Nifty -07-06-2010

திங்கள், 7 ஜூன், 2010

கடந்த வாரம் சந்தைக்கு லாப வாரமாகவே இருந்தது. தவறாது வந்த பருவமழை, நல்ல ஜி.டி.பி., டேட்டா ஆகியவை, சந்தையை மகிழ்ச்சியில் வைத்திருந்தன. ஆதலால், சந்தை வியாழனன்று 280 புள்ளிகளும், வெள்ளியன்று 95 புள்ளிகளும் கூடி முடிந்தது. சந்தையில் இந்த வாரம் ஐரோப்பாவின் சோகம் குறைந்து, சிறிது மகிழ்ச்சி தெரிகிறது. சோகங்கள் சோகங்களாகவே இருந்தால் என்ன ஆவது? இருட்டுக்கு பின் ஒரு வெளிச்சம்.

வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை, 95 புள்ளிகள் கூடி, 17,117 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 25 புள்ளிகள் கூடி, 5,135 புள்ளிகளுடனும் முடிந்தது.

இரண்டாவது வார லாபம் : தொடர்ந்து இரண்டாவது வாரமாக சந்தை, வார லாபத்தில் முடிந்துள்ளது. 16 ஆயிரத்தின் விளிம்புகளைத் தொட்ட சந்தை, தற்போது 17 ஆயிரத்தையும் தாண்டி நிற்கிறது. இந்த வாரத்தில் அதிக லாபமடைந்த பங்குகள், இந்துஸ்தான் காப்பர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், எடுகாம் சொல்யூஷன்ஸ், ஐ.வி.ஆர்.சி.எல்., கோல்கேட் ஆகியவை.



புதிய வெளியீடுகள் : தற்போது சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் கம்பெனிகளில் பல, தங்களது பங்குகளை குறைந்த அளவு விற்று பட்டியலிட்டுள்ளன. சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் கம்பெனிகள், குறைந்த பட்சம் 25 சதவீதம் பங்குகளை சந்தையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற புதிய விதிமுறைகளின் படி, ஒவ்வொரு ஆண்டும், குறைந்த பட்சம் 5 சதவீதம், பொதுமக்களுக்கு விற்க வேண்டும்.

எனவே, பல அரசு கம்பெனிகளும், தனியார் கம்பெனிகளும் அணிவகுத்து நிற்கின்றன. என்.டி.பி.சி., - எம்.எம்.டி.சி., - என்.எம்.டி.சி., இந்தியன் ஆயில், செயில், பவர் கிரிட், இந்துஸ்தான் காப்பர், என்.எச்.பி.சி., பவர் பைனான்ஸ், நேஷனல் அலுமினியம், நெய்வேலி லிக்னைட், ஷிப்பிங் கார்ப்பரேஷன்.

தனியார் கம்பெனிகளில் முக்கியமானவை, விப்ரோ, டி.எல்.எப்., ரிலையன்ஸ் பவர், எஸ்ஸர் ஆயில் போன்றவை.

இது போல 179 கம்பெனிகள் உள்ளது எனவும், அடுத்த ஒரு ஆண்டுக்குள், 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை, புதிய வெளியீடுகள் வரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இது சந்தையை என்ன செய்யும்? : இது போல புதிய வெளியீடுகள் வரும் போது, அந்த வெளியீடுகளில் போடுவதற்காக தங்கள் கையில் இருக்கும் பங்குகளை விற்க, பல முதலீட்டாளர்கள் நினைப்பர். அது போல பலரும் விற்க நினைக்கும் போது, சந்தை கீழே இறங்க வாய்ப்பு உண்டு.


இன்னும் ஒரு ஏற்றம்? : பெட்ரோல், டீசல் மற்றும் பைப்ட் காஸ், கம்ப்ரஸ்டு காஸ் (சி.என்.ஜி.,) ஆகியவை விலை கூடும் என்ற அறிவிப்பே பயமுறுத்துகிறது. இது உணவுப் பொருட்களின் விலையையும், போக்குவரத்து வாகனங்களின் கட்டணங்களையும் கூட்டிச் செல்லும். பர்சுகளின் கனம் குறையும் வாய்ப்புகள் அதிகம். குறைவான சுமை, நிறைவான பயணம் என்ற வாசகங்களை, ரயில்களில் பார்த்திக்கிறோம். பர்சுகளின் கனம் குறையும் போது பயணம் எப்படி நிறைவாகும்?


குறையும் கையிருப்புக்கள் : அரசு வைத்திருக்கும் பாரின் எக்சேஞ்ச் ரிசர்வில், 60 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. ஏன் குறைந்தது? சமீப காலத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்தால், அரசு வைத்திருக்கும் வெளிநாட்டு பணங்களின் மதிப்புகள் குறைந்துள்ளன. அது, இந்த சரிவை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த வாரம் எப்படி இருக்கும்? : சந்தை சிறிது சுதாரித்து உள்ளது. சந்தையில் இந்த நிலை நீடிக்க வேண்டும்.


- சேதுராமன் சாத்தப்பன் -

வங்கிகளில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது என்று சர்வதேச அளவில் தர நிர்ணயம் வழங்கும் சேவையில் ஈடுபட்டு வரும் மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, கடந்த 2008 ம் ஆண்டில் உச்சநிலையை அடைந்தது. இதனால், நிறுவனங்கள் அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளை ஒத்திவைத்தன. வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதையும் குறைத்துக் கொண்டன. இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்திடும் வகையில், பாரத ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது. இதனால், நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்தது.

2008ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து வங்கிகளில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இந்த வட்டி விகிதங்கள் இதுவரை உயர்த்தப்படாமல் உள்ளன. இந்நிலையில், மே 31ம் தேதியிலிருந்து வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெறுவது அதிகரித்து வருகிறது. பாரத ரிசர்வ் வங்கி, வரும் ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யும் கடன் கொள்கை ஆய்வு அறிக்கையில், முக்கிய கடனுக்கான வட்டி விகித்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு வங்கிகள் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்புள்ளது என மூடிஸ் தெரிவித்துள்ளது

தமிழக தொழில்துறையும், மின் வாரியமும் இணைந்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.1125.63 கோடி மதிப்பீட்டில் இணை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும், சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்தவும் திட்டமிட்டுள்ளன. இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி கூறுகையில், தமிழகத்தில் உள்ள 10 கூட்டுறவு துறை, 2 பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கும், ஆலைகளை நவீனமயமாக்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.இந்த சர்க்கரை ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை போக்க பெரிதும் பயன்படும். சர்க்கரை ஆலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க அரசு ஊக்கம் அளித்து வருவதுடன் கரும்பு விவசாயிகள் நலன் கருதியும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் தொடர்ந்து முழு அரவை திறனுடன் இயங்கிட ஏதுவாகவும் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.2,000ம் வீதம் வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் நிதிநிலையை மேம்படுத்தி, கரும்பு துணை பொருட்களில் ஒன்றாகிய கரும்பு சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிக்க அரசு முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் தான் 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.849.36 கோடியில் இணை மின் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கும், ரூ.276.27 கோடியில் ஆலைகளை நவீனமயமாக்கும் திட்டமும் துவங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் 12 கரும்பு ஆலைகளை சேர்ந்த விவசாயிகளின் பங்களிப்புடன் மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும். 18 மாதங்களில் இத்திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக சர்க்கரை ஆலைகளும், சுமார் 1 லட்சம் கரும்பு விவசாயிகளும், மின்சார நுகர்வோரும் மிகுந்த பயன் அடைவர். சுமார் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் 183 மெகாவாட் மின்சாரத்தில் சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான 63 மெகாவாட் மின்சாரம் போக மீதமுள்ள 120 மெகாவாட் மின்சாரம் மக்களுக்கு பயன்படும் வகையில் மின்சார வாரியத்துக்கு அளிக்கப்படும் என்றார்.

டில்லியில் மே மாதத்தில் பீர் பாட்டில்கள் விற்பனை 15 லட்சம் கேஸ்களை எட்டி உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 15,228,29 பீர் கேஸ்கள் விற்பனையாகி உள்ளது. ஒவ்வொரு கேசிலும் 12 பாட்டில்கள் இருக்கும். ஏப்ரல் மாதத்தில் டில்லியில் 14,80,951 கேஸ்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுள்ள பீர் விற்பனை கடந்த காலங்களை விட 30 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் பீர் விற்பனை நிலையங்கள் ஈட்டியுள்ள மொத்த தொகை ரூ.1700 கோடியாகும். டில்லியில் மட்டும் 37 வகையான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் பீர் விற்பனை அதிரடியாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதில் மிகப்பெரிய பங்கு வகிப்பதுது ஓசூர் தொழிற்பேட்டையாகும். இங்கு குண்டூசி முதல் விமான உதிரி பாகங்கள் வரையில் தயாரிக்கும் தொழில் நகரமாக ஓசூர் விளங்கி வருகிறது. ஓசூர் நகரின் பருவநிலைக்கும், மூலப்பொருட்கள் எளிதாக கிடைப்பதோடு, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரை மற்றும் வான் வழி மார்க்கமாக ஏற்றுமதி செய்வதற்காக போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ள இடம். மின் பொருள் மற்றும் தகவல் தொழில் நுடப்பத்துறையின் மையமான கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஓசூருக்கு மிக அருகில் இருப்பதால், ஓசூரில் 15 ஆண்டுகளில் சிறு மற்றும் பெரும் தொழிற்சாலைகள் பெரும் அளவில் துவங்கப்பட்டுள்ளது.


ஓசூர் தொழிற்பேட்டை இந்தியாவில் மிகப்பெரிய ஒன்றாகும். இங்கு நேரடியாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் மறைமுகமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்யப்பட்டு தொழிற்சாலைகள் துவங்கப்பட்டுள்ளன. 1,370 ஏக்கரில் 900க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரும் தொழிற்சாலைகள் உள்ளன. சர்வதேச நிறுவனங்கள், தேசிய அளவில் மிகப்பெரிய தொழிற்சாலைகளும் உள்ளன. குறிப்பாக இத்தொழிற்பேட்டையில் தரம் வாய்ந்து கனரக வாகனங்கள், தானியங்கி ஊர்திகள் மற்றும் பாகங்கள், மோட்டார் சைக்கிள்கள், டீஸல் இன்ஜின்கள், வார்படங்கள், கடிகாரம், நகை, இயந்திரங்கள், மருந்துகள், விமானங்கள், உயிரியல் தொழில் நுட்பத்தை சார்ந்த தாவரங்கள், ஜவுளிகள், ரசாயனங்கள், மின்னணு மற்றும் மின்சார பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயார் செய்யப்படும் கனரக வாகனங்கள் இந்தியா தேவைக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.


பெரிய நிறுவனங்களுக்கு தேவையான சிறு உதிரி பாகங்கள் அனைத்தும் சிறு தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் தயார் செய்யப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போது, சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளில் பல மூடப்பட்டன. சில மாதங்களாக மீண்டும் புத்துயிர் பெற்று தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு வருகிறது. சிறு தொழிற்சாலைகளுக்கு அடிப்படை மின்சாரமே ஆகும். ஜூன் முதல் தேதி முதல் இரண்டு மணி நேரம் மின்சாரம் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டது. ஓசூர் பகுதியில் பகல் நேரத்தில் ஆறு மணி நேரமும், இரவில் நான்கு மணி நேரமும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், சிறு தொழிற்சாலைகளில் உதிரி பாகங்கள் தயாரிப்பு பணிக்கள் முடக்கப்பட்டுள்ளது


இன்று நமது சந்தைகள் உலக சந்தைகளின் தாக்கத்தை எதிரொலிக்கலாம் நடந்து முடிந்த அமெரிக்க சந்தைகள் ,நடக்கின்ற ஆசியா சந்தைகள் எல்லாம் ரத்த களறியாக காட்சியளிக்கிறது ஆகவே இந்த தாக்கம் நமது சந்தைகளில் இன்று எதிரொலிக்கலாம்.

நமது சந்தைகள் ஆரம்பமாகும் பொழுது தேசிய நிபிட்டி கடந்த வெள்ளியன்று முடிவற்ற 5135 என்ற நிலையில் இருந்து 65 புளளிகள் லிருந்து 95 புளளிகள் வரை இறங்க நேரிடலாம் நாளின் நெடுகில் மீள முயலலலாம்.

கடந்த வார லாபங்கள் இந்த வாரம் காணாமல் போகலாம் ஆகவே முதலிடளர்கள் லாபத்தை உறுதி செய்து கொள்ளவும் .

நிபிட்டி எட்ட்ரத்தை பொறுத்த வரை 5145 லிருந்து 5165 வரை நிபிட்டி செயல் பாட்டை வைத்தே அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கலாம் .5165 ஐ கடந்தால் 5240 வரை சாத்தியம்.

நிபிட்டி இறக்கத்தில் 5125 -5005 -4975 --4940 ----------4820 நிபிட்டி எட்ட்ரத்தில் 5145 -5165 ---5190 --5240

இன்று ஆயில் ,சுகர் ,பவர் ,ஆட்டோ நிறுவனங்கள் சந்தையை வழி நடத்தலாம்

கிழே கொடுக்கப்பட்டுள்ள A குரூப் நிறுவன பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் விலையை விட குறைவாக உள்ளன .நல்ல பங்குகளை பார்த்து வாங்கி கொள்ள இந்த ஆடவனை உங்களுக்கு உதவும்


scrip LTP Change 52 Week
(%) High/Low
GRASIM INDS 1773.95 -31.41 2098/1750
GUJ NRE COKE 58.95 -25.85 89/32
PUNJ LLOYD 118.65 -24.06 299/114
REL.NAT.RESO 54.1 -21.02 112/43
MTNL 56.45 -19.59 124/53
EDUCOMP SOLU 550.05 -19.12 1017/442
SUZLON 55.8 -17.58 146/54
BHUSHANSTEEL 1344.25 -16.69 1856/506
MPHASIS 572.3 -16.2 796/313
HIND ZINC 965.75 -15.46 1325/533
TATA STEEL 484.8 -15.42 737/331
FORTIS HEALT 140.25 -14.74 188/83
WELSPUNSTAHL 230.65 -14.18 296/170
PRAJ INDS 79.8 -14.1 123/70
STERLITEINDS 648.7 -13.47 928/536
IDEA 55.75 -12.14 92/47
MADRS CEMENT 101.55 -11.89 140/91
MOSER BAER 62.4 -11.49 114/52
BANKOFINDIA 334.8 -10.59 475/295
ROLTA INDIA 165.8 -10.5 210/103
CENTURY TEXT 444.8 -10.48 595/343
HINDALCO 147.85 -9.79 188/68
GLENMARKPHAR 257.7 -9.72 304/199
JP HYDRO POW 63.95 -9.36 104/54
INDIABULLS 140.4 -9.33 220/93
FINAN.TECHNO 1343 -9.21 1722/1015
INDIA INFO 94.55 -9.13 173/91
AKRUTI CIY 469.15 -9.08 632/397
ISPATINDUSTR 17.55 -9.07 29/16
JINDAL STEEL 630.6 -8.62 778/372
VIDEOCON IND 200.3 -8.39 260/155
UNITECH 71.35 -8.35 118/61
JAIPRAK ASSO 122.55 -8.27 181/110
GMDC 122.35 -8.15 188/68
HIND CONSTCO 115.5 -7.86 162/89
MAX INDIA 161.35 -7.77 254/158
JAI CORP 226.5 -7.76 350/150
TATA MOTORS 772 -7.62 882/254
IDBI BANK 114.9 -7.56 140/85
PTC INDIA 103.75 -7.49 126/80
HDIL 232.25 -7.45 411/179
PIRAM.HEALTH 513.8 -7.43 600/257
TATA TELESER 20.65 -7.4 42/19
GMR INFRA 57.2 -7.37 92/51
SESA GOA 369.2 -7.29 494/150
INDIA CEMENT 113.35 -7.28 180/97
PROCTER&GMBL 1848.95 -7.16 2372/873
BHARTI AIRTE 276.3 -7.13 467/230
KSK ENERGY 177.35 -7.12 242/163

STOCKS TO WATCH
RELIANCE
ONGC
OIL INDIA
ADITYA BIRLA NUVO
INDIA CEMENTS
RCOM
UNITED PHOS
OPTO CIRC
GODREJ CON
TORRENT POWER
EDUCOMP
PETRONET LNG
IOC
BPCL
HPCL
IRB INFRA
CPCL
IDBI
CADILLA
HUL
ESSAROIL
UNITED SPRI
RELIANCE CAPIT
REL INFRA
UNITED SPRITS
MRPL
EXIDE INDUS
MOSEBAER
IOB
CORPORATION BANK
CANARA BANK
PRAJ INDUS
STERLING BIO
KOTAK MAHINDRA

HAPPY TRADING
BULLMARKETINDIAA