Nifty 17-06-2010

வியாழன், 17 ஜூன், 2010


திங்கள் 273 புள்ளிகள், செவ்வாய் 74 புள்ளிகள் மற்றும் புதன் 50 புள்ளிகள் என தொடர்ந்து மூன்று நாட்களும் 400 புள்ளிகள் வரை ஏறி முடிந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை, 50 புள்ளிகள் கூடி, 17,462 புள்ளிகளு டனும், தேசிய பங்குச் சந்தை, 11 புள்ளிகள் கூடி, 5,233 புள்ளிகளுடனும் முடிந்தது.

பணவீக்கம் குறையும்: திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா, 'இரண்டு வாரங்களில் பணவீக்கம் குறைய ஆரம்பிக்கும்' எனக் கூறியுள்ளார். இது, சந்தையை இன்னும் பலப்படுத்த உதவும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், பணவீக்கம் 5 சதவீதமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு வாரங்களில் பணவீக்கம் குறையாத பட்சத்தில், ஜூலையில், ரிசர்வ் வங்கியின், 'மானிடரி பாலிசி'யில், 'ரேட்' கூட்டப்படலாம்.


உரிமைப் பங்குகள்: சென்ட்ரல் வங்கி, உரிமைப் பங்குகளை, அக்டோபர் முதல் டிசம்பருக்குள் வெளியிடும் என தெரிவித்துள்ளது. புதிய வெளியீடு வராமல், தன் பங்குதாரர்களிடமிருந்தே பணம் திரட்ட முடிவு செய்துள்ளது.


புதிய வெளியீடுகள்: இந்தியாவின் நிலக்கரி சுரங்கங்களின் அதிபதியும், அரசு நிறுவனமுமான கோல் இந்தியாவில், 10 சதவீதம் மற்றும் இந்துஸ்தான் காப்பர் கம்பெனியில் 20 சதவீதமும் பொதுமக்களுக்கு விற்கலாம் என்ற செய்தி வந்ததை தொடர்ந்து, சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அரசு நிறுவன பங்குகள் விலை, ஒரேயடியாக ஏறின. குறிப்பாக, ஒரு பங்கு, 32 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விற்கப்படும் எம்.எம்.டி.சி., அன்றைய தினம், 20 சதவீதம் வரை மேலே சென்றது.


பவரில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்:அண்ணன் - தம்பி சச்சரவுகள் முடிவுக்கு வந்து, சமரசம் ஏற்பட்டிருப்பதாலும், மேலும் ஒரு நிறுவனம் பெய்யும் வியாபாரத்தை, இன்னொரு நிறுவனம் செய்யக் கூடாது என்றிருந்த ஷரத்துக்கள் தற்போது நீக்கப்பட்டு விட்டதாலும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், தற்போது மூன்று பெரிய மின் திட்டங்களை எடுக்க, ஏலம் செய்யவுள்ளது. சந்தையில் இருவரது நிறுவன பங்குகளும், சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றன.


விப்ரோ வழங்கிய போனஸ்: விப்ரோ வழங்கிய 2:3 போனசுக்கு, நேற்று நல்ல நாளாக இருந்தது. இது போல பல போனசுகளை வழங்கியுள்ள விப்ரோ, முதலீட்டாளர்களுக்கு எப்போதும் ஒரு வரப்பிரசாதம் தான். நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கோடிகளை வழங்கிய நிறுவனங்களில், இதுவும் ஒன்று.


வரும் நாட்கள் எப்படி இருக்கும்? மழையில், சந்தை சிரிக்கிறது. ஐரோப்பாவும், பெரிய பயமுறுத்தல்கள் இல்லாமல் இருக்கிறது. ஆகவே நாமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரம் இது. சந்தையின் இறக்கங்களில் முதலீடு செய்து ஏற்றங்களில் அமைதியாக இருக்கலாம்.


சேதுராமன் சாத்தப்பன்-

நேற்றய சந்தைகள் நிபிட்டி 20 புள்ளிகளுக்குள் உடடடி கொண்டிருப்பதை பார்த்திருபிர்கள் சில முக்கிய பங்குகள் எட்ட்ரம் இருந்தும் காளைகளால் எட்ட்ரத்தை கொண்டு செல்ல இயலவில்லை காளைகள் சற்று களைபாரியுள்ளன .சிறிது இறக்கத்திற்கு பின்பே காளைகள் எட்ட்ரத்தை கொண்டு செல்லும் ஆகவே இன்றைய சந்தையில் சிறிது தோய்வே காணப்படும் நிபிட்டி 5200 என்ற நிலை வரை கிழ இறங்கி வரலாம் நிபிட்டி 5185 -5165 ஒரு சப்போர்ட் லெவல் இந்த நிலை உடையாத வரை சந்தைக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது .தம்பியின் பங்குகள் தொடர்ந்து ஏறுவதை கவனித்ருபிர்கள் பதிவில் குற்பிட்ட நாளிலிருந்து RNRL ,RPOWER ,RCAPITAL பங்குகள் எட்ட்ரம் கண்டுள்ளன .ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் முக்கியமான 3 மின் திட்டங்களில் இறங்க முடிவு செய்துள்ளது இதற்கான ஏற்பாடுகளையும் அதற்கான ஏலத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளது ஆகவே இன்னும் சில நாட்களில் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 1200 .00 வரை செல்லும் வாய்புகள் உள்ளன

SBI பங்குகள் OVERVALUE நிலையை அடைந்துள்ளன்ன ஆஹ்வே இந்த பங்குகளை லாபத்தை பதிவு செய்து கொள்ளுங்கள் கிழ நிலையில் திரும்பவும் 2150 வரை வரலாம் .

விப்ரோ நிறுவனம், ஒர்க்போர்ஸ் மேனேஜ்மென்ட் சொலுசன்ஸ் கம்பெனிகளுள் முன்னணி நிறுவனமான க்ரோனாஸ் உடன் கைகோர்க்கிறது. இதுகுறித்து, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளி்த்த விப்ரோ இந்தியா துணை தலைவர் சாய்ரான் ஜெகன்னாதன் கூறுகையில், இந்த இணைப்பின் மூலம் தங்களது நிறுவன சேவைகள் துரிதமாவதோடு, மானுபேக்சரிங், சேவைகள், சுகாதாரத்துறை சில்லரை வர்த்தகம் , பொது மற்றும் தனியார் துறைகளில் பங்களிப்பு உள்ளிட்டவைகளில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆப்கன் தங்க சுரங்கம்

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்கா வின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.

இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் 'ஸ்மெல் பண்ணவர்கள்' அமெரிக்காவின் பாதுகாப்பு த்துறையான பெண்டகன் தான்.

இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.

இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மதத் தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.

ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.

'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்' என்கிறார் ஒரு அதிகாரி. லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.

இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.

ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில்,

"ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.

மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்.

இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?:

அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம்.


இந்த நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சார்ந்திருப்பது... விவசாயத்தையோ, தொழிற்சாலைகளையோ அல்ல. ஓப்பியம் மற்றும் அபின் தயாரிப்பை!

சர்வதேச அளஷவில் கொடிய போதைப் பொருள்கள் அனைத்துக்கும் தாயகமாகத் திகழ்கிறது ஆப்கானிஸ்தான். மேற்கு ஆசியாவின் போதை மருந்து முக்கோணத்தின் மையப் பகுதி ஆப்கானிஸ்தான். இன்று நேற்றல்ல...பண்டைய காலத்திலிருந்தே ஓப்பியம் தயாரிப்பது ஆப்கானிஸ்தானில் குடிசைத் தொழில் மாதிரி.

இதற்கடுத்த வருவாய் ஆதாரம், முன்பு ரஷ்ய உதவி. இப்போது அமெரிக்கா தரும் நிதியுதவி.

இப்படி சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!). ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.

ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.

இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள 'பில்லியன் டாலர் கேள்வி'!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் 'ட்ரில்லியன் டாலர் கேள்வி!'.

ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை. நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.

இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.

இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.

ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.

ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.

ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், 'தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.

கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.

'Unobtanium' என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் 'அவ்தார்' என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். 3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.

இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.


STOCKS TO WATCH

RELIANCE
RELIANCE CAP
RCOM
BHARTHI
BANK OF INDIA
ICICI
HPCL
IOC
ESSAR OIL
GMDC
GUJ NRE COKE
EDUCOMP
CAIRN
STERLITE
BIOCON
RANBAXY
KFA
HUL
HINDALCO
JAIPRAKASH POWE
PETRONET LNG
LIC HOUSING
SUZLON
CROMPRON GRE
REC
POWER GRID
SIEMENS
DIVIS LAB
PIRAMAL
SCI
WELSPON COR
GAIL
NTPC
IVRCL INF
INDIA CEMEN
TATA POWER
TATA CHEM
TORRNT POWER
GREAT OFF SHORE
GLEN MARK PHARMA
ZEE ENER
SUN TV
RNRL
WIPRO
YES BANK
VOLTAS
EXIDE
M&M FIN
OPTO CIR
CIPLA
BAJAJ HOLD

HAPPY TRADING
BULLMARKETINDIAA