பண்டிகை காலம் இது; ஜனவரியில் பார்ப்போம்

ஞாயிறு, 20 டிசம்பர், 2009




கடந்த வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில், சந்தை இறக்கத்தையே சந்தித்தது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், வருடக் கடைசி என்பது குறிப்பிடத்தக்கது. வியாழனும், வெள்ளியும் சந்தை ஏன் இவ்வளவு குறைந்தது? பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை கொண்டு வரும்; அந்த அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பில், சந்தை கரைந்தது. வெள்ளியன்று, இறுதியாக மும்பை பங்குச் சந்தை 174 புள்ளிகள் குறைந்து, 16,719 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 54 புள்ளிகள் குறைந்து 4,987 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. வங்கிப் பங்குகள் அதிகளவில் நஷ்டத்தைச் சந்தித்தன.

அட்வான்ஸ் டாக்ஸ்: சில செக்டர்களைத் தவிர, அட்வான்ஸ் டாக்ஸ் நம்பர்கள் நன்றாகவே உள்ளன. குறிப்பாக, வங்கித் துறையில் எதிர்பார்க்கப்பட்டது தான். வரிகள் நன்றாகச் செலுத்தப் பட்டிருப்பதால், சந்தை மேலே செல்லும் வாய்ப்பு உள்ளது. வரும் காலாண்டு முடிவுகளை கவனமாக பார்த்து, பின்னர் பங்குகளை வாங்க வேண்டும்.

சடுதியில் வந்த சந்தை நேரம் மாற்றம்: மும்பை பங்குச் சந்தை 10 நிமிடம் முன்னதாக துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று மாலை 9 மணிக்கு துவங்கும் என தேசிய பங்குச் சந்தை அறிவித்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையும் 9 மணி முதல் துவங்கும் என அறிவித்தது. இதனால், இனி, காலை உணவு சாப்பிடும் முன், முதலீட்டாளர்கள் 'டிவி' பெட்டி முன் உட்கார்ந்து விடுவர்.

ஜனவரி 4ம் தேதி முதல் துவங்கும் கொண்டாட்டங்கள்: உலகம் முழுவதும் பண்டிகை கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளதால், சந்தையில் சுரத்தே இல்லை. இனி, ஜனவரி முதல் வாரத்தில் தான், பெரிய அளவு ஈடுபாடு முதலீட்டாளர்களுக்கு வரும். சந்தையில் நல்ல பங்குகள் விலை குறையும் பட்சத்தில், சிறிது வாங்குவதில் தவறில்லை.

உணவுப் பொருட்களின் பணவீக்கம்: கடந்த வாரம் 19.05 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் பணவீக்கம், இந்த வாரம் 19.95 சதவீதமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சி தரக்கூடியது.

வரும் வாரம் எப்படி இருக்கும்? :பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. சந்தை இன்னும் சிறிது குறையலாம். முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. மறுபடியும் மேலே செல்லும். தேசிய பங்குச் சந்தை 4,900 புள்ளியைத் தொடும் போது, சாதகமாக இருக்கும்.

-சேதுராமன் சாத்தப்பன்-

டெபிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு
இந்தியாவில் சர்வதேச தரம் வாய்ந்த 5 ஓட்டல்கள்: ஹையட் முடிவு

சிகாகோ: இந்தியாவில் சர்வதேச தரம் வாய்ந்த ஐந்து ஓட்டல்களை நிறுவன இருப்பதாக ‌ஹையட் ஹோட்டல்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.பி., ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இருப்பதாகவும், அந்நிறுவனத்துடன் கூட்டு சேர்வதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் ஐந்து சர்வதேச தரம் வாய்ந்த ஓட்டல்களை அமைப்பதே என்றும் ஹையட் ஓட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் தனது நிறுவனத்தின் தரத்தை உயர்த்தும் முயற்சியில் ஹையட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் சர்வதேச தரம் வாய்ந்த ஓட்டல்களை அமைக்க ஹையட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2018ல் காசோலைக்கு கு‌ட்பை: பிரிட்டன் அரசு
லண்டன்: வரும் 2018ம் ஆண்டு முதல், காசோலை பயன்பாடு முற்றிலும் நிறுத்தப் படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு முறைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக காசோலை பயன்படுத்தும் முறை சமீப காலமாக குறைந்து வருகிறது. மேலும், பணம் செலுத்தும் முறைகளில் நவீன மற்றும் திறன் மிக்க வழிமுறைகளை கையாள ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. இதனால், காசோலை பயன்படுத்தும் முறை 2018ம் ஆண்டில் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விடும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி பால் ஸ்மீ கூறுகையில், '21ம் நூற்றாண்டில் வளர்ந்துள்ள தொழில்நுட்ப சூழலில் பேப்பர் மூலம் பணம் செலுத்தும் முறையை விட பல திறன்மிக்க வசதிகள் சாத்தியப்படும் என்று கூறினார். மேலும், பொருளாதாரத் துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு வாய்ப்பு' என்றும் அவர் கூறினார்

டாடா மோட்டார்ஸ் சலுகை அறிவிப்பு

சென்னை: டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 'நவ் ஆர் நெவர்' என்ற சலுகையை அறிவித்துள்ளது. <ணீ>இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி: டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இதுவரை இல்லாத சிறந்த சலுகையாக இதை, தன் வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது. இந்த சலுகை, இம்மாதத்தில் கார் <ணீ>வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். இந்த சலுகையின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவன வாடிக்கையாளர்கள், 'விஸ்டா' மற்றும் 'இண்டிகா சிஎஸ்' ஆகியவற்றின் மீது 27 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். 'இண்டிகா'வில், 30 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த சேமிப்பை தவிர, வாடிக்கையாளர்கள் ஆன்-லைன் போட்டிகளில் கலந்து கொண்டு, ஒரு லட்சம் ரூபாய் வரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. இதுவரை 21 வாடிக்கையாளர்கள், ஒரு லட்சம் ரூபாய் வென்றுள்ளனர். இச்சலுகை வரும் 22ம் தேதி வரை மட்டுமே. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தனிநபர் உற்பத்தி அதிகமுள்ள நாடு: லீச்டென்ஸ்டீன் முதலிடம்
பெர்லின்: தனிநபர் உற்பத்தி அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் குட்டி நாடான லீச்டென்ஸ்டீன் முதல் இடத்தை பிடித்துள்ளது. உலகின் டாப் 10 தனிநபர் உற்பத்தி கொண்ட நாடுகள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே உள்ள லீச்டென்ஸ்டீன் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு மக்கள் தொகை குறைவாகாவும், தொழிற்சாலைகள் அதிகமாகும் இடம் பிடித்துள்ளன. இதனால், அங்கு வாழும் மக்களின் சராசரி ஆண்டு வருமானம் 55.46 லட்சம் ரூபாயாக உள்ளது. 48.64 லட்சம் ரூபாய் தனிநபர் உற்பத்தியுடன் கத்தார் இரண்டாவது இடத்திலும், ஐரோப்பிய தன்னாட்சி நகரான லக்சம்பெர்க் 3வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில், அமெரிக்காவுக்கு 10வது இடமே கிடைத்துள்ளது.

உலகின் தலைசிறந்த ‌செயல்அதிகாரிகள் பட்டியலில் முகேஷ்

புதுடில்லி : உலகின் தலைசிறந்த செயல்அதிகாரிகள் பட்டியலில் முகேஷ் அம்பானி இடம் பெற்றுள்ளார்.ஹார்வர்டு பல்கலைகழகத்தின் ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ இதழ் உலகின் தலைசிறந்த செயல்அதிகாரிகள் பட்டியலை தயாரித்துள்ளது. இதில் இந்திய பங்குச் சந்தைகளில் அதிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி 5ம் இடத்தை பிடித்துள்ளார். பங்குச் சந்தையில் பதிவு பெற்றுள்ள 2000 கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள் இந்தப் பட்டியலுக்காக ஆய்வு செய்யப்பட்டனர். 33 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் தலைமை செயல் அதிகாரிகளின் செயல்திறன் குறித்து மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வில், 50 பேர் உலகின் மிகச் சிறந்த தலைமை செயல் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இதில், இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் முகேஷ் அம்பொனி ஆவார். ‌தலைமை செயல் அதிகாரிகளின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு எந்த அளவிற்கு ஆதாயம் அளித்துள்ளன என்பதன் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்

வயர்லெஸ் பிராட்பேண்ட் உபயோகத்தை அதிகரிக்க திட்டம்

சென்னை: சென்னையில் யுனிவர்செல் நிறுவனத்திற்கு சொந்தமான 42 கடைகளில் ரிலையன்ஸ் பிராட் பேண்ட் நெட் கனெக்ட் சேவையை அளிக்கவுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், தென்னிந்தியாவில் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை விற்பனை செய்யும் யுனிவர்செல் நிறுவனமும் இணைந்து, சென்னையில் வயர்லெஸ் பிராட்பேண்ட் உபயோகத்தை அதிகரிக்கும் திட்டத்தின் ஒப்பந்தத்தில் கையெழுதிட்டுள்ளது. இது குறித்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தமிழகம், கேரள வட்டாரத்தின் பிராந்திய தலைவர் சோமசேகர், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில், பிராட்பேண்ட் உபயோகிப்பதை அதிகரிக்க வேண்டும் என்ற நிறுவன இலக்கை எட்டுவதற்காக, மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளில், இதுவும் ஒன்று. பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்ற அரசின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் நோக்கத்தில், இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ரிலையன்ஸ் நெட் கனெக்ட் பிராட்பேண்ட் பிளஸ் சேவையானது இன்டர்நெட் வர்த்தகத்தில் பிராட் பேண்ட் உபயோகிப்பை மேலும் அதிகரிக்க உதவும். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில், இணைய தள உபயோகிப்பை அதிகரிக்கும். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பிராட் பேண்ட் நுகர்வை அதிகரிக்கும் வகையில் அனைத்துப் பகுதியிலும் விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு கம்பியில்லா இன்டர்நெட் இணைப்பை உடனடியாக அளிக்க முடிகிறது. சென்னையில் உள்ளவர்கள் இத்தகைய கம்பியில்லா இணைப்பை உடனடியாகப் பெற முடியும்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அடுத்த தலைமுறையினருக்காக ஒருங்கிணைந்த டிஜிட்டல் இணைப்பை அளிக்க ஒரு லட்சத்து 90 ஆயிரம் கி.மீ., தூரத்துக்கு கண்ணாடியிழை கேபிளை பதித்துள்ளது. இந்த இணைப்பு மூலம் தொலைத் தகவல் தொடர்புத் துறையில் சர்வதேச தரத்திலான சேவையை அளிக்க முடியும். இவ்வாறு சோமசேகர் கூறினார்.

கருவேப்பிலை விலை இனிக்கிறது : விவசாயிகள் முகத்தில் மறுமலர்ச்சி


பல்லடம்: மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் இருந்து கருவேப்பிலை வரத்து குறைவால், திருப்பூர், கோவை மார்க்கெட்டில் கிலோவுக்கு ஐந்து ரூபாய் கொள்முதல் விலை அதிகரித்துள்ளது; பல்லடம் பகுதி கருவேப்பிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல்லடம் பகுதியில் சித்தம்பலம், ஆலூத்துப்பாளையம், வெங்கிட்டாபுரம், காளிவேலம்பட்டி, கரசமடை, எலவந்தி, சுக்கம்பாளையம் உட்பட பல இடங்களில், 300 ஏக்கர் பரப்பளவில், கருவேப்பிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கருவேப்பிலை பறிப்புக்கு பின், திருப்பூர் காய்கனி மார்க்கெட், உழவர் சந்தை, கோவை மற்றும் கேரள பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை பகுதிக்கு கருவேப்பிலை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மலைப்பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் கருவேப்பிலை சாகுபடி செய்யப்பட்ட பல இடங்களில், தற்போது நீடித்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, கருவேப்பிலைகளில் புள்ளிநோய் தாக்கப்பட்டு, செடியில் இருந்து உதிர்ந்து விளைச்சல் குறைந்துள்ளது. இதன்காரணமாக, மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் இருந்து திருப்பூர், கோவைக்கு வரும் கருவேப்பிலை வரத்து, கடந்த 10 நாட்களாக கணிசமாக சரிந்துள்ளது. மேட்டுப்பாளையம், காரமடையை ஒப்பிடும் வகையில், பல்லடம் பகுதியில் பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாத காரணத்தால், புள்ளிநோய் மற்றும் பனிக்கருகலில், கருவேப்பிலை பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கவில்லை. மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் இருந்து திருப்பூர், கோவை பகுதிக்கு கருவேப்பிலை வரத்து சரிந்ததால், திருப்பூர், கோவை மார்க்கெட்டுகளில் பல்லடம் பகுதியில் உள்ள கருவேப்பிலைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு முன், பல்லடம் பகுதி கருவேப்பிலை சாகுபடி விவசாயிகளிடம் ஒரு கிலோ கருவேப்பிலை ஒன்பது ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது; தற்போது கிலோவுக்கு ஐந்து ரூபாய் அதிகரித்து, 14 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இரண்டு வாரத்தில் கருவேப்பிலை கொள்முதல் விலை 60 சதவீதம் உயர்வு, பல்லடம் பகுதியில் கருவேப்பிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை மகிழ்ச்சியில்

செயில் நிறுவனம்


20% பங்குகளை வெளியிட திட்டம்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
மத்திய உருக்கு அமைச்சம் Ôசெயில்Õ நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைக் கோர திட்டமிட்டுள்ளது.
வரைவு மனு
அடுத்த 3&4 வாரங்களுக்குள் மத்திய அமைச்சரவைக்கு நிறுவனத்தின் கோரிக்கை அனுப்பி வைக்கப்படும் என உருக்கு துறை செயலாளர் அதுல் சதுர்வேதி தெரிவித்தார். இது தொடர்பான வரைவு மனு ஒன்றுக்கு உருக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரைவு மனு பல்வேறு அமைச்சகங்களின் கருத்துக்களை அறியும் வகையில் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Ôசெயில்Õ நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில், மத்திய அரசு இந்நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் 10 சதவீதமும், நிறுவனத்தின் புதிய பங்குகள் 10 சதவீதமும் வெளியிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. அதாவது, இரண்டு கட்டங்களில் முறையே மத்திய அரசு மற்றும் செயில் நிறுவனத்தின் தலா 5 சதவீத பங்குகள் வெளியிடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நடப்பு நிதி ஆண்டிலேயே பங்கு வெளியீட்டினை மேற்கொள்ள முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக நிறுவனத்தின் பங்கு வெளியீட்டை அடுத்த நிதி ஆண்டில்தான் மேற்கொள்ள இயலும் என உருக்கு துறை செயலாளர் அதுல் சதுர்வேதி கூறினார்.
விரிவாக்க பணிகள்
Ôசெயில்Õ நிறுவனம் ரூ.70,000 கோடி செலவில் பெரிய அளவில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான பகுதி நிதியை பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்ட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. Ôசெயில்Õ நிறுவனப் பங்கு ஒன்றின் தற்போதைய சந்தை விலை அடிப்படையில், இரண்டாவது பங்கு வெளியீடு வாயிலாக இந்நிறுவனம் சுமார் ரூ.18,000 கோடி திரட்டிக் கொள்ள இயலும்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில்


விளைபொருள் மீதான முன்பேர வர்த்தகம் தடை செய்யப்படுமா?


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
அத்தியாவசிய உணவு பொருள்கள் விலை, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் உயர்ந்துள்ளது. இதனையடுத்து, விளைபொருள்கள் மீதான முன்பேர வர்த்தகம் தடை செய்யப்படலாம் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரிசி & கோதுமை
கடந்த 2007&ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருந்த இடதுசாரிகளின் வற்புறுத்தலால், அரிசி, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் உளுந்து மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள மத்திய அரசு தடை விதித்தது. இதன் பிறகு, சர்க்கரை உள்ளிட்ட மேலும் பல பொருள்கள் மீதும் முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்ற நவம்பர் மாதத்தில், அனைத்து பொருள்களுக்கான பணவீக்க விகிதம் (4.78 சதவீதம்), அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதால், அனைத்து விளைபொருள்கள் மீதும் முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இயற்கை ரப்பர் விலை, வழக்கத்திற்கு மாறாக மிகவும் உயர்ந்துள்ளது. இதற்கு, ஊக அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முன்பேர வர்த்தகமே காரணம் என்று மோட்டார் வாகன டயர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
உருளைக்கிழங்கு
விலைவாசி உயர்ந்து வருவதால், பொதுமக்கள், அவர்களின் செலவிடும் வருவாயில் 50 சதவீதத்தை உணவு பொருள்களுக்காக ஒதுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. சென்ற ஓர் ஆண்டில், உருளைக்கிழங்கு விலை இரண்டு மடங்கிற்கு மேல், அதாவது 136 சதவீதம் அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் (40 சதவீதம்), வெங்காயம் (15.4 சதவீதம்), கோதுமை (14 சதவீதம்), பால் (13.6 சதவீதம்), அரிசி (12.7 சதவீதம்) பழங்கள் (11 சதவீதம்) விலையும் உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, டிசம்பர் 5&ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், உணவு பொருள்களுக்கான பணவீக்க விகிதம் வரலாறு காணாத வகையில் 20 சதவீதத்தை எட்டி உள்ளது.
பருவமழை
இவ்வாறு விலை உயர்ந்து வருவதற்கு, போதிய அளவு மழையின்றி, உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்துள்ளதும் காரணமாகும். சென்ற நிதி ஆண்டில், 10 கோடி டன்னாக இருந்த அரிசி உற்பத்தி, நடப்பு நிதி ஆண்டில் 8.45 கோடி டன்னாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், ஆண்டுக்கு 1.20 கோடி டன் சமையல் எண்ணெய் தேவைப்படுகிறது. அதேசமயம், உற்பத்தி 65 லட்சம் டன் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. ஓர் ஆண்டிற்கான சர்க்கரை பயன்பாடு 2.35 கோடி டன்னாக உள்ளது. அதேசமயம், நடப்பு சர்க்கரை பருவத்தில் (அக்டோபர் & செப்டம்பர்) 1.60 கோடி டன் மட்டுமே சர்க்கரை உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 75 லட்சம் டன் சர்க்கரைக்கு பற்றாக்குறை ஏற்படும் என தெரிகிறது.
பயன்பாடு
உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து வரும் நிலையில், பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கு மக்கள் தொகை உயர்ந்து வருவது மட்டும் காரணம் அல்ல. தனிநபர் செலவிடும் வருவாயில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியும் முக்கிய காரணம் என்று பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 2003&04&ஆம் நிதி ஆண்டில், ஒரு ரூபாய்க்கு 7.70 கிராம் உணவு தானியம் கிடைத்தது. இது, தற்போது பாதியாக, அதாவது 3.7 கிராமாக சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உணவு பொருள்கள் விலை உயர்வுக்கு, உற்பத்தி குறைவுதான் காரணம் என்று கூறப்பட்டாலும், முன்பேர வர்த்தகமும் ஒரு காரணமாக உள்ளது என்று பல பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது, விளைபொருள் முன்பேர வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கொள்கையில் சமாஜ்வாடி கட்சியும், இடதுசாரி கட்சிகளும் மிகவும் உறுதியாக இருக்கும் என்று தெரிகிறது.
நடப்பு சந்தைகளில் உணவு பொருள்கள் விலை உயர்ந்து வருவதற்கும், முன்பேர வர்த்தகத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஒரு சில பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சான்றாக, அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, சர்க்கரை ஆகியவற்றின் மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இவற்றின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில், உளுந்து, துவரம் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலை முறையே 50 சதவீதம், 64.5 சதவீதம் மற்றும் 54 சதவீதம் உயர்ந்துள்ளது.
விலைவாசி உயர்வுக்கும், முன்பேர வர்த்தகத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள, திட்டக்குழு உறுப்பினர் அபிஜித் சென் தலைமையிலான குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு அதன் அறிக்கையில், Òமுன்பேர வர்த்தகத்திற்கும், விலைவாசி உயர்வுக்கும் தொடர்பு இருப்பதாக உறுதியாக தெரியவில்லை. விலைவாசி உயர்வுக்கு பல்வேறு அடிப்படை அம்சங்கள் காரணமாக அமைந்துள்ளனÓ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு அமைப்புகள்
நம் நாட்டில், தேசிய அளவில் செயல்படும் என்.சி.டீ.இ.எக்ஸ்., என்.எம்.சி.இ., எம்.சி.எக்ஸ். மற்றும் அண்மையில் புதிதாக தொடங்கப்பட்ட ஐ.சி.இ.எக்ஸ். ஆகிய நான்கு முன்பேர சந்தை அமைப்புகளில் வேளாண் விளைபொருள்கள், உலோகங்கள், எரிபொருள் மீது முன்பேர வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
உள்நாட்டில், தேவைப்பாட்டிற்கு ஏற்ப உணவு பொருள்கள் கிடைக்கும் வகையில், அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் வகையிலும், உணவு பொருள்கள் பதுக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது


ஓ.என்.ஜி.சி.


180 சதவீத டிவிடெண்டு


ஓ.என்.ஜி.சி. நிறுவனம், எண்ணெய், எரிவாயு துரப்பணம் மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் நடப்பு நிதி ஆண்டுக்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 180 சதவீத டிவிடெண்டை அறிவித்துள்ளது. அதாவது, ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.18 டிவிடெண்டு கிடைக்கும்.
இதனையடுத்து நடப்பு நிதி ஆண்டில் இந்நிறுவனம் டிவிடெண்டாக மொத்தம் ரூ.3,850 கோடியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற 2008&09&ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு, 320 சதவீத டிவிடெண்டு வழங்கியது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குஜராத் மாநிலம் கட்ச் கடல் பகுதியில் ஜி.கே.28&1 கிணற்றில் இயற்கை எரிவாயு வளம் உள்ளதை கண்டறிந்துள்ளது. 1,550 மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்பட்டுள்ள இந்த கிணற்றில் சோதனை அடிப்படையிலான உற்பத்தியில் நாள் ஒன்றுக்கு 1.20 லட்சம் கன மீட்டர் எரிவாயு கிடைத்ததாக ஓ.என்.ஜி.சி. தெரிவித்துள்ளது.