HAPPY NEW YEAR 2010

வியாழன், 31 டிசம்பர், 2009

HAPPY NEW YEAR 2010
நண்பர்கள்கு,

கனவுகள் முக்கியம் தினம் தினம் வாழ,
கொள்கைகள் முக்கியம் புகழுடன் வாழ,
கலைகள் முக்கியம் மகிழ்வுடன் வாழ,
கடவுள் முக்கியம் அமைதியாய் வாழ,

செல்வம் முக்கியம் செழிப்புடன் வாழ,
கல்வி முக்கியம் துணிவுடன் வாழ,
தோல்வி முக்கியம் தெளிவுடன் வாழ,
வெற்றி முக்கியம் வாழ்வாங்கு வாழ

பண்பு முக்கியம் பெயருடன் வாழ,
அன்பு முக்கியம் நிறைவுடன் வாழ,
உண்மை முக்கியம் உயர்வுடன் வாழ,
உலகம் முக்கியம் நாளைக்கும் வாழ,

தகவல்கள் அறிவது
தடைகள் களைவது
தவறுகள் மறப்பது
தினமும் பிறப்பது

தொடர்புகள் வளர்வது
வெற்றிகள் வருவது
உழைப்பால் உயர்வது
எதிரியும் புகழ்வது ,

மாற்றங்கள் ஏற்பது
மனிதரை மதிப்பது
உறுதியாய் இருப்பது
ஒரு கை பார்ப்பது

பணத்தை அதிகம் சேமிப்பில் வைப்போம்
புன்னகை அதிகம் செலவழிப்போம்
உறவுகள் அதிகம் அரவனைதிடுவோம்
செயல் திறனை அதிகம் வெளிகொனர்வோம்

லட்சிய கனவுகள் உறுதி செய்வோம்
கனவுகள் எட்ட வழிகள் செய்வோம்
சருக்கல்கள் வராமல் கவனம் கொள்வோம்
சறுக்க நேர்ந்தாலும் எழுந்து கொள்வோம்

ஒரு முயற்சி போதும் - முயற்சிகள் தொடங்க
ஒரு மரம் போதும் - வனம் ஒன்று தொடங்க
ஒரு மனது போதும் - உத்வேகம் வழங்க
ஒரு முடிவு போதும்- லட்சியம் வகுக்க ............................இந்த இனிய புத்தாண்டில்


பிறக்கபோகும் புத்தாண்டு எனக்கு என் நண்பர்கள்கு ,என் தாய்நாட்டுக்கு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2010
BULL MARKET INDIA
கவிதை
மரபின் முத்தையாஹ்

தேசிய நிஃப்டி

செவ்வாய், 29 டிசம்பர், 2009

நமது சகோதரர்களுக்கு புத்தாண்டு வாழத்துக்கள் .
இந்த வலை பூவுக்கு கடந்த ஒரு மாத காலத்தில் வருகை தந்து உங்கள் ஆலோசன்கல்கு நன்றி
தொடருந்து ஆதரவு தரவும்.
இப்படிக்கு
BULLMARKETINDIAA


வருட கடைசி விற்பதற்கு f ii கல் விடுமுறையில் இருகிறார்கள் ஆகவே நமது சந்தைகள் நமக்கு 2009 கடைசி நாட்கள்தேசிய நிஃப்டி 5300 ஆருகில் முடிய வாய்ப்புகள். இன்றைய சந்தைகள் காளைகள் கைகளில் இருக்க .தேசிய நிஃப்டி 5190ஐ தாண்டவேண்டும் அப்படி தாண்டினால் 5200 -5235 -5270 வரை செல்லகூடிய வாய்புகள் இருக்கும் இன்று தேசிய நிஃப்டிஇன் தாங்கு நிலை 5130 சப்போர்ட் லெவல் கில் சென்றால் 5110 - 5085 வரை கில் நோக்கிய பயணம் இருக்கும்
சந்தை புதிராக இருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு லாபமாகவே இருந்து வருகிறது. சங்கீத சீசனில் காதில் இசை என்ற இன்ப வெள்ளம் தான் தேனாக ஓடும். ஆனால், இந்த குளிர் சீசனிலும், சந்தை கதகதவென இருக்கிறது.
இது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியையே தருகிறது. இந்த வருடம் முதலீட்டாளர்களுக்கு நல்ல தீபாவளியாகவும், நல்ல வருடமாகவும் இருந்து வந்திருக்கிறது. புதனின் அசாத்திய ஏற்றத்தை தொடர்ந்து, வியாழனும் ஏற்றத்திலேயே முடிந்தது.


உச்சத்தில் இருந்த சந்தை: புதனன்று 539 புள்ளிகள் பெற்று உச்சத்தில் இருந்த சந்தை, தொடர்ந்து வியாழன்றும் 129 புள்ளிகள் உயர்விலேயே முடிவடைந்தது. இது, மும்பை பங்குச் சந்தையை, 17,360 புள்ளி என்ற அளவிற்கு கொண்டு சென்றது. இது, பங்குச் சந்தையின் கடந்த 19 மாத உச்சம். மும்பை பங்குச் சந்தை இதுவரை, 80 சதவீத லாபத்தை இந்த வருடத்தில் தந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை, 5,178 புள்ளிகளில் முடிவடைந்தது.


புதிய வெளியீடுகள்: பெரிய வெளியீடுகள் வந்திருந்தாலும், அது முதலீட்டாளர்களுக்கு எந்தவிதமான பெரிய பயனையும் தரவில்லை. ஆங்கர் முதலீட்டாளர்கள் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. அதுவும் பெரிதாக எவ்வித பயனையும் தரவில்லை. 2010ல் பல புதிய வெளியீடுகள் வரக் காத்துக் கொண்டிருக்கின்றன. அவை, முதலீட்டாளர்களுக்கு எப்படி லாபங்களை தரப்போகிறது என்று பார்ப்போம்.


சாப்ட்வேர் பங்குகளும் சந்தையும்: சந்தை இந்த வருடம் நன்கு முன்னேற, சாப்ட்வேர் பங்குகளும் ஒரு காரணம். சந்தை கிட்டத்தட்ட 80 சதவீதம் அதிகமாகி இருப்பதற்கு, பல சாப்ட்வேர் பங்குகள் 100 முதல் 300 சதவீதம் வரை கூடியுள்ளதே காரணம்.


வீட்டுக் கடன்கள்: வீட்டுக் கடன்கள் மிகக் குறைந்த வட்டியில் கிடைக்கின்றன. அதாவது 8 சதவீத வட்டியில் பல வங்கிகள், கம்பெனிகள் அளிக்கின்றன. இது தான் வீட்டுக் கடன் வாங்க நல்ல சமயம்.

ஆனால், வீடு வாங்க நல்ல சமயமா என்று யோசிக்க வேண்டும். வீடுகள் விலை கடந்த ஒரு வருடத்தில் 10 முதல் 20 சதவீதம் வரை கூடியுள்ளது. பொருளாதாரம் நிலையாக இருக்கும் பட்சத்தில், இன்னும் கூடும் வாய்ப்புகளும் உள்ளது.


உள்ளே வரும் வெளிநாட்டு முதலீடுகள்: அதிகமாக வரும் வெளிநாட்டு முதலீடுகள் தான் சந்தையின் தொடர் ஏற்றத்துக்கு காரணம். கடந்த நவம்பரில் மட்டும் 174 கோடி ரூபாய் வந்துள்ளது. இது, கடந்த வருட நவம்பர் மாதத்தை விட 60 சதவீதம் கூடுதல்.


மியூச்சுவல் பண்ட்களின் புதிய வெளியீடுகள்: ஏஜன்டுகளுக்கு கமிஷன் குறைந்ததால், மியூச்சுவல் பண்ட்களின் புதிய வெளியீடுகள், கடந்த காலத்தைப் போல பணங்களைச் சேர்க்க முடியவில்லை. கடந்த மூன்று மாதத்தில் வெளியான வெளியீடுகள் சேர்த்த பணம், இதற்கு முன் வெளியான வெளியீடுகளை விட பாதி குறைந்துள்ளது.


இந்த வருடத்தின் கடைசி வாரம். சிறிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனால், சந்தையின் 2009 முடிவு, எல்லாருக்கும் திருப்திகரமாகவே இருக்கும்; இருந்திருக்கும். .

உலகம் முழுவதும் பண்டிகை கொண்டாட்டங்கள். ஆதலால், சந்தைகள் சத்தமின் றியே இருக்கும். கிறிஸ்துமஸ் முடிந்து புதுவருடம் துவங்கிய பின் தான் சந்தையில் மறுபடி களை கட்டும். இரண்டு காரணங்கள்: உலகச் சந்தைகள் மறுபடி செயல்படத் துவங்கும். பின் காலாண்டு முடிவுகளும் வரத்தொடங்கும். அதன் பின் சந்தைகள் சிறிது ஏறும்.
இன்றய சந்தைகளை பார்மா,, ,டெலிகாம் , FMCG .பேங்க் ரியாலிட்டி மெட்டல் பங்குகள் வழி நடத்தும் புதுவருடம்வரை பொறுமை இழந்தே காணப்படும் .
குறையும் பட்சதில் வாங்கி சேகரித்து கொள்ளுங்கள்
STOCKS TO WATCH
L&T
3 IN INFOTECH
RELIANCE
GLAXO SMITHKILNE
EDUCOMP
GODREJ INDUSTRIES
WESPUN GUJARAT
JAIN IRIGATION
BIOCON
HUL
JETAIRWAYS
IFCI
ADITYA BIRLA NUVA
BANK OF INDIA
HINDALCO
NALCO
ITC
HDIL
FORTIS HEALTH CARE
NAGARJUNA CONSTRUCTION
HAPPY TRADING
BULLMARKETINDIAA

பங்குகளின் சந்தை மதிப்பு பன்மடங்கு அதிகரிப்பு


முன்னணி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துள்ள 3 நிறுவனங்கள்


ஷிகா சர்மா
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
கடந்த 2000&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையில், அதாவது 10 ஆண்டுகளாக, முன்னணி 10 நிறுவனங்களின் பட்டியலில் மூன்று நிறுவனங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. இதற்கு, இந்த நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு பன்மடங்கு அதிகரித்ததே காரணமாகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ், எண்ணெய் மற்றும் துரப்பண பணிகளில் ஈடுபட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. ஆகியவையே அந்த மூன்று நிறுவனங்களாகும்.
அரசியலில் ஏற்பட்ட மாற்றம், உலக அளவில் பொருளாதாரத்தில் உருவான கடும் பின்னடைவு போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இந்நிறுவனங்கள் அவற்றின் அந்தஸ்தை நிலைநிறுத்தி, முதலீட்டாளர்களுக்கும் அதிக ஆதாயம் அளித்துள்ளன.
முதலிடம்
முதலீட்டாளர்களுக்கு அதிக ஆதாயம் அளிப்பதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ஆர்.ஐ.எல்), இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2000&ஆம் ஆண்டு ஜனவரி 3&ந் தேதி அன்று இந்நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்) ரூ.23,563.17 கோடியாக இருந்தது. இது, நடப்பு 2009&ஆம் ஆண்டு டிசம்பர் 21&ந் தேதி அன்று 14 மடங்கு அதிகரித்து ரூ3,34,097.92 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்நிறுவனப் பங்குகளின் விலை ஆண்டுக்கு சராசரியாக 30 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
கடந்த 2000&ஆம் ஆண்டில், இந்தியாவின் முன்னணி 10 நிறுவனங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த இந்நிறுவனம், தற்போது முதலிடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.3.10 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இவ்வாறு பங்குகளின் விலை உன்னதமான அளவில் அதிகரிப்பதால்தான், இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் தலைசிறந்த தலைமைச் செயல் அதிகாரிகளுள், ஐந்தாவது முன்னணி தலைமைச் செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை அடுத்து, பொதுத் துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு மொத்தம் ரூ.2.20 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. அதாவது, இந்நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.30,365.26 கோடியிலிருந்து ரூ.2,51,723.91 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2000&ஆம் ஆண்டில் பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்நிறுவனம், தற்போது இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.
இன்போசிஸ்
இதே காலத்தில், இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பும் ரூ.51,844.55 கோடியிலிருந்து 177 சதவீதம் உயர்ந்து ரூ.1,43,809.51 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2000&ஆம் ஆண்டில், முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் இருந்த விப்ரோ மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் தற்போது முன்னணி 10 நிறுவனங்களின் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பீ.எச்.இ.எல்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னணி 10 நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறாதிருந்த, பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எச்.இ.எல். நிறுவனம், தற்போது இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதற்கு, நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே காரணமாகும்.
கனரக மின் உற்பத்தி சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பீ.எச்.இ.எல். நிறுவனத்தின் செயல்திறன் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இந்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், கடந்த 2000&ஆம் ஆண்டில் ரு.5,500 கோடியாக இருந்த இந்நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, 10 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரித்து ரூ.1,12,014.41 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனப் பங்குகளின் மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
யூனிடெக்
இது மட்டுமின்றி, இப்பட்டியலில் இடம் பெறாத இதர நிறுவனங்களின் பங்குகளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும் யூனிடெக் நிறுவனப் பங்குகளின் விலை கடந்த 10 ஆண்டுகளில் 240 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.1,000 முதலீடு செய்திருந்தால், இதன் மதிப்பு தற்போது ரூ.2,40,000&ஆக உயர்ந்து இருக்கும்.
இதே காலத்தில், கச்சா எண்ணெய் துரப்பணம் மற்றும் உற்பத்தி திட்டங்களில் டிரில்லிங் பணியில் ஈடுபட்டு வரும் அபான் ஆஃப்சோர் (166 மடங்குகள்), கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் எரா இன்ஃப்ரா இன்ஜினீயரிங் (152 மடங்குகள்), இரும்புத்தாது ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் சேசகோவா (134 மடங்குகள்), நிலக்கரி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் குஜராத் என்.ஆர்.இ. கோக் (106 மடங்குகள்) மற்றும் நவபாரத் வென்ச்சர்ஸ் (103 மடங்குகள்) ஆகிய நிறுவனப் பங்குகளின் விலையும் 100 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு சுமார் ரூ.56.40 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ஆறு மடங்கு அதிகரித்து ரூ.57 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, பொருளாதார வளர்ச்சியையும் விஞ்சும் வகையில் நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

பங்கு விற்பனை மூலம் ரூ.14,000 கோடி திரட்ட அரசு திட்டம்
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

தேசிய கனிமவள மேம்பாட்டு கழகம்
மும்பை என்.எம்.டீ.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய கனிமவள மேம்பாட்டு கழகம், இரும்புத் தாது உற்பத்தியில் நாட்டின் மிகப் பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்குகளில் 8.38 சதவீதத்தை விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.14,000 கோடி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்.எம்.டீ.சி. நிறுவனப் பங்குகள் ஏற்கனவே பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆக, இந்நிறுவனம் தற்போது இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
நவரத்னா நிறுவனம்
என்.எம்.டீ.சி., Ôநவரத்னாÕ அந்தஸ்து பெற்ற ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் மத்திய அரசு தற்போது 98.38 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. எஞ்சியுள்ள 1.62 சதவீத பங்கு மூலதனம் பொதுமக்களிடம் உள்ளது. இந்நிலையில் அரசு, இரண்டாவது பங்கு வெளியீட்டின் வாயிலாக மேலும் 8.38 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இப்போது என்.எம்.டீ.சி. நிறுவனப் பங்கு ஒன்றின் விலை சுமார் ரூ.415 என்ற அளவில் உள்ளது.
நடப்பு ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து இன்று வரை மத்திய அரசு மூலதனச் சந்தையில் இருந்து 180 கோடி டாலர் (சுமார் ரூ.8,400 கோடி) திரட்டிக் கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில், இதுவரையிலான காலத்தில் பொதுத் துறை நிறுவனங்களான என்.எச்.பி.சி. மற்றும் ஆயில் இந்தியா ஆகியவை பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்புதல்
இந்நிலையில் மத்திய அரசு, என்.டி.பி.சி., சட்லஜ் ஜால் வித்யூத் நிகம் மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் பங்கு வெளியீட்டுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. செயில், ஷிப்பிங் கார்ப்பரேஷன் மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வெளியிடவும் அரசு தயாராகி உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளும் மார்ச் 31&ந் தேதிக்கு முன்னர் நிறைவடையும் எதிர்பார்க்கப்படுகிறது.


போர்டிஸ் ஹெல்த்


விரிவாக்கத்திற்காக ரூ.250 கோடி முதலீடு


மருத்துவச் சேவையில் ஈடுபட்டு வரும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, வரும் நிதி ஆண்டிற்குள் ரூ.250 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
கொல்கத்தாவில் 414 படுக்கைகளுடனும் பெங்களூரில் 120 படுக்கைகளுடனும் புதிதாக இரண்டு பல்துறை சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்குவதற்கும், மும்பையில் உள்ள மருத்துவமனையை விரிவுபடுத்துவதற்கும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என்று ஃபோர்டிஸ் ஹாஸ்பிட்டல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால்பாலி தெரிவித்தார்.
ஃபோர்டிஸ் நிறுவனம், அண்மையில் வோக்கார்டு நிறுவனத்தை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் 39 மருத்துவமனைகளும், 5,180 படுக்கை வசதிகளும் உள்ளன.


3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் 2010 மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது
டெல்லி: 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14ம் தேதி நடக்க வாய்ப்பில்லை. 2010 பிப்ரவரி இறுதியிலோ, மார்ச் துவக்கத்திலோ தான் ஏலம் நடைபெறும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொபைல் பயன்படுத்துவோர் உட்பட பல்வேறு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம். இதன்மூலம் மொபைஸ் சேவைகள் பெருகுவதுடன், வீடியோ சாட்டிங் உள்ளிட்ட 3ஜி தொழில்நுட்ப வசதிகள் பரவலாக்கப்பட்டு, போட்டிகளின் மூலம் சுலபமாக கிடைக்க வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே இந்த அலைவரிசைகள் வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவை தவிர்த்து மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அலைவரிசைகளை ஏலத்தில் விற்க அரசு முடிவு செய்திருந்தது. இதன்படி, மொத்தம் நான்கு ஸ்லாட்டுகளை விற்க அரசு முடிவு செய்தது.

இதன்மூலம் ரூ.25ஆயிரம் கோடி வருமானம் ஈட்டவும் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சகம் ஏலத்துக்கு தடைபோட்டுக்கொண்டிருந்தது.

இதுதொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு பிரச்னைகள் விவாதிக்கப்பட்ட பின், ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கும் சில வாரங்களுக்கு முன் பாதுகாப்பு அமைச்சம் ஒப்புதல் தந்தது.

இதையடுத்து, வரும் 2010 ஜனவரி மாதம் 14ம் தேதி 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படும் என தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏலம் மேலும் ஓரிரு மாதங்கள் தாமதமாகும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்கள் குறுக்கிட்டதால், திட்டமிட்டபடி ஏலத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நோட்டீஸ் இன்னும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எந்தெந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்ற பட்டியலே இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பான பணிகள் ஜனவரி மாத மத்தியில் தான் முடிவடையும். அதன் பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஏலம் நடைபெற மார்ச் மாதமாகிவிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2010 மார்ச் மாதத்தில் ஏலம் முடிவடைந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் தான் நிறுவனங்களுக்கு அலைவரிசைகள் ஒரே நேரத்தில் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

ஏலத்திற்கான புதிய தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் 500 மில்லியன்!
டெல்லி: இந்தியாவில் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்துடன் 500 மில்லியன் என்ற இலக்கைத் தாண்டியது.

தொலைபேசித் ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவல்படி நவம்பர் மாத முடிவில் 543.20 மில்லியன் மக்கள் இந்தியாவில் தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

நவம்பர் வரை 44.87 சதவிகிதமாக இருந்த தொலைத் தொடர்பு அடர்த்தி (Teledensity), இப்போது 46.32 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

செல்போன் பயன்பாட்டைப் பொறுத்தவர் 506 மில்லியன் மக்கள் இணைப்புகளைப் பெற்றுள்ளனர். அதிக வாடிக்கையாளர் கொண்ட செல்போன் நிறுவனங்களில் இப்போதும் தனியார் நிறுவனமான ஏர்டெல்தான் முதலிடம் வகிக்கிறது. 116 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தில் உள்ளனர்.

பிஎஸ்என்எல் இன்றும் நான்காவது இடத்திலேயே உள்ளது. அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 60.78 மில்லியன்.

பிராட்பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் 7.40 மில்லியனிலிருந்து 7.67 மில்லியனாக உயர்ந்துள்ளது.

பேங்க் ஆப் இந்தியா

பேங்க் ஆப் இந்தியா
இவ்வங்கி பங்கின் விலை குறைவாக உள்ள நிலையில், செயல்திறன் சிறப்பாக உள்ளது. நீண்ட கால அடிப்படையில் இவ்வங்கிப் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

கரண் சேகல்
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
பேங்க் ஆஃப் இந்தியா, நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இது, பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்) அடிப்படையில் மூன்றாவது மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாகும். சென்ற 2008&09&ஆம் நிதி ஆண்டு வரை, அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வங்கிகளுள் ஒன்றாக இது விளங்கியது. அதேசமயம், நடப்பு நிதி ஆண்டில் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இவ்வங்கி ஈட்டிய லாபம் 58 சதவீதம் குறைந்துள்ளது. இதனையடுத்து, இவ்வங்கிப் பங்கின் விலை குறைந்துள்ளது. அதேசமயம், வங்கியின் செயல்திறனுடன் ஒப்பிடும்போது இவ்வங்கி பங்கின் விலை நியாயமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செயல்திறன்
கடந்த 2006&07 மற்றும் 2008&09&ஆம் நிதி ஆண்டுகளுக்கிடையில் இவ்வங்கி ஈட்டிய நிகர லாபம் ஆண்டுக்கு சராசரியாக 63 சதவீதம் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. இதர பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது இந்த வளர்ச்சி மிகவும் உயர்ந்ததாகும்.
இதே நிதி ஆண்டுகளுக்கிடையில், இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் வரம்பு ஆண்டுக்கு சராசரியாக 3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதர வங்கிகளுடன் ஒப்பிடும்போது இதுவும் இவ்வங்கியின் செயல்திறனை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதே காலத்தில், இவ்வங்கியின் நிகர வாராக்கடன் விகிதமும், வங்கி வழங்கிய மொத்த நிகர கடனில் 0.6 சதவீதம் என்ற அளவில் குறைவாக உள்ளது. ஆக, கடனை வசூலிப்பதிலும் வங்கி சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது.
சென்ற 2008&09&ஆம் நிதி ஆண்டில், இவ்வங்கிக்கு ஒரு பணியாளர் வாயிலாக ஈட்டப்படும் வருவாய் ரூ.8.30 கோடியாக இருந்தது. இது, பாரத ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட முன்னணி வங்கிகளைக் காட்டிலும் அதிகமானதாகும்.
வட்டி வருவாய்
சென்ற நிதி ஆண்டில் இவ்வங்கி அதிக வட்டியில் நிதியை திரட்டியது. இதனையடுத்து, நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் வரம்பு 3.2 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இவ்வங்கி ஈட்டிய லாபம் 31 சதவீதம் குறைந்துள்ளது.
அதேசமயம், இனிவரும் காலாண்டுகளில் இவ்வங்கி ஈட்டும் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் வங்கிகள் அதிக வட்டியில் டெபாசிட்டுகள் திரட்டுவதை குறைத்துக் கொண்டுள்ளன. இதனால், இனிவரும் காலாண்டுகளில் வங்கிகளின் நிகர வட்டி வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் வரம்பு, முந்தைய காலாண்டைக் காட்டிலும் 0.15 சதவீதம் உயர்ந்துள்ளது.
இவ்வங்கியின் இதர அம்சங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, இதன் செயல்திறன் நன்றாக உள்ளது என்று கூறலாம். உதாரணமாக, சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இவ்வங்கி வழங்கிய கடன் 16.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது, ஒட்டுமொத்தத்தில் வங்கிகளின் கடன் வளர்ச்சிக்கு சமமாக உள்ளது.
மதிப்பீடு
சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இவ்வங்கி ஈட்டிய லாபம் சரிவடைந்துள்ளதால், இவ்வங்கி பங்கின் விலை குறைந்துள்ளது. இவ்வாண்டு அக்டோபர் 17&ந் தேதி அன்று இவ்வங்கி பங்கின் விலை ரூ.475&ஆக இருந்தது. இது, 20 சதவீதம் குறைந்து, தற்போது ரூ.378 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. இது, ஒரு பங்கின் புத்தக மதிப்புடன் ஒப்பிடும்போது 1.7 மடங்கு என்ற அளவில் உள்ளது. இந்நிலையில், பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் இந்த விகிதம் 1.9 மடங்காக உள்ளது. ஆக, வங்கியின் செயல்திறனுடன் ஒப்பிடும்போது இவ்வங்கி பங்கின் விலை குறைவானதாகும்.
மேலும், இவ்வங்கி பங்கின் தற்போதைய விலையில் (ரூ.378) 2.1 சதவீதம் டிவிடெண்டாக கிடைக்கிறது. இந்நிலையில், அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும், இவ்வங்கி பங்கின் விலை குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, நீண்ட கால அடிப்படையில் இப்பங்குகளில் முதலீடு செய்யலாம்.
பேங்க் ஆப் இந்தியா

இவ்வங்கி பங்கின் விலை குறைவாக உள்ள நிலையில், செயல்திறன் சிறப்பாக உள்ளது. நீண்ட கால அடிப்படையில் இவ்வங்கிப் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

மெர்கேட்டர் லைன்ஸ்
சரக்கு கப்பல் துறையைச் சேர்ந்த இந்நிறுவனம், இதர நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதால், இதன் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

அம்ரிதேஷ்வர் மாத்தூர்
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
இந்திய சரக்கு கப்பல் போக்குவரத்து துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக மெர்கேட்டர் லைன்ஸ் விளங்குகிறது.
கச்சா எண்ணெய்
தற்பொழுது, உலக அளவில், பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சரக்கு போக்குவரத்து துறை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்வது உள்ளிட்ட இதர சரக்கு கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளில் விறுவிறுப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.
இந்நிறுவனம், சரக்கு கப்பல்கள் சேவை தவிர, மாற்று தொழில் நடவடிக்கையாக, கடல் பகுதிகளில் துரப்பண பணிகளை மேற்கொள்வதற்கான ரிக்குகள் மற்றும் கடல்களில் மணல் அள்ளும் கப்பல்கள் மற்றும் சுரங்க நடவடிக்கைகள் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் (2009&10) முதல் ஆறு மாத காலத்தில் ஈட்டிய நிகர விற்றுமுதலில், சரக்கு கப்பல்களின் மூலமான வருவாய் 74.30 சதவீதமாக உள்ளது. கடந்த 2006&07 மற்றும் 2008&09&ஆம் ஆண்டுகளுக்கிடையில், இந்நிறுவனம் அதன் திறன் அதிகரிப்பு மற்றும் மாற்று தொழில் நடவடிக்கைகளுக்காக ரூ.4,472.40 கோடியை முதலீடு செய்துள்ளது.
இதே ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் ரொக்க வரத்து ரூ.2,882 கோடி அளவிற்கு இருந்தது. மேலும், இதே காலத்தில், இந்நிறுவனம் பெற்ற கடன்கள் 54.6 சதவீதம் அதிகரித்து ரூ.2,835.60 கோடியாக உயர்ந்துள்ளது.
நிதி நிலை
செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாப விகிதம் 26.70 சதவீதம் சரிவடைந்து, 22.7 சதவீதமாக குறைந்தது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர விற்பனை 47 சதவீதம் குறைந்திருந்தது.
இந்த நிலையில், தற்பொழுது உலக நாடுகள் பொருளாதார சுணக்கநிலையிலிருந்து விடுபட்டு வருவதால், இனிவரும் காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் செயல்பாடு மேம்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மதிப்பீடு
மெர்கேட்டர் லைன்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்று, தற்பொழுது ரூ.57.15 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. இது, இந்நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது 5.7 மடங்குகள் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், ஜி.இ. ஷிப்பிங் நிறுவனப் பங்கின் விலை, அதன் ஒரு பங்குச் சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது ஆறு மடங்குகள் என்ற அளவிலும், ஷிப்பிங் கார்ப்பரேஷனின் பங்கின் விலை 11.3 மடங்குகள் என்ற அளவிலும் உள்ளது.
மேற்கண்டவற்றை எல்லாம் வைத்து பார்க்கையில், இந்நிறுவனப் பங்குகளில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம்.

நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் டிசம்பர் வரை

புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட நிதி ரூ.20,000 கோடி இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில், 21 இந்திய நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக ரூ.20,000 கோடி திரட்டியுள்ளன.
50 சதவீத நிறுவனங்கள்
இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், நடப்பு ஆண்டில், புதிய பங்கு வெளியீட்டில் இறங்கிய நிறுவனங்களுள், 50 சதவீத நிறுவனங்களின் பங்குகள், அவற்றின் வெளியீட்டு விலையை விட குறைவாகவே தற்போது கைமாறி வருகின்றன. இவ்வாண்டில், பொதுத் துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களுமாக மேற்கொண்ட 21 புதிய பங்கு வெளியீடுகளில், அந்நிறுவனங்களின் பங்குகளை வாங்கிய சில்லரை முதலீட்டாளர்கள் கைவசம் உள்ள பங்குகளின் மதிப்பு ஒட்டுமொத்த அளவில் இப்போது ரூ.20 கோடிதான் உயர்ந்துள்ளது. அதாவது, சில்லரை முதலீட்டாளர்கள் தங்கள் கைவசம் உள்ள அனைத்து பங்குகளையும் தற்போது விற்பனை செய்தால் மொத்தத்தில் ரூ.20 கோடியே லாபமாக கிடைக்கும்.
புதிய வெளியீடுகள்
சென்ற 2008&ஆம் ஆண்டு முழுவதுமே பங்கு வர்த்தகத்திற்கு மிகவும் சோதனையான காலமாக இருந்தது. சில நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் படுதோல்வியைச் சந்தித்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் மூலதனச் சந்தையில் களம் இறங்க தயக்கம் காட்டின. எனினும் அவ்வாண்டில் 30 புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் வாயிலாக நிறுவனங்கள் மொத்தம் ரூ.17,000 கோடி திரட்டின. அதே சமயம், முந்தைய 2007&ஆம் ஆண்டில் சுமார் 100 புதிய பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டப்பட்ட தொகை ரூ.32,000 கோடிக்கும் அதிகமான அளவில் இருந்தது. பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரை பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு, கடந்த 2007&ஆம் ஆண்டில் நாட்டின் பங்கு வர்த்தகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டிருந்தது.
முன்னேற்றம்
பங்குச் சந்தைகளில் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்வி எழுந்த நிலையில் 2009&ஆம் ஆண்டு பிறந்தது. மார்ச் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டு நடவடிக்கை கள் மீண்டும் விறுவிறுப்படைந்தன. என்.எச்.பி.சி. மற்றும் ஆயில் இந்தியா ஆகிய பொதுத் துறை நிறுவனங்களும் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கி வெற்றிகரமாக நிதி திரட்டிக் கொண்டன.
மேலும் பல பொதுத் துறை நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் களமிறங்க தயாராகி வருகின்றன. பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாண்டில் பங்கு வெளியீட்டை மேற்கொண்ட ஆயில் இந்தியா நிறுவனத்தின் பங்குகளின் விலை, தற்போது அதன் வெளியீட்டு விலையைக் காட்டிலும் உயர்ந்துள்ளது.
இதே போன்று மகிந்திரா ஹாலிடே ரிசார்ட்ஸ் மற்றும் காக்ஸ் அண்டு கிங்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களின் பங்குகளும் அவற்றின் வெளியீட்டு விலையைக் காட்டிலும் ஓரளவு உயர்ந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்களுக்கு இப்பங்குகள் ஆதாயமளிப்பவையாக உள்ளன. அதே சமயம் அண்மைக் காலத்தில் பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாகவே இப்பங்குகளின் விலை உயர்ந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஏனென்றால் இப்பங்குகள் பட்டியலிடப்பட்டபோது எதிர்பார்த்த அளவிற்கு இவற்றின் மதிப்பு உயரவில்லை. வெளியீட்டு விலையைக் காட்டிலும் தற்போது பங்கின் விலை அதிகரித்துள்ள நிறுவனங்களுள் எட்சர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ், திங்க்சாஃப்ட் போன்ற சில சிறிய நிறுவனங்களும் அடங்கும்.
என்.எச்.பி.சி.
அதே சமயம் பொதுத் துறையைச் சேர்ந்த என்.எச்.பி.சி. உள்பட பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் வெளியீட்டு விலையை காட்டிலும் குறைவாகவே விலை போய்க் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களுள் எக்செல் இன்ஃபோவே, அதானி பவர், குளோபஸ் ஸ்பிரிட்ஸ், பிபாவவ் ஷிப்யார்டு, ஈரோ மல்டிவிஷன், இந்தியாபுல்ஸ் மற்றும் டென் நெட்ஒர்க்ஸ் ஆகியவையும் அடங்கும். பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டின் போது பங்கின் வெளியீட்டு விலையை அளவுக்கதிகமாக நிர்ணயம் செய்ததுதான் தற்போது விலை சரிவடைந்து போனதற்கு முக்கிய காரணம் என ஸ்பைஸ் குழுமத்தின் நிதிச் சேவைகள் வணிகப் பிரிவின் தலைவர் சுதீப் பண்டாபாத்யாயா தெரிவித்தார்.
உலக பொருளாதாரம்
புத்தாண்டில், உலக பொருளாதாரம் முழுமையாக வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நிறுவனங்கள் அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்டிக் கொள்ளும் வகையில் மூலதனச் சந்தையில் இறங்க உள்ளன. குறிப்பாக அடுத்த ஆண்டில் பல பொதுத் துறை நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளன. இதனால் 2010&ஆம் ஆண்டில் பங்கு வர்த்தகத்தில் எழுச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
சில்லரை முதலீட்டாளர்கள் மீண்டும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் நிறுவனங்கள் பங்கின் வெளியீட்டு விலையை குறைவாக நிர்ணயம் செய்தாலே சில்லரை முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்க்க முடியும். பங்கு வர்த்தகம் சோம்பிக் கிடந்த 2008&ஆம் ஆண்டிலும் இதே கருத்தைத்தான் ஆய்வாளர்கள் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கின் வெளியீட்டு விலையைக் குறைவாக நிர்ணயிக்கும் பட்சத்தில், நிறுவனங்கள் திரட்டும் நிதி சற்று குறையலாம். ஆனால், பங்குகளில் முதலீடு செய்துள்ளோருக்கு அவை பெரும்பாலும் தகுந்த ஆதாயம் அளிப்பவையாக இருக்கும். இல்லையென்றால் நிறுவனங்கள் திரட்டி கொள்ளும் நிதிக்கும், அந்த நிறுவனங்களின் பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்புக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்படும்.

ஆப்பிள் நிறுவன தலைவரின் ஆண்டு ஊதியம் 1 டாலர் சியாட்டில் : ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ், 2009ல் தனது ஆண்டு சம்பளமாக 1 டாலரை மட்டும் பெற்றுக் கொண்டுள்ளார். அதேபோல வருடாந்திர போனஸ் உள்ளிட்ட சலுகைகளும் 2009ம் ஆண்டு அவருக்கு தரப்படவில்லை. ஆப்பிள் நிறுவனத்தை 1976ல் நிறுவியவர் ஜாப்ஸ்.இடையில் இந்த நிறுவனத்திலிருந்து விலகியவர், 1997ல் மீண்டும் இணைந்தார். அன்று முதல் தனது சம்பளமாக ஆண்டுக்கு 1 டாலரை மட்டுமே பெறுகிறார் ஜாப்ஸ்.
உலகின் டாப் சிஇஓ என ஹார்வர்டு பிஸினஸ் ரிவிவ் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ், 2009ம் ஆண்டு தனது பயணப்படியாக 4000 டாலரை மட்டுமே பெற்றுள்ளார். இதற்கு முந்தைய ஆண்டில் இவர் பெற்ற பயணப்படி 8,71,000 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஸ்டீவ் தலைமையில் இயங்கும் மற்ற நிர்வாகிகள் நால்வருக்கு தலா 1 லட்சம் டாலர் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் 5.5 மில்லியன் பங்குகள் உள்ளன. இது தவிர, வால்ட் டிஸ்னியிலும் அவருக்கு 7.4 மில்லியன் பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு மட்டும் 4.5 பில்லியன் டாலர்கள். ஸ்டீவின் காலத்தில்தான் ஆப்பிள் பங்குதாரர்களுக்கு மிக அதிகபட்ச வருவாய் கிடைத்தது.

மார்ச் மாதத்திற்குள் 25,000 ஏடிஎம்.,கள் : ஸ்டேட் பேங்க்
நெல்லை: வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 25,000 ஏடிஎம்களை திறக்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார பொது மேலாளர் விஜி கண்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது இத்தகவலை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது : தமிழகம் மற்றும் பாண்டிசேரியில் கடந்த 2 ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.1 கோடிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர ஒவ்வொரு கிளையும் ஆண்டுக்கு இரு குழந்தைகளை தத்தெடுத்து கல்வி செலவை அளித்து வருகின்றன. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 25 ஆயிரம் ஏடிஎம்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 1,388 ஏடிஎம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பயோ மெட்ரிக் எடிஎம்களை திறக்கவும் வங்கி ஏற்பாடு செய்து வருகிறது. இம்முறையில் வாடிக்கையாளர்கள் தங்கள் கைரேகையை ஏடிஎம்மில் பதிவு செய்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். ஒருவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மற்றவர்கள் பணம் எடுக்க முடியாது. ஏற்கனவே இத்தகைய ஏடிஎம் சென்டர்கள் மதுரை, மேலூர், செய்யாறு ஆகிய இடங்களில் திறக்கப்பட்டு விட்டன. வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏடிஎம்மில் பணம் எடுக்க பழகி கொள்ள வேண்டும். மாதத்தின் முதல் வாரத்திலேயே மொத்த பணத்தையும் எடுக்க முயற்சிக்க கூடாது. ஏனெனில் ஒரு மிஷினில் ரூ.32 லட்சம் மட்டுமே வைக்க முடியும் என்றார்.

அனைவருக்கும் திருப்தியை தந்த 2009ம் ஆண்டு
Posted by bullmarketindiaa on December 27, 2009

சந்தை புதிராக இருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு லாபமாகவே இருந்து வருகிறது. சங்கீத சீசனில் காதில் இசை என்ற இன்ப வெள்ளம் தான் தேனாக ஓடும். ஆனால், இந்த குளிர் சீசனிலும், சந்தை கதகதவென இருக்கிறது.
இது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியையே தருகிறது. இந்த வருடம் முதலீட்டாளர்களுக்கு நல்ல தீபாவளியாகவும், நல்ல வருடமாகவும் இருந்து வந்திருக்கிறது. புதனின் அசாத்திய ஏற்றத்தை தொடர்ந்து, வியாழனும் ஏற்றத்திலேயே முடிந்தது.

உச்சத்தில் இருந்த சந்தை: புதனன்று 539 புள்ளிகள் பெற்று உச்சத்தில் இருந்த சந்தை, தொடர்ந்து வியாழன்றும் 129 புள்ளிகள் உயர்விலேயே முடிவடைந்தது. இது, மும்பை பங்குச் சந்தையை, 17,360 புள்ளி என்ற அளவிற்கு கொண்டு சென்றது. இது, பங்குச் சந்தையின் கடந்த 19 மாத உச்சம். மும்பை பங்குச் சந்தை இதுவரை, 80 சதவீத லாபத்தை இந்த வருடத்தில் தந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை, 5,178 புள்ளிகளில் முடிவடைந்தது.

புதிய வெளியீடுகள்: பெரிய வெளியீடுகள் வந்திருந்தாலும், அது முதலீட்டாளர்களுக்கு எந்தவிதமான பெரிய பயனையும் தரவில்லை. ஆங்கர் முதலீட்டாளர்கள் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. அதுவும் பெரிதாக எவ்வித பயனையும் தரவில்லை. 2010ல் பல புதிய வெளியீடுகள் வரக் காத்துக் கொண்டிருக்கின்றன. அவை, முதலீட்டாளர்களுக்கு எப்படி லாபங்களை தரப்போகிறது என்று பார்ப்போம்.

சாப்ட்வேர் பங்குகளும் சந்தையும்: சந்தை இந்த வருடம் நன்கு முன்னேற, சாப்ட்வேர் பங்குகளும் ஒரு காரணம். சந்தை கிட்டத்தட்ட 80 சதவீதம் அதிகமாகி இருப்பதற்கு, பல சாப்ட்வேர் பங்குகள் 100 முதல் 300 சதவீதம் வரை கூடியுள்ளதே காரணம்.

வீட்டுக் கடன்கள்: வீட்டுக் கடன்கள் மிகக் குறைந்த வட்டியில் கிடைக்கின்றன. அதாவது 8 சதவீத வட்டியில் பல வங்கிகள், கம்பெனிகள் அளிக்கின்றன. இது தான் வீட்டுக் கடன் வாங்க நல்ல சமயம்.

ஆனால், வீடு வாங்க நல்ல சமயமா என்று யோசிக்க வேண்டும். வீடுகள் விலை கடந்த ஒரு வருடத்தில் 10 முதல் 20 சதவீதம் வரை கூடியுள்ளது. பொருளாதாரம் நிலையாக இருக்கும் பட்சத்தில், இன்னும் கூடும் வாய்ப்புகளும் உள்ளது.

உள்ளே வரும் வெளிநாட்டு முதலீடுகள்: அதிகமாக வரும் வெளிநாட்டு முதலீடுகள் தான் சந்தையின் தொடர் ஏற்றத்துக்கு காரணம். கடந்த நவம்பரில் மட்டும் 174 கோடி ரூபாய் வந்துள்ளது. இது, கடந்த வருட நவம்பர் மாதத்தை விட 60 சதவீதம் கூடுதல்.

மியூச்சுவல் பண்ட்களின் புதிய வெளியீடுகள்: ஏஜன்டுகளுக்கு கமிஷன் குறைந்ததால், மியூச்சுவல் பண்ட்களின் புதிய வெளியீடுகள், கடந்த காலத்தைப் போல பணங்களைச் சேர்க்க முடியவில்லை. கடந்த மூன்று மாதத்தில் வெளியான வெளியீடுகள் சேர்த்த பணம், இதற்கு முன் வெளியான வெளியீடுகளை விட பாதி குறைந்துள்ளது.

அடுத்த வாரம் எப்படி இருக்கும்? : இது, இந்த வருடத்தின் கடைசி வாரம். சிறிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனால், சந்தையின் 2009 முடிவு, எல்லாருக்கும் திருப்திகரமாகவே இருக்கும்; இருந்திருக்கும்.

- சேதுராமன் சாத்தப்பன் –

பங்கு வர்த்தகம் வீழ்ச்சியிலிருந்து எழுச்சி
நடப்பு 2009&ஆம் ஆண்டில் Ôசென்செக்ஸ்Õ 80% வளர்ச்சி

பார்கவ் திரிவேதி
அகமதாபாத்
நடப்பு 2009&ஆம் காலண்டர் ஆண்டில், டிசம்பர் 24&ந் தேதி வரையிலான காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் Ôசென்செக்ஸ்Õ 80 சதவீதம் வளர்ச்சி கண்டு 17,360.61 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. சென்ற 2008&ஆம் ஆண்டின் இறுதி வர்த்தக தினத்தன்று இது 9,647.31 புள்ளிகளாக இருந்தது.
முதலீட்டாளர்கள்
கடந்த 2000&ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 9 ஆண்டுகளுக்குப் பிறகு Ôசென்செக்ஸ்Õ தற்போதுதான் ஒரே ஆண்டில் இந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். நடப்பு 2009&ஆம் ஆண்டில், இன்னும் மூன்று வர்த்தக தினங்களே உள்ளன.
நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக ஆதாயம் அளிப்பதில் ஆசிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நடப்பு ஆண்டில், இதுவரையிலான காலத்தில், சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் பங்கு வர்த்தகத்தில் முறையே 73 சதவீதம், 50 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்திய பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் இவைகளையும் விஞ்சி உள்ளது.
பங்குகளின் சந்தை மதிப்பு
இந்தியாவிலுள்ள பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்), நடப்பு 2009&ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.29.61 லட்சம் கோடியிலிருந்து ரூ.60.16 லட்சம் கோடியாக (1.28 லட்சம் கோடி டாலர்) உயர்ந்துள்ளது.
இவ்வாண்டில், இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக மே 18&ந் தேதி அன்று, பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட எல்லை மீறிய வளர்ச்சியால், பங்கு வர்த்தகம் தடைபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் Ôசென்செக்ஸ்Õ 2,111 புள்ளிகள் அதிகரித்தது. அன்றைய தினத்தில் பங்கு வியாபாரத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத எழுச்சியால், முதலீட்டாளர்களின் பங்குகளின் சந்தை மதிப்பு சராசரியாக ஒரு வினாடிக்கு ரூ.10,000 கோடி அதிகரித்து ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தி இருந்தது.
கடந்த 2008&ஆம் ஆண்டில், ஏற்பட்டிருந்த கடும் வீழ்ச்சியிலிருந்து, இந்திய பங்கு வர்த்தகம் அதிவேகமாக மீண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்கி உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு 2009&ஆம் ஆண்டில், இதுவரையிலான காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய நிறுவனப் பங்குகளில் ரூ.80,500 கோடி முதலீடு செய்துள்ளன. இந்திய பங்குச் சந்தை வரலாற்றில், ரூபாய் மதிப்பு அடிப்படையில், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்த ஆண்டில்தான் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற 2008&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அமெரிக்காவின் ஐந்தாவது மிகப் பெரிய முதலீட்டு வங்கியான லெஹ்மன் பிரதர்ஸ் திவால் ஆனதையடுத்து, சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி உச்சநிலையை அடைந்தது. இதனால், அன்னிய நிதி நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகளில் செய்திருந்த முதலீடுகளை விலக்கி கொண்டன. சென்ற 2008&ஆம் ஆண்டில் இந்நிறுவனங்கள் ரூ.52,900 கோடி மதிப்பிற்கு பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டை விலக்கி கொண்டன.
பொருளாதாரம்
இவ்வாறு முதலீடுகளை விலக்கி கொள்ளும் நிலை இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்கள் வரை நீடித்தது. மார்ச் மாத இறுதியிலிருந்து முதலீடுகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், அன்னிய நிதி நிறுவனங்கள் இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் மட்டும் ரூ.31,000 கோடி முதலீடு செய்துள்ளன. ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ரூ.34,313 கோடி முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகள், பொருளாதார பின்னடைவை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு சலுகைத் திட்டங்களை வழங்கியதையடுத்து, அந்நாடுகளில் பணப்புழக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அன்னிய நிதி நிறுவனங்களுக்கு அதிக நிதி கிடைக்கிறது.
நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால, வரும் 2010&ஆம் ஆண்டிலும் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும் என புதுடெல்லியைச் சேர்ந்த எஸ்.எம்.சி. கேப்பிட்டல்ஸ் நிறுவனத்தின் தலைவர் (நிறுவனப் பங்குகள்) ஜெகன்னாதம் துணு குண்டலா தெரிவித்தார்.
22,000 புள்ளிகள்
நாட்டின் பங்கு வர்த்தகத்தின் வளர்ச்சி குறித்து ஃபர்ஸ்ட்கால் இந்தியா ஈக்விட்டி அட்வைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர் (இந்தியா) வி.வி.எல்.என். சாஸ்திரி தெரிவிக்கையில், Òஇந்தியாவில் வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதனால்தான் உலக பொருளாதாரம் உருக்குலைந்த போதும், இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாண்டில் 8,000 புள்ளிகளாக சரிவடைந்திருந்த Ôசென்செக்ஸ்Õ 17,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. வரும் 2010&ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் Ôசென்செக்ஸ்Õ அதிகபட்சமாக 22,000 புள்ளிகளை எட்டும். இதில் சற்று சரிவு ஏற்பட்டாலும், அது நிரந்தரமாக இருக்காது. ஏனென்றால், அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளனÓ என்று தெரிவித்தார்.

டிஸ்னி நிறுவன ஊழியர்களின் சம்பளம் 28% குறைப்பு
நியூயார்க் : பொருளாதார நெருக்கடி காரணமாக வால்ட் டிஸ்ட் நிறுவன ஊழியர்களின் சம்பளம் இந்த ஆண்டு 29 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 28 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நிறுவன தலைவர் ராபர்ட் ஐகர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 3ம் தேதியுடன் முடிவடைந்த ஓர் ஆண்டில் ராபர்ட், 29.03 அமெரிக்க டாலர்களை இழப்பீட்டுத் தொகையாக பெற்றுள்ளார். கடந்த ஆண்டு சம்பளத் தொகையான 30.62 மில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 28 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 13.95 டாலர்கள் ஊக்கத் தொகை பெற்றதாகவும், இந்த ஆண்டு9.26 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைந்தது
அமெரிக்காவில், சென்ற டிசம்பர் 19&ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை, அதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் 28,000 குறைந்து 4,52,000&ஆக சரிவடைந்துள்ளது. முந்தைய வாரத்தில் இது 4,80,000&ஆக இருந்தது. இது, அமெரிக்க பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
சென்ற 2008&ஆம் ஆண்டில், பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக, அமெரிக்க நிறுவனங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வந்தன. இதனால், பல லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் வேலை இழப்பு விகிதம் உயர்ந்து வந்தது.
இந்நிலையில், அமெரிக்க பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால், அந்நாட்டு நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. இதனால்தான், சென்ற சில வாரங்களாக பலருக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து, சென்ற அக்டோபர் மாதத்தில் 10.2 சதவீதமாக இருந்த வேலை இல்லாதோர் எண்ணிக்கை விகிதம், நவம்பர் மாதத்தில் 10 சதவீதமாக குறைந்துள்ளது.

2,300 பேரை நீ்க்குகிறது ஏஓஎல்!நியூயார்க்: அமெரிக்கன் ஆன்லைன் எனப்படும் ஏஓஎல் நிறுவனம், செலவுக் குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 2300 பணியாளர்களை நீக்குகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் மட்டும் 200 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்த முடிவு செய்துள்ளது ஏஓஎல். கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்திய நாள் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதுகுறித்த முறையான தகவல்களை அமெரிக்க பங்கு கட்டுப்பாட்டு மையத்திடமும் அளித்துள்ளது ஏஓஎல்.

சமீபத்தில்தான் ஏஓஎல் நிறுவனம் முழுமையான, தனி நிறுவனமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பின் நடந்த முதல் இயக்குநர் குழு கூட்டத்தில் அதன் சிஇஓ டிம் ஆம்ஸ்ட்ராங் பங்கேற்றார்.

ஏஓஎல் நிறுவனத்தில் இப்போது 7000 பேர் பணியில் உள்ளனர். நிறுவனத்தை மறு நிர்மாணம் செய்யும் நோக்கில் இவர்களில் மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களை நீக்குவதோடு, பல ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

சென்னையில் டாடா உருவாக்கும் ராமானுஜம் ஐடி சிட்டி
மும்பை: சென்னை யில் ரூ 3500 கோடி முதலீட்டில் ‘ராமானுஜம் ஐடி சிட்டி’ எனும் புதிய வளாகத்தை உருவாக்குகிறது டாடா நிறுவனம்.

டாடா ரியல்டி அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடட் (TRIL) உருவாக்கும் இந்த ராமானுஜம் ஐசி சிட்டி, சென்னை தரமணி அருகே 26 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது. குடியிருப்புகள், மார்க்கெட் என அனைத்து வசதிகளும் கொண்டதாக இந்த வளாகம் உருவாகிறது.

டிட்கோ மற்றும் இந்திய ஓட்டல்கள் நிறுவனமும் டாடாவுடன் இணைந்து இந்த ஐடி வளாகத்தை உருவாக்குகின்றன. கணித மேதை ராமானுஜத்தை கவுரவப்படுத்தும் வகையில் அவர் பெயரால் இந்த வளாகம் அமைந்துள்ளதாக டாடா நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

சர்வதேசத் தரத்தில் உருவாகும் இந்த வளாகத்தில் உள்ள குடியிருப்புகள் கேம்பிரிட்ஜ் கிரீன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளன. மொத்தம் 150 ஃப்ளாட்டுகள் கொண்ட இந்த குடியிருப்புப் பகுதி, மே 2010-ல் பயன்பாட்டுக்கு தரப்படும். ஒவ்வொன்றும் 2000 முதல் 3000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளன.

‘சென்னை மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு ஐடி நகரமாகிவிட்டது. மிக நவீன வீடு தேடுவோர் அதிகரித்துவரும் நிலையில், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த ராமானுஜம் ஐடி சிட்டி அமைக்கப்பட்டுள்ளது’ என TRIL நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் உபேல் தெரிவித்தார்.

இந்த வளாகத்தினை நியூயார்க் நகரைச் சேர்ந்த ஸ்கிட்மோர் ஓவிங்ஸ் மற்றும் மெர்ரில் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

2010ல் ஐடி துறையில் காத்திருக்கும் 50,000 புதிய வேலைகள்!
பெங்களூர்: கிட்டத்தட்ட ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய ஐடி துறையில் ஆட்கள் தேவை அறிவிப்புகள் எட்டிப் பார்க்கத் துவங்கியுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் மிகவும் மங்கிக் காணப்படும் இந்த சூழலிலும் இந்தியாவில் மட்டும் 50000 புதிய பணிகள் ஐடி துறையில் காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

வருகிற 2010-ம் ஆண்டு இந்த பணிகளுக்கான நியமனங்கள் நடக்கும் என்கிறார் லீடர்ஷிப் கேபிடல் சிஇஓ மூர்த்தி.

“2007-ல்தான் இந்திய ஐடி துறை அதிகபட்சமாக 3 லட்சம் இளைஞர்களை பணியமர்த்தியது. அதற்கடுத்த ஆண்டு 1.8 லட்சம் இளைஞர்கள் எடுக்கப்பட்டனர். 2009-ல் வேலை நியமனங்களை விட வேலை இழப்புகள் அதிகமாக இருந்தன.

ஆனால் 2010-ல் அதிகளவு வேலைவாய்ப்புகள் ஐடி துறையில் காத்திருக்கிறது” என்கிறார் மூர்த்தி. முதல் காலாண்டில் சற்று குறைவான வாய்ப்புகள் வந்தாலும், இரண்டாம் காலாண்டில் அதிக அளவு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுவார்கள்” என்கிறார் இவர்.

ஆட்அஸ்த்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிருபமா, இப்படிச் சொல்கிறார்: “இதற்கு முந்தைய ஆண்டுகளில் காணப்பட்ட சுணக்க நிலையை விரட்டும் வகையில், சுனாமியாய் வரப் போகின்ற புதிய வேலை வாய்ப்புகள். இப்போதே பல நிறுவனங்கள் பெரிய அளவில் ஆளெடுப்புக்கு தயாராகி வருவதை நான் அறிவேன்” என்கிறார்.

“2010-ஐப் பொறுத்தவரை இந்திய இளைஞர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி மிக்க ஆண்டாக இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அல்ல… திறமையாளர்களுக்கு மட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்கிறார் சென்டியன்ட் கன்ஸல்டிங் சிஇஓ.

தேசிய நிஃப்டி

வியாழன், 24 டிசம்பர், 2009

இன்றைய சந்தைகள் காளைகள் கைகளில் இருக்க .தேசிய நிஃப்டி 5160 ஐ தாண்டவேண்டும் அப்படி தாண்டினால் 5175 -5190 -5205 வரை செல்லகூடிய வாய்புகள் இருக்கும் இன்று தேசிய நிஃப்டிஇன் தாங்கு நிலை 5130 சப்போர்ட் லெவல் கில் சென்றால் 5110 - 5085 வரை கில் நோக்கிய பயணம் இருக்கும் கடந்த 10 நாட்களில் இறங்கிய வேகத்தை பார்த்த பலருக்கு இது தான் சமயம் என்று பங்குகளை வாங்கத் தொடங்கினர். இது தவிர ஆசிய அளவிலும் சந்தைகளில் ரெகவரி இருந்தது. புதன் தந்த வரம் பிரணாப்பின் ஒரு அறிவிப்பு, சந்தையை எங்கோ தூக்கி சென்றது.

அமெரிக்காவில் ரெகவரி, இந்திய சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. இது தவிர, பிரணாப்பின் அறிவிப்பான, '7.75 வளர்ச்சி சதவீதத்தை மார்ச் மாதத்திற்குள் எட்டி விடுவோம்' என்பதும், அட்வான்ஸ் டாக்ஸ் நம்பர் களும் சந்தையை காற்றாடி போல பறக்க வைத்தது.

சந்தையை தூக்கிய ரிலையன்ஸ் கிருஷ்ணா - கோதாவரி கடல்படுகையில் எரிவாயு உள்ளதாக வந்த செய்தியை அடுத்து அந்தக் கம்பெனியின் பங்குகள் 4.66 சதவீதம் மேலே சென்றன. அது, சந்தை நேற்று மேலே செல்ல உதவியது.

பணவீக்கம் குறையுமா?: வரும் ஜனவரி மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை குறையும் என்று மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித் துள்ளார். அப்படி குறையும் பட் சத்தில், பணவீக்க சதவீதமும் குறையும். அது சந்தை யை இன்னும் மேலே கொண்டு செல்ல உதவும்.

புதிய வெளியீடுகள்: வரும் புது வருடத்தில் பல வெளியீடுகள் வரக் காத்துள்ளன. நிறைய அரசு வெளியீடுகளும் அதில் உள்ளன. தயாராக இருங்கள். என்.டி.பி.சி., தனது பாலோ ஆன் வெளியீட்டை கொண்டு வரவுள் ளது. ஆதலால், சந்தையில் அதன் விலை கூடிவருகிறது. தற்போது சந்தையில் விற்கும் விலையை விட கூடுதலான விலைக்கு அந்த வெளியீடு வரப்போகிறது என்ற செய்தியும் அடிபடுகிறது.

உலகம் முழுவதும் பண்டிகை கொண்டாட்டங்கள். ஆதலால், சந்தைகள் சத்தமின் றியே இருக்கும். கிறிஸ்துமஸ் முடிந்து புதுவருடம் துவங்கிய பின் தான் சந்தையில் மறுபடி களை கட்டும். இரண்டு காரணங்கள்: உலகச் சந்தைகள் மறுபடி செயல்படத் துவங்கும். பின் காலாண்டு முடிவுகளும் வரத்தொடங்கும். அதன் பின் சந்தைகள் சிறிது ஏறும்.

இன்றய சந்தைகளை பார்மா,ஆட்டோ, ,டெலிகாம் , FMCG பங்குகள் வழி நடத்தும் .பேங்க் ரியாலிட்டி மெட்டல் பங்குகள் குறைய வாய்ப்புண்டு .

புதுவருடம்வரை பொறுமை இழந்தே காணப்படும் .

குறையும் பட்சதில் வாங்கி சேகரித்து கொள்ளுங்கள்

HAPPY TRADING
BULLMARKETINDIA

நூறு ரூபாய்க்கு முத்தான பத்து பங்குகள்

செவ்வாய், 22 டிசம்பர், 2009

bullmarketindiaa@yahoo.com
நூறு ரூபாய்க்கு முத்தான பத்து பங்குகள்

1. I F C I என்ற நிறுவனம் எதாவது ஒரு வங்கி உடன் இனைய வாய்ப்புள்ளது ,அல்லது அதற்கு வங்கி LICENCE கொடுத்து அதன் பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகளை இனொரு பெரிய நிறுவனத்துக்கு விற்க வாய்ப்புள்ளது .இந்த இரண்டில் ஒன்று அடுத்த ஆறு மாதங்களில் நடக்கலாம் தவிர இந்த நிறுவனத்தின் கைவசமாக லாபம் 2000 ஆயிரம் முதல் 3000 கோடியை தாண்டும் இபபோது 37.99 ஆக இருக்கும் புத்தக மதிப்பு மார்ச் 2010 ல் 70 ஆக உயர வாய்ப்புள்ளது.
2 DISH TV (CAPITAL 3257.55) டிஷ் டிவி நிறுவனத்தின் இன்றய மார்க்கெட் ஷேர் சுமார் 40 % இந்த நிறுவனத்தின் விற்பனை ஆண்டுகண்டு அதிகரித்து கொண்டே இருக்கிறது . தவிர இந்த நிறுவனம் அடைந்துவந்த நஷ்டம் குறைந்து ,லாபம் தரத்தொடங்கிவிடும் என்பது முக்கியமான விஷயம் .இந்த நிறுவனம் கடந்த ஆண்டு
உரிமை பங்கு வெளியீட்ட பொது அதன் ப்ரோமொடர்கள் பெருமளவில் பங்குகளை வாங்கியது முக்கியமான விஷயம் தவிர G D R முலம் 400 கோடி ரூபாய் முல தனத்தையும் இந்த நிறுவனம் சமிபத்தில் பெருகியுள்ளது

3. ADANI POWER அதானி பவர் ( CAPITAL 20917 CRORE) மின் உற்பத்தி செய்து தரும் இந்த நிறுவனத்தின்
2010 மார்ச் மாதத்துக்குள் 990 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2011 மார்ச்சில் 1980 மெகவாட் மின்சாரமும் 2012 ல் 3960 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் .இந்த நிறுவனத்தின் மிக பெரிய பலமே அனல் மின்சாரத்துக்கு தேவயான நிலக்கரியை மிக குறைந்த விலையில் வாங்கி விற்கும் திறமை தான்.
இதனால் இந்த நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபம் கணிசமாகவே இருக்கும் .

4.CHEMPLAST SANMAR LTD கம்ப்லாஸ்ட் பி வி சி பைப் தயாரிக்கும் இந்த நிறுவனத்தின் விற்பனை இந்த ஆண்டில் ரூ 675 கோடி .இது 2010 ல் ரூ 1000 கோடி 2011 ல் 1500 கோடியாகவும் இருக்கும்
என்று எதிர்பர்கபடுகிறது. பி வி சி பைப் தயரிக்க தேவையான முழ பொருள்களை தயார் செய்ய எகிப்தில் இருக்கும் ஒரு ரசாயன நிறுவனத்தை 200 மில்லியன் டாலர் செலவு செய்து 2006 ல் வங்கியுள்ளது இதனால் முல போல்ருல்களுக்கு ஆன செலவு மிகவும் குறைய வாய்ப்புள்ளது இன்று இந்த நிறுவனம் நஷ்டத்தில் இருந்தாலும் மேற்சொன்ன காரணங்களால் நஷ்டம் குறைந்து ,இன்னும் ஓராண்டுக்குள் லாபம் சம்பாதிக்க தொடங்கும் .

5. NHPC (நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்ரேஷன்) நீர் மின்சாரம் தயரிக்கும் இந்த நிறுவனம் .இப்போது 5134
மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது 4622 மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன எதிர்காலத்தில் 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது .இந்த நிறவனத்தின் தற்போதைய லாபம் 1244 கோடி இது அடுத்த ஆண்டில்1600 கோடி
ரூபாயாகவும் 2011 ல்
1800 முதல் 1900 கோடி ருபயாகவும் இருக்கும் என்று எதிர்பர்க்கபடுகிறது .நிறுவனத்தின் உற்பத்தி 5 மடங்கு பெருகுவதால் இந்த பங்கின் விலையும் முன்று மடங்கு பெருக வாய்ப்புள்ளது.
6.TTML (டாட்டா டெலி மகாராஷ்டிரா லிமிடெட் ) (CAPITAL 5198 CRORE)தொலைதொடர்பு சேவை வழங்கும் இந்த நிறுவனம் G S M தொழில்நூட்பதை தடர்ந்து விரிவாக்கம் செய்துவருகிறது ,தரமான சேவை குறைந்த கட்டணம் என்கிற இரண்டு விஷயத்திலும் இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது .நம்பர் போர்டபிலட்டி , வருகிற டிசம்பர் குள் எல்லா பெருநகரங்களிலும் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவின் ஆனைத்து பகுதிகளிலும் வந்து விடும் என்பதால் இந்த நிறுவனத்தின் வாடிகையலகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்க வாய்ப்புண்டு

7.UNITECH இனிடேக் (CAPITAL 20698 CRORE) ரியல் எஸ்டேட் துறையைசேர்ந்த இந்த நிறுவனம் தன்னுடைய கடன் சுமையை வெகுவேகமாக குறைத்துவருகிறது.இந்தியாவின் G D P 6.8 % இருக்கும் என்று கருதபடுவதால் அடுத்த இரண்டு முன்று ஆண்டுகளில் எல்லாத் தொழில் துறைகளும் செழிக்க வாய்ப்புண்டு அப்போது ரியல் எஸ்டேட் துறையும் இன்னும் பெரிய ஆளவில் வளர வாய்ப்புண்டு தவிர கட்டுமான பணிகளும் பெரிய ஆளவில் நடக்க இருப்பதால் இந்த நிறுவனத்தின் லாபம் குறிபிடதகுந்த அளவு அதிகரிக்கும் .

8.G M R INFRA (CAPITAL 25488 CRORE) ஜி எம் ஆர் இன்ப்ரா கட்டுமான துறையில் ஈடுபட்டிருக்கும் இந்த நிறுவனம் சாலை, விமான நிலையங்கள் , மின்நிலையங்கள் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை செய்வதில் திறம்பட விளங்குகிறது.இந்தியவிலும் வெளிநாடுகளிலும் சில விமான நிலையங்களையும் மின் நிலையங்களும் அமைத்து வருகிறது .இந்த நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளுக்கு பெரிய பொருளாதார சரிவு எதுவும் இருக்காது என்பதால் கட்டுமான திட்டங்கல்கு அரசு செலவழிக்கும் தொகை அதிகமாகவே இருக்கும் ரியல் ஈஸ்டடேடும் நல்ல நிலையில் இருக்கும் என்பதால் இந்த நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்

9. N I I T( CAPITAL 1196 CRORE) என் ஐ ஐ டி கம்ப்யூட்டர் கல்வி அளிக்கும் நிறுவனம் இது (கேட்) தேர்வு நடத்தும் பிரீமேற்றிக் என்கிற அமைப்புடன் இனைந்து செயல்படும் ஒப்பந்தம் ஒன்றை சமிபத்தில் நிறைவேற்றி இருக்கிறது தவிர SAP நிறுவனத்துடன் வர்த்தகரீதியாக கூட்டு சேர்ந்துள்ளது இதனால் மாணவர்கள் ப்ரோப்சேசானல்கள் என பலரும் என் ஐ ஐ டி சேவையை பெறுவார்கள் இந்த இரண்டு ஒப்பந்தங்களால் இந்த நிறுவனத்தின் வருமானம் கணிசமாகவே அதிகரிக்கும் .

10.WIRE AND WIRELESS (CAPITAL 844 CRORE) வயர் அண்ட் வயர்லேஸ் தகவல் தொழில்நூடபத்தில்
தனக்கென ஒரு இடத்தை பிடித்றிகிறது இந்த நிறுவனம் ஹிட்ஸ்
( HEADEND -IN-THE- SKY ) என்பது இந்த நிறுவனத்திடம் மட்டுமே இருக்கும் தொழில்நுட்பம் . ஹிட்ஸ் என்பது சாட்லைட் முலம் வரும் பல்வேறு சேனல்களின் சிக்னல்களை ஒன்றாக்கி , மிண்டும் சாட்லைட் கே அனுப்பி, கேபிள் T V ஆப்றேடர்கள்கு கொடுபதாகும். இந்த சேவையை அளிக்கும் உரிமை இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே உண்டு அதில் ஒன்று இந்த நிறுவனம் .இந்த தொழில்நுட்பம் மிகபெரிய ஆளவில் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் பல ஆயிரம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இந்த சேவையை பெற விரும்புவர்கள் அப்போது இந்த கம்பெனியின் வருமானம் கணிசமாகவே அதிகரிக்கும்.

மதிப்பு வாய்ந்த பங்குகள்
விலை குறைந்த பங்குகள்

பரிந்துரை BY
சரவணா ச்டோக்க்ஸ்
சத்யா மூர்த்தி

தேசிய நிஃப்டி

திங்கள், 21 டிசம்பர், 2009

தேசிய நிஃப்டி

இந்த வலை பூவிற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் ஆனைவருக்கும் நன்றிகள்
உங்கள் கருத்து களை பதிவு செயுங்கள்
இன்றைய சந்தைகள் ஆசிய சந்தைகளின் மேல்நோக்கிய பயணத்தால் நமது சந்தைகளும் மேல்நோக்கிய பயன்களை மேற்கொள்ளும் தேசிய நிஃப்டி இன்று 5010 தாண்டினால் 5025 - 5055வரை தேசிய நிஃப்டி செல்ல கூடிய வாய்புகள் வரை .தாங்கு நிலை 4970 -4050 சப்போர்ட் லெவல4870-4850 .இன்றய சந்தைகளை
I T ,ஆட்டோ,மெட்டல் ,டெலிகாம் வங்கி ரியல்எஸ்டேட் FMCG பங்குகள் வழி நடத்தும் .பங்குகள்.
குறிப்பாக வங்கி,டெலிகாம் i t ,போன்ற பங்குகள் இன்றைய சந்தையில் விளையாடும் .
லாபம் உள்ள பங்குகளை விற்று லாபத்தை பார்த்துவிடுங்கள் .
குறையும் பட்சதில் வாங்கி சேகரித்து கொள்ளுங்கள் .
SEE THE STOCKS
RELIANCE
R COM
TECH MAHINDRA
SBI
UNITECH
IDFC
ICICI BANK
IVRCL
LIC HOUSING
NAGARJUNA CONSTRUCTION
BANK OF INDIA

ஒரு வாரம் அலுவலகத்திற்கு லீவு: செலவை குறைக்க யாகூ புதுமுயற்சி நியூயார்க்: உலக அளவில் உள்ள தனது அனைத்து அலுவலகங்களுக்கும் ஒரு வாரம் லீவு விட யாகூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. செலவை குறைக்க தான் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதம் (டிசம்பர்) 25 ம் தேதி முதல் ஜனவரி 01ம் தேதி வரை இதற்காக ஒதுக்கி உள்ள யாகூ நிறுவனம், டிசம்பர் 25 முதல் ஜனவரி 01ம் தேதி வரை கிறிஸ்துமஸ், புதுவருட பிறப்பு உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் வருவதால் இந்த தேதிகளை தேர்ந்தெடுத்தாக தெரிவித்துள்ளது. யாகூ நிறுவனத்தை போல, அடாப் மற்றும் ஆபிள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும் டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 01ம் தேதி வரை லீவு விட முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்கப் பொருளாதாரம்... வல்லுனர்கள் கவலைவாஷிடங்டன்: பொருளாதார மந்தத்திலிருந்து உலகம் மெல்ல மெல்ல மீ்ண்டு வருவதாக செய்திகளும், வங்கிகளின் அறிக்கைகளும் சொன்னாலும், இதற்கெல்லாம் மூல காரணமான அமெரிக்கப் பொருளாதாரம் மட்டும் மீண்டு வர இன்னும் சில காலம் ஆகும் என்றே பல ஆய்வுகளும் கூறுகின்றன.

இந்த நிலையில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ், 2010-லும் அமெரிக்கா ஒரு பெரிய சரிவை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும், இந்த முறை இன்னும் அதிக ஊக்கச் சலுகை திட்டத்தை (Stimulus Package) அது அறிவிக்க வேண்டி வரும் என்றும் கூறியுள்ளார்.

"2009-ன் பிற்பகுதியில் பல முன்னேற்றங்கள் இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒபாமா அரசு கொடுத்த நிதிச் சலுகைகள் எதிர்ப்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை. இன்னும் அமெரிக்காவிலிருந்து பெருமளவில் வருவது வேலை நியமனங்கள் அல்ல... வேலை இழப்புகள்தான். இந்த நிலை இன்னும் ஆறு மாதங்களில் தீவிரமடையும் அறிகுறிகள்தான் தெரிகின்றன. அதற்கு இப்போதே தயார்படுத்திக் கொள்ளாவிட்டால், அமெரிக்காவின் நிலைமை மிக சிக்கலாகிவிடும்" என்கிறார் ஸ்டிக்ளிட்ஸ்.

நோபல் பரிசு பெற்ற இன்னொரு பொருளாதார அறிஞர் பால் க்ருக்மேனும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார், சில வாரங்களுக்கு முன்பு.

ஆனால் ஒபாமா அரசு, தனது 787 பில்லியன் டாலர் முதல் சலுகைத் திட்டத்தால் நல்ல பலன் தெரிவதாகவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்க 157 பில்லியன் டாலர் கூடுதல் நிதிச் சலுகை கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. இப்போது மாதம் 10 சதவிகித அளவு வேலை இழப்புகள் தொடர்கின்றது. ஆனால் வேலை இழப்பின் அளவுக்கு புதிய வேலைகளை உருவாக்கும் ஒபாமா அரசின் முயற்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ள ஒபாமா, இதைச் சரிசெய்யவே கூடுதல் நிதிச் சலுகை தரத் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் பொருளியல் அறிஞர்களோ, அது போதாது என்றும், மேலும் ஒரு பெரிய ஊக்குவிப்புச் சலுகைத் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அதே நேரம் கடந்த இரு ஆண்டுகளில் மைனஸில் இருந்த பொருளாதார வளர்ச்சி 2009ன் மூன்றாவது காலாண்டில்தான் 2.8 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.

'இந்த வளர்ச்சி நிலையைத் தக்க வைக்கவே மிகப் பெரிய செலவு செய்ய வேண்டி வரும். வேறு வழியில்லை' என்கிறார் ஸ்டிக்ளிட்ஸ்.

சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது -

மெட்டல், ரியாலிட்டு பங்குகள் உயர்வு
மும்பை: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. மெட்டல் மற்றும் ரியாலிட்டு பங்குகளும் உயர்வுடன் முடிந்தன. காலையில் வர்த்தக நேரம் தொடங்கிய போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 110.39 புள்ளிகள் உயர்ந்து 16,711.59 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 34.40 புள்ளிகள் உயர்ந்து 4,987 புள்ளிகளோடு முடிந்தது.
அதிகமாக செயில் நிறுவன பங்குகள் 4.90 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் 3.03 சதவீதமும், பார்தி ஏர்டெல் பங்குகள் 3.66 சதவீதமும், ஹிந்தால்கோ பங்குகள் 3.43 சதவீதமும், என்.டி.பி.சி., பங்குகள் 2.20 சதவீதமும், ரிலையன்ஸ் கேப்பிட்டல் 2 சதவீதமும் உயர்ந்தன.

இந்திய பங்குச் சந்தை வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90.80 புள்ளிகள் உயர்ந்து 16,692.00 புள்ளிகளோடு நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 33.25 புள்ளிகள் உயர்ந்து 4,985.85 புள்ளிகளோடு நிலைபெற்றது.

சொந்தமாக இரண்டு காரா? கூடுதல் வரி கட்டணும்
புதுடில்லி: தலைநகர் டில்லியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நகரத்தின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இப்பிரச்னை தொடர்பான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

சமீபத்தில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து நெரிசலில் கார்களின் பங்கு 30 சதவீதம், இருசக்கர வாகனங்களின் பங்கு 62 சதவீதம் என கவலை தெரிவிக்கப்பட்டது.

இத்துடன் போக்குவரத்து போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஷ் பாவா, நீதிபதிகளிடம் தெரிவித்ததாவது;

டில்லியில் இருப்பவர்களில் பெரும்பான்மையானோர், ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை சொந்தமாக வைத்துள்ளனர். வாகன நெரிசலுக்கு இதுவே முக்கிய காரணம். எனவே, வாகன பதிவை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு, சாலை வரி, பார்க்கிங் சார்ஜ் உள்பட பல வழிகளில் கூடுதல் வரி விதிப்பது பற்றி மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இவ்வாறு விகாஷ் பாவா தெரிவித்தார். இதையடுத்து இதற்கு தகுந்தவாறு ஒரு சட்டத்திருத்தம் கொண்ட வர மாநில அரசு திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எம்., நிறுவனத்திற்கு ரூ. 380 கோடி மதிப்பில் ஆடர்
புதுடில்லி: பிரபல ஐ.டி., நிறுவனமான ஐ.பி.எம்., நிறுவனம், டிஜிகேபிள் என்ற நிறுவனத்திடம் ரூ. 380 கோடி மதிப்பில் ஆடர் பெற்றுள்ளது. கேபிள் மற்றும் போர்ட்டுபிரான்ட் உள்ளிட்ட வற்றை அமைக்கும் திட்டத்திற்காக இந்த ஆடரை ஐ.பி.எம்., நிறுவனம் பெற்றுள்ளது. பொதுபோக்கு நிறுவனமான ஸ்டார் டி.வி மற்றும் டாடா ஸ்கை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுடனான ஒப்பந்தத்திலும் ஐ.பி.எம்., நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

வளைகுடா நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பு
துபாய்: இந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1.3 சதவீதம் அதிகரிக்கும் என்று வளைகுடா நாடுகளின் பொருளாதார அமைச்சர் சுல்தான் அல்-மான்செளரி ‌நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதே போல, அடுத்த ஆண்டு(2010ம் ஆண்டு) வளைகுடா நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகவும், முதலீட்டாளர்களை கவரும் விதமாக பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதத்தில் இருந்து உணவுப் பொருட்களின் விலை குறையும்: மான்டெக்
கோல்கட்டா: கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவு உயர்ந்து வரும் உணவுப் பொருள்களின் விலை, அடுத்த மாதத்தில் இருந்து குறைய தொடங்கும் என்று திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். உருளைக் கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை உயர்வே உணவு பணவீக்க உயர்விற்கு காரணம் என்றும் இந்த பணவீக்கம் விகித உயர்வும் விரைவில் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்

கலக்க போகும் சிறிய கார் சந்தை: பெரிய நிறுவனங்கள் மோ
இந்தியாவில் சிறிய கார் சந்தை எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறது. இதுநாள் வரை, இச்சந்தையில் மாருதி மற்றும் ஹுண்டாய் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இதற்கு போட்டியாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார், அறிமுகமாகி பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த ஆண்டு, இந்தியாவின் சிறிய கார் சந்தையில், ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா, ஃபோர்டு இந்தியா, நிஸான்மோட்டார்இந்தியா மற்றும் வோக்ஸ்வாகன் இந்தியா ஆகிய பெரிய நிறுவனங்கள் களத்தில் குதிக்கின்றன. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பீட், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் பிகோ, நிஸான் நிறுவனத்தின் மைக்ரா, வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் போலோ ஆகிய கார்களே இந்தியாவை கலக்க வருகின்றன.

இந்த புதிய கார்கள், மாருதியின் பல மாடல் கார்கள் மற்றும் ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ10, ஐ20 கார்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனமும், சிறிய கார் சந்தையில் 10 முதல் 15 சதவீதம் வரை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளன. எனவே, சிறிய கார் சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு பலவகையான சலுகைகள் காத்திருக்கின்றன என்றே கூறலாம்.

இந்தியாவில் சிறிய கார் சந்தை எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறது. இதுநாள் வரை, இச்சந்தையில் மாருதி மற்றும் ஹுண்டாய் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இதற்கு போட்டியாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார், அறிமுகமாகி பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிராண்டே எம்கே 2 புதிய கார் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில், கிராண்டே எம்கே 2 என்ற புதிய கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம, யுடிலிட்டி வைக்கிள் பிரிவில் ஏற்கனவே சுமோ என்ற காரை விற்பனை செய்து வந்தது. இதன் மேம்படுத்தப்பட்ட காராக, கிராண்டே எம்கே 1 கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கிராண்டே எம்கே 2 என்ற புதிய கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய காரின் வெளிப்புறத்தில், புதிய குரோமோலைன்டு கிரில், குரோம் இன்செர்ட்டுடன் கூடிய சைட் ரப்ரெயில்ஸ், ரியர் கண்ணாடிகளில் இன்டிகேட்டர் போன்ற வசதிகள் உள்ளன. உட்புறத்தில் பாக்ஸ் வுட் சென்டர் கன்சோல், புதிய பேப்ரிக் அப் ஹோல்ஸ்டரி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய காரின் விலை ரூ.6.43 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை இருக்கும் (எக்ஸ்ஷோரூம் டில்லி). மாதத்துக்கு 4,000 கிராண்டே எம்கே 2 கார்களை விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜிஎக்ஸ், இஎக்ஸ், எல்எக்ஸ் என மூன்று பிரிவுகளில் இந்த புதிய கார் கிடைக்கும்.

விலைவாசியை கட்டுப்படுத்த வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு
புதுடில்லி: 'உணவுப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த, வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் முதல் வாரத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவாக, 20 சதவீதத்தை அடைந்தது.


இதை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் கூறியதாவது: இந்த மாதம், உணவுப் பொருட்களின் விலை குறையவில்லை என்றால், பின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, வட்டி வீதத்தை அதிகரிப்பது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்க வேண்டிய குறிப்பிட்ட ரொக்க கையிருப்பு வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.


இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ், கடந்த 18ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசி உள்ளார். இதனால், நிதிக் கொள்கைகள் கடுமையாக்கப்படலாம் என்ற ஊகங்களும் நிலவுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி, அடுத்த நிதிக் கொள்கையை, அடுத்த மாதம் 29ம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல், அரசு செயலற்று இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இவ்விவகாரத்தால், பார்லிமென்ட் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. அதே சமயம், முன்பு ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த பிமல் ஜலான் கருத்து தெரிவிக்கையில், 'அதிகப் பணப்புழக்கத்தை உறிஞ்சி எடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டால், விலைவாசி குறையும்' என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவும், வியட்னாமும், வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து பணவீக்கத்தை சமீபத்தில் குறைத்திருப்பதையும் நிதித்துறையும் ரிசர்வ் வங்கியும் கவனித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாவதால்

சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும்

ஹர்சிம்ரன் சிங்
புதுடெல்லி
கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறிய வகை மடி கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளன. இதனையடுத்து Ôநெட்புக்Õ என்றழைக்கப்படும் சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் விற்பனையில் பெரும் எழுச்சி ஏற்படும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இந்த கம்ப்யூட்டர்கள் Ôமினி நோட்புக்ஸ்Õ என்றும் அழைக்கப்படுகின்றன.
முதன் முதலில்...
Ôலேப்டாப்Õ என்றழைக்கப்படும் மடி கம்ப்யூட்டர்கள் பேட்டரியில் இயங்கக் கூடியவை. பிரயாணங்களின் போது எடுத்துச் செல்லக்கூடிய இந்த கம்ப்யூட்டர்களை தொழிலதிபர்கள், நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், தைவான் நாட்டைச் சேர்ந்த பிரபல கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏ.எஸ்.யு.எஸ்., சிறிய வகை மடி கம்ப்யூட்டரை முதன் முதலில் உருவாக்கியது.
அளவில் சிறிய, எடை குறைவான, சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் பெரும்பாலும் இணையதளத்துக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் பயன்பாடு இன்னும் அதிகரிக்கத் தொடங்கவில்லை. எனினும் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இப்பிரிவு அபார வளர்ச்சி காணும் என சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து கார்ட்னர் நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் தீப்தரூப் சக்ரவர்த்தி கூறும்போது, Òஒரு வாடிக்கையாளர் முதன் முதலாக கம்ப்யூட்டர் வாங்கும்போது, மடி கம்ப்யூட்டரை விரும்புவதில்லை.
எனவே இது இரண்டாவது தேர்வாகத்தான் உள்ளது. குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள், சாதாரண கம்ப்யூட்டருக்கு அடுத்த இடத்தில்தான் உள்ளன. சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் மொத்த மடி கம்ப்யூட்டர்கள் விற்பனையில் Ôநெட்புக்Õகுகளின் பங்களிப்பு 20 சதவீத அளவிற்கே உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, பல இல்லங்களில் சாதாரண கம்ப்யூட்டரே இல்லை. எனவே மடி கம்ப்யூட்டர்கள் பயன்பாடு மெதுவாகத்தான் வளர்ச்சி காணத் தொடங்கும்Ó என்று தெரிவித்தார்.
சாதாரண கம்ப்யூட்டர்
இந்தியாவில் இன்று சாதாரண கம்ப்யூட்டர் பயன்பாடு 5 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. மூன்றாவது காலாண்டில் (ஜூலை&செப்டம்பர்) நம் நாட்டில் மொத்தம் 21.80 லட்சம் சாதாரண கம்ப்யூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. இதில், மடி கம்ப்யூட்டர்கள் விற்பனை 7.30 லட்சம் என்பது கவனிக்கத்தக்கது. ஆனாலும் சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் விற்பனை 70,000 என்ற அளவில்தான் இருந்தது. எனினும் வரும் 2010&ஆம் ஆண்டில் இவற்றின் விற்பனை 3,25,000&ஆக உயரும் என கார்ட்னர் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. அதே சமயம் சர்வதேச அளவில் விற்பனை 6 கோடியாக அதிகரிக்கும் என ஏ.பீ.ஐ. ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.
விற்பனை
சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களைப் பெற்றுள்ளன. விலையும் குறைவாக உள்ளது. டெல், எச்.பி., ஏசர், எச்.சி.எல். மற்றும் லினோவா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் சிறிய வகை மடி கம்ப்யூட்டர்களை தயாரித்து அளித்து வருகின்றன. நடப்பு 2009&ஆம் ஆண்டில் இதுவரை, 1,35,000 சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. உள்நாட்டில் தற்போது சிறிய மடி கம்ப்யூட்டர் ஒன்றின் விலை சுமார் ரூ.20,000&ஆக உள்ளது. உயர்ந்த பிராண்டு சிறிய வகை மடி கம்ப்யூட்டர் ஒன்று ரூ.15,000 என்ற விலையிலேயே கிடைக்கிறது.
மின்சாரம்
தற்போது சிறிய வகை மடி கம்ப்யூட்டர் ஒன்றில் உள்ள பேட்டரி 7&8 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கூடியது. இவ்வகையில், பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் 10 அங்குல திரையைக் கொண்டுள்ளன. சில மாடல்கள் 12 அங்குல திரையைக் கொண்டுள்ளன. பொதுவாக வழக்கமான மடி கம்ப்யூட்டர்கள் 1.50 முதல் 2 கிலோ வரை எடை உள்ளதாக இருக்கும். அதே சமயம் Ôநெட்புக்Õ ஒன்றின் எடை 1.30 கிலோவாக உள்ளது. ஒரு நுகர்வோர் மடி கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கும் போது அதன் எடை மிகவும் குறைவாக இருப்பதையே விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில், மடி கம்ப்யூட்டர்கள் விற்பனையில் சிறிய வகை கம்ப்யூட்டர்களின் பங்களிப்பு 10 முதல் 11 சதவீதமாக உள்ளது. சாதாரண கம்ப்யூட்டர்களை விஞ்சி இவற்றின் ஆதிக்கம் வலுப்பெறுவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும் என லினோவா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமர் பாபு கூறினார். எனினும் தற்போது, பல நகரங்களில், குறிப்பாக நடுத்தர நகரங்களில் சிறிய மடி கம்ப்யூட்டர்கள் பயன்பாடு உயரத் தொடங்கியுள்ளது. எனவே, முதல் தேர்வாக சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் உருவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதே பல நிறுவனங்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.


ரிலையன்ஸ் ரீடெயில்
85 தங்க ஆபரண விற்பனை மையங்கள்

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் தங்க ஆபரணங்கள் விற்பனை பிரிவு ரிலையன்ஸ் ஜுவல்ஸ் ஆகும். இப்பிரிவின் கீழ், அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதுமாக 85 தங்க ஆபரண விற்பனை நிலையங்களை உருவாக்க ரிலையன்ஸ் ரீடெயில் திட்டமிட்டுள்ளது. தற்போது இப்பிரிவில் 15 பிரத்தியேக விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிறுவனம் ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்த அளவில் 100 ரிலையன்ஸ் ஜுவல்ஸ் விற்பனை மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளது என இதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அன்னியச் செலாவணி கொள்கையில் மாற்றம் வரலாம்

பணவீக்க உயர்வை கட்டுப்படுத்த பாரத ரிசர்வ் வங்கி நடவடிக்கை காயத்ரி நாயக்
மும்பை
கடந்த ஒரு சில மாதங்களாக நாட்டின் பணவீக்க விகிதம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, பல்வேறு உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தன.
பணப்புழக்கம்
இதனை கருத்தில் கொண்டு, பாரத ரிசர்வ் வங்கி, பணவீக்க உயர்வை தடுத்தும் நிறுத்தும் வகையில், ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்க உயர்விற்கு, பொருள்களின் அளிப்பு குறைந்துள்ள அதே நேரத்தில், பணப்புழக்கம் அதிகரித்து வருவதும் காரணமாக உள்ளது.
கடந்த ஒரு சில மாதங்களாக, அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரித்து வருகிறது. இவ்வாண்டு ஆகஸ்டு முதல் அக்டோபர் வரையிலான மூன்று மாத காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள் 800 கோடி டாலரை (சுமார் ரூ.37,600 கோடி) இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதில், 33.60 கோடி டாலரை ரிசர்வ் வங்கி அதன் கையிருப்பில் வைத்துள்ளது. இதே அளவிற்கான தொகையை முன்பேர வர்த்தக சந்தையில் விற்பனை செய்துள்ளது.
அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு தவிர, அன்னிய நேரடி முதலீடு, வெளிநாடுகளில் திரட்டப்படும் கடன்கள், ஏற்றுமதி வாயிலாக பெறப்படும் வருவாய் போன்றவற்றின் வாயிலாகவும் அன்னியச் செலாவணி வரத்து அதிகரித்துள்ளது.
அமெரிக்க டாலர்
இருப்பினும், இறக்குமதியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீட்டு லாபத்தை திரும்ப பெறுவதன் வாயிலாகவும் அன்னியச் செலாவணிகள், குறிப்பாக அமெரிக்க டாலர் வெளியேறுகிறது.
இந்த நிலையிலும், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஆகஸ்டு & அக்டோபர் மாத காலத்தில் 1,300 கோடி டாலர் (ரூ.61,100 கோடி) உயர்ந்துள்ளது.
நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர, ரிசர்வ் வங்கி அதிக அளவில் டாலரை வாங்கி வருகிறது. இதனால், உள்நாட்டில் ரூபாய் அளிப்பு குறைந்து போகிறது. இதனால், பணப்புழக்கம் குறைகிறது. இந்த நிலையில், வங்கிகள் அவை திரட்டும் டெபாசிட்டுகளில் இருந்து தற்பொழுது குறைந்த அளவிற்கே கடன்களை வழங்கி வருகின்றன. இவ்வகையில், அண்மைக் காலமாக வங்கிகள் வசம் ரூ.50,000 கோடி உபரி தொகை புழக்கத்தில் உள்ளது என ஆய்வு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இது குறித்து யெஸ் பேங்கின் தலைமை பொருளாதார நிபுணர் சுபாதா ராவ் கூறும்போது, Òபாரத ரிசர்வ் வங்கியின் கைவசம் அதிக அளவில் அன்னியச் செலாவணி இருப்பு உள்ளது. இருப்பினும், அன்னிய முதலீடுகள் நாட்டிற்குள் வருவதை தற்போது தடுத்து நிறுத்தும் எண்ணம் இல்லை என பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் தெரிவித்திருந்தது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மத்திய அரசு அறிவித்த சலுகை திட்டங்களாலும் நாட்டின் பணவீக்க விகிதம் ஓரளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பொருள்களின் அளிப்பு போதிய அளவிற்கு இல்லாததும் இதன் உயர்விற்கு காரணமாகும்Ó என்று தெரிவித்தார்.
புதிய திட்டங்கள்
மேக்கொயர் பொருளாதார ஆய்வு அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மாலிக் இது குறித்து கூறும்போது, Òநாட்டின் பொருளாதார கொள்கையில் புதிய திட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்பாக, நாட்டில் புழக்கத்தில் உள்ள பண அளவை குறைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 2010&ஆம் ஆண்டு மார்ச் & ஏப்ரல் ஆகிய இரு மாதங்களில், பணப்புழக்கத்தை குறைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கைளை மேற்கொள்ள வாய்ப்புள்ளதுÓ என்று கூறினார்.
இதன் ஓர் அங்கமாக, பாரத ரிசர்வ் வங்கி, டாலர் உள்ளிட்ட செலாவணிகளை வெளிச் சந்தையிலிருந்து அதிக அளவில் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உள்நாட்டில் பணப்புழக்கம் குறையும். அதே நேரத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு உயரும். இருப்பினும், இந்த நடவடிக்கை தற்போது மிகவும் அவசியமாக இருக்கும். இது தவிர, கடன்பத்திரங்களை அதிக அளவில் வெளியிடுவதன் வாயிலாகவும் உள்நாட்டில் பணப்புழக்கத்தை குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற 2008&ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது

இணைத்தல் நடவடிக்கைகள் மதிப்பு 50% சரிவு


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார பின்னடைவு, இந்திய நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், நடப்பு 2009&ஆம் ஆண்டில், இதுவரையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நிறுவனங்களின் இணைத்தல், கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் மற்றும் தனியார் பங்கு முதலீடுகளின் மதிப்பில் 50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஒப்பந்தங்கள்
சென்ற 2008&ஆம் ஆண்டில், இந்தியாவில் 4,154 கோடி டாலர் (ரூ.1,95,238 கோடி) மதிப்பிற்கு இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் ஒப்பந்தங்கள், தனியார் பங்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. இவை, நடப்பு 2009&ஆம் ஆண்டில், இதுவரையிலான காலத்தில், 50 சதவீதம் சரிவடைந்து 2,120 கோடி டாலராக (ரூ.99,640 கோடி) குறைந்துள்ளது. கடந்த 2007&ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் 69 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
இணைத்தல் மற்றும் கையகப்படுத்துல் நடவடிக்கைகளில் இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்துதல், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இணைத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், உள்நாட்டு நிறுவனங்களுக்குள் மேற்கொள்ளப்படும் இணைப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.
வெளிநாடுகளில்...
இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொண்ட இணைத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு 92 சதவீதம் சரிவடைந்து 1,319 கோடி டாலரிலிருந்து 112 கோடி டாலராக குறைந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்ட இணைத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு 75 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுதான் காரணமாகும்.
அதேசமயம், உள்நாட்டில் நடைபெற்றுள்ள இணைத்தல் மற்றும் கையகப்படுத்துல் நடவடிக்கைகளின் மதிப்பு 521 கோடி டாலரிலிருந்து (ரூ.24,487 கோடி) 580 கோடி டாலராக (ரூ.27,250 கோடி) உயர்ந்துள்ளது. இது, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. இதே காலத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடுகளும் 1,117 கோடி டாலராக குறைந்துள்ளது.
நிறுவனங்கள், புதிதாக ஒரு துறையில் களமிறங்குவதற்குப் பதிலாக, அத்துறையில் ஏற்கனவே ஈடுபட்டு வரும் மற்றொரு நிறுவனத்தை கையகப்படுத்துவதன் வாயிலாக, அத்துறையில் எளிதாக காலூன்ற முடியும். தற்போது, உலக அளவில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதால், வரும் 2010&ஆம் ஆண்டில், இந்த நடவடிக்கைகளில் எழுச்சி ஏற்படும் என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
அன்னியச் செலாவணி கொள்கையில் மாற்றம் வரலாம்

புதிய தொழிற்சாலைகளுக்கு இடம் அளிக்க

பொதுத் துறை நிறுவனங்களின் உபரி நிலங்களை விற்க திட்டம்


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
பொதுத் துறையைச் சேர்ந்த, தற்போது செயல்பாட்டில் இல்லாத, உரம் மற்றும் சிமெண்டு நிறுவனங்களின் உபரி நிலங்களை விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
ஆர்செலர் மிட்டல்
ஆர்சசெலர் மிட்டல் மற்றும் போஸ்கோ போன்ற உருக்கு துறை நிறுவனங்கள், அவற்றின் புதிய தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலத்தைப் பெறுவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. இத்தகைய நிறுவனங்களுக்கு உதவும் வகையில் உரம் மற்றும் சிமெண்டு நிறுவனங்களின் உபரி நிலங்களை விற்பனை செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது செயல்பாட்டில் இல்லாத உர, சிமெண்டு நிறுவனங்களிடம் 18,000 ஏக்கருக்கும் மேலான உபரி நிலம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து உருக்கு துறை செயலாளர் அதுல் சதுர்வேதி கூறும்போது, Òநிலம் விஷயத்தில் உண்மையில் சிக்கல் எதுவும் இல்லை. நாட்டில் போதிய அளவு நிலம் உள்ளது. எனினும் அந்த நிலங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அடையாளம் கண்டு, முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளங்களில் அவை பற்றிய விவரத்தை வெளியிட வேண்டியதே தற்போதைய அவசரத் தேவையாகும்Ó என்று தெரிவித்தார்.
ரூ.11 லட்சம் கோடி
உள்நாட்டு உருக்கு துறையில், பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் ரூ.11 லட்சம் கோடி முதலீடு செய்வதற்காக அணிவகுத்து நிற்கின்றன. இதில் ஆர்செலர் மிட்டல் மற்றும் போஸ்கோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டும் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு மேற்கொள்ள தயாராகி உள்ளன. எனினும், இரும்புத் தாது மற்றும் நிலக்கரி போன்ற கனிம வளங்கள் அதிகம் உள்ள ஜார்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில், உருக்கு தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலத்தைப் பெறுவதில் இந்நிறுவனங்களுக்கு இடர்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கான நிர்மாணப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலம்
ஆர்செலர் மிட்டல் நிறுவனம் ஜார்கண்ட் மாநிலத்திலும், போஸ்கோ நிறுவனம் ஒரிசாவிலும் தொழிற்சாலைஅமைக்க விரும்புகின்றன. நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட இடையூறு காரணமாக ஆர்செலர் மிட்டல் மற்றும் போஸ்கோ ஆகிய நிறுவனங்கள் வேறு மாநிலங்களில் களமிறங்கவும் தயாராக உள்ளன.
இந்நிலையில், நிலக்கரி, இரும்புத் தாது போன்ற மூலப்பொருள்கள் மற்றும் இடுபொருள்கள் கிடைக்கும் இடத்தில்தான் உருக்கு தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கனிம வளம் உள்ள பகுதியிலிருந்து ஒரு தொழிற்சாலையை 50&60 கிலோ மீட்டர் தொலைவில் கூட அமைத்துக் கொள்ளலாம் என அதுல் சதுர்வேதி குறிப்பிட்டுள்ளார்.
சென்ற 2008&ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது

இணைத்தல் நடவடிக்கைகள் மதிப்பு 50% சரிவு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார பின்னடைவு, இந்திய நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், நடப்பு 2009&ஆம் ஆண்டில், இதுவரையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நிறுவனங்களின் இணைத்தல், கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் மற்றும் தனியார் பங்கு முதலீடுகளின் மதிப்பில் 50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஒப்பந்தங்கள்
சென்ற 2008&ஆம் ஆண்டில், இந்தியாவில் 4,154 கோடி டாலர் (ரூ.1,95,238 கோடி) மதிப்பிற்கு இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் ஒப்பந்தங்கள், தனியார் பங்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. இவை, நடப்பு 2009&ஆம் ஆண்டில், இதுவரையிலான காலத்தில், 50 சதவீதம் சரிவடைந்து 2,120 கோடி டாலராக (ரூ.99,640 கோடி) குறைந்துள்ளது. கடந்த 2007&ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் 69 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
இணைத்தல் மற்றும் கையகப்படுத்துல் நடவடிக்கைகளில் இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்துதல், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இணைத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், உள்நாட்டு நிறுவனங்களுக்குள் மேற்கொள்ளப்படும் இணைப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.
வெளிநாடுகளில்...
இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொண்ட இணைத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு 92 சதவீதம் சரிவடைந்து 1,319 கோடி டாலரிலிருந்து 112 கோடி டாலராக குறைந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்ட இணைத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு 75 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுதான் காரணமாகும்.
அதேசமயம், உள்நாட்டில் நடைபெற்றுள்ள இணைத்தல் மற்றும் கையகப்படுத்துல் நடவடிக்கைகளின் மதிப்பு 521 கோடி டாலரிலிருந்து (ரூ.24,487 கோடி) 580 கோடி டாலராக (ரூ.27,250 கோடி) உயர்ந்துள்ளது. இது, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. இதே காலத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடுகளும் 1,117 கோடி டாலராக குறைந்துள்ளது.
நிறுவனங்கள், புதிதாக ஒரு துறையில் களமிறங்குவதற்குப் பதிலாக, அத்துறையில் ஏற்கனவே ஈடுபட்டு வரும் மற்றொரு நிறுவனத்தை கையகப்படுத்துவதன் வாயிலாக, அத்துறையில் எளிதாக காலூன்ற முடியும். தற்போது, உலக அளவில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதால், வரும் 2010&ஆம் ஆண்டில், இந்த நடவடிக்கைகளில் எழுச்சி ஏற்படும் என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
அன்னியச் செலாவணி கொள்கையில் மாற்றம் வரலாம்



ஜனவரி 14-ல் 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்!

டெல்லி: 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14-ம் தேதி நடக்கும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசா அறிவித்துள்ளார்.

3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் விடுவதன் மூலம் ரூ 25000 கோடியைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தில் தரப்படும். ஏலத் தொகை மற்றும் ஏலத் தேதியை முடிவு செய்ய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு (eGoM) நியமிக்கப்பட்டுள்ளது.

தேச நலன் கருதி எல்லைப்புறங்களில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை செயலிழக்கச் செய்ய கால அவகாசம் கோரியிருந்தது பாதுகாப்பு அமைச்சகம்.

இதனால் இந்த ஆண்டு நடப்பதாக இருந்த 3 ஜி ஏலம் 2010-க்கு தள்ளிப் போனது.

இந்த நிலையில் 3 ஜி ஏலத் தேதி தொடர்பாக அமைச்சர்கள் கூட்டம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்தது. ஒருமணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் முடிவில் நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் ராசா, திட்டமிட்டபடி ஜனவரி 14-ம் தேதி ஏலம் நடக்கும் என்றும், அதற்குள் பாதுகாப்புத் துறை ஸ்பெக்ட்ரம் அலைகளை எல்லைப் புறங்களில் அப்புறப்படுத்திவிடுவதாக உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏலத்தில் வெல்லும் 4 நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

பண்டிகை காலம் இது; ஜனவரியில் பார்ப்போம்

ஞாயிறு, 20 டிசம்பர், 2009




கடந்த வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில், சந்தை இறக்கத்தையே சந்தித்தது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், வருடக் கடைசி என்பது குறிப்பிடத்தக்கது. வியாழனும், வெள்ளியும் சந்தை ஏன் இவ்வளவு குறைந்தது? பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை கொண்டு வரும்; அந்த அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பில், சந்தை கரைந்தது. வெள்ளியன்று, இறுதியாக மும்பை பங்குச் சந்தை 174 புள்ளிகள் குறைந்து, 16,719 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 54 புள்ளிகள் குறைந்து 4,987 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. வங்கிப் பங்குகள் அதிகளவில் நஷ்டத்தைச் சந்தித்தன.

அட்வான்ஸ் டாக்ஸ்: சில செக்டர்களைத் தவிர, அட்வான்ஸ் டாக்ஸ் நம்பர்கள் நன்றாகவே உள்ளன. குறிப்பாக, வங்கித் துறையில் எதிர்பார்க்கப்பட்டது தான். வரிகள் நன்றாகச் செலுத்தப் பட்டிருப்பதால், சந்தை மேலே செல்லும் வாய்ப்பு உள்ளது. வரும் காலாண்டு முடிவுகளை கவனமாக பார்த்து, பின்னர் பங்குகளை வாங்க வேண்டும்.

சடுதியில் வந்த சந்தை நேரம் மாற்றம்: மும்பை பங்குச் சந்தை 10 நிமிடம் முன்னதாக துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று மாலை 9 மணிக்கு துவங்கும் என தேசிய பங்குச் சந்தை அறிவித்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையும் 9 மணி முதல் துவங்கும் என அறிவித்தது. இதனால், இனி, காலை உணவு சாப்பிடும் முன், முதலீட்டாளர்கள் 'டிவி' பெட்டி முன் உட்கார்ந்து விடுவர்.

ஜனவரி 4ம் தேதி முதல் துவங்கும் கொண்டாட்டங்கள்: உலகம் முழுவதும் பண்டிகை கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளதால், சந்தையில் சுரத்தே இல்லை. இனி, ஜனவரி முதல் வாரத்தில் தான், பெரிய அளவு ஈடுபாடு முதலீட்டாளர்களுக்கு வரும். சந்தையில் நல்ல பங்குகள் விலை குறையும் பட்சத்தில், சிறிது வாங்குவதில் தவறில்லை.

உணவுப் பொருட்களின் பணவீக்கம்: கடந்த வாரம் 19.05 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் பணவீக்கம், இந்த வாரம் 19.95 சதவீதமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சி தரக்கூடியது.

வரும் வாரம் எப்படி இருக்கும்? :பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. சந்தை இன்னும் சிறிது குறையலாம். முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. மறுபடியும் மேலே செல்லும். தேசிய பங்குச் சந்தை 4,900 புள்ளியைத் தொடும் போது, சாதகமாக இருக்கும்.

-சேதுராமன் சாத்தப்பன்-

டெபிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு
இந்தியாவில் சர்வதேச தரம் வாய்ந்த 5 ஓட்டல்கள்: ஹையட் முடிவு

சிகாகோ: இந்தியாவில் சர்வதேச தரம் வாய்ந்த ஐந்து ஓட்டல்களை நிறுவன இருப்பதாக ‌ஹையட் ஹோட்டல்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.பி., ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இருப்பதாகவும், அந்நிறுவனத்துடன் கூட்டு சேர்வதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் ஐந்து சர்வதேச தரம் வாய்ந்த ஓட்டல்களை அமைப்பதே என்றும் ஹையட் ஓட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் தனது நிறுவனத்தின் தரத்தை உயர்த்தும் முயற்சியில் ஹையட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் சர்வதேச தரம் வாய்ந்த ஓட்டல்களை அமைக்க ஹையட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2018ல் காசோலைக்கு கு‌ட்பை: பிரிட்டன் அரசு
லண்டன்: வரும் 2018ம் ஆண்டு முதல், காசோலை பயன்பாடு முற்றிலும் நிறுத்தப் படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு முறைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக காசோலை பயன்படுத்தும் முறை சமீப காலமாக குறைந்து வருகிறது. மேலும், பணம் செலுத்தும் முறைகளில் நவீன மற்றும் திறன் மிக்க வழிமுறைகளை கையாள ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. இதனால், காசோலை பயன்படுத்தும் முறை 2018ம் ஆண்டில் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விடும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி பால் ஸ்மீ கூறுகையில், '21ம் நூற்றாண்டில் வளர்ந்துள்ள தொழில்நுட்ப சூழலில் பேப்பர் மூலம் பணம் செலுத்தும் முறையை விட பல திறன்மிக்க வசதிகள் சாத்தியப்படும் என்று கூறினார். மேலும், பொருளாதாரத் துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு வாய்ப்பு' என்றும் அவர் கூறினார்

டாடா மோட்டார்ஸ் சலுகை அறிவிப்பு

சென்னை: டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 'நவ் ஆர் நெவர்' என்ற சலுகையை அறிவித்துள்ளது. <ணீ>இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி: டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இதுவரை இல்லாத சிறந்த சலுகையாக இதை, தன் வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது. இந்த சலுகை, இம்மாதத்தில் கார் <ணீ>வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். இந்த சலுகையின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவன வாடிக்கையாளர்கள், 'விஸ்டா' மற்றும் 'இண்டிகா சிஎஸ்' ஆகியவற்றின் மீது 27 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். 'இண்டிகா'வில், 30 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த சேமிப்பை தவிர, வாடிக்கையாளர்கள் ஆன்-லைன் போட்டிகளில் கலந்து கொண்டு, ஒரு லட்சம் ரூபாய் வரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. இதுவரை 21 வாடிக்கையாளர்கள், ஒரு லட்சம் ரூபாய் வென்றுள்ளனர். இச்சலுகை வரும் 22ம் தேதி வரை மட்டுமே. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தனிநபர் உற்பத்தி அதிகமுள்ள நாடு: லீச்டென்ஸ்டீன் முதலிடம்
பெர்லின்: தனிநபர் உற்பத்தி அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் குட்டி நாடான லீச்டென்ஸ்டீன் முதல் இடத்தை பிடித்துள்ளது. உலகின் டாப் 10 தனிநபர் உற்பத்தி கொண்ட நாடுகள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே உள்ள லீச்டென்ஸ்டீன் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு மக்கள் தொகை குறைவாகாவும், தொழிற்சாலைகள் அதிகமாகும் இடம் பிடித்துள்ளன. இதனால், அங்கு வாழும் மக்களின் சராசரி ஆண்டு வருமானம் 55.46 லட்சம் ரூபாயாக உள்ளது. 48.64 லட்சம் ரூபாய் தனிநபர் உற்பத்தியுடன் கத்தார் இரண்டாவது இடத்திலும், ஐரோப்பிய தன்னாட்சி நகரான லக்சம்பெர்க் 3வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில், அமெரிக்காவுக்கு 10வது இடமே கிடைத்துள்ளது.

உலகின் தலைசிறந்த ‌செயல்அதிகாரிகள் பட்டியலில் முகேஷ்

புதுடில்லி : உலகின் தலைசிறந்த செயல்அதிகாரிகள் பட்டியலில் முகேஷ் அம்பானி இடம் பெற்றுள்ளார்.ஹார்வர்டு பல்கலைகழகத்தின் ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ இதழ் உலகின் தலைசிறந்த செயல்அதிகாரிகள் பட்டியலை தயாரித்துள்ளது. இதில் இந்திய பங்குச் சந்தைகளில் அதிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி 5ம் இடத்தை பிடித்துள்ளார். பங்குச் சந்தையில் பதிவு பெற்றுள்ள 2000 கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள் இந்தப் பட்டியலுக்காக ஆய்வு செய்யப்பட்டனர். 33 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் தலைமை செயல் அதிகாரிகளின் செயல்திறன் குறித்து மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வில், 50 பேர் உலகின் மிகச் சிறந்த தலைமை செயல் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இதில், இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் முகேஷ் அம்பொனி ஆவார். ‌தலைமை செயல் அதிகாரிகளின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு எந்த அளவிற்கு ஆதாயம் அளித்துள்ளன என்பதன் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்

வயர்லெஸ் பிராட்பேண்ட் உபயோகத்தை அதிகரிக்க திட்டம்

சென்னை: சென்னையில் யுனிவர்செல் நிறுவனத்திற்கு சொந்தமான 42 கடைகளில் ரிலையன்ஸ் பிராட் பேண்ட் நெட் கனெக்ட் சேவையை அளிக்கவுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், தென்னிந்தியாவில் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை விற்பனை செய்யும் யுனிவர்செல் நிறுவனமும் இணைந்து, சென்னையில் வயர்லெஸ் பிராட்பேண்ட் உபயோகத்தை அதிகரிக்கும் திட்டத்தின் ஒப்பந்தத்தில் கையெழுதிட்டுள்ளது. இது குறித்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தமிழகம், கேரள வட்டாரத்தின் பிராந்திய தலைவர் சோமசேகர், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில், பிராட்பேண்ட் உபயோகிப்பதை அதிகரிக்க வேண்டும் என்ற நிறுவன இலக்கை எட்டுவதற்காக, மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளில், இதுவும் ஒன்று. பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்ற அரசின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் நோக்கத்தில், இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ரிலையன்ஸ் நெட் கனெக்ட் பிராட்பேண்ட் பிளஸ் சேவையானது இன்டர்நெட் வர்த்தகத்தில் பிராட் பேண்ட் உபயோகிப்பை மேலும் அதிகரிக்க உதவும். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில், இணைய தள உபயோகிப்பை அதிகரிக்கும். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பிராட் பேண்ட் நுகர்வை அதிகரிக்கும் வகையில் அனைத்துப் பகுதியிலும் விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு கம்பியில்லா இன்டர்நெட் இணைப்பை உடனடியாக அளிக்க முடிகிறது. சென்னையில் உள்ளவர்கள் இத்தகைய கம்பியில்லா இணைப்பை உடனடியாகப் பெற முடியும்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அடுத்த தலைமுறையினருக்காக ஒருங்கிணைந்த டிஜிட்டல் இணைப்பை அளிக்க ஒரு லட்சத்து 90 ஆயிரம் கி.மீ., தூரத்துக்கு கண்ணாடியிழை கேபிளை பதித்துள்ளது. இந்த இணைப்பு மூலம் தொலைத் தகவல் தொடர்புத் துறையில் சர்வதேச தரத்திலான சேவையை அளிக்க முடியும். இவ்வாறு சோமசேகர் கூறினார்.

கருவேப்பிலை விலை இனிக்கிறது : விவசாயிகள் முகத்தில் மறுமலர்ச்சி


பல்லடம்: மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் இருந்து கருவேப்பிலை வரத்து குறைவால், திருப்பூர், கோவை மார்க்கெட்டில் கிலோவுக்கு ஐந்து ரூபாய் கொள்முதல் விலை அதிகரித்துள்ளது; பல்லடம் பகுதி கருவேப்பிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல்லடம் பகுதியில் சித்தம்பலம், ஆலூத்துப்பாளையம், வெங்கிட்டாபுரம், காளிவேலம்பட்டி, கரசமடை, எலவந்தி, சுக்கம்பாளையம் உட்பட பல இடங்களில், 300 ஏக்கர் பரப்பளவில், கருவேப்பிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கருவேப்பிலை பறிப்புக்கு பின், திருப்பூர் காய்கனி மார்க்கெட், உழவர் சந்தை, கோவை மற்றும் கேரள பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை பகுதிக்கு கருவேப்பிலை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மலைப்பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் கருவேப்பிலை சாகுபடி செய்யப்பட்ட பல இடங்களில், தற்போது நீடித்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, கருவேப்பிலைகளில் புள்ளிநோய் தாக்கப்பட்டு, செடியில் இருந்து உதிர்ந்து விளைச்சல் குறைந்துள்ளது. இதன்காரணமாக, மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் இருந்து திருப்பூர், கோவைக்கு வரும் கருவேப்பிலை வரத்து, கடந்த 10 நாட்களாக கணிசமாக சரிந்துள்ளது. மேட்டுப்பாளையம், காரமடையை ஒப்பிடும் வகையில், பல்லடம் பகுதியில் பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாத காரணத்தால், புள்ளிநோய் மற்றும் பனிக்கருகலில், கருவேப்பிலை பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கவில்லை. மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் இருந்து திருப்பூர், கோவை பகுதிக்கு கருவேப்பிலை வரத்து சரிந்ததால், திருப்பூர், கோவை மார்க்கெட்டுகளில் பல்லடம் பகுதியில் உள்ள கருவேப்பிலைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு முன், பல்லடம் பகுதி கருவேப்பிலை சாகுபடி விவசாயிகளிடம் ஒரு கிலோ கருவேப்பிலை ஒன்பது ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது; தற்போது கிலோவுக்கு ஐந்து ரூபாய் அதிகரித்து, 14 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இரண்டு வாரத்தில் கருவேப்பிலை கொள்முதல் விலை 60 சதவீதம் உயர்வு, பல்லடம் பகுதியில் கருவேப்பிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை மகிழ்ச்சியில்

செயில் நிறுவனம்


20% பங்குகளை வெளியிட திட்டம்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
மத்திய உருக்கு அமைச்சம் Ôசெயில்Õ நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைக் கோர திட்டமிட்டுள்ளது.
வரைவு மனு
அடுத்த 3&4 வாரங்களுக்குள் மத்திய அமைச்சரவைக்கு நிறுவனத்தின் கோரிக்கை அனுப்பி வைக்கப்படும் என உருக்கு துறை செயலாளர் அதுல் சதுர்வேதி தெரிவித்தார். இது தொடர்பான வரைவு மனு ஒன்றுக்கு உருக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரைவு மனு பல்வேறு அமைச்சகங்களின் கருத்துக்களை அறியும் வகையில் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Ôசெயில்Õ நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில், மத்திய அரசு இந்நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் 10 சதவீதமும், நிறுவனத்தின் புதிய பங்குகள் 10 சதவீதமும் வெளியிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. அதாவது, இரண்டு கட்டங்களில் முறையே மத்திய அரசு மற்றும் செயில் நிறுவனத்தின் தலா 5 சதவீத பங்குகள் வெளியிடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நடப்பு நிதி ஆண்டிலேயே பங்கு வெளியீட்டினை மேற்கொள்ள முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக நிறுவனத்தின் பங்கு வெளியீட்டை அடுத்த நிதி ஆண்டில்தான் மேற்கொள்ள இயலும் என உருக்கு துறை செயலாளர் அதுல் சதுர்வேதி கூறினார்.
விரிவாக்க பணிகள்
Ôசெயில்Õ நிறுவனம் ரூ.70,000 கோடி செலவில் பெரிய அளவில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான பகுதி நிதியை பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்ட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. Ôசெயில்Õ நிறுவனப் பங்கு ஒன்றின் தற்போதைய சந்தை விலை அடிப்படையில், இரண்டாவது பங்கு வெளியீடு வாயிலாக இந்நிறுவனம் சுமார் ரூ.18,000 கோடி திரட்டிக் கொள்ள இயலும்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில்


விளைபொருள் மீதான முன்பேர வர்த்தகம் தடை செய்யப்படுமா?


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
அத்தியாவசிய உணவு பொருள்கள் விலை, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் உயர்ந்துள்ளது. இதனையடுத்து, விளைபொருள்கள் மீதான முன்பேர வர்த்தகம் தடை செய்யப்படலாம் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரிசி & கோதுமை
கடந்த 2007&ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருந்த இடதுசாரிகளின் வற்புறுத்தலால், அரிசி, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் உளுந்து மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள மத்திய அரசு தடை விதித்தது. இதன் பிறகு, சர்க்கரை உள்ளிட்ட மேலும் பல பொருள்கள் மீதும் முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்ற நவம்பர் மாதத்தில், அனைத்து பொருள்களுக்கான பணவீக்க விகிதம் (4.78 சதவீதம்), அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதால், அனைத்து விளைபொருள்கள் மீதும் முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இயற்கை ரப்பர் விலை, வழக்கத்திற்கு மாறாக மிகவும் உயர்ந்துள்ளது. இதற்கு, ஊக அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முன்பேர வர்த்தகமே காரணம் என்று மோட்டார் வாகன டயர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
உருளைக்கிழங்கு
விலைவாசி உயர்ந்து வருவதால், பொதுமக்கள், அவர்களின் செலவிடும் வருவாயில் 50 சதவீதத்தை உணவு பொருள்களுக்காக ஒதுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. சென்ற ஓர் ஆண்டில், உருளைக்கிழங்கு விலை இரண்டு மடங்கிற்கு மேல், அதாவது 136 சதவீதம் அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் (40 சதவீதம்), வெங்காயம் (15.4 சதவீதம்), கோதுமை (14 சதவீதம்), பால் (13.6 சதவீதம்), அரிசி (12.7 சதவீதம்) பழங்கள் (11 சதவீதம்) விலையும் உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, டிசம்பர் 5&ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், உணவு பொருள்களுக்கான பணவீக்க விகிதம் வரலாறு காணாத வகையில் 20 சதவீதத்தை எட்டி உள்ளது.
பருவமழை
இவ்வாறு விலை உயர்ந்து வருவதற்கு, போதிய அளவு மழையின்றி, உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்துள்ளதும் காரணமாகும். சென்ற நிதி ஆண்டில், 10 கோடி டன்னாக இருந்த அரிசி உற்பத்தி, நடப்பு நிதி ஆண்டில் 8.45 கோடி டன்னாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், ஆண்டுக்கு 1.20 கோடி டன் சமையல் எண்ணெய் தேவைப்படுகிறது. அதேசமயம், உற்பத்தி 65 லட்சம் டன் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. ஓர் ஆண்டிற்கான சர்க்கரை பயன்பாடு 2.35 கோடி டன்னாக உள்ளது. அதேசமயம், நடப்பு சர்க்கரை பருவத்தில் (அக்டோபர் & செப்டம்பர்) 1.60 கோடி டன் மட்டுமே சர்க்கரை உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 75 லட்சம் டன் சர்க்கரைக்கு பற்றாக்குறை ஏற்படும் என தெரிகிறது.
பயன்பாடு
உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து வரும் நிலையில், பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கு மக்கள் தொகை உயர்ந்து வருவது மட்டும் காரணம் அல்ல. தனிநபர் செலவிடும் வருவாயில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியும் முக்கிய காரணம் என்று பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 2003&04&ஆம் நிதி ஆண்டில், ஒரு ரூபாய்க்கு 7.70 கிராம் உணவு தானியம் கிடைத்தது. இது, தற்போது பாதியாக, அதாவது 3.7 கிராமாக சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உணவு பொருள்கள் விலை உயர்வுக்கு, உற்பத்தி குறைவுதான் காரணம் என்று கூறப்பட்டாலும், முன்பேர வர்த்தகமும் ஒரு காரணமாக உள்ளது என்று பல பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது, விளைபொருள் முன்பேர வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கொள்கையில் சமாஜ்வாடி கட்சியும், இடதுசாரி கட்சிகளும் மிகவும் உறுதியாக இருக்கும் என்று தெரிகிறது.
நடப்பு சந்தைகளில் உணவு பொருள்கள் விலை உயர்ந்து வருவதற்கும், முன்பேர வர்த்தகத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஒரு சில பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சான்றாக, அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, சர்க்கரை ஆகியவற்றின் மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இவற்றின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில், உளுந்து, துவரம் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலை முறையே 50 சதவீதம், 64.5 சதவீதம் மற்றும் 54 சதவீதம் உயர்ந்துள்ளது.
விலைவாசி உயர்வுக்கும், முன்பேர வர்த்தகத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள, திட்டக்குழு உறுப்பினர் அபிஜித் சென் தலைமையிலான குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு அதன் அறிக்கையில், Òமுன்பேர வர்த்தகத்திற்கும், விலைவாசி உயர்வுக்கும் தொடர்பு இருப்பதாக உறுதியாக தெரியவில்லை. விலைவாசி உயர்வுக்கு பல்வேறு அடிப்படை அம்சங்கள் காரணமாக அமைந்துள்ளனÓ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு அமைப்புகள்
நம் நாட்டில், தேசிய அளவில் செயல்படும் என்.சி.டீ.இ.எக்ஸ்., என்.எம்.சி.இ., எம்.சி.எக்ஸ். மற்றும் அண்மையில் புதிதாக தொடங்கப்பட்ட ஐ.சி.இ.எக்ஸ். ஆகிய நான்கு முன்பேர சந்தை அமைப்புகளில் வேளாண் விளைபொருள்கள், உலோகங்கள், எரிபொருள் மீது முன்பேர வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
உள்நாட்டில், தேவைப்பாட்டிற்கு ஏற்ப உணவு பொருள்கள் கிடைக்கும் வகையில், அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் வகையிலும், உணவு பொருள்கள் பதுக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது


ஓ.என்.ஜி.சி.


180 சதவீத டிவிடெண்டு


ஓ.என்.ஜி.சி. நிறுவனம், எண்ணெய், எரிவாயு துரப்பணம் மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் நடப்பு நிதி ஆண்டுக்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 180 சதவீத டிவிடெண்டை அறிவித்துள்ளது. அதாவது, ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.18 டிவிடெண்டு கிடைக்கும்.
இதனையடுத்து நடப்பு நிதி ஆண்டில் இந்நிறுவனம் டிவிடெண்டாக மொத்தம் ரூ.3,850 கோடியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற 2008&09&ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு, 320 சதவீத டிவிடெண்டு வழங்கியது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குஜராத் மாநிலம் கட்ச் கடல் பகுதியில் ஜி.கே.28&1 கிணற்றில் இயற்கை எரிவாயு வளம் உள்ளதை கண்டறிந்துள்ளது. 1,550 மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்பட்டுள்ள இந்த கிணற்றில் சோதனை அடிப்படையிலான உற்பத்தியில் நாள் ஒன்றுக்கு 1.20 லட்சம் கன மீட்டர் எரிவாயு கிடைத்ததாக ஓ.என்.ஜி.சி. தெரிவித்துள்ளது.

Indian stock markets: mutual funds, Sensex, Nifty

வெள்ளி, 18 டிசம்பர், 2009

Indian stock markets: mutual funds, Sensex, Nifty

அடுத்த மாதம் முதல் 9 மணிக்கே பங்குச் சந்தை திறப்பு



மும்பை: வரும் ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் முதல் காலை 9 மணிக்கே மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை தொடங்கும் என செபி அறிவித்துள்ளது.

பங்குச் சந்தையின் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என சிலரும், அதிகரிக்கக் கூடாது என்று சிலரும் கோரி்க்கை விடுத்துள்ளனர். இதுபற்றி ஒரு சர்வேயும் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பங்குச் சந்தையின் வழக்கமான நேரமான காலை 9.55 முதல் மாலை 3.30 என்பதை, இனி காலை 9.44 - மாலை 3.30 என மாற்றுவதாக செபி நேற்று அறிவித்தது.

ஆனால் இந்த அறிவிப்பு எந்த விளைவையும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. 10 நிமிடம் அதிகரிப்பதால் பலன் ஒன்றும் இருக்காது என்று பங்குத் தரகர்கள் தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தை என்எஸ்இ, தனது வர்த்தக நேரத்தை காலை 9 மணிக்கு துவங்குமாறு மாற்றியது.

இதனால் மும்பை சந்தையை விட 55 நிமிடம் முன்கூட்டியே என்எஸ்இ துவங்கும் நிலை.

இதன்படி இனி காலை 9 மணிக்கே தேசிய பங்குச் சநதையிலும், மும்பை பங்குச் சந்தையிலும் வர்த்தகம் துவங்கிவிடும். மாலை 3.30 மணிக்கு முடியும்.

இந்த நேரமாற்றத்தை நாளை (வெள்ளிக்கிழமை) முதலே அமல்படுத்த உள்ளதாக செபி அறிவித்திருந்தது. ஆனால் இதை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்து செபி தற்போது உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, 2010ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை காலை 9 மணிக்கு பணிகளை துவக்கும்.

ஆசியாவின் இதர பங்குச் சந்தை நேரத்துக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செபி அறிவித்துள்ளது.





நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்தில்
செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.10 கோடி அதிகரிப்பு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவுபுதுடெல்லிநடப்பு ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.எம். செல்போன் சேவையை பெற்ற புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.10 கோடி அதிகரித்துள்ளது. இது, அக்டோபர் மாதத்தில், 1.07 கோடியாக இருந்தது. ஆக, இந்திய செல்போன் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பார்தி ஏர்டெல்வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில், சுனில் மிட்டல் தலைமையின் கீழ் செயல்படும் பார்தி ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், சென்ற நவம்பர் மாதத்தில் 28 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. ஜி.எஸ்.எம். செல்போன் சேவையில் புதிதாக அதிக வாடிக்கையாளர்களை இணைத்ததில், அம்மாதத்தில் இந்நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.வினாடி அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிப்பதில் செல்போன் சேவை நிறுவனங்களுக்கிடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இது, இத்துறை நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சப்பாடு நிலவி வருகிறது. அதேசமயம், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் நிறுவனங்கள் பின்தங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.வோடாபோன் எஸ்ஸார்வோடாபோன் எஸ்ஸார் நிறுவனம், அக்டோபர் மாதத்தில் 29 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேவையில் இணைத்துக் கொண்டது. அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றதில் அம்மாதத்தில், இந்நிறுவனம் முதலிடத்தை பிடித்து இருந்தது. எனினும், நவம்பர் மாதத்தில் இந்நிறுவனம் 27 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று இரண்டாவது இடத்திற்குச் சென்றுள்ளது.செல்போன் சேவை அளிப்பதில், இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, சென்ற நவம்பர் மாதத்தில் 25 லட்சம் அதிகரித்துள்ளது. இந்திய செல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்துள்ளன.இரண்டு தொழில்நுட்பங்கள்சென்ற நவம்பர் மாதத்தில் இணைக்கப்பட்டுள்ள மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த நிறுவனங்கள் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டீ.எம்.ஏ. ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களிலும் சேவை அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.ஜி.எஸ்.எம். மற்றும் சி.டீ.எம்.ஏ. ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களிலும் சேவை பெற்றுள்ள வாடிக்கையாளர்களையும் சேர்த்தால், நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிக வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொண்டதில் டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம் முதலிடத்தில் இருந்தது. அம்மாதத்தில், ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததில் வோடாபோன் இரண்டாவது இடத்திலும், பார்தி ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது இடத்திலும் இருந்தது.ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் ஒரே செல்போன் சாதனத்தில் இதர நிறுவனங்களின் சிம்கார்டை பயன்படுத்தலாம். அதேசமயம். சி.டீ.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் இதர நிறுவனங்களின் சிம்கார்டை பயன்படுத்த இயலாது. செல்போன் சேவை அளிக்கும் நிறுவனத்தின் சிம்கார்டை மட்டுமே பயன்படுத்த முடியும்.கடும் போட்டிவாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் நிறுவனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டி உச்சநிலையை அடைந்து வருகிறது. இதற்குச் சான்றாக, எம்.டி.எஸ். பிராண்டில் செல்போன் சேவையை அளித்து வரும் எஸ்.எஸ்.டி.எல். நிறுவனம், இரண்டு வினாடிக்கு ஒரு காசு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, ஒரு விநாடிக்கு அரை காசு வசூலிக்கும் புரட்சித் திட்டமாகும்.இதன்படி, இந்நிறுவனம், உள்ளூர் அழைப்பில் எந்த நெட்வொர்க்கிற்குள் பேசினாலும் மற்றும் எஸ்.டி.டீ.யில் இந்நிறுவனத்தின் நெட்வொர்க்கிற்குள் பேசினாலும் இரண்டு வினாடிக்கு ஒரு காசு கட்டணம் விதிக்கிறது. இதர நெட்வொர்க்கில் உள்ள வாடிக்கையாளர்களிடம் எஸ்.டி.டீ. அழைப்புகளுக்கு ஒரு வினாடிக்கு ஒரு காசு என்ற அடிப்படையில் கட்டணம் உள்ளது.இந்தியாவில் செல்போன் சேவைத் துறையில் வளமான வாய்ப்பு உள்ளது. இதனால், இத்துறையில் தனியார் முதலீடு அதிகரித்து வருகிறது. கடந்த 2006&07&ஆம் நிதி ஆண்டில் இத்துறையில் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு ரூ.1,05,448 கோடியாக இருந்தது. இது, சென்ற 2008&09&ஆம் நிதி ஆண்டில் ரூ.1,88,499 கோடியாக உயர்ந்துள்ளது.