. பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வேண்டி இந்நிறுவனங்கள் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளன.
பிப்ரவரி மாதத்தில்...
ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் நிறுவனம், கிராமப்புறங்களில் நிர்மாணிக்கப்படும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிறுவனம் அதன் இரண்டாவது பங்கு வெளியீட்டை பிப்ரவரி 18&ந் தேதி முதல் 23&ந் தேதி வரையிலான காலத்தில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு கனிமங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் என்.எம்.டீ.சி. நிறுவனம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு, என்.எம்.டீ.சி. நிறுவனத்தின் 8.38 சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதன் மூலம் ரூ.18,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதே போன்று ஆர்.இ.சி. நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை வெளியிடுவதன் வாயிலாக ரூ.3,300 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.
அரசின் பங்கு மூலதனம்
இரண்டாவது பங்கு வெளியீட்டில் ஆர்.இ.சி. நிறுவனம் 17 கோடிக்கும் அதிகமான அளவில் பங்குகளை வெளியிடுகிறது. இதில் 12.87 கோடி பங்குகள் நிறுவனத்தின் புதிய பங்குகளாகவும், 4.29 கோடி பங்குகள் மத்திய அரசுக்கு சொந்தமான பங்குகளாகவும் இருக்கும். பங்கு வெளியீட்டுக்குப் பிறகு இந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம் 66 சதவீதமாக குறைந்து விடும். தற்போது அரசின் பங்கு மூலதனம் 81.82 சதவீதமாக உள்ளது.
என்.எம்.டீ.சி.
என்.எம்.டீ.சி. நிறுவனம், அதன் இரண்டாவது பங்கு வெளியீட்டில் 33.22 கோடி பங்குகளை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம் 98.38 சதவீதமாக உள்ளது. பங்கு வெளியீட்டில் இந்நிறுவனம் அதன் பணியாளர்களுக்கும், சில்லரை முதலீட்டாளர்களுக்கும் பங்கின் வெளியீட்டு விலையில் 5 சதவீத தள்ளுபடி சலுகை அளிக்க உள்ளது. சில்லரை முதலீட்டாளர்களுக்கு 33 கோடி பங்குகள் அளிக்கப்பட உள்ளன. 17.43 லட்சம் பங்குகள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன.


பாரத ஸ்டேட் வங்கி


100% இடைக்கால டிவிடெண்டு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பாரத ஸ்டேட் பேங்க், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.2,479 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2,478 கோடியாக இருந்தது.
வட்டி வருவாய்
இதே காலாண்டுகளில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் 10 சதவீதம் அதிகரித்து, ரூ.5,758 கோடியிலிருந்து ரூ.6,317 கோடியாக உயர்ந்துள்ளது. இதர வருவாய் ரூ.3,226 கோடியிலிருந்து 4 சதவீதம் உயர்ந்து ரூ.3,366 கோடியாக அதிகரித்துள் ளது. இவ்வங்கியின் மூலதன இருப்பு விகிதம் 13.72 சதவீதத்திலிருந்து 13.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில் இவ்வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.7,299 கோடியாக உள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.6,379 கோடியாக இருந்தது. ஆக, வங்கியின் நிகர லாபம் 14 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, அக்டோபர்&டிசம்பர் மாத காலத்தில், திரட்டிய டெபாசிட்டுகள் 11.2 சதவீதம் உயர்ந்து ரூ.7,70,985 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கி வழங்கிய கடன்கள் 19 சதவீதம் அதிகரித்து ரூ.6,07,154 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வங்கி அதன் பங்குதாரர்களுக்கு 100 சதவீத இடைக்கால டிவிடெண்டை அறிவித்துள்ளது.

இன்சுலின் மருந்து விலை 15 சதவீதம் அதிகரிக்கும்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் இன்சுலின் மருந்துகளில் குறிப்பிட்ட சில வகை பிராண்டுகளின் அதிகபட்ச சில்லரை விலையை உயர்த்துவதற்கு, தேசிய மருந்துவிலை நிர்ணய ஆணையம் ஐந்து மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து இன்னும் சில தினங்களில் சில குறிப்பிட்ட இன்சுலின் மருந்துகள் விலை 15 சதவீதம் உயரும் என தெரிகிறது.
முக்கிய பிராண்டுகள்
இதன்படி, நோவா நார்டிஸ்க் நிறுவனம் அதன் ஆக்ட்ராபிட் ஃபிளக்ஸ்பென், இன்சுலாடர்ட் ஃபிளக்ஸ் பென், மிக்ஸ்டார்ட் 30 ஃபிளக்ஸ் பென் பிராண்டுகளின் விலையை 15 சதவீதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாரன்ட் பார்மா நிறுவனமும், யுமன் மிக்ஸ்டார்டு என்ற இன்சுலின் ஊசி மருந்தின் விலையை 10 சதவீதம் உயர்த்தி உள்ளது.
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5 கோடியாக உள்ளது. இது நாட்டின் மக்கள் தொகையில் 4.3 சதவீதமாகும். வரும் 2030&ஆம் ஆண்டிற்குள் இது 9 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சர்வதேச நீரிழிவு நோய் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
காச நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் Ôமெட்ரோல்Õ என்ற மருந்தை ஃபைசர் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் விலையை உயர்த்தவும். தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. வைட்டமின் ஏ உள்ளிட்ட சில மருந்துகள் விலையை உயர்த்தவும் அனுமதி வழங்கி உள்ளது.
விலை நிர்ணய ஆணையம்
சில குறிப்பிட்ட வகை மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் முடிவு செய்கிறது. இந்த கட்டுப்பாட்டின் கீழ் வராத மருந்தின் விலையை மருந்து நிறுவனங்கள் 12 மாதங்களில் 10 சதவீதம் உயர்த்தலாம். இந்நிலையில் மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களின் விலை உயரும்போது, நிறுவனங்களின் கோரிக்கை அடிப்படையில் விலையை உயர்த்த அவ்வப்போது இந்த ஆணையம் அனுமதி அளிக்கிறது.


திருமலை திருப்பதி தேவஸ்தானம்


500 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்கிறது
ராம் என். சேகல் & அபூர்வ் குப்தா
மும்பை
இந்தியாவிலுள்ள இந்து சமய அறநிலையங்களில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தான் மிகப்பெரியது ஆகும். இந்த தேவஸ்தானம் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறும் உபரி தங்கத்தில் 500 கிலோவை சென்ற ஆண்டைப்போன்று, இவ்வாண்டிலும், வங்கிகளின் தங்க வைப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்ய தீர்மானித்துள்ளது.
வட்டி விகிதம்
சென்ற ஆண்டிலும் இவ்வங்கி 500 கிலோ தங்கத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மூன்று ஆண்டு காலத்திற்கு டெபாசிட் செய்தது. இதற்கான ஆண்டு வட்டிவிகிதம் 1.6 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் 500 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்வதற்காக சுமார் 4&5 தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளிலிருந்து விலைப்புள்ளிகளை தேவஸ்தானம் பெற்றுள்ளது.
இவ்வங்கிகள் தெரிவிக்கும் வட்டி விகிதத்தின் அடிப்படையில், தங்கத்தை டெபாசிட் செய்வதற்கான தேசியமயமாக்கப்பட்ட வங்கி விரைவில் தேர்வு செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாளை தரிசிக்க தினந்தோறும் சராசரியாக 50,000&க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் ரொக்கப்பணம், தங்க நாணயங்கள், நகைகள் போன்றவற்றையும் காணிக்கைகளாக செலுத்துகின்றனர். இவர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கத்தின் அளவு 500 கிலோவைத்தாண்டும் போது, இந்த தேவஸ்தானம், அதனை வங்கிகளின் தங்க வைப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்கின்றது.
பக்தர்கள்
ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை தரும் பக்தர்கள் மொத்தம் 700&800 கிலோ தங்கத்தை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இந்த தங்கத்தில் ஒரு பகுதி அரசின் தங்கசாலைகளில் உருக்கப்பட்டு வெங்கடாஜலபதியின் உருவம் பொறிக்கப்பட்ட பதக்கங்களாக மாற்றப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோக எஞ்சியுள்ள தங்கம் கட்டிகளாக மாற்றப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.
சென்ற 2009&ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் சுமார் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையிலும் பக்தர்கள், தங்க நகைகளை காணிக்கைளாக வழங்குவது உயர்ந்துள்ளது. இது, இவர்களின் பக்தியை வெளிப்படுத்துவதாக உள்ளது.
கூட்டு வட்டி
இவ்வாண்டில் தேவஸ்தானம் மூன்று முதல் ஐந்து ஆண்டு முதிர்வு காலத்தில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக ஓர் ஆண்டிற்கு 1&1.5 சதவீதம் கூட்டு வட்டியை வங்கி வழங்கும். இவ்வாறு பெறப்படும் வட்டித்தொகையை, தேவஸ்தானம், பல்வேறு சமூக நல திட்டங்கள் மற்றும் அறப்பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறது.
முதிர்வுகாலம் முடிந்ததும் தேவஸ்தானம் விரும்பினால், தங்கத்தை, வங்கிக்கு அப்போது நிலவும் விலையின் அடிப்படையில் விற்பனை செய்யும்.

கார் லோன் வாங்க போறீங்களா? இதை கவனியுங்க முதல்ல...

இந்தியாவில், கார் வாங்குவது என்பது இன்று வரை ஒரு கவுரவ சின்னமாகவே கருதப்படுகிறது. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சிறிய கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. எனவே, ஒவ்வொரு இந்தியனும், கார் வாங்குவதை ஒரு லட்சியமாகவே கொண்டுள்ளனர். இதற்கு ஏற்றாற் போல், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கார் கடனுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வீசி வருகின்றன. கடந்த காலங்களை போல காருக்கு முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. ஷோரூம் போனால் உடனே டெலிவிரி, காருக்கான முழு தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட ஒரு தொகையை செலுத்தினால் மட்டும் போதும், மீதி தொகையை மாத தவணையில் செலுத்தலாம் என்றெல்லாம் பல வசதிகள் உள்ளன. புதிய காருக்கு மட்டுமல்ல, செகன்ட் ஹண்ட் காருக்கு கூட கடன் வசதிகள் கிடைக்கின்றன.
நடுத்தர குடும்பங்களை இந்த வசதிகள் தான் ஆட்டிப்படைக்கின்றன. கார் வாங்குவது கடினமான காரியம் இல்லை என்று அவர்கள் நினைக்க தொடங்கி விட்டன. ஆனால், கார் கடன் வாங்கும் முன் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதில் அவர்கள் தங்கள் எண்ணத்தை செலுத்துவதில்லை. அவர்களுக்காக இங்கே சில டிப்ஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:

குறைந்த கடன் தொகை: கார் கடன் வாங்கும் முன், எந்த அளவுக்கு கடன் தொகையை வாங்க போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் வட்டி செலுத்த வேண்டும். எனவே, வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ கடன் வாங்கும் போது, குறைந்த அளவில் கடன் வாங்கினால் மட்டும் போதுமானது. இதன் மூலம் வட்டித் தொகை குறையும். கார் கடனையும் விரைவில் கட்டி முடிக்க முடியும். ஆனால், அதிக முன் தொகையை செலுத்த வேண்டும் என்ற பிரச்னை இருப்பதால், இதில் பலரும் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர். எனினும், குறைந்த தொகையை கடனாக வாங்கினால் லாபமாகவே இருக்கும்.

பிரபல மாடல்கள்: பிரபலம் இல்லாத, சந்தையில் வரவேற்பு இல்லாத கார்களுக்கு கடன் வாங்குவது என்றால், அதற்கான வட்டியும் அதிகமாகவே இருக்கும். மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற கார், விற்பனைக்கு பிறகு நிறுவனம் அளிக்கும் சிறப்பான சர்வீஸ், குறைந்த அளவு பராமரிப்பு ஆகியவை தான் ஒரு கார் சிறந்த மாடல் என்பதை நிர்ணயிக்கிறது. இதுபோன்ற கார்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். கார் வாங்கும் போது இதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆன் ரோடு விலை: கார் விலையை, எக்ஸ் ஷோரூம் விலை, ஆன் ரோடு விலை என இரண்டு விதமாக குறிப்பிடுவர். கார் பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம், ரோடு வரி மற்றும் பிற கட்டணங்கள் அடங்கியது தான் ஆன் ரோடு விலை. எக்ஸ்ஷோரூம் விலை என்பது இந்த கட்டணங்கள் சேர்க்கப்படாதது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆன் ரோடு விலைக்கு தான் கடனை தருகின்றன. புதிதாக கார் வாங்கும் போது ஆன் ரோடு விலையை குறிப்பிட்டு கடன் வாங்கினால், பிற கட்டணங்களுக்கு கை காசை செலவழிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஒப்பிட வேண்டும்: ஏராளமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கார் கடன்களை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களை கவருவதற்காக பல்வேறு சலுகைகளை அள்ளி வீசுகின்றன. ஆனால், எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் குறைந்த அளவு வட்டி வசூலிக்கப்படுகிறது, மாத தவணையான இ.எம்.ஐ., எவ்வளவு போன்ற விஷயங்களை ஒப்பிட்டு பார்த்து கடன் வாங்கினால் லாபமாக இருக்கும்.

புராசசிங் கட்டணம்: நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருப்பவரா? அதற்கான கட்டணத்தை முறையாக கட்டுபவரா? உங்களுக்கு கடன் கொடுத்தால் பிரச்னை வராது என்று வங்கி நினைக்கிறதா? இது போன்ற விஷயங்கள் உண்டு. நீங்கள் வங்கி கணக்குகளை முறையாக வைத்திருந்தால், கார் கடனுக்கான புராசசிங் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை வங்கிகள் குறைத்து கொள்ள வாய்ப்பு உண்டு.

கவர்ச்சிக்கு மயங்க கூடாது: வாடிக்கையாளர்களை கவருவதற்காக சில டீலர்களும், சிறிய நிதி நிறுவனங்கள் பல கவர்ச்சிகரமான சலுகைகளை அள்ளி வீசுவார்கள். இதை பார்த்து மயங்கி விட கூடாது. எந்தவித பின்னணியும் தேவையில்லை, உங்கள் வருவாய் எவ்வளவு என்று கூட கேட்ட மாட்டோம், கார் கடன் வாங்கிகொள்ளுங்கள் என்று வலை விரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


முதல் கார் பெரியதா, சிறியதா: பெண்களின் விருப்பம் எது?
இந்திய பெண்கள் தாங்கள் வாங்கும் முதல் கார், பெரியதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
இந்தியாவில், ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில், உலகளவில் ஒன்பதாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஆண்டுக்கு 23 லட்சம் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் வரவேற்பு, வெளிநாட்டு கார் நிறுவனங்களை வியக்க வைத்துள்ளது. எனவே, அனைத்து வெளிநாட்டு கார் நிறுவனங்களும், போட்டிபோட்டுக் கொண்டு, கார் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. பல சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.

அதே போல, கார் வாங்கும் முன் அதுகுறித்த தகவல்களை இன்டர்நெட் மூலம் தேடுவதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளனர். கார் வாங்குபவர்களில் 90 சதவீதம் பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேர், இன்டர்நெட் மூலமே பதிவு செய்து கார் வாங்குகின்றனர். இவர்களில், பாதி பேர், இன்டர்நெட் மூலமே கார் உதிரி பாகங்களையும் வாங்குகின்றனர். இன்டர்நெட் மூலம் வாங்கும் போது கிடைக்கும் பணச்சலுகை மற்றும் டீலர்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி ஆகியவையே இதற்கு காரணம்.

கார் குறித்த தகவல்களை தெரிவிப்பதில், காடி.காம் என்ற இணையதளம் முன்னணியில் உள்ளது. இந்த இணையதளம் இரண்டு மாதங்களாக, ஒரு ஆய்வை நடத்தியது. கார் வாங்குவதற்காக இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் மன நிலையை அறிவதற்கான ஆய்வு இது. இந்த ஆய்வில் நாடு முழுவதும் 28 ஆயிரத்து 934 பேர் பங்கேற்றனர். இவர்களில் 88 சதவீதம் பேர் ஆண்கள். 12 சதவீதம் பேர் பெண்கள். ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது, பதவி மற்றும் பாலினம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டது.

ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள் வருமாறு:

பெண்களில் 46 சதவீதம் பேர், தங்களது முதல் காராக செடன் போன்ற பெரிய காராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இந்தியர்களில் 46 சதவீதம் பேர் கார் நல்ல மைலேஜ் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்கு அடுத்தபடியாக, கார் ஸ்டைலாக இருக்க வேண்டும், வசதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

பெரிய கார்களை வாங்கி, அவற்றை சாலையில் ஓட்டிச் செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுவது உண்டு. இப்பிரச்னை இருந்தாலும், இந்தியர்களில் 55 சதவீதம் பேர் நடுத்தரமான காருக்கு பதிலாக பெரிய கார் வாங்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

30 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களின் ஆண்டு வருமானத்தை போல இரண்டு மடங்கு தொகையை புதிய கார் வாங்குவதற்காக செலவிட தயாராக உள்ளனர்.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை உள்ளவர்கள், தங்களின் மொத்த ஆண்டு வருமானத்தையும் புதிய கார் வாங்குவதற்காக செலவிட தயாராக உள்ளனர்.

இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.


பங்குச் சந்தையில் தங்கமயில்

மதுரை: தென் மாவட்டங்களில் பிரபலமான தங்கமயில் ஜுவல்லரி பங்குச் சந்தையில் நுழைகிறது.
இந்நிறுவன இணை நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறியதாவது: தென்மாவட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள தங்கமயில் ஜுவல்லரிக்கு, மதுரை உட்பட ஐந்து இடங்களில் கிளைகள் உள்ளன. அடுத்த ஆண்டிற்குள் மேலும் ஆறு கிளைகள் துவக்க உள்ளோம். ஒவ் வொரு நிதி ஆண்டிலும், குறைந்தபட்சம் நான்கு ஷோரூம்கள் திறக்க முடிவு செய்யப் பட்டுள் ளது. கடந்த ஆண்டில், 246 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளோம். பங்கு வெளியீடு மூலம் 35 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும். இது நமது பங்கு என நினைத்து, மக்கள் ஆர்வமாக ஈடுபடுவர் என எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு ரமேஷ் கூறினார்.

நிறுவன ஆலோசகர் ஆடிட்டர் ராஜகோபாலன் கூறியதாவது: மார்க்கெட்டில் நல்ல திறமை காட்டியுள்ள நிறுவனம் இது. நிதி நிர்வாகம் நன்றாக உள்ளதால், பங்கு வாங்குபவர்கள் நிச்சயம் பலன் பெறுவர். பங்குகள் மூலம் திரட்டப்படும் நிதி, புதிய தொழிலில் முதலீடு செய் யப்படவில்லை. வணிக விரிவாக்கத்திற்கு தான் பயன்படுத்தப்படும். ரேட் டிங்கில் ஐந்துக்கு மூன்று புள்ளிகள் பெற்றுள்ளது. ஜன., 27ல் (நாளை) வெளியிடப்படும் 10 ரூபாய் முகமதிப்புள்ள புதிய பங்கு ஒன்றின் விலை 70 முதல் 75 ரூபாய் வரை இருக்கும்.

இவ்வாறு ராஜகோபாலன் கூறினார்.கீநோட் கார்ப்பரேட் நிறுவனத்தின் சூரஜ் சரயாகி அறிமுக உரை நிகழ்த்தினார்.

துபாயில் போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடி முயற்சி: 7 பேர் கைது
துபாய்: துபாயில் போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செய்ய ‌முயன்ற 7 பேரை ஐக்கிய அரபு எமிரேட் அரசு கைது செய்துள்ளது. ‌சென்ட்ரல் வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அதன் மூலம் 10.3 பில்லியன் டாலர்களை அவர்கள் மோசடி செய்ய திட்டமிட்டு இருந்தனர். இதனை உடனடியாக கண்டறிந்த வங்கி, இந்த விஷயத்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளது. விரைந்து செயல்பட்ட போலீசார் அவர்களை ‌கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் அந்த ஆவணங்களைச் சோதித்தபோது, அவை போலியானவை என்று தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய வங்கி ஒன்றின் கேட்பு ஆணையின் பேரில் இந்தத் தொகையை சென்டிரல் வங்கியிலிருந்து மாற்றத்தக்க வகையில் அந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வரிஏய்ப்பில் மும்பை பிரபலங்கள் : நவி மும்பை மாநகராட்சி
மும்பை : நவி மும்பை மாநகராட்சி மும்பையை சேர்ந்த பிரபலங்கள் சிலர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது. இதில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் அனில் அம்பானி , பாலிவுட் பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோர் சிக்கியுள்ளனர். நவி மும்பையில் கார் போன்ற வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி குறைவாக இருப்பதால் பெரும்பாலானோர் அங்கு தங்கள் வாகனங்களை பதிவு செய்ய விரும்பதாக நவி மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவன பங்கு விற்ப‌னை நிறுத்தப் படாது: அருண்யாதவ்

இந்தூர்: பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நிறுத்தப்படாது என்று கனரக தொழில் துறை இணை அமைச்சர் அருண் யாதவ் தெரிவித்தார்.

இந்தூரில் 65 வது அகில இந்திய ஜவுளி மாநாட்டை தொடங்கிவைத்த அவர், பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசுக்கு சொந்தமான பங்கு விற்பனை செய்வது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது. பொதுத்துறை நிறுவன பங்கு விற்ப‌னை நிறுத்தப்படாது. இந்த வருடத்திற்குள் 10 முதல் 15 விழுக்காடு பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று கூறினார்.


மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்திற்கு பிறகு, பங்கு விற்பனை செய்யப்படும். பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கான கருத்து கணிப்பு நடை பெற்று வருகிறது. இதில் 80 விழுக்காட்டினர் பங்கு விற்பனை செய்வதற்கு சாதமான பதிலை தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.



இந்தியன் வங்கிக்கு ரூ. 441 கோடி லாபம்
சென்னை: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டி கணக்கெடுப்பின வெளியிட்டுள்ளது. இதனை வங்கியின் தலைவர் சுந்தர ராஜன் வெளியிட்டார்.
இதில், வங்கி ரூ. 441 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் அதிகமாகும்.

வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 1,42,200 கோடி என்றும், இது அதற்கு முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ரூ. 1,20,120 கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சேமிப்புகளின் அளவு 21 சதவீதம் அதிகரித்து ரூ. 84,732 கோடியாக உயர்ந்தது. வங்கி வழங்கிய கடன் அளவு 13 சதவீதம் அதிகரித்து ரூ. 57,468 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், வங்கியின் வாராக் கடன் அளவு 0.92 சதவீதத்திலிருந்து 0.92 சதவீதமாகக் குறைந்தது. ஒட்டுமொத்த வாராக்கடன் 0.16 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதத்தில் ரூ. 471.07 கோடி வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.


தனலட்சுமி வங்கி புதிய திட்டம்
மும்பை: தனலட்சுமி வங்கி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியை துவக்கியுள்ளது. தனலட்சுமி வங்கி பொது மேலாளர் ஜெயகுமார் கூறியதாவது: நிதியை அதிகரிக்கும் முயற்சியாகவும், பொருளாதாரத்துக்கு உதவும் வகையிலும், 50 ஆயிரம், 'நோ-பிரில்ஸ்' வங்கிக் கணக்குகளை துவங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.இதற்காக, கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 50 புதிய வாடிக்கையாளர் சேவை மையங்களை திறக்கவுள்ளோம்.

இங்குள்ள வங்கி பிரதிநிதிகள், வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், வங்கிக் கணக்குகளின் விவரங்கள் குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு விளக்குவர். இந்த சேவை மையங்கள், வங்கியின் வர்த்தக தொடர்பு மையங்களாகவும் செயல்படும். காப்பீடு, கடன் திட்டம் முதலான பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஜெயகுமார் கூறினார். வங்கியின் மைக்ரோ பைனான்ஸ் துறை தலைவர் திலிசா குப்தா கவுல் கூறுகையில், 'மிகவும் அதிகளவு வாடிக்கையாளர்களை, அமைப்பு ரீதியான வங்கி நடவடிக்கைகளுக்கு கொண்டு வருவது தான், இத்திட்டத்தின் நோக்கம்' என்றார்

வைர விற்பனை: ஜப்பானை முந்தியது சீனா
பெய்ஜிங்: வைர விற்பனையில் ஜப்பானை சீனா முந்தியுள்ளது. வைர விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ஜப்பான் இருந்தது. தற்போது, ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஷாங்காய் வைர விற்பனை சந்தையில் வைர விற்பனை 16.4 சதவீதம் உயர்ந்து 150 கோடி டாலரரை எட்டியுள்ளது. இதுமட்டுமல்லாமல், தற்போது நிலவி வரும் நிதிநெருக்கடியிலும், சீனாவில் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. சீனாவில் தற்போது சாதாரண மக்கள் கூட வைர நகைகளை பயன்படுத்த தொடங்கி விட்டதும், பண்டிக்கை காலங்களில் வைரத்தை வாங்குவதற்கு சீனா மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதுமே, சீனாவில் வைர விற்பனை அதிகரித்து இருப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.

அமெரிக்காவில் மேலும் 9 வங்கிகள் திவால்

திங்கள், 25 ஜனவரி, 2010

நியூயார்க்: இந்த ஆண்டும் தொடர்கிறது அமெரிக்க வங்கிகளின் திவால் சோகம்.

புத்தாண்டு பிறந்து 20 நாட்களுக்குள் 9 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் 5 வங்கிகள் ஒரே நாளில் மஞ்சள் கடுதாசி கொடுத்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மட்டுமே 140 வங்கிகள் திவாலாகின அமெரிக்காவில். இது கடந்த 18 ஆண்டுகளில் அதிகபட்ச வீழ்ச்சியாகும்.

இந்த நிலையில் 2010-ம் ஆண்டும் வீழ்ச்சிக்கு விதிவிலக்காக இல்லை. கொலம்பியா ரிவர் வங்கி, எவர்கிரீன் வங்கி, சார்ட்டர் வஹ்கி, பேங்க் ஆப் லீடன், பிரிமியர் அமெரிக்கன் வங்கி ஆகிய 5 வங்கிகள் ஒரே நாளில் மூடப்பட்டன (ஜனவரி 22). இவற்றால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் 531.7 அமெரிக்க டாலர்கள்.

இவற்றைத் தவிர மேலும் 4 வங்கிகளும் மூடப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 2008-ல் லெஹ்மன் பிரதர்ஸ் வங்கி திவால் நோட்டீஸ் கொடுத்த பிறகு 164 வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி லாபம் மூன்று மடங்கு அதிகரிப்பு
மும்பை: மாருதி சுஸுகி நிறுவனத்தின் லாபம் இந்த காலாண்டில் மட்டும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

அக்டோபர் - டிசம்பர் 2009 காலாண்டில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் நிகர லாபம் மட்டும் ரூ 687.53 கோடி. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ 213.57 கோடியை நிகர லாபமாகக் காட்டியிருந்தது மாருதி.

2008-ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் லாபம் காட்டிய மிகச் சில கார் உற்பத்தி நிறுவனங்களுள் மாருதியும் ஒன்று.

இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் மீட்சிக்கு திரும்புவதால், கார் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக மாருதி நிறுவனம் சாதனை அளவாக 218,910 க்கும் அதிகமான கார்களை விற்று முதலிடத்தில் உள்ளது.

மூன்றாம் காலாண்டில் மாருதியின் மொத்த வருமானம் ரூ 7,591.1 கோடியாக உள்ளது. உள்நாட்டு விற்பனை 37.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் குர்கான், மானேசர் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள மாருதி, இரண்டிலும் மொத்தம் 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் மிக்கதாக உள்ளது. இப்போது மானேசர் தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை 3,00,000 லிருந்து ஆண்டுக்கு 5,50,000 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

என்.எம்.டீ.சி. நிறுவனம்

2&வது பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.20,000 கோடி திரட்ட திட்டம்


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
பொதுத் துறையை சேர்ந்த என்.எம்.டீ.சி. நிறுவனம், இரண்டாவது முறையாக பங்கு வெளியீட்டில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி வேண்டி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕக்கு இன்று (திங்கள்கிழமை) விண்ணப்பிக்க உள்ளது.
என்.எம்.டீ.சி. நிறுவனத்தில், மத்திய அரசு தற்பொழுது 98.38 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. மீதமுள்ள 1.62 சதவீத பங்குகள் பொதுமக்கள் வசம் உள்ளன. என்.எம்.டீ.சி. நிறுவனம், இந்த இரண்டாவது பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.20,000 கோடியை திரட்டிக் கொள்ள முடிவு செய்துள்ளது. இப்பங்கு வெளியீட்டின் மூலம் மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 8.38 சதவீத பங்குகளை வெளியிட உள்ளது.
Ôநவரத்னாÕ அந்தஸ்து
Ôநவரத்னாÕ அந்தஸ்து பெற்றுள்ள இந்நிறுவனம், கனிமவள மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.532.50 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது.
மேற்கண்ட மொத்த பங்கு வெளியீட்டில் 50 சதவீத பங்குகள் தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது. 35 சதவீத பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீத பங்குகள் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது.
இப்பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, மத்திய அரசு, சமூகநலன் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பன்ஸ்வாரா சின்டெக்ஸ்


நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இந்நிறுவனம், பல்வேறு ஜவுளி பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதுடன், விரிவாக்க நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளது. எனவே, பங்கின் விலை குறையும் நிலையில் முதலீடு செய்யலாம்.
தேவங்கி ஜோஷி
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
ராஜஸ்தானை சேர்ந்த பன்ஸ்வாரா சின்டெக்ஸ் (ஙிணீஸீsஷ்ணீக்ஷீணீ ஷிஹ்ஸீtமீஜ்) நிறுவனம், நூலிழைகள் மற்றும் ஆடைகள் தயாரிப்புக்கு தேவையான சிறப்பு வகை துணிகள் போன்றவற்றின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்திற்கு, ஒருங்கிணைக்கப்பட்ட ஜவுளி ஆலைகள் உள்ளன. Ôசென்செக்ஸ்Õ 75 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு ஆறு மடங்குகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பருத்தி நூலிழைகள்
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனம், பாலியெஸ்டர், விஸ்கோஸ், உல்லன், அக்ரலிக் உள்ளிட்ட கலப்பின நூலிழைகளுடன் பருத்தி நூலிழைகள் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்நிறுவனம் ஆர்டர்களின் அடிப்படையில் சிறப்பு வகை துணிகளையும் தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கேரமன் என்ற நிறுவனத்தின் கூட்டுடன் (50 சதவீதம்) 60 விசைத்தறிகளுடன் கூடிய நெசவு ஆலையையும் கொண்டுள்ளது.
அண்மையில், இந்நிறுவனம் லிக்ரா பிராண்டு துணிகள் தயாரிப்பிலும் ஈடுபடத் தொடங்கி உள்ளது. இவ்வகை சிறப்பு துணிகள், பள்ளிச் சீருடைகள், பெண்கள் அணியும் நவீன மற்றும் அலுவலக பயன்பாட்டு ஆடைகள் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஏற்றுமதி
இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில், துணிகளின் பங்களிப்பு 60 சதவீத அளவிற்கு உள்ளது. மீதமுள்ள 40 சதவீதம் நூலிழை வர்த்தகத்தின் மூலம் பெறப்படுகிறது. இதில், பாலியெஸ்டர் நூலிழைகளின் பங்களிப்பு மிகவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நிறுவனம் அதன் ஜவுளி வகைகளை சுமார் 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. சென்ற காலாண்டில், இந்நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாயில், ஏற்றுமதியின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மின் திட்டங்கள்
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனம், நிலக்கரி மற்றும் பர்னஸ் ஆயில் அடிப்படையில் செயல்படக்கூடிய இரண்டு அனல் மின் திட்டங்களை கொண்டுள்ளது. இவை, முறையே 18 மெகா வாட் மற்றும் 9 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும். மேற்கண்ட இரண்டு மின் பிரிவுகள் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், நிறுவனத்தின் சுய பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும், இந்நிறுவனம் கூடுதலாக மேற்கண்ட இரண்டு வகைகளில் 15/18 மெகாவாட் திறனில் இரண்டு மின் திட்டங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இவ்விரு மின் திட்டங்களும், நடப்பு 2010&ஆம் ஆண்டு இறுதியில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி நிலை
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்றுமுதல் ஆண்டுக்கு 21 சதவீதம் என்ற அளவிலும், ஒட்டுமொத்த நிகர லாபம் ஆண்டுக்கு 40 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்நிறுவனம், வரும் நிதி ஆண்டில் ரூ.110 கோடி திட்டச் செலவில் பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதில், மூன்றில் ஒரு பகுதி நிதி, உள்வள நிதி ஆதாரங்கள் மூலம் திரட்டிக் கொள்ளப்பட உள்ளது. மீதமுள்ள நிதி குறித்த கால கடன்கள் வாயிலாக திரட்டிக் கொள்ளப்பட உள்ளது. இந்நிறுவனம், இரண்டு திட்டங்கள் அமைப்பதற்காகவும், அதன் ஜவுளி பிரிவுகளை நவீனமயமாக்குவதற்காகவும் மேற்கண்ட விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.
இந்நிறுவனத்தின் லிக்ரா பிராண்டு துணிகளுக்கும், இதர சிறப்பு வகை துணிகளுக்கும் வெளிநாடுகளில் தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. அண்மையில், ராணுவ துறையிடமிருந்து 57,000 மீட்டர் சிறப்பு வகை துணிகள் வழங்குவதற்காக ஆர்டர் கிடைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த வாடிக்கை நிறுவனத்திடமிருந்து, மூன்றாவது முறையாக, 20,000 மீட்டர் சிறப்பு வகை துணி வகைகள் வேண்டி ஆர்டர் கிடைத்துள்ளது.
மதிப்பீடு
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனம், டிசம்பர் மாதம் வரையிலான நிதி ஆண்டில் ரூ.598.40 கோடி நிகர விற்பனையில், ரூ.31.40 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இவை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது முறையே 13.6 சதவீதம் மற்றும் 632.90 சதவீதம் அதிகமாகும்.
இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று தற்பொழுது ரூ.112.90 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. இது, இந்நிறுவனத்தின் ஒரு பங்கு சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது 4.5 மடங்குகள் என்ற அளவில்தான் உள்ளது. ஜவுளித் துறையில் ஈடுபட்டு வரும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இந்நிறுவனத்தின் பங்கின் விலை குறைவாகவே உள்ளது. மேற்கண்டவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில், இந்நிறுவனத்தின் பங்கின் விலை குறையும் நிலையில் இதன் பங்குகளில் முதலீடு செய்யலாம்
அடுத்த 10 ஆண்டுகளில்


கட்டமைப்பு வசதிக்காக ரூ.78 லட்சம் கோடி முதலீடு


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழும் சாலை போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான நிலைய வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதனையடுத்து, இத்துறைகளின் முன்னேற்றத்திற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 1.7 லட்சம் கோடி டாலர் மதிப்பிற்கு (ரூ.78.20 லட்சம் கோடி) முதலீடுகள் தேவைப்படும் என கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி புரூக்ஸ் எண்ட்விசில் தெரிவித்தார்.
சராசரியாக ஓர் ஆண்டில் மேற்கொள்ளப்படும் முதலீடு ரூ.6.52 லட்சம் கோடியாகும். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு வசதித் துறையில் வளமான வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. எனவே, இத்துறையில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இருப்பினும், உள்நாட்டு நிறுவனங்கள்தான் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் என புரூக்ஸ் மேலும் தெரிவித்தார்.


பொதுத் துறை நிறுவனங்கள்


பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.44,000 கோடி அதிகரிப்பு


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பொதுத் துறை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு, இவ்வாண்டு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 48 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்) நடப்பு 2010&ஆம் ஆண்டின் இதுவரையிலான 15 வர்த்தக தினங்களில் ரூ.44,346 கோடி அதிகரித்து ரூ.18.20 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசு
பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள, லாபம் ஈட்டி வரும் பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் 10 சதவீதத்தை பொதுமக்களுக்கு வெளியிடும் என்று சென்ற சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும், இதுவரை பங்குகளை வெளியிடாத, லாபம் ஈட்டி வரும் பொதுத் துறை நிறுவனங்கள் புதிதாக பங்கு வெளியீட்டில் இறங்கும் என்று அறிவித்தது.
என்.டி.பி.சி.
இதனால், சென்ற 2009&ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து பொதுத் துறை நிறுவனப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து காணப்பட்டது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், சென்ற இரண்டு மாதங்களில் பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.2.69 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
மத்திய அரசு, என்.டி.பி.சி. (ரூ.11,000 கோடி), என்.எம்.டீ.சி. (ரூ.20,000 கோடி), இன்ஜினியர்ஸ் இந்தியா (ரூ.1,000 கோடி) ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் (ரூ.3,000 கோடி) ஆகிய நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்வதன் வாயிலாக சுமார் ரூ.35,000 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. இந்நிறுவனங்கள், இரண்டாவது முறையாக பங்கு வெளியீடுகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. இந்நிறுவனங்கள், டிவிடெண்டுகள் மற்றும் இலவச பங்குகள் வழங்கும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் இந்நிறுவனப் பங்குகளை அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.
சென்செக்ஸ்
இதுபோன்ற காரணங்களால் சென்ற 15 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் Ôசென்செக்ஸ்Õ 3.46 சதவீதம் சரிவடைந்துள்ள நிலையில், பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் மதிப்பு 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் பங்கின் விலை இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.606.95&க்கு விலை போனது. எஸ்.டி.சி. நிறுவனப் பங்கின் விலை 41 சதவீதம் உயர்ந்து ரூ.526.05&க்கு கைமாறியது. பொதுத் துறையைச் சேர்ந்த புளுசிப் நிறுவனங்களில் என்.எம்.டீ.சி., எம்.எம்.டி.சி. ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை முறையே 26 சதவீதம், 2 சதவீதம் உயர்ந்துள்ளது. இன்ஜினியர்ஸ் இந்தியா, டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை முறையே 41 சதவீதம், 33 சதவீதம் உயர்ந்து ரூ.2,182.80 மற்றும் ரூ.701.90&க்கு விலை போனது.

லார்சன் அண்டு டூப்ரோ அனல் மின் உற்பத்தி பிரிவில் ரூ.25,000 கோடி முதலீடு

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

மும்பை: நாட்டின் மிகப் பெரிய பொறியியல் துறை நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ (எல்-டி) அதன் அனல் மின் உற்பத்தி வணிகப் பிரிவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.25,000 கோடி முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து எல்-டியின் முழுமையான துணை நிறுவனமான எல் அண்டு டி பவர், 2015ம் ஆண்டுக்குள் 5,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். பல்வேறு அனல் மின் திட்டங்களுடன், சில நீர்மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக இந்த மின் உற்பத்தி இலக்கு எட்டப்படும். இமாச்சல பிரதேசம், உத்தராஞ்சல் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நீர்மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான ஆர்டரைப் பெறும் போட்டியில் ஈடுபட்டுள்ளது. எல்-டி பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி இது குறித்து கூறும்போது, நிறுவனம் பஞ்சாப் மாநிலம் ராஜபுராவில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. இரண்டு பிரிவுகளாக நிர்மாணிக்கப்படும் இத்திட்டம் தலா 660 மெகா வாட் திறன் கொண்டதாக இருக்கும். இதற்கான பணிகள்
தொடங்கப்பட்டு விட்டன. முதல் பிரிவு 2013ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். எல்-டி பவர் நிறுவனம் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்நிறுவனம் ரூ.16,000 கோடி மதிப்பிற்கு பல்வேறு மின் திட்டங்களை

நிறைவேற்றுவதற்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. மத்திய அரசு, தனியார் பங்களிப்புடன் 4,000 மெகா வாட் திறனில் மெகா மின் உற்பத்தி திட்டங்களை நிர்மாணிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. எனவே இதற்கான ஒப்பந்தங்களைப் பெறும் முயற்சியிலும் இந்நிறுவனம் ஈடுபட உள்ளது. தற்போது முந்த்ரா (குஜராத்), சாசன் (மத்தியபிரதேசம்), கிருஷ்ணப்பட்டினம் (ஆந்திரா) திலையா (ஜார்க்கண்ட் மாநிலம்), ரோஸா (உத்தரபிரதேசம்) ஆகிய இடங்களில் தலா 4,000 மெகா வாட் திறனில் மெகா மின் உற்பத்தி திட்டங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு இது போன்ற மேலும் ஐந்து திட்டங்களை நிர்மாணிக்கும் வகையில் சில பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் போட்டி அடிப்படையில் ஏலப்புள்ளி மூலம் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.4,008 கோடி

தனியார் துறையை சேர்ந்த, முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.4,008 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட 14.48 சதவீதம் (ரூ.3,501 கோடி) அதிகமாகும். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர விற்பனை ரூ.31,563 கோடியிலிருந்து ரூ.56,856 கோடியாக வளர்ச்சி அடைந்துள்ளது.
கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலாண்டில், இந்நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரித்ததன் காரணமாகவே இதன் நிகர லாபம் உயர்ந்துள்ளது. மூன்றாவது காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெட்ரோரசாயன பொருள்கள் வர்த்தகம், முந்தைய ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட 17 சதவீதம் அதிகரித்து ரூ.14,756 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.சில ஆய்வு நிறுவனங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சென்ற மூன்றாவது காலாண்டில் ரூ.52,297 கோடி விற்பனையில் ரூ.3,912 கோடியை நிகர லாபமாக ஈட்டும் என மதிப்பீடு செய்திருந்தன. ஆனால், சந்தை மதிப்பீட்டையும் விஞ்சி ரிலையன்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


குறைந்த விலை ஷாப்பிங் : 'பிக் பஜார்' அறிவிப்பு
சென்னை: இந்த ஆண்டின் மிக மிகக் குறைந்த விலையில், நான்கு நாள் ஷாப்பிங் திருவிழாவை, 'பிக் பஜார்' அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி: இந்தியாவில், 70 நகரங்களில் அமைந்துள்ள பிக் பஜாரின் 120 கிளைகளில், இன்று முதல் வரும் 26ம் தேதி வரை, நான்கு நாட்கள், இந்த ஷாப்பிங் திருவிழா நடைபெறுகிறது. இந்திய நுகர்வோருக்கு மனநிறைவான சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற தொடர் முயற்சியின் விளைவாக, இது போன்ற திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பிக் பஜார், புட் பஜார் தவிர பியூச்சர் குழுமத்தின்,இதர சில்லறை விற்பனை நிறுவனங்களான பர்னிச்சர் பஜார், எலக்ட்ரானிக் பஜார், ஹோம் பஜார் உள்ளிட்டவையும், இந்த மாபெரும் திருவிழாவில் இடம் பெறும்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டி சர்ட்டுகள் இரண்டு வாங்கினால், இரண்டு இலவசம், ஜீன்ஸ் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம், சல்வார் கம்மீஸ் துப்பட்டா செட் பல்வேறு ரகங்களில் 50 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும்.நோக்கியா, சோனி எரிக்சன், சாம்சங் மொபைல் போன் ஆகியவை 25 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு மட்டுமே, இந்த

சலுகைகள் பொருந்தும். இதை தவிர, இன்னும் ஏராளமான பொருட்களுக்கு, பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை, பிக் பஜார் வழங்குகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

டெனிம் பேன்ட் விலை அதிகரிக்கும்
அமதாபாத்: காட்டன் விலை மற்றும் பாலியஸ்டர் விலை ஏற்றத்தின் காரணமாக துணி விலை, மீட்டருக்கு 5 முதல் 6 ரூபாய் வரை உயர்ந்துள்ளது; டெனிம் பேன்ட் விலை அதிகரிக்கும். இந்தியாவில் குஜராத் மாநிலம் தான் துணி உற்பத்தியில் முதன்மை பெற்று விளங்குகிறது. இது நூற்பாலைகள் செரிந்த மாநிலமாகும். அரவிந்த் மில்ஸ், ஆர்வி டெனிம்ஸ், அஸீம்மா, நந்தன் எக்ஸீம், ஜிந்தால் வேர்ல்டு ஒய்டு போன்ற பிரசித்தி பெற்ற, பெரிய ஆலைகள் உள்ளன. ஆண்டுக்கு 25 கோடியில் இருந்து 30 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. காட்டன் விலை, பாலியஸ்டர் விலை உயர்ந்ததன் காரணமாக, ஆலை உரிமையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் துணியின் விலையை, ஒரு மீட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியுள்ளனர். கடந்த மாதம் முதல் இந்த விலை அமலில் உள்ளது. வரும் மார்ச் மாதத்தில், விலை மேலும் 3 முதல் 4 சதவீதம் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்வி டெனிம் ஆலையின் இயக்குனர் ஆஷிஸ் வி ஷா கூறுகையில், 'எங்கள் ஆலையில் ஆண்டுக்கு 6 கோடி மீட்டர் வரை துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 20 முதல் 25 சதவீதம் வரை ஏற்றுமதி செய்கிறோம். பணப் புழக்கத்துக்கு தகுந்தாற் போல் ஏற்றுமதியை கூட்டியும் குறைத்தும் மேற்கொண்டு வருகிறோம். ஒரு மாதத்துக்கு முன்னர் ஒரு மீட்டர் துணி 87 ரூபாயாக இருந்ததை, 92 ஆக உயர்த்தி உள்ளோம். காட்டன் விலை, பாலியஸ்டர் விலை ஏற்றம் காரணமாக, இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது என்றார் ஷா.

சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்


முக்கிய 6 துறைகளின் உற்பத்தி எட்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், முக்கிய 6 துறைகளின் உற்பத்தி, கடந்த 2008&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் எட்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
அடிப்படை கட்டமைப்பு வசதி
உருக்கு, சிமெண்டு, மின்சாரம், நிலக்கரி, கச்சா எண்ணெய், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆகிய ஆறு அடிப்படை கட்டமைப்பு வசதி துறைகளின் உற்பத்தி கடந்த 2008&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 0.7 சதவீதம் உயர்ந்து இருந்தது. இது, சென்ற டிசம்பர் மாதத்தில், 8 மடங்கிற்கு மேல் அதிகரித்து 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய நவம்பர் மாத வளர்ச்சியுடன் (5.3 சதவீதம்) ஒப்பிடும்போதும் இது அதிகமானதாகும்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் இத்துறைகளின் உற்பத்தி 4.8 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் 3.2 சதவீதமாக இருந்தது. ஆக, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராகத் திகழும் ஆறு முக்கிய துறைகளின் உற்பத்தியில் எழுச்சி ஏற்படத் தொடங்கி உள்ளது என்று கூறலாம்.
தொழில்துறை
நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் இந்த துறைகளின் பங்களிப்பு 26.7 சதவீதமாக உள்ளது. சென்ற நவம்பர் மாதத்தில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 11 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இந்நிலையில், சென்ற டிசம்பர் மாதத்தில் இந்த முக்கிய துறைகளின் உற்பத்தியில் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால், டிசம்பர் மாதத்தில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 12 சதவீதத்தை எட்ட வாய்ப்புள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் உற்பத்தி
பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யாததால், உள்நாட்டில் வேளாண் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், தொழில் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முந்தைய காலாண்டைப் போன்று உத்வேகம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற டிசம்பர் மாதத்தில் முக்கிய ஆறு துறைகளின் உற்பத்தி வளர்ச்சியில் சிமெண்டு துறை முதலிடத்தில் உள்ளது. இத்துறையின் உற்பத்தி 11 சதவீதம் அதிகரித்து 1.81 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் சிமெண்டு உற்பத்தி 13.52 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் 11 சதவீதம் அதிகரித்து 15.01 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
சிமெண்டிற்கு அடுத்தபடியாக உருக்கு உற்பத்தியில் நல்ல அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்ற டிசம்பர் மாதத்தில் இதன் உற்பத்தி 9.6 சதவீதம் அதிகரித்து 46.40 லட்சம் டன்னிலிருந்து 50.85 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் உருக்கு உற்பத்தி 4.03 கோடி டன்னிலிருந்து 4.17 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
வீட்டு வசதி
இது குறித்து இந்திய கனிம தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.கே.சர்மா கூறும்போது, Òவீட்டு வசதி மேம்பாடு மற்றும் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதனையடுத்து, கட்டுமானப் பணிகளில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளதால், உருக்கு மற்றும் சிமெண்டு விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால், இத்துறைகளின் உற்பத்தியில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுÓ என்று தெரிவித்தார்.
மின்சாரம்
சென்ற டிசம்பர் மாதத்தில், அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் ஆதாரமாகத் திகழும் மின் துறையின் உற்பத்தி 5.4 சதவீதம் உயர்ந்து 6,341.70 கோடி யூனிட்டாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மின் உற்பத்தி 6 சதவீதம் அதிகரித்து 53,995.40 கோடி யூனிட்டுகளிலிருந்து 57,252.20 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
சென்ற டிசம்பர் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 1.1 சதவீதம் உயர்ந்து 29.05 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதன்படி, நாள் ஒன்றுக்கான உற்பத்தி திறன் 6,86,800 பீப்பாய்கள் ஆகும். கடந்த ஆறு மாதங்களில் டிசம்பர் மாதத்தில்தான் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி உயர்ந்துள்ள நிலையிலும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 0.9 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.டீ.எப்.சி. நிறுவனம்


நிகர லாபம் ரூ.671 கோடி

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
வீட்டு வசதி கடன் வழங்கி வரும் ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (எச்.டீ.எஃப்.சி) நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.671.25 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.546.83 கோடியாக இருந்தது.
இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.2,827.97 கோடியிலிருந்து ரூ.2,705.57 கோடியாக குறைந்துள்ளது.

யெஸ் பேங்க்


நிகர லாபம் ரூ.126 கோடி


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் பேங்க், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.125.93 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.105.79 கோடியாக இருந்தது.
இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் வட்டி வருவாய் ரூ.532.68 கோடியிலிருந்து ரூ.626.36 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. வங்கியின் வட்டிச் செலவினம் ரூ.412.27 கோடியிலிருந்து ரூ.415.44 கோடியாக சற்று உயர்ந்துள்ளது.


இந்திய செல்போன் சேவை துறை


டிசம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்வு



இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
செல்போன் சேவையைப் புதிதாக பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்ற டிசம்பர் மாதத்திலும் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதத்திலும், அதிக எண்ணிக்கையில் புதிய இணைப்புகள் வழங்கியதில் டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
டாட்டா டெலிசர்வீசஸ்
டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம், டிசம்பர் மாதத்தில் மட்டும் 33 லட்சத்துக்கும் அதிகமான அளவில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. புதிய வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்ப்பதில் இந்நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 5.70 கோடியை தாண்டி உள்ளது.
இதனையடுத்து பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல். நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, செல்போன் சேவையில் ஐந்தாவது பெரிய நிறுவனமாக டாட்டா டெலிசர்வீசஸ் உருவெடுத்துள்ளது. இதற்கு முன்பாக, ஐடியா செல்லுலார் நிறுவனம் பீ.எஸ்.என்.எல்&ஐ ஐந்தாவது இடத்துக்கு தள்ளி நான்காவது இடத்துக்கு முன்னேறியது.
இரண்டு தொழில்நுட்பங்கள்
டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டீ.எம்.ஏ. ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களிலும் செல்போன் சேவை வழங்குகிறது. டாட்டா இண்டிகாம் பிராண்டில் சி.டீ.எம்.ஏ. சேவையும், டாட்டா டோகோமோ பிராண்டின் கீழ் ஜி.எஸ்.எம். சேவையும் அளித்து வருகிறது. ஒரு நொடிக்கு ஒரு காசு என்ற புரட்சித் திட்டத்தை முதன் முதலில் அறிமுகம் செய்த இந்நிறுவனம் இதர நிறுவனங்களை விஞ்சிடும் வகையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
பார்தி ஏர்டெல்
இந்திய செல்போன் சேவைத் துறையில் முதல் இடத்தில் இருந்து வரும் பார்தி ஏர்டெல், சென்ற டிசம்பர் மாதத்தில் 28 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. தற்போது இந்நிறுவனம் மொத்தம் 11.90 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 84 லட்சம் புதிய இணைப்புகளை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.
செல்போன் சேவையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. வோடாஃபோன் எஸ்ஸார் மூன்றாவது இடத்திலும், ஐடியா செல்லுலார் நான்காவது இடத்திலும் உள்ளன. டாட்டா டெலிசர்வீசஸ் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. பீ.எஸ்.என்.எல். ஆறாவது இடத்துக்குச் சென்றுள்ளது.

அக்டோபர் & டிசம்பர் மாத காலத்தில்


2 சிமெண்டு நிறுவனங்களின் நிகர லாபம் சரிவடைந்தது

மிதுன் ராய்
மும்பை
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்&டிசம்பர்), இரண்டு முன்னணி சிமெண்டு நிறுவனங்களின் நிகர லாபம் சரிவடைந்துள்ளது. உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் தேவைப்பாடு குறைந்துள்ளதும், சிமெண்டு விலை சரிந்துள்ளதுமே இதற்கு முக்கிய காரணமாகும்.
அல்ட்ராடெக் சிமெண்ட்
அல்ட்ராடெக் சிமெண்ட், உற்பத்தி திறன் அடிப்படையில், நாட்டின் இரண்டாவது பெரிய சிமெண்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் அண்மையில் மூன்றாவது காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. நிறுவனத்தின் நிகர லாபம் 18 சதவீதம் குறைந்துள்ளது. இதே போன்று, இக்காலாண்டில் டெல்லியைச் சேர்ந்த ஜே.கே. லட்சுமி சிமெண்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 19 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இந்நிலையில் மெட்ராஸ் சிமெண்ட்ஸ், டால்மியா சிமெண்ட்ஸ், ஏ.சி.சி., அம்புஜா சிமெண்ட்ஸ் உள்ளிட்ட இதர நிறுவனங்களின் லாப வரம்பும் சரிவடையும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீசிமெண்ட் நிறுவனத்தின் நிகர லாபம், மூன்றாவது காலாண்டில 35 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அக்டோபர்&டிசம்பர் மாத காலத்தில் இந்நிறுவனம் ரூ.167 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.124 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் சிமெண்டு விற்பனை 30 சதவீதம் உயர்ந்து, ரூ.664 கோடியிலிருந்து ரூ.866 கோடியாக அதிகரித்துள்ளது.
எதிர்கால வளர்ச்சி
இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எச்.எம்.பாங்கூர் கூறும்போது, Òசிமெண்டு விலையில் ஏற்றத் தாழ்வுகள் நிலவி வருவதால் எதிர்கால வளர்ச்சி குறித்து முன்னறிவிப்பு செய்வது கடினமாக உள்ளது. சிமெண்டு விலையை அதிகரிக்க இயலவில்லை என்றால் இத்துறை நிறுவனங்களின் லாப வரம்பு பாதிக்கப்படும்Ó என்று தெரிவித்தார்.
மெட்ராஸ் சிமெண்ட், டால்மியா சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இம்மாதம் 28&ந் தேதியன்று மூன்றாவது காலாண்டிற்கான நிதி நிலை முடிவுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.சி.சி. மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவை பிப்ரவரி 4&ந் தேதியன்று நிதி நிலை முடிவுகளை வெளியிடும் என தெரிகிறது.
உற்பத்தி திறன்
தற்போது நம் நாட்டில் 70&க்கும் அதிகமான அளவில் சிமெண்டு நிறுவனங்கள் உள்ளன. சர்வதேச அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் சிமெண்டு துறை அதிவேக வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் உள்நாட்டு நிறுவனங்களின் சிமெண்டு உற்பத்தித் திறன் ஆறு கோடி டன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறுவனங்கள் விரிவாக்கத்துக்காக ரூ.50,000 கோடி முதலீடு மேற்கொள்ள உள்ளன. அப்போது நாட்டின் சிமெண்டு உற்பத்தி திறன் மேலும் 11 கோடி டன் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தேவைப்பாட்டை விஞ்சி அளிப்பு உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

15 மாதங்களில் முதல் முறையாக லாபம் கண்ட ரிலையன்ஸ்!
மும்பை: கிட்டத்தட்ட 5 காலாண்டுகள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் முதல் முறையாக இந்த காலாண்டில் லாபம் பார்த்துள்ளது.

அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் ரிலையன்ஸுக்கு 16 சதவிகித லாபம் அதாவது ரூ 4008 கோடி கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ 3,462 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த உற்பத்தி இந்த 3 மாதங்களில் மட்டும் 93 சதவிகிதம் உயர்ந்து ரூ 58,848 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் பங்குகள் மூலம் கிடைத்த வருவாய் இதில் சேர்க்கப்படவில்லை.

ஆனால் கடந்த மூன்று காலாண்டுகளிலும் சேர்த்து அதாவது 9 மாதங்களின் நிகர லாபம் என்று பார்த்தால் அதில் லேசான வீழ்ச்சியையே காட்டுகிறது. கடந்த நிதியாண்டில் 9 மாதங்களில் ரூ 11682 கோடியாக இருந்த நிகர லாபம், இந்த ஆண்டு 11526 கோடியாக குறைந்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் இந்த நிறுவனத்துக்கு கிடைத்த வரும் வருவாய் இந்த காலாண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்த சீனா!
பெய்ஜிங்: 8.7 சதவீத அபார வளர்ச்சியுடன் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது கம்யூனிஸ்ட் சீனா.

இதுவரை அந்த நிலையிலிருந்த ஜப்பான் இப்போது மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி 21ம் தேதி சீனா வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, அந்நாடு 33.5 ட்ரில்லியன் யான் (யான் என்பது சீன கரன்ஸி. டாலரில் 4.9 ட்ரில்லியன்) அளவு மொத்த உற்பத்தியை எட்டியுள்ளது.

இந்த மூன்றாவது காலாண்டில் மட்டும் 10.7 சதவிகிதம் அளவு சீனாவின் மொத்த உற்பத்தி GDP வளர்ச்சி கண்டுள்ளது. உலகில் இந்த காலகட்டத்தில் எந்த நாட்டுப் பொருளாதாரமுமே இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொட முடியாத நிலையில் சீனா இதைச் சாதித்திருப்பது முக்கியமானது. ஜப்பான் 6 சதவிகித வளர்ச்சியையே பெற்றுள்ளது.

அமெரிக்காவோ 2 சதவிகித வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது. நிலைமை இப்படியே போனால் தனது முதலிடத்துக்கே ஆபத்து வந்துவிடும் சூழல் உள்ளதால் கைபிசைந்து நிற்கிறது அமெரிக்கா.

சன் டிவி லாபம் 35 சதவீதம் உயர்வு!
சென்னை: மீடியா உலகில் முன்னணி வகிக்கும் சன் டிவி நெட்வொர்க்கின் மூன்றாம் காலாண்டு லாபம் 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் சன் டிவியின் நிகர லாபம் ரூ.112.2 கோடியாக இருந்தது. ஆனால் இப்போது அது அது ரூ. 151.9 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 45.88 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.270.8 கோடியாக இருந்த வருவாய் ரூ 395.1 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டில் முதல் மூன்று காலாண்டிலும் சேர்த்து நிகர லாபம் ரூ.402.3 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.323 கோடியாக இருந்தது.

பங்கு விற்பனை மூலம் இந்த நிறுவனம் திரட்டிய ரூ.572 கோடியில், ரூ 8.73 கோடி, புதிய சேனல்கள் துவங்க ஒதுக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் அலுவலகங்கள் அமைக்க மட்டுமே ரூ.62.3 கோடி செலவிடப்பட்டுள்ளது.

சன் டிவி நெட்வொர்க் ஐரோப்பா லிமிடெட் என்ற புதிய துணை நிறுவனம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மூலம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் சன் டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

டிடிஎச், ஐபிடிவி, எச்ஐடிஎஸ் மற்றும் எம்எம்டிஎஸ் போன்ற தொழில் நுட்பத்தை விநியோகிக்கும் வர்த்தகத்தில் பல புதிய மாறுதல்களைச் செய்யவும் சன் திட்டமிட்டுள்ளது.

விளம்பர கட்டணம் உயர்வு:

தனது தெலுங்கு மற்றும் கன்னட சேனல்களின் விளம்பரக் கட்டண விகிதங்களை 6 முதல் 16 சதவீதம் வரை உயர்த்துவதாகவும் அறிவித்துள்ளது சன். மலையாள சேனல்களில் 10 சதவீகித கட்டண உயர்வு இருக்குமாம்.

கேடிவி, சன் டிவி, சன் நியூஸ், ஆதித்யா, சுட்டி மற்றும் சன் மியூசிக் போன்றவற்றில் 9 முதல் 33 சதவீதம் வரை கட்டண உயர்வை அறிவித்துள்ளது சன்.

14 போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்! - ஆசாத் தகவல்

டெல்லி:​ நாடு முழுக்க 14 போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த தகவல்கள் கிடைத்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

போலி மருந்​து​கள் தயா​ரிக்​கும் நிறு​வ​னங்​கள் குறித்து தக​வல் தரும் நபர்​க​ளுக்கு ரூ.25 லட்​சம் வரை பரி​ச​ளிக்​கப்​ப​டும் என்று மத்​திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான பிறகு, இது​வரை 14 போலி நிறு​வ​னங்​கள் பற்​றிய தகவல்களை பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளதாக, டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆசாத் குறிப்பிட்டார்.

இந்த 14 போலி மருந்து தயா​ரிப்பு நிறு​வ​னங்​க​ளி​லும் சோதனை நடத்தி,​​ அவை தயா​ரிக்​கும் போலி மருந்​து​களை பறி​மு​தல் செய்​ய​வும் அவர்​க​ளைக் கைது செய்​ய​வும் நட​வ​டிக்​கை​கள் எடுக்​கப்​பட்​டுள்​ளதாகவும் அவர் கூறினார்.

இந்​தப் போலி நிறு​வ​னங்​கள் எந்​தெந்த மாநி​லங்​க​ளில் செயல்​ப​டு​கின்​றன என்​பதை இப்போதைக்கு தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்ட அமைச்சர், "ஆய்வின் முடிவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகள் போலி என்பது உறுதி செய்யப்பட்டால், அந்த நிறு​வ​னத்​தின் உரி​மை​யா​ளர்​க​ளுக்கு அதி​க​பட்​சம் ஆயுள் ​தண்​டனை வழங்க சட்​டத்​தில் இடம் இருக்​கி​றது" என்​றார்.​

பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து...

ஆசாத் மேலும் கூறுகையில், "தடுப்பு மருந்​து​கள் தயா​ரித்து வந்த பொதுத் ​துறை நிறு​வ​னங்​க​ளான சென்னை​​ கிண்​டி​யில் உள்ள பி.சி.ஜி.​ வாக்​ஸின் நிறு​வ​னம்,​​ குன்​னூ​ரில் உள்ள பாஸ்​டர் இந்​தியா நிறுவனம்,​​ கசோ​லி​யில் உள்ள மத்​திய ஆய்வு நிறு​வ​னம் இவை மூன்​றும் தர​மான உற்​பத்தி முறை​க​ளைக் கையா​ள​வில்லை என்ற கார​ணத்​தால் அவற்​றின் உரி​மம் தற்காலிகமாக ரத்து செய்​யப்​பட்​டுள்ளது.​

எனினும் குறைபாடுகளைக் களைந்து இந்த மூன்று நிறு​வ​னங்​க​ளை​யும் மீண்​டும் செயல்​பட வைக்​கும் பணி​யில் சுகா​தா​ரத் துறை ஈடு​பட்​டுள்​ளது.​ ​
கிண்டி பிசிஜி வாக்​ஸின் நிறு​வ​னத்​தைப் பொருத்​த​வரை,​​ இதனை ஏன் மூடி​னார்​கள் என்று கண்​ட​றிய அமைக்​கப்​பட்ட ஜாவீத் சவுத்ரி கமிட்​டி​யின் அறிக்கை கிடைத்ததும் இது மீண்​டும் திறக்​கப்​ப​டும்" என்​றார்.