Nifty 02-08-2010

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

சந்தையில் சிறிது சரிவு இருக்கிறது. உலகளவில் சந்தைகள் கீழிறங்கி இருந்ததாலும், சந்தைகளில் லாபம் பார்ப்பது நடந்ததாலும், சந்தைகள் கீழே இறங்கின.வியாழனன்று 34 புள்ளிகள் மேலே சென்றும், முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை. வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தை, 124 புள்ளிகள் குறைந்து, 17 ஆயிரத்து 868 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 41 புள்ளிகள் குறைந்து, 5,367 புள்ளிகளுடனும் முடிந்தது.சந்தை, நாம் முன்பு கூறிய படி, 18,000 அளவிலேயே சுற்றி சுற்றி வருகிறது. அதை தாண்டும் போதெல்லாம், லாபம் பார்ப்பவர்கள் வந்து விடுகின்றனர். சடசடவென சந்தை இறங்குகிறது. சந்தை இறங்குவதற்கு புதிய வெளியீடுகள் நன்கு செலுத்தப்படுவதும் ஒரு காரணம்.அந்த வெளியீடுகளில் செலுத்துவதற்காக பலர், செகண்டரி மார்க்கெட்டில் விற் கின்றனர். அதுவும், சந்தையை சிறிது கீழே கொண்டு செல்கிறது.
தங்கம்: இந்தாண்டு ஏப்ரலுக்கு பிறகு, தங்கம் கொஞ்சம் மனமிறங்கி கீழே வந்துள்ளது. கடந்த வாரத்தில் தங்கம் இறங்கிய விதத்தை பார்த்தால், கடவுளுக்கே தங்கம் வாங்கும் ஆசை வந்திருக்கும். அவ்வளவு இறங்கி வந்தது.

கடைகளில் அலைமோதிய கூட்டத்தால், மறுபடி விலை சிறிது கூடியுள்ளது. மற்றபடி சிறிய முதலீடு செய்ய, இது ஒரு சரியான சந்தர்ப்பம். சவரனுக்கு 1,000 ரூபாய் வரை, பலர் சலுகை தருகின்றனர். மறுபடி விழாக்காலங்கள் வரப்போகின்றனவே. ஆதலால், விலை கூடும் வாய்ப்பு உள்ளது.

ஜப்பானை முந்திய சீனா: இதுவரை, உலகத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக, ஜப்பான் இருந்தது. உதாரணத்திற் கெல்லாம் ஜப்பானைப் பாருங்கள் என்போம். ஆனால், அந்த ஜப்பானையே முந்தி, இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற இடத்தை சீனா பிடித்துள்ளது.சீனாவின் வேகம், உலக நாடுகளையே பயமுறுத்துகிறது. சீனாவின் ஒரே தடை, அந்நாட்டின் சொத்துகளில் 50 சதவீதம், சில லட்சம் பேர் கைகளில் உள்ளது தான். சமீப காலங்களில் கண்ட அபரிமிதமான வளர்ச்சி விகிதம், தொடருமா என்பது கேள்விக்குறி தான். நல்ல கட்டுமான வசதிகள் இருந்தால், இந்தியாவும் இரண்டாவது இடத்திற்கு போட்டி போடலாம்.

காலாண்டு முடிவுகள்: 'ஜுபிலியண்ட் புட் வொர்க்ஸ்' (மெக்டொனால்ட்ஸ் இந்தியா) கடந்தாண்டு இதே காலாண்டை விட, இந்த காலாண்டில் 346 சதவீதம் அதிக லாபம் தந்துள்ளது. கடைகளில் வரும் கூட்டத்தை வைத்தே, லாபத்தை கணித்து விடலாம். வாங்கி வையுங்கள் நீண்டகால முதலீடாக. பி.பி.ஓ., கம்பெனிகளில் ஒன்றான, 'ஈகிளார்க்ஸ்' சிறப்பான காலாண்டு முடிவுகளை தந்துள்ளது.ஏ.பி.பி., - கே.ஈ.சி., - ஆர்.என்.ஆர்.எல்., - ரிலையன்ஸ் பவர், இந்தியா இன்போலைன், பி.பி.சி.எல்., கம்பெனிகள், கடந்தாண்டு இதே காலாண்டை விட, இந்தாண்டு காலாண்டு முடிவுகள் குறைவாக இருந்தது.

புதிய வெளியீடுகள்: இன்ஜினியர்ஸ் இந்தியா வெளியீடு, 13.36 தடவை செலுத்தப்பட்டுள்ளது. இது சமீபகாலத்தில் நன்றாக செலுத்தப் பட்ட, ஒரு வெளியீடு. 60 பங்குகள் விண்ணப்பித்தவர்களுக்கு 20 பங்குகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.எஸ்.கே.எஸ்., மைக்ரோ பைனான்ஸ் வெளியீடு, 10.51 தடவையும், சிறிய முதலீட்டாளர்கள் பகுதி, 0.16 தடவையும் செலுத்தப்பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்கள், திங்கள் வரை செலுத்தலாம்.'அஸ்டர் சிலிகேட்ஸ்' என்ற கம்பெனியின் புதிய வெளியீடு, சந்தையில் இந்த வாரம் பட்டியலிடப்பட்டு, இரண்டு நாட்களில், 100 சதவீதம் வரை, முதலீட்டாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது.

புதிய வெளியீடுகளில் இன்சூரன்ஸ் கம்பெனிகள்: இன்சூரன்ஸ் கம்பெனிகள், சந்தையில் தங்களது வெளியீடுகளை கொண்டு வருவதற்கான விதிகளை, அதற்கான கட்டுப்பாட்டு நிறுவனமான ஐ.ஆர்.டி.ஏ., விரைவில் அறிவிக்கவிருக்கிறது.முதலில் லைப் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும், பிறகு, நான் லைப் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கான விதிகளும் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இது, முதலீட்டாளர்களுக்கு இந்த புதிய கம்பெனிகள் பங்குகள் வாங்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

அமெரிக்க பொருளாதார வளர்ச்சி: கடந்த காலாண்டில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, 2.4 சதவீதமாக இருந் தது; இது, எதிர்பார்த்தை விட குறைவாகும். சந்தைகளில் எந்த சலசலப்பையும் இது ஏற்படுத்தாமல் இருந்தால் சரிதான்.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்? முன்பு கூறியது போல சந்தை இதே நிலையில் தான், சிறிது நாட்கள் நீடிக்கும். அதற்காக, நீண்டகால முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டாம்.

- சேதுராமன் சாத்தப்பன் -

நிப்த்யை பொறுத்த வரை 5405 தாண்டினால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு சாத்தியம்
நிப்ட்டி 5465 -5445 கீழ் இறங்கும் பட்சத்தில் சந்தை 5380 வரை கீழ் இறங்கும்
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர் டைன்மென்ட் நிறுவனம், ஐநாக்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. ஒரு ஷேருக்கு 120 ரூபாய் என்கிற விகிதத்தில் 760 கோடி ரூபாய் கொடுத்து மொத்தப் பங்குகளையும் வாங்கும் ஐடியாவில் இருக்கிறார் அனில். ஆனால் ஐநாக்ஸோ, இந்த விலை போதாது௦


கடந்த ஒரு வாரத்தில் 5 லிருந்து 10 சதவிதம் வரை விலை கூடிய பங்குகள்
IRB INFRA 12.5 %
ORIENTAL BANK 10.77%
JET AIRWAYS 10.54%
LIC HOUSING 9.78 %
BAJAJ AUTO 8.87%
EXIDE INDUS 8.51%
M&M 8.04%
PETRONET LNG 7.10%
BAJAJ HOLDINGS &INV 6.92%
CUMMINS INDIA 6.83%
CENTRAL BANK 5.99%
GODREJ INDUS 5.84%
MAHI&MAHI 5.5%
HCL TECH 5.32%
IFCI 5.22%


கடந்த ஒரு வாரத்தில் 5 லிருந்து 10 சதவிதம் வரை விலை இறங்கிய பங்குகள்

MMTC 94.20%(SHARE SPILT+PLUS BONUS)
EKC 13%
MARUTHI 11.79%
INDIAN BANK 10.8%
JP ASSO 8.05%
INDIA INFOLINE 7.72%
HERO HONDA MOTOR 7.28%
L&T 7.24%
DABUR INDIA 6.62%
JSW STEEL 6.54%
DLF 6.53%
IVRCL INFRA 6.37%
TECH MAHINDRA 6.13%
NAGARJUN CONS 6.08%
PUNJ LLOYD 5.98%
RNRL 5.68%
FT 5.66%
REI AGRO 5.61%
GAIL 5.56%
MRPL 5.33%
RCOM 5.33%
RPOWER 5.15%
TATA COMM 5.04%

STOCKS TO WATCH
RELIANCE
ICICI
ORIENTAL BANK
BANK OF INDIA
INDIAN BANK
SYNDICATE BANK
REL CAPITAL
IFCI
MAH&MAH INV
BAJAJ HOLDI
SHRIRAM INV
EXIDE IND
TATA GOLBAL
MARICO
JINDAL STEEL
KFA
INDIA HOTELS
UNITED PHOS
YES BANK
PFC
REC
SIEMENS
ESSAR OIL
IOB
RIIL
GMDC
GLENMARK PHARMA
SUNPHARMA ADVA
MMTC

2009-10ம் நிதியாண்டில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு ரூ.1823 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சரியான கட்டணம் செலுத்தாததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.32,045 கோடியாகும். இது 2008-09ம் ஆண்டில் ரூ.35,812 கோடியாக இருந்தது. 2000 ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு நாட்டில் முதல்முறையாக தொலை தொடர்புத்துறை நிறுவனம் ஒன்று சந்தித்திருக்கும் அதிகபட்ச இழப்பு தொகை இதுவே ஆகும். 100 மில்லியன் மொபைல் போன் வாடிக்கையாளர்களாலேயே இந்த இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்நிறுவன துணை மேலாண்மை இயக்குனர் குல்தீப் கோயல் தெரிவித்துள்ளார். பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை லாபம் பெறும் பழைய நிலைக்கு கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ரூ.4000 கோடி அளவிற்கு வருமானத்தை உயர்த்த இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தனியார் துறை வங்கியான ஜெ அன் கே வங்கியின் முதலாம் காலாண்டு நிகர லாபம் 23 சதவீதம் அதிகரித்திருப்பதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது. ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இவ்வங்கியின் நிகர லாபம் ரூ.145.4 கோடியாகும். ஸ்ரீநகரை தலைமை இடமாகக் கொண்டு இவ்வங்கி, கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.118.1 கோடியை மட்டுமே லாபமாக பெற்றுள்ளது. இவ்வங்கியின் மொத்த வருமானம் கடந்த காலாண்டை விட 7.4 சதவீதம் அதிகரித்து ரூ.959.4 கோடியாக உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இவ்வங்கி வட்டியின் மூலம் பெற்ற வருமானம் ரூ.865.7 கோடியாகும்.

வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் தனது ஜூலை மாத விற்பனை 35 சதவீதம் அதிகரித்திருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் இருசக்கர வாகன விற்பனை 35 சதவீதம் அதிகரித்து 1,63,106 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 54 சதவீதம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2009 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1,20,944 இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மாதங்களில் 32 சதவீதம் (4,68,085)இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்தள்ளது. இவற்றில் உள்நாட்டு விற்பனை 33 சதவீதமாக அதிகரித்துள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் 61,051 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது

நடப்பு நிதியாண்டில் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலாண்டில் பொதுத்துறை வங்கிகள் பெற்ற லாபம் ரூ.725 கோடியாகும். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வருமானம் ரூ.5407.62 கோடியாகும். கடந்த ஆண்டின் இதே காலஅளவில் இவ்வங்கிகளின் வருமானம் ரூ.5023 கோடியாக இருந்துள்ளது. வங்கிகளின் வட்டி வருமானம் 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து ரூ.4821.72 கோடியாக உள்ளது

நடப்பு நிதியாண்டில் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய தனியாத்துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் ரூ.1026 கோடியாகும். கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இவ்வங்கியின் நிகர லாபம் ரூ.878 கோடியாக இருந்துள்ளது. இந்த காலாண்டில் இவ்வங்கி ஈட்டிய மொத்த வருமானம் ரூ.7493 கோடியாகும்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.363.31 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலாண்டில் ரூ.257.41 கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இவ்வங்கியின் வட்டி வருவாய் ரூ.2,404.21 கோடியிலிருந்து ரூ.2,830.82 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம், வங்கியின் வட்டிச் செலவினம் ரூ.1,920.05 கோடியிலிருந்து ரூ.1,773.58 கோடியாக குறைந்துள்ளது

சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதுநாள் வரை அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஜப்பான் இருந்தது. தற்போது இந்த இடத்தை சீன நாடு பிடித்துள்ளது. நடப்பு 2010-ஆம் நிதி ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி 11.1 சதவீதமாக சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு முழு ஆண்டில், இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக அதிகரிக்கும் என சீன நாட்டின் அன்னியச் செலாவணி நிர்வாக அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, குறிப்பிட்ட ஓர் ஆண்டில், அந்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியை குறிப்பதாகும். இவ்வகையில், அந்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு, சேவை மற்றும் ஏற்றுமதி வாயிலாக கிடைக்கும் வருவாய் போன்றவை கணக்கிடப்படுகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அதேசமயம், சீனா, இந்தியா போன்ற நாடுகள் தற்சார்புடையதாகவும், ஏற்றுமதியை நம்பி இல்லாமலும் இருந்ததால், இந்நாடுகளின் பொருளாதாரம் அதிக பாதிப்புக்குள்ளாகவில்லை. அதேசமயம், ஜப்பான் நாடு, ஏற்றுமதியையே நம்பி உள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளானது என சர்வதேச ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே பொருளாதார வலிமையில் ஜப்பான் நாட்டை விஞ்சி, சீனா அமெரிக்காவை அடுத்து இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது என ஆய்வாளர்கள் மேலும் கூறினர்.

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான, டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், உரத்தயாரிப்பில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, டாடா கெமிக்கல்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 5 மடங்கு அதிகரித்து ரூ. 216 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், இன்னும் 2 ஆண்டுகளுக்குள் 10 புதிய யூனிட்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, வரும் செப்டம்பர் மாதத்தில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாப்ராலாவில் 1.3 லட்சம் டன் உரங்களை தயாரிக்கும் திறன் கொண்ட முதலாம் யூனிட் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த யூனிட் முழுதாக செயல்படும் பட்சத்தில், இதன் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படும் என்றும், பாப்ராலா யூனிட் முழுமையாக செயல்படும் பட்சத்தில் மற்ற யூனி்ட்களின் பணிகள் துவங்கும் என்றும், இந்த நிதியாண்டில், ரூ. 250 - 280 கோடி அளவிற்கு வர்த்தகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், ஹாலிவுட்டின் யுனிவர்சல் ஸ்டுடியோவும் இணைந்து ரூ. 7,500 கோடி செலவில் இந்தியாவில் தீம் பார்க் மற்றும் ரிசார்ட்டுகள் அமைக்க முடிவு செய்துள்ளன. ரிலையன்சின் பிக் என்டெர்டெய்ன்மெண்ட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் இதற்காக யுனிவர்சல் ஸ்டுடியோவுடன் கைகோர்க்கவுள்ளது. உலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான யுனிவர்சல் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் துணை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீம் பார்க் ஜாஸ், ஈடி, ஸ்பைடர்மேன், ஹாரி பாட்டர் உள்ளிட்ட மிகப் பிரபலமான திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் லாஸ் எஞ்சலெஸ், ஓர்லாண்டோ மற்றும் ஜப்பானில் உள்ள யுனிவர்சல் நிறுவனத்தின் தீம் பார்க்குள் உலகப் பிரசித்தி பெற்றவையாகும். ரோலர்கோஸ்டர்கள், வாட்டர் பார்க்குகள், ஹோட்டல்கள், வர்த்தக வளாகங்கள், குழந்தைகள் பொழுதுபோக்கு அம்சங்கள் என பல விஷயங்களைக் கொண்ட இந்த பார்க்குகள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோரை ஈர்த்து வருகின்றன. இதே போன்ற ஒரு பார்க்கை 400 ஏக்கர் பரப்பளவில் டில்லி அல்லது மும்பையில் அமைக்க ரிலையன்ஸ் விரும்புவதாகத் தெரிகிறது. அத்தோடு நாடு முழுவதும் ரிசார்ட்டுகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது

மகிந்திரா - மகிந்திரா நிறுவனம், கார்கள், டிராக்டர்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.562.39 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.400.85 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.4,229.46 கோடியிலிருந்து ரூ.5,124.17 கோடியாக அதிகரித்துள்ளது

ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் கார்களின் வரைபடத்தை பார்க்கும் பலரும் வியப்படைகிறார்கள். வெற்றிகரமாக விற்கும் கார்களே திரும்பவும் வெற்றி பெறுகிறது. சில சமயங்களில் கார் தயாரிப்பாளர்கள், தங்கள் நிறுவனங்களின் புதிய கார்களை விற்க முடியாமல் திணறுகின்றனர். இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகும் கார்களில் முதலிடத்தை பிடித்துள்ளது மாருதி ஆல்டோ. இந்த கார் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ஒவ்வொரு மாதமும் 20,000 கார்களுக்கு மேல் விற்பனையாகிறது. மாருதியின் அடுத்த அறிமுகம் ஆல்டோ கே 10. இந்த காரில் வேகன் ஆர், ஏ ஸ்டார், எஸ்டிலோ ஆகிய கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கே 10 பி வரிசை இன்ஜின் உள்ளது. ஹுன்டாய் சான்ட்ரோ மாதம் 7,000 கார்களும், டாடா இன்டிகா மாதம் 11,000 க்கும் மேற்பட்ட கார்களும் விற்பனையாகின்றன. இந்தியர்களின் இந்த விசித்திரமான போக்கை பற்றி நிபுணர்கள் கூறியதாவது, புதிதாக வரும் கார்களை விட ஏற்கனவே வெற்றிகரமாக விற்கும் கார்களை வாங்கவே மக்கள் விரும்புகின்றனர் என்று அவர்கள் கூறினர். ஹுன்டாய் நிறுவனம் சான்ட்ரோ காரை 12 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியும், இன்றும் கூட மாதம் 7,000 க்கும் அதிகமான கார்கள் விற்பனையாகின்றன. அந்த நிறுவனம் இந்த காரை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. டாடா இன்டிகா 1998-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 11,000 இன்டிகா கார்கள் (இன்டிகா வி2 டீசல், இன்டிகா செடா, இன்டிகா விஸ்டா) விற்பனையாகின்றன. மிகவும் பழமையான கார்களான மாருதி 800 மற்றும் ஹுன்டாய் ஆக்சன்ட் கார்கள் மாதம் குறைந்தது 1500 கார்கள் விற்பனையாகின்றன. இது தான் கார் மார்க்கெட்டை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஏனென்றால், புதிது புதிதாக எத்தனையோ நல்ல கார்கள் வந்துள்ள போதும் மக்கள் இந்த பழமையான கார்களை இன்னும் வாங்கத்தான் செய்கிறார்கள் என்பது தான்.

மத்திய அரசின் சுங்கவரி முறைகேட்டை சீரமைக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட, தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம் முடிவு செய்துள்ளது. சென்னை ராயபுரத்தில் தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம், தென்இந்திய மோட்டார் அசோசியேஷன் தலைவர் கோபால், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மத்திய அரசின் சுங்கவரி வசூலிப்பில் நடந்து வரும் முறைகேடுகளை சீரமைக்கவும், இதர கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை மறுதினம் (ஆக., 2) முதல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, வரும் 5ம் தேதிக்குள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், 6ம் தேதி முதல் அகில இந்திய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த டேங்கர், டிப்பர் லாரி மற்றும் வேன் ஆகியவற்றின் உரிமையாளர்களும் கலந்து கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி, பொன்னேரி செல்லும் நெடுஞ்சாலையை இதுவரை சீரமைக்காத காரணத்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து, உயிரிழப்புகள் தொடர்கின்றன. வாகனங்கள் ரிப்பேராகி இயக்க முடியாமல் தொழில் பாதிக்கப்படுகிறது.
கலந்தாய்வு கூட்டத்தில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா பேசியதாவது: இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து, சுங்கவரி வசூலிப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. 200 கோடி ரூபாய் சுங்கவரி வசூலிப்பிற்காக தனியாரிடம் 25 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒரு நாளைக்கு 20 லட்சம் ரூபாய் வரை தனியார் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இத்தொகை மாதத்தில் ரூ.6 கோடி வீதம் ஆண்டுக்கு 72 கோடி ரூபாய் என 25 ஆண்டுகளில் 1,800 கோடி ரூபாயாக வசூலாகிறது. இந்திய சாலைகளை மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு 'தாரை' வார்த்து கொடுத்துள்ளது. இதனால், இந்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு 52 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுங்கவரியாக நூறு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஓசூரிலிருந்து தொப்பூருக்கு 70 கிலோ மீட்டர் தொலைவிற்கு 330 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் 45 காசு என்று சுங்கவரி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மூன்று ரூபாய் 45 காசு வசூலிக்கப்படுகிறது.

இது போன்ற முறைகேடுகளை அரசு உடனே சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 2ம் தேதி முதல் நடத்தப்படும் வேலை நிறுத்தத்தால், 22 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடாது. அதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். 50 லட்சம் பேர் பாதிக்கப்படுவர். பெட்ரோல், டீசல் விலை உயர்வும் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் அவற்றின் விற்பனை வரி 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. பஞ்சாபில் 8 சதவீதமாகத்தான் உள்ளது. இதையும் குறைக்க அரசு முன்வரவேண்டும். இவ்வாறு சண்முகப்பா கூறினார். கூட்டத்தில், மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் நல்லதம்பி, தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக, மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ள மனு மீதான கருத்துக் கேட்பை தொடர்ந்து, புதிய மின் கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிடுகிறது. புதிய மின் கட்டண ஆணையில், கட்டண உயர்வு தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த கட்டண உயர்வு, நாளை (1ம் தேதி) முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது மின் இணைப்பு பெற்றுள்ள இரண்டு கோடியே ஐந்து லட்சத்து 16 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு கோடியே 38 லட்சம் பேர், வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2003 மார்ச் மாதம் 15ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு பலமுறை பரிசீலனை செய்தாலும், இது ஓட்டுக்கு வேட்டு வைக்கும் விவகாரம் என்பதால் அதை தள்ளிப் போட்டு வந்தது. நாடு முழுவதும் மின்தட்டுப் பாடு அதிகரித்துள்ள நிலையில், பற்றாக்குறையை சரிசெய்ய, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலைக்கு மின் வாரியம் தள்ளப் பட்டது. இதனால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் அதிகமானது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதியன்று, மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான மனுவை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின்வாரியம் விண்ணப்பித்தது. இதில், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து நான்கு ரூபாயாக உயர்த்த அனுமதி கோரப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கான உயர் மின் அழுத்த இணைப்பு பெற்றவர்களுக்கு, ரூ.3.50லிருந்து, ரூ.4.20 ஆகவும், உயர் அழுத்த இணைப்பு பெற்றுள்ள வணிக நிறுவனங்களுக்கு, ஐந்து ரூபாயில் இருந்து, ரூ. 5.80 ஆக உயர்த்த மனு செய்யப்பட்டுள்ளது. வீட்டு இணைப்புகளைப் பொறுத்தவரை, இரு மாதங்களுக்கு 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து 4 ரூபாயாகவும், 401 முதல் 600 யூனிட் வரை உபயோகிப்போருக்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து 4.25 ஆகவும், 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ. 4.75லிருந்து, 5.75 ஆகவும் உயர்த்த அனுமதி கோரியுள்ளது. இது தவிர தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள கல்லூரி, சினிமா தியேட்டர்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவகையான இனங்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்குமாறு மின்வாரியம் மனுவில் கோரியிருந்தது. இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பொதுமக்கள் கருத்துக் கேட்பு நிகழ்ச்சியை நடத்தியது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங் களில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில், தொழில் அமைப்புகளும், பொதுமக்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், புதிய மின்கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிடுகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் கபிலன் மற்றும் உறுப்பினர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மின்கட்டண உயர்வு குறித்து அறிவிக்கவுள்ளனர். கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தும் மின்வாரியத்தின் அறிவிப்பு தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் ஆஜரான பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் கருத்துகளை பரிசீலித்துள்ள ஆணையம், அதற்கேற்ப, மின்வாரியத்தின் வேண்டுகோளில் சிலமாற்றங்களைச் செய்து, இன்று அறிவிக்கவுள்ளது. வீடுகளுக்கான மின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், வீட்டு இணைப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கான இணைப்பு பெற்றுள்ள பெரும்பாலானவர்களுக்கு கட்டண உயர்வு பொருந்தும் எனக் கூறப்படுகிறது

மங்களூரு புதிய துறைமுகத்திலிருந்து இரும்புத்தாது ஏற்றுமதி செய்வதை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது. கர்நாடகாவில் இருந்து இரும்புத் தாது சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மங்களூரு துறைமுகத்தை தவிர கர்நாடகாவில் உள்ள பத்து துறைமுகங்களிலிருந்து இரும்புத்தாது ஏற்றுமதிக்கு கடந்த 26ம் தேதி கர்நாடக அரசு அதிரடியாக தடைவிதித்தது. இதுதொடர்பாக, மங்களூரு புதிய துறைமுக போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி கோபாலகிருஷ்ணா கூறியதாவது: மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்த ஆணையை தொடர்ந்து, கடந்த 27ம் தேதி முதல் தாதுப்பொருட்கள் ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தடை எத்தனை நாள் நீடிக்கும் என தெரியவில்லை. சட்டவிரோத சுரங்கங்கள் குறித்து நடந்து வரும் விசாரணை முடியும் வரை இந்த தடை ஆணைக்கு ஒத்துழைப்பு தருமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு கோபாலகிருஷ்ணா கூறினார். தாதுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளதற்கு சுரங்க அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், கடந்த புதன் கிழமை மாநிலத்தில் உள்ள பத்து துறைமுகங்களில் இருந்தும் இரும்புத்தாது ஏற்றுமதி அனுமதிக்கப்பட மாட்டாது என்று முதல்வர் எடியூரப்பா தெளிவாக அறிவித்தார். சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும் குறிப்பிட்டார். மேலும், இரும்புத் தாதுவை பயன்படுத்தி அதில் இருந்து பொருட்களை நாமே தயாரித்தால், அதனால், அதிக லாபம் கிடைக்கும் என்றும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்

இந்தியாவின் முன்னணி சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான அல்ட்ராடெக் நிறுவனத்தின் நிகர லாபம் 42 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள‌தாவது: கடந்த ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 243 கோடி நிகரலாபமாக ஈட்டியுள்ளதாகவும், கடந்த நிதியாண்டின், இதே காலகட்டத்தில், ரூ.418 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது சதவீத அடிப்படையில் 42 சதவீதம் குறைவாகும். விற்பனையும் 8 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 1790 கோடி அளவிறகு விற்பனை நடைபெற்றதாகவும், கடந்த நிதியாண்டின், இதே காலகட்டத்தில், ரூ.1,953 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, சட்டீஸ்கர், கர்நாடகா யூனிட்கள் மற்றும் இதர யூனிட்களில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக கூடுதலாக ரூ. 5,600 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.டி.எப்.சி, லட்சுமி விலாஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியö வங்கிகள் பிக்சட் டெபாசிட் தொகைக்கு வட்டியை உயர்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி தனது நிதி கொள்கையை மாற்றி அமைத்தது. அதனையடுத்து எச்.டி.எப்.சி., வங்கி தனது வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. 6 மாத வரையிலான பிக்சட் டெபாசிட் டுகளுக்கான வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவும், 2 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 7.5 சதவீதமாகவும் உர்த்தியுள்ளது. அதேபோல் மத்திய அரசு வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 2 ஆண்டுகளுக்குட்பட்ட டெபாசிட்களுக்கு தனது வட்டி விகிதத்தை 6.25 என மாற்றி அமைத்துள்ளது. தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி இரண்டு ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு7.5 சதவீத வட்டியை அளிக்க முன்வந்துள்ளது. இதனையடுத்து வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டுகளின் தொகை உயரும் என மேற்கண்ட வங்கிகள் எதிர்பார்பை துவக்கியுள்ளது

HAPPY TRADING
BULLMARKETINDIAA