Nifty 17-08-2010

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

இன்றைய சந்தைகள் எட்டர இறக்கத்துடன் பயணிக்க வாய்ப்பு உண்டு சந்தையின் ஆடுத்த கட்ட நகர்வுகள் நிபிட்டி 4475 கடந்தால் மட்டுமே எட்ட்ரங்களுடன் பயணிக்கலாம் நிபிட்டி கீழ் நிலையில் 5320 உடையத வரை பெரிய சறுக்கல்கள் இருக்காது

STOCKS TO WATCH

RELIANCE
STERLITE
LNT
CENTRAL BANK
IOB
MAH&MAH FIN
TECH MAHINDRA
WIPRO
BHARTHI
WELSPUN COR
MAH LIFE
ULTRA TECH
ACC
JINDAL STEEL
EDUCOMP
REC
LANCO INFRA
MARICO
HUL
IOC
MRPL
BIOCON
CROMPTON GRE
POWER GRID
PFC
GUJARAT STATE PETRO
HERO HONDA
MARUTHI
GMR INF
PIRAMAL HEA
IDBI
MOSERBAER
ISPAT INDUS
REL CAPIT
CAIRN

'நவரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா' (சி.ஐ.எல்.,) நிறுவனம், நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டத்தை இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஒரிசா மாநிலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டம், ஒரிசா மாநிலம் தல்சார் என்ற இடத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இத்திட்டத்தில், 'கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' மற்றும் 'ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ்' என்ற பொதுத் துறை நிறுவனங்களோடு இணைந்து சி.ஐ.எல்., செயல்படத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சி.ஐ.எல்., சேர்மன் எஸ்.பட்டாச்சார்யா கூறியதாவது: தல்சாரில் தற்போது இயங்காமல் இருக்கும் ஆர்.சி.எப்., நிறுவனத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு 'மகாநதி கோல்பீல்ட்ஸ்' நிறுவனம், 50 லட்சம் டன் நிலக்கரியை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. சி.ஐ.எல்., ஏற்கனவே இத்திட்டத்தை பூமிக்கடியில் செயல்படுத்தியது. ஆனால், ரஷ்யாவில் மக்கள் வசிக்காத உள்ளடங்கிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதைப் போல் அல்லாமல், நம் நாட்டில் மக்கள் வசிக்கும் இடங்களிலேயே செயல்படுத்த வேண்டியிருப்பதால், நீர் விரைவில் மாசுபட்டு விடுகிறது. நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் அமோனியம் நைட்ரேட்டிலிருந்து தான் யூரியா உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். தற்போது நிலக்கரித் துறையில் 7 சதவீதம் வரை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பட்டாச்சார்யா தெரிவித்தார். நிலக்கரியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வாயு, தொழிற்சாலைகளுக்குப் பயன்படும்.


இதுவரை நாட்டின் முன்னணி நிறுவனங்களில் முதலிடத்தில் இருந்த அம்பானி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி விட்டு, இப்போது டாடா நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன் சமீபத்திய சந்தை மதிப்பு மூன்று லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி நிறுவனமாக முதலில் ரிலையன்ஸ் நிறுவனம் இருந்தது. அதன் நிறுவனர் திருபாய் அம்பானியின் இறப்புக்கு பின், முகேஷ் மற்றும் அனில் அம்பானிக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இந்த நிறுவனம் இரண்டாக பிரிந்தது.சமீபத்தில் கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு பங்கிடுவது சம்பந்தமாக நடந்த வழக்குக்கு பின், அம்பானி சகோதரர்கள் இணைந்து விட்டனர்.

இந்நிலையில், அம்பானி சகோதரர்களின் தனிப்பட்ட சந்தை மதிப்பை விட, டாடா நிறுவனத்தின் சந்தை மதிப்பு மூன்று லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து முன்னிலையில் உள்ளது. உப்பு முதல் தகவல் தொடர்பு சாதனங்கள் வரை உற்பத்தி செய்யும் டாடா நிறுவனத்துக்கு 30க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன. இந்த 30 நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு தான் சமீபத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் டாடா நிறுவனத்தின் சந்தை மதிப்பு, மூன்று லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயாக தான் இருந்தது. அதற்கடுத்த காலாண்டின் முதல் மாதமான ஜூலையிலேயே அந்நிறுவனத்தின் மதிப்பு மளமளவென மூன்று லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 லட்சத்து 21 ஆயிரத்து 750 கோடியாக உள்ளது. கடந்த காலாண்டில் அவரது ஆர்.ஐ.எல்., மற்றும் ஆர்.ஐ.ஐ.எல்., நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு மூன்று லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போதைய நடப்புக் காலாண்டில் இதில் 37 ஆயிரம் கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளது. அனில் அம்பானி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இருவரது மொத்த சந்தை மதிப்பைக் கூட்டினால் நான்கு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது டாடா நிறுவனத்தை விட 77 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாகும். எனினும், தனிப்பட்ட சந்தை மதிப்பு நிலவரப்படி தற்போது நாட்டின் அதிக சந்தை மதிப்புடைய நிறுவனமாக டாடா குழுமம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்ட பிரிவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. அதேபோல், அனில் அகர்வாலின் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 300 கோடியாக உள்ளது. சுனில் மித்தலின் பாரதி குழுமத்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உள்ளது

கம்ப்யூட்டர் உபகரணங்கள் தயாரிப்பில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், புதிய ரூபாய் குறியீடுடன் கூடிய கீபோர்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : டிவிஎஸ் கோல்ட் பாரத் கீபோர்ட் (சுருக்கமாக டிவிஎஸ் - இ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கீபோர்டின் உதவி கொண்டு எளிதாக புதிய ரூபாய் குறியீடை எளிதாக இடம்பெறச் செய்யலாம் என்றும், 490மிமீ நீளம், 180மிமீ அகலம் மற்றும் 20மிமீ உயரம் கொண்ட இந்த புதிய கீபோர்டு, யுஎஸ்பி மற்றும் பிஎஸ்2 சப்போர்டை பெறும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்ரேடிங் சிஸ்டங்களில் இந்த புதிய கீபோர்டு தங்குதடையின்றி இயங்கும் என்றும், இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட டிவிஎஸ் - இ கீபோர்டின் விலை ரூ. 1,495 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இ‌தன்மூலம், புதிய ரூபாய் குறியீடு கொண்டுள்ள கீபோர்டை வடிவமைத்த முதல் மற்றும் இந்தியாவின் ஒரே நிறுவனம் என்ற பெருமையை டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெறுவதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முனன்ணி ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமான பர்ஸ்வ்நாத் டெவலப்பர்ஸ் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.32 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 129 சதவீதம் (ரூ.14 கோடி) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 118 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.259 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான மாரிகோ, தென்னாப்ரிக்காவின் ஹெல்த்கேர் நிறுவனமான இங்வியை வாங்க திட்டமிட்டுள்ளது. மாரிகோ, மாரிகோ தென்னாப்ரிக்கா (எம்.எஸ்.ஏ.)என்ற பெயரில் 2007ம் ஆண்டு முதல் தென்னாப்ரிக்காவில் ஹோர் கேர் பிராண்டுகள் கெய்வில் மற்றும் பிளாக் சிக் பொருட்களையும், ஹெல்த்கேர் பிராண்ட் ஹெர்குலிஸையும் விற்பனை செய்து வருகிறது. இதனை தொடர்ந்து தென்னாப்ரிக்காவின் ஹெல்த்கேர் நிறுவனமான இங்வியை வாங்க திட்டமிட்டுள்ளது. ரூ. 15 கோடி விற்பனை இலக்கை கொண்டுள்ள இங்வியை வாங்குவதன் மூலம் தென்னாப்ரிக்காவில் குறிப்பிட்ட இடத்தை மாரிகோ பெறமுடியும் என எம்.எஸ்.ஏ. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜான் மேசன் குறிப்பிட்டார்.

இரும்பு, ஸ்டீல், மின்சக்தி, மினரல்ஸ் என பல துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள இந்தியாவின் முன்னணி நிறுவனமான மோனட் குழுமத்தின் ஒர அங்கமான மோனட் இஸ்பத் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், ரூ.72.71 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.72.47 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.438.39 கோடியிலிருந்து ரூ.420.38 கோடியாக குறைந்துள்ளது.

முதலீட்டாளர்களின் வர்த்தக் கணக்குளில் இருந்து பணத்தை புரோக்கர்கள் தவறுதலாக பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு மாதமோ அல்லது காலாண்டிலோ, முதலீட்டாளர்களின் பயன்படுத்தாத பணத்தை திருப்பியளித்து விடவேண்டும் என்று 'செபி' எச்சரித்துள்ளது. முதலீட்டாளர்களின் வர்த்தகக் கணக்குகளில் இருந்து, புரோக்கர்கள், பங்குச் சந்தை நிலவரத்தை பொருத்து முதலீடு செய்வர். ஆனால், முதலீடு செய்தது போக மிச்சமுள்ள பணத்தை தவறுதலாக கையாள்வதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, 'செபி' பங்குச் சந்தை புரோக்கர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களின் தேர்வுப்படி, ஒவ்வொரு மாதமோ அல்லது காலாண்டிலோ, வாடிக்கையாளர்களின் பயன்படுத்தப்படாத பணம் உள்ளிட்ட அவர்களின் மொத்த வர்த்தகக் கணக்கையும் வாடிக்கையாளர்களிடம் கொடுத்து விட வேண்டும். வர்த்தகக் கணக்குடன் கணினி மூலம் இணைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இனி புரோக்கர்கள் மிச்சமுள்ள பணத்தைச் செலுத்தி விட வேண்டும். இ-பேங்கிங் வசதி இல்லாத வாடிக்கையாளர்களுக்கு 'செக்' மூலம் பணத்தை அனுப்பி விட வேண்டும். இதன் மூலம், புரோக்கர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையிலான பரிவர்த்தனையில் வெளிப்படைத் தன்மை ஏற்படும். மேலும் முதலீட்டாளர்களின் பணம் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும்.

இந்தியன் வங்கி, குறுகிய கால, 'மெச்சூரிட்டி' கொண்ட நிரந்தர வைப்புநிதி திட்டத்தில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கான நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில், 'இன்டபுள்' மற்றும் 'இன்டபுள் சீனியர்' என்ற இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியன் வங்கி. அதன்படி, 'இன்டபுள்' திட்டத்தில் வைப்பு நிதி செலுத்தும் பொதுமக்களுக்கு அத்தொகை 108 மாதங்களில் இரண்டு மடங்கு ஆகும். மூத்த குடிமக்களுக்கான 'இன்டபுள் சீனியர்' திட்டத்தில், வைப்பு நிதி 100 மாதங்களில் இரண்டு மடங்கு ஆகும். மற்ற சாதாரண வைப்பு நிதி திட்டங்களுக்கு பொருந்தக் கூடிய அனைத்து விதிகளும் இத்திட்டத்துக்கும் பொருந்தும். அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட 'மெச்சூரிட்டி' காலகட்டத்தில் செலுத்தப்படும் ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட வைப்புத் தொகைக்கு, 7.25 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதம் ஆக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம், இயற்கை எரிவாயு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் புதிய ரக கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில், மாருதி சுசுகி நிறுவனத்தின் இயற்கை எரிவாயு தொழில்நுட்பம் (சி.என்.ஜி.,) மூலம் இயங்கும் கார்களை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிமுகப்படுத்தி வைத்தார். இவ்விழாவில், மாருதி குழும அதிகாரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இயற்கை எரிவாயு தொழில்நுட்பம், மாருதியின் எஸ்.எக்ஸ்.4, எக்கோ, வேகன் ஆர், எஸ்டிலோ மற்றும் ஆல்டோ ஆகிய கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகைக் கார் இன்ஜின்களில் 'இன்டெலிஜன்ட்- கேஸ் போர்ட் இன்ஜெக்ஷன்' என்ற புதிய தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்

மத்திய அரசின், 'நவரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா' (சி.ஐ.எல்.,) நிறுவனம், நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டத்தை இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஒரிசா மாநிலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டம், ஒரிசா மாநிலம் தல்சார் என்ற இடத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இத்திட்டத்தில், 'கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' மற்றும் 'ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ்' என்ற பொதுத் துறை நிறுவனங்களோடு இணைந்து சி.ஐ.எல்., செயல்படத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சி.ஐ.எல்., சேர்மன் எஸ்.பட்டாச்சார்யா கூறியதாவது: தல்சாரில் தற்போது இயங்காமல் இருக்கும் ஆர்.சி.எப்., நிறுவனத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு 'மகாநதி கோல்பீல்ட்ஸ்' நிறுவனம், 50 லட்சம் டன் நிலக்கரியை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. சி.ஐ.எல்., ஏற்கனவே இத்திட்டத்தை பூமிக்கடியில் செயல்படுத்தியது. ஆனால், ரஷ்யாவில் மக்கள் வசிக்காத உள்ளடங்கிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதைப் போல் அல்லாமல், நம் நாட்டில் மக்கள் வசிக்கும் இடங்களிலேயே செயல்படுத்த வேண்டியிருப்பதால், நீர் விரைவில் மாசுபட்டு விடுகிறது. நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் அமோனியம் நைட்ரேட்டிலிருந்து தான் யூரியா உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். தற்போது நிலக்கரித் துறையில் 7 சதவீதம் வரை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பட்டாச்சார்யா தெரிவித்தார். நிலக்கரியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வாயு, தொழிற்சாலைகளுக்குப் பயன்படும்.
HAPPY TRADING
BULLMARKETINDIAA