NIFTY 25-06-2010

வெள்ளி, 25 ஜூன், 2010

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு 80 டாலராக உள்ளது. அதற்கு தகுந்தாற்போல், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாததால், பொதுத்துறை எண்ணை நிறுவனங்களுக்கு தினந்தோறும் ரூ.215 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.தற்போது, பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. அதை மத்திய அரசிடம் இருந்து விடுவித்து, எண்ணை நிறுவனங்களிடம் ஒப்படைக்க பெட்ரோலிய அமைச்சகம் யோசனை தெரிவித்துள்ளது. டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலையை உயர்த்துமாறும் யோசனை தெரிவித்தது.

இதுபற்றி பிரதமர் மன்மோகன்சிங்கிடமும், மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியிடமும் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா பலதடவை நேரில் வலியுறுத்தினார். எனவே, இதுபற்றி முடிவு எடுக்க பிரணாப் முகர்ஜி தலைமையில் 8 மத்திய மந்திரிகள் கொண்ட குழுவை பிரதமர் அமைத்தார்.

ஆனால் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து, மத்திய மந்திரிகள் மம்தா பானர்ஜி, சரத்பவார் ஆகியோர் கடந்த 7-ந் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்குழுவின் முதல் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் அக்கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இன்று முடிவு
இந்நிலையில், மத்திய மந்திரிகள் குழு இன்று மீண்டும் கூடுகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த மந்திரிகளிடையே கிட்டத்தட்ட ஒருமித்த கருத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, இன்றைய கூட்டத்தில், பெட்ரோலிய அமைச்சகத்தின் யோசனை ஏற்கப்படும் என்று தெரிகிறது. அப்படி ஏற்கப்பட்டால், விலை உயர்வு, இன்று நள்ளிரவில் இருந்து அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு உயரும்?

பெட்ரோல் விலை நிர்ணயம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டால், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 73 காசுகள் உயர்த்தப்படும் என்று பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது மொத்தமாக ஒரே தவணையில் உயர்த்தப்படுமா? அல்லது இரு தவணைகளாக உயர்த்தப்படுமா? என்று தெரியவில்லை.

டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தால், அது சரக்கு போக்குவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, பண வீக்கம் உயரும் அபாயம் உள்ளது. எனவே, அது மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே நீடிக்கும். இருப்பினும், லிட்டருக்கு 2 ரூபாய் என்ற அளவில் டீசல் விலை உயர்த்தப்படும்.

சமையல் கியாஸ் விலை, சிலிண்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்படும். நீண்ட காலமாக உயர்த்தப்படாமல் உள்ள மண்எண்ணை விலையும் ஓரளவுக்கு உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

மிச்சம் பெட்ரோல் விலை நிர்ணயம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டால், எண்ணை நிறுவனங்கள் சந்திக்கும் நஷ்டத்தின் அளவு ரூ.5 ஆயிரம் கோடி குறையும். டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டால், ரூ.8 ஆயிரம் கோடிவரை நஷ்டம் குறையும்.

ஆகவே இன்றைய சந்தைகளை பொறுத்தவரை என்னை நிறுவன பங்குகள் நல்ல எட்ட்ரத்தில் இருக்க வாய்ப்புள்ளது முக்கியமாக ONGC,OIL INDIA ,IOC,HPCL,BPCL,RELIANCE,ESSAROIL ,RNRL,CAIRN ,PETRONETLNG ,CASTROLINDIA ஆகிய பங்குகள் லாபம் ஆடைய வழி உண்டு தேசிய நிப்த்யை பொறுத்தவரை 5345 தாண்டினால் 5380 வரை செல்லும் வைப்புகள் உள்ளன அனால் ஆசியா சந்தைகளின் தாக்கம் நமது சந்தையில் எதிரொலிக்க வாய்ப்புண்டு.நிப்த்யை பொறுத்தவரை 5265 உடைபட்டால் சந்தை திரும்ப கிழ இறங்க வாய்ப்புள்ளது
சந்தை சற்று சுனக்கதுடன் காணப்படும் இறக்கத்தில் 5305 -5285 -5265 ------௫௨௨௦
எட்ட்ரத்தில் 5335 - 5355 --5380

STOCKS TO WATCH

RELIANCE
RNRL
ONGC
OIL INDIA
CAIRN
ESSAROIL
IOC
HPCL
BPCL
PETRONETLNG
GUJARAT STATE PETRO
CCPL
MRPL
CROMPTON GRE
HUL
GMDC
STERLING BIO
FORTIS
GVK POWER
PIRAMAL
NAGARJUNA CONS
GUN NRECOKE
HDIL
IDFC
MARICO
IOB
UNITED SPRITS
SINTEX
BHUSAN STEEL
ISPAT IND
EKC
UNIETD PHOS
NEYVELI LIG
STC
CIPLA
REC
HIND.COPPER
SHRIRAM TRANS
PANTALOON RET
KOUTON RET
IRB INFRA
REI AGRO
PUNJLLOYD
JUBLIANT ORG
RPOWER

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த பயனீயர் நேச்சுரல் ரிசோர்சஸ் ஷேல் காஸ் நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 115 கோடி டாலர் (ரூ. 5,300 கோடி) அளித்துள்ளது.
கடுமையான போட்டிக்கிடையே அதிக தொகை கொடுத்து பயனீயர் நிறுவனப் பங்குகளை ரிலையன் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயனீயர் நிறுவனம் நாளொன்றுக்கு 2.80 கோடி கன அடி எரிவாயுவை உற்பத்தி செய்கிறது. 2,12,000 ஏக்கர் நிலப்பரப்பில் 5 எரிவாயு கிணறுகளிலிருந்து எரிவாயு எடுக்கப்படுகிறது. தற்போது 45 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 95,300 ஏக்கர் பரப்பளவு சொந்தமாகிறது. தொடக்கத்தில் 26.60 கோடி டாலர் தொகையை (ரூ. 1,250 கோடி) ரிலையன்ஸ் அளிக்கும். எஞ்சிய 87.90 கோடி டாலர் தொகையை பயனீயர் நிறுவனம் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் அகழ்வுப் பணிக்கு அளிக்கும். இதற்கான ஒப்பந்தம் கடந்த 1-ம் தேதி கையெழுத்தானதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. வட அமெரிக்காவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்த இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன செயல் இயக்குநர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரலில் அட்லாஸ் எனர்ஜி இன்கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் வாங்கியது. இந்நிறுவனம் 3 லட்சம் ஏக்கர் பரப்பில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை 170 கோடி டாலருக்கு (ரூ. 7,820 கோடி) ரிலையன்ஸ் வாங்கியது. தற்போது அமெரிக்காவில் இரண்டாவது நிறுவனத்தின் ரிலையன்ஸ் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி: உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக வங்கியிடம் நாம் இதுவரை வாங்கியுள்ள கடன் தொகை 900 கோடி டாலர் (அதாவது ரூ. 41,500 கோடி) ஆகும். இத்தொகை கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட தொகையைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.

மும்பை: கிஷோர் பியானியின் ஃப்யூச்சர் குரூப்பும் டாடா டெலிசர்வீசும் சேர்ந்து டி24 என்ற புது மொபைல் சேவையை தொடங்கியுள்ளனர்.

இந்த சேவைக்கான சிம் கார்டுகள் ஆந்திராவில் தொடங்கி 75 நகரங்களிலும், 65 கிராமங்களிலும் உள்ள ஃப்யூச்சர் குரூப்ஸின் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும்.

ஃப்யூச்சர் குரூப்ஸின் சில்லறை விற்பனை கடைகளான பான்டலூன்ஸ், பிக் பஜார், சென்ட்ரல் ஆகிய இடங்களில் கிடைக்கும். அந்தந்த கடைகளில் வாங்குவதைப் பொறுத்து இலவச டாக் டைம் அமையும்.

உதாரணமாக, பான்டலூன்ஸில் ரூ. 2,501 க்கு இந்த சேவையை வாங்கும் வாடிக்கையாளருக்கு 50 நிமிடங்கள் இலவச டாக் டைம் கிடைக்கும். இது போன்று, பிக் பஜாரில் ரூ. 1,501 க்கு வாங்கும் வாடிக்கையாளருக்கு 90 நிமிடங்கள் இலவச டாக் டைம் கிடைக்கும்.

டாடா டெலிசர்வீசஸ் ஜி.எஸ்.எம் மற்றும் சி.டி.எம்.ஏ சேவைகளை வழங்குகிறது. இதன் ஜி.எஸ்.எம் சேவையின் பங்குதாரர் ஜப்பானின் டோகோமோ நிறுவனம். வர்ஜின் மொபைல் தனது சி.டி.எம்.ஏ சேவையை டாடா டெலிசர்வீசஸ் கூட்டணியில் தான் தொடங்கியது.

டாடா டெலிசர்வீசஸ் தனது வாடிக்கையாளர் வட்டத்தை இந்த கூட்டணியின் மூலம் பெருக்கவுள்ளது. தொலைத்தொடர்பில் தொடங்கி பெட்ரோல் மற்றும் மின்சாரத் துறைகளிலும் நுழைய இருப்பதாக பியானி தெரிவித்தார்.

உலக வங்கி கடந்த ஆண்டு 220 கோடி டாலர் கடனுதவி அளித்தது.

2010ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடையும் உலக வங்கியின் நிதியாண்டில், அதனிடம் அதிக அளவில் கடன் வாங்கிய ஒரே நாடு இந்தியாதான்.

கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கிய கடன் அளவு 2.2 பில்லியன் டாலர்கள் மட்டும்தான். ஆனால் அதன் பின்னர் இந்தியா இந்த அளவுக்கு கடனை வாங்கிக் குவித்து வைத்து விட்டது.

உலக வங்கியிடம் கடன் வாங்கியதில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாகும். அடுத்த இடம் மெக்சிகோவுக்கு. அதன் அளவு 11 சதவீதமாகும். 3வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் கடன் அளவு 7 சதவீதமாகும்.

ஜூன் 20ம் தேதி வரை இந்தியாவுக்கு உலக வங்கி கொடுத்துள்ள கடன் தொகையின் அளவு 9.26 பில்லியன் டாலர். வருகிற நிதியாண்டில் மேலும் 0.04 பில்லியன் டாலர் கடனை இந்தியாவுக்குத் தரவுள்ளது உலக வங்கி.

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம், கோசி ஆறு சீரமைப்பு திட்டம் போன்ற பல திட்டங்களுக்கு உலக வங்கி கடன் வழங்குகிறது. மேலும், பிரத்தியேக சரக்கு போக்குவரத்து ரயில் பாதை திட்டத்துக்கும் கடனுதவி அளிக்க
உள்ளது உலக வங்கி

சென்னை: சிட்டி லிமோசின் நிதி நிறுவனம் ரூ 54 கோடி நிதி மோசடி செய்ததாக அதன் இயக்குநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது, சிட்டி லிமோசின் என்ற நிதி நிறுவனம். மேலும் 13 வெவ்வேறு பெயர்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கொடுத்த மோசடி புகாரை அடுத்து, அதன் இயக்குனர்கள் அப்துப் மஜீத் மற்றும் அவரது உறவினர் கீதா ரசாக்கி ஆகியோரை மும்பை போலீஸ் கைது செய்து ஜெயிலில் அடைத்தது.

தமிழகத்திலும் இந்த நிறுவனத்தின் மீது பல மோசடி புகார்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மும்பையில் இருந்து இவர்கள் 2 பேரையும் சிறை கைதி மாற்று வாரண்டு (பி.டி. வாரண்டு) மூலம் சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இவர்களை 13 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சென்னையில் உள்ள நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்காக, ஜெயிலில் இருந்து அப்துல் மஜீத், கீதா ரசாக்கி ஆகியோரை சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இந்த மனுவை நீதிபதி யூசுப் அலி விசாரித்தார். தொடர்ந்து அவர்கள் இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

ஆப்பிள் ஐபோன்களுக்கு போட்டியாக மோட்‌டோரோலா நிறுவனம் புதிதாக டிராய்ட் எக்ஸ் என்ற போனை அறிமுகம் செய்கிறது. மோட்‌டோரோலா நிறுவனம், 4.3 இஞ்ச் டச் ஸ்கிரீன், 8 மெகாபிக்சல் கேமராவும் , கூகுளின் ஆண்ட்ராய்ட் சாப்ட்வேர் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிராய்ட் எக்ஸ் போனை, வரும் ஜூலை மாதத்தில் விற்பனை செய்ய வெரிஜான் நிறுவனம் திட்டமி்ட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் மூன்று கம்பெனிகள் போட்டி போட்டுக் கொள்ளும் நிலையில், அமெரிக்க மொபைல் ‌போன் நிறவனமான வெரிஜான் வயர்லெஸ் நிறுவனம், ஜூலை 15 முதல் விற்பனைக்கு வர உள்ள டிராய்ட் எக்ஸ் போனின் விலை 200 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதன் விலை 100 அமெரிக்க டாலர்களாக குறைக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது

வாகன டயர் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் சியட் டயர்ஸ் நிறுவனம், உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அமைக்க திட்டமிட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள இந்த யூனிட்டில், ரேடியல் வகை டயர்களும், டியூப் இல்லா‌த டயர்களும் தயாரிக்கப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்நிறுவனத்தின் ஐந்தாவது யூனிட் ஆகும். சியட் நிறுவனத்திற்கு ற்கேனவே மும்பை, நாசிக், ஹலோல் மற்றும் இலங்கையில் டயர் உற்பத்திப் பிரிவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது

''சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன,'' என 'டாபே' நிறுவன முதன்மை நிதி அதிகாரி சந்திரமோகன் தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், 'வளர்ச்சி மற்றும் நிதி வாய்ப்புகளை நிர்வகிப்பது' குறித்த பயிற்சி முகாம், சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய, 'டாபே' நிறுவன முதன்மை நிதி அதிகாரி சந்திரமோகன் பேசியதாவது: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நாட்டின் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. வளரும் நாடுகளின் தொழில் நிறுவனங்களில், 85-90 சதவீதம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் நாட்டின் மொத்த உற்பத்தியில் 35-40 சதவீத பங்கு வகிக்கின்றன.நம்நாட்டில் 23 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி உள்ளது.

இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதம். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உரிய தொழில்நுட்பம், போதுமான நிதி ஆதாரம், வேலையாட்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், அரசாங்க நிறுவனங்களின் உதவி ஆகியவை தேவைப்படுகிறது. விவசாயத்திற்கு குறிப்பிட்ட அளவு கடன் தொகை ஒதுக்க வேண்டுமென முன்னுரிமை துறைகளில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதைப்போல, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட அளவு உள் ஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு சந்திரமோகன் பேசினார். 'யுனிடோ' முதன்மை தொழில்நுட்ப ஆலோசகர் புருனோ வாலென்சுவாலோ, சி.ஐ.ஐ., தென்மண்டல இயக்குனர் சுஜித் ஹரிதாஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.

HAPPY TRADING
BULLMARKETINDIAA