Nifty 25-08-2010

புதன், 25 ஆகஸ்ட், 2010

வரும் நாட்கள் சந்தைக்கு போதாதா காலம்மகா இருக்கலாம் .சந்தை 10 லிருந்து 20 சதவிதம் வரை கீழிறங்க வாய்புகள் அதிகம் அமெரிக்கவில் பூகம்பம் கிளம்பினால் உலக சந்தைகள் அனைத்திலும் பூகம்ப அதிர்வுகள் காணப்படும் இந்த அதிர்வினால் நமது சந்தைகள் சீட்டு கட்டு சரிவது போல் சரிய வாய்ப்புண்டு நமது சந்தைகள் 30 மாத உச்சத்தில் உள்ளது .


அடுத்த மாதம் நிச்சயம் அமெரிக்கப் பொருளாதாரம் பலத்த அடியைச் சந்திக்கும் என்கிறார் அமெரிக்க பொருளாத நிபுணர் ஜின் மெய்க்கா.

இந்த வீழ்ச்சிக்கு 'ஹிண்டன்பர்க் பயங்கரம்' எனப் பெயரிட்டிருக்கிறார் ஜின் மெய்க்கா. அமெரிக்க மார்க்கெட் வீழ்ச்சி எப்படி சாத்தியம் என்று தெரிந்து கொள்ளுமுன் ஹிண்டன்பர்க் பயங்கரம் பற்றி...

ஹிண்டன்பர்க் என்பது ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் தயாரான விமானம். 1936-ம் ஆண்டு முதல் அமெரிக்கா வுக்கும் ஜெர்மனிக்கும் பயணிகள் சேவையைத் துவங்கியது. முதல் ஆண்டு வெற்றிகரமாக சேவையைப் பூர்த்தி செய்த இந்த விமானம், 1937-ம் ஆண்டு நியூஜெர்ஸியின் லேக்கர்ஸ்ட் கடற்படை விமான தளத்தில் தரையிறங்கும்போது வெடித்துச் சிதறியது.

இதில் 36 பேர் உயிரிழந்தனர். அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியைத் ஏற்படுத்திய விமான விபத்து இது. தரையிறங்குவதற்கு மிக சமீபத்தில் விமானம் வந்தபோது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் வெடித்தது ஹிண்டன்பர்க். இதற்கான சரியான காரணத்தை யாரும் இதுவரை கூறவில்லை.

இப்போது சாதாரணமாகத் தெரியும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கும் இதுபோன்ற பெரும் விபத்து நேரும் வாய்ப்பு அதிகம் என்கிறார் ஜிம் மெய்க்கா.

அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பொருளியல் நிலவரங்களை, பல்வேறு கணக்கீடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரும் வீழ்ச்சியை அமெரிக்க பங்குச் சந்தையும், பொருளாதாரமும் சந்திக்கும் என்பதை உறுதி செய்துள்ளார் ஜிம்.

கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க பங்குச் சந்தை பெரும் ஊசலாட்டத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் அமெரிக்காவின் 92 நிறுவனங்களின் பங்குகள் 52 வார உச்ச கட்ட விலைக்குக் கைமாறின. அதேபோல 81 நிறுவனங்கள் இதுவரை காணாத பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

மெக்லீன் ஆஸிலேட்டர் (பங்குச் சந்தைப்போக்கைக் கணிக்கும் முறை) முறையில் பங்குச் சந்தை போக்குகள் அடுத்த சில மாதங்களுக்கு மிக மோசமாகவே இருப்பதாகவும், இந்த மோசமான போக்கின் துவக்கம் செப்டம்பர் மாதம் என்றும் ஜிம் தெரிவித்துள்ளார்.

பொருளியல் வீழ்ச்சியோ வளர்ச்சியோ, இதுவரை ஜிம் கணித்துச் சொன்ன எதுவும் பொய்யானதில்லை என்பதால், இந்த முறை அவர் கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள அமெரிக்கர்கள் விரும்பவில்லை.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் பாதிப்பு எதுவும் இருக்காதாம். பங்குச் சந்தையில் அடுத்த சில மாதங்களில் 10 சதவிகித வீழ்ச்சி சாத்தியம் என்றாலும் அதனால் பாதிப்பு பெரிதாக இருக்காதாம்.

அதேநேரம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தை இப்போதைக்கு மிகவும் செலவுமிக்கது என்றே கருதுவதாக ஜிம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

"இந்திய சந்தையில் பெரிய அளவு கரெக்ஷன் இருந்தாலும், அது வீழ்ச்சிக்குக் காரணமாக அமையாது. வரும் டிசம்பர் 2014 வரை, எந்த அளவு பங்குச் சந்தை வீழ்ந்தாலும் அதை முதலீட்டுக்கான வாய்ப்பாகவே கருதுவார்கள். ஆனால் அமெரிக்காவில் நிலைமை தலைகீழ்" என்கிறார் ஜிம்.

வெளிநாடு வாழ் இந்தியரான 'வேதாந்தா' குழுமத் தலைவர் அனில் அகர்வால், எண்ணெய் நிறுவனமான 'கெய்ர்ன் எனர்ஜி' நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளார். அந்நிறுவனத்தை அகர்வால் வாங்கும் பட்சத்தில், முகேஷ் அம்பானியை விட அவரது நிறுவனங்களின் சொத்து சந்தை மதிப்பில் உயர்ந்து, அவர் இரண்டாமிடத்தை பிடித்து விடுவார்.

'வேதாந்தா' குழுமத் தலைவர் அனில் அகர்வால் நிறுவனங்களின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பு தற்போது ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 465 கோடி ரூபாய் ஆகும். முகேஷ் அம்பானியின் மொத்த சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 276 கோடி ரூபாய் ஆகும். இவர்கள் இருவரையும் விட அதிகமாக, டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு மூன்று லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உள்ளது. இன்றைய நிலையில் டாடா குழுமம் தான் முதலிடத்தில் உள்ளது.


இந்நிலையில் அனில் அகர்வால், 'கெய்ர்ன் எனர்ஜி' நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளார். அப்படி அந்நிறுவனத்தை வாங்கும் பட்சத்தில் அகர்வாலின் சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 938 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இதனால், நீண்ட காலமாக இரண்டாமிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, மூன்றாமிடத்துக்கு தள்ளப்படுவார். அனில் அகர்வால் இரண்டாமிடத்தை பிடிப்பார். சர்வதேச அளவில், உலோகங்கள் மற்றும் சுரங்கத் தொழில்களில் அகர்வால் முன்னணியில் இருக்கிறார். அதேநேரம், பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் உற்பத்தி மற்றும் எண்ணெய் தொழிலில், முகேஷ் அம்பானி முன்னணியில் உள்ளார். 'கெய்ர்ன் எனர்ஜி' நிறுவனத்தை வாங்குவதன் மூலம் அகர்வாலும் எண்ணெய் தொழிலில் காலடி எடுத்து வைக்கிறார்.


சர்வதேச சந்தையில், தங்கத்துக்கு மவுசு ஏற்பட்டு வரும் நிலையில், ஆன்-லைன் வர்த்தகத்தில் சீனா தற்போது நுழைந்துள்ளது, இந்திய தங்க சந்தையில் கடும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக, இன்று முதல் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்கள் உடனுக்கு உடன் இந்திய மார்க்கெட்டில் எதிரொலிக்கிறது. 2003ல் கிராம் 523 ரூபாய்க்கும், 2004ல் 620, 2007ல் 1,000, 2008ல் 1,250, 2009ல் 1,550 ரூபாய்க்கும் விற்ற தங்கம், 2010 ஜூலையில் அதிகபட்சமாக, கிராம், 1,790 ரூபாய்க்கு விற்றது. இந்நிலையில், கடந்த மாதம் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தங்கம், கிராம், 1,687 ரூபாய்க்கும், சவரன் 13 ஆயிரத்து 496 ரூபாய்க்கும் விற்றது. இந்த சரிவு காரணமாக ஆபரணத் தங்கத்தின் விற்பனையில் சுறுசுறுப்பு ஏற்பட்டது. திருணம சீசன் மாதமான ஆவணி பிறந்த நிலையில், தங்கத்தின் விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆன்-லைன் வர்த்தகத்தில், தங்கம் உள்ளதால், தற்போது சீனாவும் ஆன்-லைன் வர்த்தகத்தில் நுழைந்துள்ளது. இது தங்க வியாபாரிகள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.


ஆசிய நாடுகளில் பொருளாதாரத்தில் இந்தியாவை வீழ்த்தும் வகையில் சீனா பல்வேறு வியூகங்களை அமைத்து எதிரி போல் செயல்படுகிறது. தங்க மார்க்கெட்டில் இதுநாள் வரையில் ஐரோப்பியா, அரபு நாடுகள், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளே ஆன்-லைன் வர்த்தகம் மூலம் தங்கம் கொள்முதல், விற்பனையில் ஈடுபட்டு வந்தன.


இந்நிலையில் சீனா, முதல் முறையாக ஆன்-லைன் வர்த்தகத்தில் நுழைந்துள்ளது. அத்துடன், இந்த வர்த்தக முறையில் அந்நாட்டு மக்களையும் நகைகள் வாங்கிக் கொள்ள இருந்த கெடுபிடிகளையும் குறைத்துள்ளதோடு அதிகளவில் தங்கத்தை கொள்முதல் செய்து கொள்ளும்படி அறவித்து உள்ளது. கடந்த வாரம் சீனாவில் தங்கத்தை கொண்டு ஈ.டி.எப்., பண்டு துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சீன வங்கிகள், நகைகளுக்கு மாற்றாக தங்கத்தாலான பேப்பர் மீது முதலீடு செய்ய வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக சீனாவில் தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளது.


உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் உள்ளவர்களில், 1 சதவீத மக்கள், ஆன்-லைன் மூலம் தங்க பரிவர்த்தனையில் ஈடுபட்டால், தங்கத்தின் விலை கடும் உயர்வு ஏற்படும். அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை மற்றும் அமெரிக்காவில் செயல்படும் தனியார் வங்கிகள் நஷ்டம் என்ற பெயரில் மூடு விழா காண்டு வருவது சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், விரைவில் ஆபரணத் தங்கம் கிராம், 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது


இந்தியாவில் 82 சதவீத மிடில் கிளாஸ் குடும்பத்தினர் மாதம் ரூ. 1000 முதல் ரூ. 2000 வரையே சம்பளம் வாங்குகின்றனர். அதேசமயம், ரூ. 10,000க்கு மேல் பெறுபவர்கள் பணக்காரர்கள் என்ற அந்தஸ்தினைப் பெறுகிறார்கள் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆய்வு தெரிவித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில், ஆசிய மக்களின் பொருளாதார நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆசியாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவு்ம், அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்க, ஐரோப்பிய மிடில் கிளாஸ் குடும்பத்தினர்களின் இடத்தை ஆசியர்கள் பிடித்து விடுவார்கள் என்றும், உலக அளவில் இவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடில் கிளாஸ் குடும்பத்தினர் என்பது பொதுவான சொல்லாக இருந்தாலும் அவர்களை அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் , லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் மற்றும் மிடில் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் என ரயிலில் பெர்த் பிரிப்பது போல பிரித்து வைத்துள்ளனர். இதில் மாதம் ரூ.1,035ல் இருந்து ரூ.2,070 வரை சம்பாதிப்பவர்களை லோயர் மிடில் கிளாஸ் என்றும், ரூ.2070ல் இருந்து ரூ.5,177 வரை சம்பாதிப்பவர்களை மிடில் மிடில் கிளாஸ் என்றும், ரூ.5177ல் இருந்து ரூ.10,354 வரை சம்பாதிப்பவர்களை அப்பர் மிடில் கிளாஸ் என்றும் அளவிட்டுள்ளனர். இதன்மூலம் மாதம் ரூ. 10,354க்கு மேல் சம்பாதிப்பவர்களை பணக்காரர்களாக்கியுள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி. இந்தியாவைப் பொறுத்தவரை 82 சதவீத நடுத்தர வர்க்கத்தினர் கீழ் நடுத்தர வர்க்கத்தினரே. அதாவது இவர்களது மாதச் சம்பளம் அதிகபட்சம் ரூ. 2,070. இவர்களின் எண்ணிக்கை 22.40 கோடியாகும். மத்திய நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 4.50 கோடி. மேல் நடுத்தர வர்க்கத்தினர் 50 லட்சம் பேர் உள்ளனர். பணக்காரர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேராகும். மாதம் ரூ. 10,000க்கு மேல் சம்பளம் வாங்குவோரின் எண்ணிக்கை 0.0009 சதவீதம் மட்டுமே என்கிறது அந்த ஆய்வு.

இந்தியாவில், ரியல் எஸ்டேட் துறையில் அன்னிய நேரடி முதலீடு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 80 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டில், இத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு ரூ.171 கோடியாக இருந்தது. இது, சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டில் வியக்கத்தக்க வகையில் ரூ.13,586 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் இத்துறை ஈர்த்த நேரடி முதலீடு ரூ.737 கோடியாக உள்ளது. இது, இந்திய ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி மீது வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அன்னிய நேரடி முதலீட்டால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில் நுணுக்கங்களை இந்திய நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள முடியும். சென்ற ஐந்து ஆண்டுகளில், வெளிநாட்டினர், இந்திய வீட்டு வசதி துறையில் ரூ.37,986 கோடியை நேரடியாக முதலீடு செய்துள்ளனர். இவ்வாண்டில் இதுவரையிலான காலத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.13,586 கோடியாகும்.
இந்தியாவில், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி குறித்து கிரிசில் அமைப்பின் தலைவர் (கார்ப்பரேட் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி தர நிர்ணயம்) ஆகாஷ் தீப் ஜோதி கூறும்போது, 'கடந்த 2008-ஆம் ஆண்டில், உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார உருக்குலைவை எதிர்கொண்டு இந்திய ரியல் எஸ்டேட் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் அதிவேக வளர்ச்சியால், வீடு மற்றும் வர்த்தக வளாகங்களுக்கான தேவைப்பாடு அதிகரிக்கும்'' என்று தெரிவித்தார். வரும் 2011-ஆம் ஆண்டில், நாட்டின் பொருளாதாரத்தில் 8.5 சதவீத வளர்ச்சி ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் மாபெரும் எழுச்சி ஏற்படும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இது குறித்து ரியல் எஸ்டேட் நிபுணர் ஒருவர் கூறும்போது, 'நம் நாட்டில், கூடுதலாக 2.60 கோடி வீடுகள் தேவைப்படுகிறது. இந்நிலையில், நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, ரியல் எஸ்டேட் துறையில் மீண்டும் எழுச்சி ஏற்படும்'' என்று தெரிவித்தார்.


இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சட்ட விரோதமாக தங்களிடம் சேர்த்து வைத்துள்ள கறுப்புப் பணம் பற்றிய விவரங்களை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அளிக்க சுவிட்சர்லாந்து வங்கிகள் ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சட்ட விரோதமாக தங்கள் பணத்தை, சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில் கறுப்புப் பணமாக போட்டு வைத்துள்ளனர். யார் யார் எவ்வளவு பணம் போட்டுள்ளனர் என்று தெரிந்து கொள்வதற்காக, பல நாடுகளும் சுவிஸ் வங்கிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.அமெரிக்காவினர் வைத்திருக்கும் பணம் பற்றிய விவரங்களைத் தர சுவிஸ் வங்கிகள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளன. ஜெர்மனி உள்ளிட்ட முன்னணி நாடுகள் இதில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில், இந்தியாவும் அந்த விவரங்களைப் பெறும் ஆரம்பகட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சுவிஸ் வங்கிகள், தெள்ளத் தெளிவாக கேட்டதும் பட்டியலைத் தர முடியாது என்று கூறி சில சட்ட நுணுக்கங்களுடன் கூடிய தகவல்களைக் கேட்டன. இந்நிலையில், சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பான, 'சுவிஸ் வங்கிகள் அசோசியேஷன்' (எஸ்.பி.ஏ.,), வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான அறிக்கையில், தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள, நான்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.நாடுகள் சந்தேகப்படும் நபர்களைப் பற்றிய விவரங்கள், அவர்கள் செய்த முறைகேடுகள் பற்றிய விவரங்கள், ஏன் அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது என்பது பற்றிய ஆதார விவரங்கள், எந்தெந்த வங்கிகளில் அவர்கள் பணம் போட்டிருக்கின்றனர் என்ற தகவல்களைத் தரும்படி கேட்டிருக்கிறது. இதுகுறித்து அந்தந்த நாட்டு வருமான வரித்துறையினர் சுவிஸ் வங்கிகள் கூட்டமைப்புக்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும்.இதுவரை, தங்கள் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களைத் தரமாட்டோம் என்று ஒரே குரலில் கூறிய நிலையில் இருந்து, சுவிஸ் வங்கிகள் சற்று கீழிறங்கியுள்ளன.

கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் விற்பனை அசுர வளர்ச்சி கண்டு வரும் நிலையில், வாகன பாகங்கள் தயாரிக்கும் துறையில், அடுத்த ஆண்டு முதல், ஆண்டுதோறும் சுமார் ரூ.15,000 கோடி (300 கோடி டாலர்) முதலீடு மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது என இந்திய மோட்டார் வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் (அக்மா) தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த பத்து ஆண்டுகளில் இத்துறையில் 3,000 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஜுலை மாதத்தில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அம்மாதத்தில் வாகனங்கள் விற்பனை, இதுவரை இல்லாத வகையில், 32 சதவீதம் உயர்ந்து 12,37,461-ஆக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 9,41,070 வாகனங்களாக இருந்தது. மோட்டார் வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் வாகன நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன.
இதனால் வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் மொத்த விற்பனையும் அதிகரித்து வருகிறது. சில்லரை விற்பனையும் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால் மோட்டார் வாகன பாகங்களுக்கான தேவை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இத்துறை நிறுவனங்கள் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திறனை உயர்த்தும் வகையில் விரிவாக்கம் மேற்கொள்ள தயாராகி உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் இந்நிறுவனங்கள் 200 கோடி டாலர் (சுமார் ரூ.9,000 கோடி) முதலீடு செய்ய உள்ளன. இத்துறை ஆண்டுதோறும் 20 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வாண்டில் இத்துறையின் மொத்த வருவாய் 2,500 கோடி டாலராக (ரூ.1.15 லட்சம் கோடி) அதிகரிக்கும் என அக்மா குறிப்பிட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை 2,200 கோடி டாலர் மதிப்பிற்கு உயர்ந்துள்ளது. அவ்வாண்டில் ஏற்றுமதி வாயிலாக மட்டும் இத்துறை 380 கோடி டாலர் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதி ஆண்டில் இத்துறை நிறுவனங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஈட்டும் வருவாய் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெல்சிங்கி/புதுடில்லி : சர்வதேச அளவில் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மொபைல் அனாலிடிக்ஸ் சேவை வழங்கும் நிறுவனமான மோடல்லியை தன்வசப்படுத்த இருப்பதாக த‌ெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், டெவலப்பர்ஸ் மற்றும் பப்ளிசர்களுக்கு இனிய வரப்பிரசாதமாக விளங்கும் என்றும், இதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்தாண்டின் பிற்பகுதியில் முடிவுக்கு வரும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி பாசுமதி அரிசி ஏற்றுமதி நிறுவனமான அமைரா புட்ஸ் நிறுவனம், தனது ஏற்றுமதியை மத்திய கிழக்கு நாடுகளிலும் விரிவுபடுத்தும் பொருட்டு, துபாயின் முன்னணி வணிக குழுமமான சோய்த்ராம்சுடன் கைகோர்க்கிறது. இதுகுறித்து, அமைரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கரண் சனானா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : துபாய் நாட்டுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி அரிசிறை ஏற்றுமதி செய்ததன் மூலம், தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி 10 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி 70 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதன்மூலம், ரூ. ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும், வரும் கால்ஙகளில் 70 ஆயிரம் டன் பாசுமதி அரிசியை 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கும் அரிசியை ஏற்றுமதி செய்ய உத்தேசித்திருப்பதாகவும், இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி என்பது சோய்த்ராவுடனான கைகோர்ப்பின் மூலம் சாத்தியம் ஆகும் என்று அந்த அறிக்‌கையில் சனானா தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆக. 24: தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் பெயரில் ரிசர்வ் வங்கியில் கணக்கு உள்ளதாகக் கூறி வரும் போலி மின்னஞ்சல்கள், கடிதங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பாரத ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் கே.ஆர். ஆனந்தா தெரிவித்தார்.
÷இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
லாட்டரியில் பெரிய தொகை பரிசாக வழங்குவது, வெளிநாட்டில் உள்ள பணத்தை இலவசமாக தருதல், வேலை வாய்ப்பு அளிப்பது, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர அனுமதி உள்ளிட்டவை வழங்குவதாகக் கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறி வரும் மோசடி மின்னஞ்சல்கள், கடிதங்கள் அண்மைக்காலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது.
இது தொடர்பான புகார்களும் அதிகரித்து வருகின்றன.
÷இதில் வழக்கமான நடைமுறைகள் மாறி தற்போது ரிசர்வ் வங்கியின் பெயரிலேயே பல்வேறு மோசடி மின்னஞ்சல்கள், கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதாகப் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.
÷ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ கடித ஏட்டில், உயர் அதிகாரிகளின் பெயர், பதவி, கையெழுத்து உள்ளிட்ட விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தி பொது மக்களை மோசடி செய்வதில் சிலர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
÷ரிசர்வ் வங்கியில் எந்த தனிப்பட்ட நபரின் பெயரிலோ, நிறுவனத்தின் பெயரிலோ, அறக்கட்டளை பெயரிலோ கணக்குகள் பராமரிக்கப்படுவது கிடையாது.
÷ரிசர்வ் வங்கியில் உங்கள் பெயரில் ஒரு குறிப்பிட்டத் தொகை வெளிநாட்டில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பெற நீங்கள் இந்த வங்கியில் உள்ள இந்த கணக்கில் இவ்வளவு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறி மின்னஞ்சல்கள், கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன.
÷இவ்வாறு வரும் அழைப்புகள் எதையும் பொது மக்கள் நம்பி ஏமாற வேண்டாம். ரிசர்வ் வங்கி வைப்புத் தொகை விஷயமாக எந்த தனிப்பட்ட நபரையும் தொடர்பு கொள்வது இல்லை.
÷இது தொடர்பாக மோசடியாளர்களை கண்டுபிடிக்க போலீஸôர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இவை அனைத்தும் இணையதளம் வாயிலாகவே வருகின்றன என்பதாலும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ள ஒருவரின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி இந்த மோசடிகள் நடைபெறுவதால் சம்பந்தப்பட்டவர்களை யார் என அடையாளம் காண்பதே பெரும் சிரமமாக உள்ளது.
÷எனவே, இத்தகைய மோசடிகளில் சிக்காமல் இருக்க பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு வரும் மின்னஞ்சல்கள், கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் அனைத்துக்கும் பொதுமக்கள் பொருட்படுத்தாமல், புறக்கணிப்பதன் மூலமே இந்த மோசடியில் சிக்காமல் இருக்கலாம்.
÷மேலும், பொது மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளை வேறு ஒருவர் அவரது தேவைக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அனுமதிப்பவர்களையே மோசடியாளர்கள் துருப்புச்சீட்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
÷தொடர்ந்து இது போன்று அழைப்புகள் வரும் நிலையில் அது சரியானதா என ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகத்தில் வெளிநாட்டு பண பரிமாற்ற பிரிவு பொது மேலாளரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
÷செப்டம்பர் 8-ம் தேதி கோவையிலும், 9-ம் தேதி கரூரிலும் இந்த மோசடிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது என்றார் கே.ஆர். ஆனந்தா.