Nifty 26-08-2010

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

இன்றைய சந்தைகளை பொறுத்த வரை எட்டர இறக்கத்துடன் பயணிக்கலாம் நிபிட்டி 5435 கீழ் நழுவும் பட்சத்தில் சந்தையின் சரிவுகள் அதிகரிக்கலாம் சந்தையில் மென் பொருள் நிறுவன பங்குகள் விலை அதிகரிக்கலாம் நிப்த்யை பொறுத்த வரை 5366 கீழ் இறங்கும் பட்சத்தில் 4650 வரை கீழ் இறங்கும் வாய்புகள் அதிகம் .இந்திய பங்கு சந்தை இபோழ்து செலவு மிக்கதாக
வெளிநாட்டினர் கருத தொடங்கி விட்டனர் ஆகவே இவர்கள் விற்க ஆரம்பித்தால் நமது சந்தைகள் விழ்ச்சி மிக கடுமையானதாக இருக்கும் ஆகவே கவனமுடன் செயல் படவும் .

சந்தைகளில் திங்கள் முதல் புதன் வரை ஒரு இறக்கம் தான் தெரிந்தது. மொத்தமாக 221 புள்ளிகள்இறங்கி முடிவடைந்தது. இருந்தாலும் 18,000க்கு கீழே வரவில்லைஎன்பது தான் ஒரு ஆறுதல்.திங்களன்று சந்தை லாபமும் இல்லாமல், நஷ்டமும் இல்லாமல் முடிவடைந்தது. உலகளவுசந்தைகள் கீழேயே இருந்ததால்அதன் சென்டிமென்ட் இந்திய சந்தைகளிலும் இருந்தது. ஆதலால்செவ்வாய்அன்று சந்தை 97 புள்ளிகள் கீழே இறங்கி முடிவடைந்தது. வியாழனன்று சந்தையில்ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருந்தன.புதனன்று இறுதியாக மும்பைபங்குச் சந்தை 131 புள்ளிகள்குறைந்து 18,179 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை42 புள்ளிகள் குறைந்து 5,456 புள்ளி களுடனும் முடிவடைந்ததுசெவ்வாயும், புதனும் உலகளவில்மெட்டல் பங்குகள் உருகியதால் சந்தையும் உருகி யது என்றுதான் கூறவேண்டும்.
பவர் டிரேடிங்: பவர் டிரேடிங்கார்ப்பரேஷன் (பி.டி.சி.,) கம்பெனிக்கு இன்பிரா பைனான்சியல்கம்பெனி தகுதி அளி

க்கப்பட்டுஇருக்கிறது. இது இந்த கம்பெனிஇன்பிரா பாண்டுகள் மூலம் சந்தையில் இருந்து பணம் திரட்ட வழி வகுக்கும்.இதன் மூலம் ஆயிரக்கணக்கானகோடி ரூபாய், 10 வருடவரம்பு என்ற அளவில் முதலீட்டாளர் களிடமிருந்து குறைந்த வட்டியில் திரட்ட முடியும். அதே சமயம், முதலீட்டாளர்களுக்கு வருமான வரி சலுகைகளும் கிடைக்கும். ஆதலால், வருங்காலங்களில்பவர் டிரேடிங் பங்குகள்மேலே செல்ல வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

தொடரும் ஏற்றுமதிசலுகைகள்: 2010-11ம் வருட ஏற்றுமதியை 200 பில்லியன் டாலர்அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும், அதை எட்டுவதற்காகஏற்றுமதிக்கு வழங்கப்பட்டுவந்த சலுகைகள் தொடரும் என்றும், மேலும் 1,050 கோடி ரூபாய்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் 179 பில்லியன்டாலர் அள விற்கு ஏற்றுமதி செய்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், அடுத்த வருடம்முதல் வருடத்திற்கு 25 சதவீதம் கூடுதலாக ஏற்றுமதி டார்கெட்இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கெய்ர்ன் - வேதாந்தா டீல்:கெய்ர்ன் -வேதாந்தா டீல் நடப்பதில் பல நடைமுறை சிக்கல்கள்இருக்கின்றன. கெய்ர்ன், இந்தியாவில்தற்போது 30 சதவீதம் பங்குகள்வைத்திருக்கும் ஓ.என்.சி.ஜி.,தனது உரிமைகள் காக்கப்படவேண்டும் என்று கருதுகிறது.ஆதலால், ஒருவேளைஓ.என்.சி.ஜி., ஒரு கவுன்டர் ஆபர்கொடுக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன. டீலில் என்ன நடந்தாலும், கெய்ர்ன் இந்தியா இன்னொரு எண்ணெய்வளத்தை கண்டுபிடித்துள்ளது. ஆதலால், சரிவுகளில்முதலீடு செய்ய ஏற்ற பங்கு.வேதாந்தாவுக்கு இன்னொருஅதிர்ச்சி என்னவென்றால், ஒரிசாவில்7,800 கோடி ரூபாய் மதிப்பில் பாக்øசைட் தோண்டும் சுரங்ககம்பெனி துவங்க கேட்டிருந்தஅனுமதியை மத்திய அரசு, சுற்றுபுறச் சூழ்நிலை காரணங்களைகாட்டி மறுத்துள்ளது.

புதிய வெளியீடுகள்: குஜராத்பிப்பாவ் போர்ட் கம்பெனியின்புதிய வெளியீடு, கடந்த 23ம்தேதி ஆரம்பித்து இன்றுடன் முடிகிறது.ரூபாய்42 முதல் 48 வரைவிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.500 கோடி ரூபாய் வெளியீடு இது.புதனன்று இறுதியாக 7.23தடவை செலுத்தப்பட்டுள்ளது.சிறிய முதலீட்டாளர்கள் பகுதி0.92 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது.42 முதல் 48 ரூபாய் வரைவிலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் 42 முதல் 45 ரூபாய்க்குள்விலை நிர்ணயிக்கப்படலாம்.சிறிய முதலீட்டாளர்கள் இன்றுவரை போடலாம்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இதுவரை சந்தைக்கு வராதவங்கி பஞ்சாப் அண்டு சிந்துவங்கி மட்டும் தான். அந்த வங்கியும் தனது புதிய வெளியீட்டைகொண்டுவர, 'செபி'க்கு விண் ணப்பிக்கவுள்ளது.சமீபகாலத்தில் வெளியீட்டைகொண்டு வந்த வங்கி கோல்கட்டாவைசேர்ந்த யுனைடெட்பாங்க் ஆப் இந்தியா. இந்த வங்கி63 ரூபாய் விலையில் கொண்டுவந்த வெளியீடு, தற்போது 95ரூபாய் அளவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பறந்து சென்ற வங்கிப் பங்குகள்:சமீபத்தில் ஸ்டேட் பாங்க்ஆப் இந்தூர், ஸ்டேட் பாங்க்குடன் இணைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்டேட்பாங்கின் மற்ற துணை வங்கிகளும் இணைக்கப்படும் மேலும்,உரிமை பங்குகள் வெளியீடு இருக்கும் என்ற நம்பிக்கையில்ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்,ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்,ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர்அண்டு ஜெய்ப்பூர் ஆகியவை திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில்முறையே 20 சதவீதம் வரைகூடியது.

மொத்தமாக 40 சதவீதம் வரைஅந்த வங்கிகளின் பங்குகள்விலை கூடின. நெருப்பில்லாமல்புகையுமா?வரும் நாட்கள் எப்படிஇருக்கும்? சந்தையில் எந்த பாதகமும் இல்லை. மெதுமெதுவாகமேலே செல்லும். இறக்கங்களைப் பற்றி கவலைப்படவேண்டாம்.

இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு கே.வி.காமத் நியமி்க்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்போசிஸ் நிறுவனத்தின் தற்‌போதைய தலைவர் நாராயணமூர்த்தியின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தற்போதே துவங்கி உள்ளது. இன்போசிஸ் நிறுவன தலைவராக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி கே.வி.காமத் நியமிக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அந்த வட்டாரங்கள் அளித்த ‌செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கே.வி.காமத் சிறந்த தொழில் நிர்வாகி என்றும், உலகளாவிய தொடர்பு கொண்டவர் , சர்வதேச அளவில் அனைவராலும் அறியப்பட்ட பிரபல மனிதர், இக்கட்டான தருணங்களில் சிந்தித்துச் செயல்பட்டு சிறந்த முடிவை சரியான நேர‌த்தில் எடுக்கும் திறன் பெற்றவர் மற்றும் நிறுவன வளர்ச்சிக்கு ‌பெரிதும் பாடுபடுபவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 62 வயதாகும் காமத், இன்போசிஸ் நிறுவன தலைவராக தேர்ந்தெடுக்க உள்ளவர்களின் பட்டியலில் முதல் இடத்திற்கு உள்ளதாகவும், அவரை தலைவராக்குவது இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திற்கு 2010-ஆம் ஆண்டு இறுதிக்குள் மகாரத்னா அந்தஸ்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு அரசு நிறுவனமான பெல் அடுத்த ஓராண்டில் இந்த அந்தஸ்தினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத் துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி., செயில், என்.டி.பி.சி. மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நான்கு பெரிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே சூமகா ரத்னா' அந்தஸ்து வழங்கியுள்ளது. இதனையடுத்து நிதி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் இந்த நிறுவனங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மகாரத்னா அந்தஸ்தைப் பெறுவதற்கு இந்த நான்கு நிறுவனங்களும் மத்திய அரசு வகுத்துள்ள கடுமையான விதிமுறைகளை நிறைவு செய்துள்ளன. இந்த அந்தஸ்தை பெறும் நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டவையாக இருக்க வேண்டும். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ரூ.5,000 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்க வேண்டும். நிகர சொத்து மதிப்பு ரூ.15,000 கோடியாகவும், ஆண்டு வருவாய் ரூ.25,000 கோடியாகவும் இருக்க வேண்டும். இது போன்ற மேலும் சில விதிமுறைகள் உள்ளன. மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனங்கள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்தி, சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களாக உருவெடுக்க செய்வதே மகா ரத்னா அந்தஸ்து வழங்கப்படுவதன் முக்கிய நோக்கம் என உயர் அரசு அதிகாரி ஒருவர் கூறினார். கோல் இந்தியா, உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தில் தற்பொழுது மத்திய அரசு 100 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இதில், 10 சதவீத பங்குகளை வெளியிட்டு ரூ.15,000 கோடி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு அக்டோபர் 18-ந் தேதி தொடங்கி 21-ந் தேதியுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோல் இந்தியா நிறுவனம் சுமார் 4 லட்சம் பணியாளர்களைக் கொண்டுள்ளது. சென்ற நிதி ஆண்டில் ரூ.52,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.5,000 கோடிக்கும் அதிகமான அளவில் லாபம் ஈட்டி வருகிறது.


-சேதுராமன் சாத்தப்பன் -

புதிய முதலிடுகள் தவிர்க்கவும் .

STOCK TO WATCH

RELIANCE
HCL TECH
INFOSYS
PTC
POWERGRID
TORRENT POWER
GLAXO
ITC
MARICO
GODREJ IND
TCS
WIPRO
CAIRN
ONGC
MRPL
OIL INDIA
UNION BANK OF IND
ACC
JUBLIANT ORG
SIEMENS
HAVELLS
CIPLA
RANBAXY
NTPC
NATIONAL ALUM
ISPAT
BHARTHI AIR
TECH MAHINDRA
MAH SATHYAM
TATA GLOBAL BEVE
DIVIS LAB
PNB
CENTRAL BANK
LNT
PANTALOON RETA

பிக் பஜார் மூலம், இந்த ஆண்டில் ரூ. 180 முதல் 200 கோடி வரை வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாக, பியூச்சர் குழும நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கிஷோர் பியானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கிஷோர் பியானி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தங்களது பியூச்சர் குழுமம், பிக் பஜார் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வர்த்தகத்தை மேற்கொண்டு வருவதாகவும், இதில் பிக் பஜாரில் மட்டும் ரூ.180 முதல் 200 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும், மொத்தமாக ரூ. 300 கோடி வருவாய் ஈ‌ட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 78 நகரங்களில், 134 விற்பனை அவுட்லெட்களை கொண்டுள்ள பிக் பஜார், ஆகஸ்ட் 15ம் தேதி மட்டும் ரூ. 100 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிறுவன நிர்வாக மேலாண்மை வல்லுனர் நபாங்குர் குப்தா கூறுகையில், ஜனவரி 26 மற்றும் ஆகஸ்டு 15ம் தேதி அரசு விடுமுறை தினங்களையொட்டி, தங்கள் நிறுவனம் மகா பசாட் (மெகா விற்பனை) என்ற பெயரில் 5 நாட்கள் சிறப்பு விற்பனையை ஆண்டுதோறும் நடத்தி வருவதாகவும், ஓவ்வொரு ஆணண்டிலும் இத்ததைய தினங்களில் நிறுவனத்தின் விற்பனை 4 முதல் 6 சதவீத அளவிற்கு உயர்ந்து வருவதாகவும், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியையொட்டி நடைபெற்ற மெகா விற்பனையில் ஒரு லட்சம் மொபைல் போன்களும், ஒரு லட்சம் கிலோ டிடர்ஜென்ட்டும், 1.75 லட்சம் நான்ஸ்டிக் குக்வேர் உபகரணங்களும், 2.5 லட்சம் 5 கிலோ அளவிலான எண்ணெய், சர்க்கரை மற்றும் அரிசி பாக்கெட்களும் விற்பனை ஆகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், சாப்ட்வேர் ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு, ஐந்தாவது டெலிவரி சென்டரை சீனாவில் துவககியுள்ளது. இதுதொ‌டர்பாக, டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளதாவது : ஐந்தாவது புதிய டெலிவரி சென்டர் சென்ஜென் நகரில் அமைக்கப்பட இருப்பதாகவும், தங்கள் நிறுவனத்திற்கு சீனாவில் பீஜிங், ஷாங்காய், ஹோங்சூ, மற்றும் தியான்ஜின் நகரங்களில் ஏற்கனவே டெலிவரி சென்டர்கள் உள்ளதாகவும், தற்போது சென்ஜென் நகரில் துவக்கப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனம், 2002ம் ஆண்டில் சீனாவில் கால்பதித்ததாகவும், தங்களது சென்டர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருவதாகவும், இவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சீனர்‌களே என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஓபராய் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் நிறுவனம், தாய்லாந்தில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஓபராய் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் நிறுவன தலைவர் லியாம் லாம்பெர்ட் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : தாய்லாந்தில் ஓட்டல் துறையில் நுழைய இருப்பதாகவும், அடுத்த 3 ஆண்டு கால அளவிற்காக இந்த ஒப்பந்தம், அந்நாட்டுடன் செய்துகொண்டிருப்பதாகவும், இன்னும் 5 ஆண்டுகளில், தங்கள் நிறுவன ஹோட்டல்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம், தங்கள் நிறுவனத்தின் நீண்டகால கனவு நனவாகி உள்ளதாகவும், இதன்மூலம், உலகின் தலைசிறந்த நகரங்களான பாரீஸ், நியூயார்க்கைப் போல அதே‌போல, அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலும் தடம்பதித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி ஸ்டீல் நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனம், ஒரிசாவில் தொழிற்பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்த டாடா ஸ்டீல் நிறுவன நிர்வாக இயக்குனர் நேருகர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : 1,000 கோடி ரூபாய் செலவில் 3,200 ஏக்கர் பரப்பளவில் மெகா தொழிற்பூங்கா அமைக்கப்பட இருப்பதாகவும், இதற்காக, நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், தொழிற்பூங்கா, ஒரிசா மாநிலம் கஞ்சம் மாவ‌ட்டத்தில் உள்ள கோபால்பூரில் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த புதிய பூங்கா மூலம் நேரடியாக ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், இந்த பூங்காவில் தங்கள் நிறுவனங்களை அமைக்க, தற்போதே பல முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாகவும், விரைவில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


டாடா நானோவைத் தொடர்ந்து குட்டிக் கார்களை களத்தில் இறக்குகிறது ஸ்கோடா. ஆனால் இது ஒரு லட்சம் ரூபாய் கார் அல்ல, மாறாக ரூ.3 முதல் 5 லட்சத்திற்குள் விலை இருக்குமாம். இது இந்தியாவுக்கான கார். 2012ம் ஆண்டில் இந்த கார் அறிமுகம் செய்யப்படவுள்ளதாம். அதேபோல தனது எஸ்யுவி டைப் காரான எட்டியை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா. டொயோட்டா பார்ச்சூனர், ஹோன்டா சிஆர்வி, செவி கேப்டிவா, நிஸ்ஸான் எக்ஸ் டிரையல் ஆகிய வரிசையில் சேரக் கூடிய வகையிலான கார்தான் எட்டி. ஸ்கோடாவின் லாரா கார்களுக்கு நல்ல வெற்றி ங்சீசி கிடைத்துள்ளது. செடான் வகை காரான இது சமீப காலமாக நன்றாக விற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த செடான் காரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா. இதன் விலை ரூ. 6 முதல் 10 லட்சமாக இருக்கும். இந்தக் கார், வோக்ஸ்வோகனின் செடான் வென்டா தொழில்நுட்பத்தை சார்ந்திருக்குமாம். ஸ்கோடாவின் திட்டங்கள் குறித்து அதன் இந்தியப் பிரிவின் போர்டு உறுப்பினர் மற்றும் இயக்குநர் ங்சீசி தாமஸ் குயல் கூறுகையில், ஆண்டுதோறும் ஒரு மாடலை அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. எங்களது குட்டிக் கார் 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே இது தொடர்பான பணிகள் தொடங்கி விட்டது. இந்தியச் சந்தைக்கேற்ற வகையில் இது இருக்கும். பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வகையிலான காராக இது இருக்கும் என்றார். ஸ்கோடாவின் குட்டிக் கார் இந்திய சந்தைக்குள் நுழையும்போது மாருதி, ஹூண்டாய், டாடா ஆகியவற்றின் கார்களோடு கடும் போட்டியில் ஈடுபட நேரிடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுபோக சமீபத்தில் நுழைந்துள்ள போர்டு பிகோ மற்றும் ஜெனரல் மோட்டார்ஸின் பீட், வோக்ஸ்வேகனின் போலோ ஆகியவையும் கடும் போட்டியைக் கொடுக்க தயாராக உள்ளன. இவை அடுத்த 2 ஆண்டுகளில் களத்தில் குதிக்கவுள்ளன. ஸ்கோடா தனது புதுப்பிக்கப்பட்ட பேபியா காரை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்குக் கொண்டு வருகிறதாம். இதன் விலை ரூ. 6 முதல் 7.84 லட்சமாக இருக்கும். ஸ்கோடாவின் திட்டங்கள் அதி தீவிரமாக உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் ஸ்கோடாவின் கார்கள் இந்திய சாலைகளில் தீப்பொறி பறக்க பறக்கத் தயாராகி வருகின்றன. இந்த ஆண்டு பேபியா, அடுத்த ஆண்டு செடான், 2012ல் குட்டிக் கார் என திட்டமிட்டு செயலாற்றும் ஸ்கோடா, மற்ற நிறுவனங்களுக்கு நிச்சயம் நல்ல போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

HAPPY TRADING
BULLMARKETINDIAA