Nifty 09-08-2010

திங்கள், 9 ஆகஸ்ட், 2010


2010-11ஆம் நிதியாண்டில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதமாக இருக்கும் என்று இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு செய்த வெளியிடப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 விழுக்காடாக இருக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த ரிசர்வ் வங்கி இப்போது அதனை 0.2 விழுக்காடு உயர்த்தி மதிப்பீடு செய்துள்ளது. பயன்பாட்டு்ச் செலவு செய்தல் காரணமாகவும், தொழிலக உற்பத்தி வளர்ச்சியினாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கூடுதலாக அதிகரிக்கும் என்று தங்களுடைய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் உற்பத்தி 4.1 சதவீதமாக உயரும், தொழிலக உற்பத்தி 9.1 சதவீதமும், சேவைத் துறை வளர்ச்சி 9.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளது. ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் சேமிப்பின் பங்கு 35.3 சதவீதமாக இருக்கும் என்று கூறியிருந்த ரிசர்வ் வங்கி, இப்போது அது 34.7 சதவீதமாக இருக்கும் என்றும், மூலதன பெருக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 36 விழுக்காடு பங்களிக்கும் என்றும் கூறியுள்ள ஆய்வறிக்கை, தனி நபர் நுகர்வுத் தொடர்பான இறுதிச் செலவு 12 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக உயரும் என்றும் கூறியுள்ளது.இது சந்தைக்கு சாதகமாகவும் இருக்கலாம் .சந்தையில் இந்த வாரம் பவர் ,கட்டுமான நிறுவன பங்குகள் வங்கி பங்குகள் எட்ட்ரம் ஆடையலாம்.

சந்தையை பொறுத்த வரை தற்பொழுது உள்ள நிலையில் பக்கவாட்டு நகர்வுகலேயே கொண்டுள்ளது .தேசிய நிபிட்டி மேல் நிலையில் 5485 -5505 கடந்தால் மட்டுமே அடுத்த கட்ட எட்ட்ரம் சாத்தியம். கீழ் நிலையில் 5365 உடைபடாத வரை சந்தைக்கு சறுக்கல்கள் இருக்காது .

சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி செயல்பாடுகளில் இது நாள் வரை ரிலையன்ஸ் பங்கு கொள்ள வில்லை வரும் நாட்களில் ரிலையன்ஸ் நிறுவனம் இதன் செயல்பாடுகளில் பங்கு கொண்டால் நிபிட்டி புதிய எட்ட்ரங்களில் பயணிக்க வாய்ப்புள்ளது .

STOCK TO WATCH

RELIANCE
BANK OF INDIA
TATA POWER
IOB
REL POWER
JP POWER
TORRENT POWER
UNITECH
DLF
HDIL
IRB INFRA
LNT
REC
SIEMENS
REI AGRO
RASTRIYA CHEMI
YES BANK
KOTAK MAHINDRA
SHRIRAM TRANS
JSW STEEL
PUNJ LLOYD
WIPRO
CIPLA
TCS
GUJARAT STATE PETR
BHUSAN STEEL
DIVIS LAB
SINTEX
ADITYA BIRLA NUVO
ABB
ADANI ENTER
INDIA CEMEN
GAIL
JINDAL STEEL
ALSTOM PROJ
BIOCON
GMDC
STERLITE BIO
RANBAXY
APOLLO HOS
FORTIS


முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ஆர்.ஐ.எல்), அமெரிக்காவில் கார்ரிஸோ ஆயில் அண்டு காஸ் என்ற இயற்கை எரிவாயு நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை 39.20 கோடி டாலர் (சுமார் ரூ.1,800 கோடி) மதிப்பிற்கு வாங்கப் போவதாக தெரிவித்துள்ளது. சூஷேல்காஸ்' எனப்படும், பாறைகளில் துரப்பண பணிகளை மேற்கொண்டு இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஆர்.ஐ.எல். வாங்கி வருகிறது. அமெரிக்காவில் தற்போது ஆர்.ஐ.எல். வாங்குவது மூன்றாவது நிறுவனம் ஆகும். சென்ற ஏப்ரல் மாதத்தில் ஆர்.ஐ.எல். நிறுவனம் சூஷேல்காஸ்' உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அட்லஸ் எனர்ஜி நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை 170 கோடி டாலருக்கு வாங்கி இருந்தது. இதன் பிறகு, சென்ற ஜுன் மாதத்தில் வட அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஈகிள் ஃபோர்டு என்ற இயற்கை எரிவாயு வயலின் 45 சதவீத பங்குகளை 136 கோடி டாலர் மதிப்பிற்கு வாங்க ஒப்புக் கொண்டுள்ளது. சூஷேல்காஸ்' எனப்படும் இயற்கை எரிவாயு உற்பத்தி முக்கியத்துவம் பெற்று வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவின் மொத்த எரிவாயு உற்பத்தியில் இதன் பங்களிப்பு 20 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் ஓய்வு பெறவிருக்கும் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கு பதில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

71 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யமான டாடா குழுமத்தின் தலைவராக இருப்பவர் ரத்தன் டாடா. வருகிற டிசம்பர் 2012-ம் ஆண்டுடன் அவருக்கு 75 வயது பூர்த்தியாகிறது.

விரைவில் அவர் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதால் அவருக்குப் பதிலாக புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க 9 பேர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இப்போது இந்த தேர்வுக்குழு 5 பேர் கொண்ட புதிய குழுவிடம், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது.

"டாடா குழுமம் என்பது நாட்டின் முக்கியமான தொழில் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை மாற்றம் என்பது மிகவும் இயல்பாகவும் முரண்பாடுகளின்றியும் நடக்க வேண்டும் என்பதே டாடா சன்ஸின் நோக்கம்" என அந்நிறுவன செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய தலைவராக வருபவர் சர்வதேச கார்ப்பரேட் பின்னணி கொண்டவராக இருக்க வேண்டும் என டாடா குழுமம் எதிர்ப்பார்க்கிறது. அதே நேரத்தில் அவர் டாடா குடும்பத்தை சேர்ந்தவராகவோ அல்லது டாடா குழுமத்திலோ பணியாற்றுபவராகவோ தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. அதே போல அவர் எந்த நாட்டையும் சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்றும் டாடா குழுமம் கூறியுள்ளது.

ரத்தன் டாடாவின் உறவினரான நோயல் டாடா சமீபத்தில்தான் டாடாவின் ட்ரெண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கு இவர் பெயரும் பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் பதவி உயர்வு மூலம் அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வோடபோன் முன்னாள் தலைவர் அருண் சரின், பெப்ஸிகோ சிஇஓ இந்திரா நூயி, யூனிலீவரின் கேகி டடிசேத், ரினால்ட்டின் கார்லோஸ் கோஸ்ன் ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.

டாடா குழும தலைவர் பதவிக்கான நபரைத் தேர்வு செய்ய இதுபோன்ற கமிட்டி அமைக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த 5 பேர் கமிட்டியில் ரத்தன் டாடா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இதன் வழிகாட்டியாக ரத்தன் இருப்பாராம்.

கடந்த 140 ஆண்டு காலமாக டாடா குழுமத்தின் தலைமை பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே இருந்து வந்தனர். இப்போது வெளிநபரைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பார்ஸி அல்லாத ஒருவர் தலைமைப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

1991ம் ஆண்டு டாடா குழும தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றார். அன்றைக்கு நிறுவனத்தின் வருவாய் ரூ.8,553 கோடி. ஆனால் அதன் பிறகு டாடா அபார வளர்ச்சி பெற்றது. கிட்டத்தட்ட 40 மடங்கு அதிக வருவாய் ஈட்டியது ரத்தன் டாடா நிர்வாகத்தில். கடந்த 2008-2009ம் ஆண்டு டாடா குழும வருவாய் ரூ 3.46 லட்சம் கோடி!.

டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனின் ஒரே மகளான லட்சுமி வேணுவை மணக்கவிருக்கிறார், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகன் ரோஹன்.

கார்னல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி, தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி செய்து வருகிறார் ரோஹன். முன்பு இவர் பெங்களூர் பிஷப் காட்டன் ஆடவர் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

டிவிஎஸ் நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசனின் ஒரே மகளான லட்சுமி, யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். பின்னர் வார்விக் பல்கலைக்கழகத்தில் தயாரிப்பு நிர்வாகம் தொடர்பாக பிஎச்டி ஆய்வுப் படிப்பை முடித்தவர். சென்னையில் உள்ள சிஷ்யா பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்.

டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் கிளேட்டன் (ஆட்டோ உதிரி பாக தயாரிப்புப் பிரிவு) மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனங்களின் உத்திகளை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்று செயல்படுத்தியவர் லட்சுமி.

இந்த திருமண பந்தம் குறித்து நாராயணமூர்த்தி கூறுகையில், லட்சுமி அருமையான பெண். இந்த திருமணம் எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

திருமணத்தை எப்போது நடத்துவது என்பதை ரோஹனும், லட்சுமியும் பேசி முடிவெடுக்கட்டும் என விட்டு விட்டேன். இது அவர்களது பொறுப்பு. அவர்கள் முதிர்ச்சியானவர்கள், எனவே அவர்களது முடிவுக்கே விட்டு விட்டேன் என்றார் நாராயணமூர்த்தி.

தற்போது ரோஹன் சென்னைக்கு வந்துள்ளார். லட்சுமி குடும்பத்தினரை பார்ப்பதற்காக அவர் சென்னையில் முகாமிட்டுள்ளார்

நாட்டின் 2வது மிகப் பெரிய கட்டுமான தொழில் நிறுவனமான யூனிடெக் லிமிடெட் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1299 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. 2010-11 ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 3 மில்லியன் சதுரடிக்கு மேலான நிலங்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கிடைத்த வருமானம் ரூ.1300 கோடியை நெருங்கி உள்ளது. 2009-10 ம் நிதியாண்டில் யூனிடெக் நிறுவனம் 16.6 மில்லியன் சதுரடி நிலத்தை விற்பனை செய்துள்ளது. அதன் மூலம் கிடைத்த வருமானம் ரூ.7033 கோடியாகும். ஆனால் இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே ரூ.1299 கோடிக்கு வீட்டடி மனைகள் விற்பனையாகி உள்ளது. இந்த காலாண்டில் 2.61 மில்லியன் சதுரடி நிலங்களை குடியிறுப்புக்கள் அமைப்பதற்கும், 0.4 மில்லியன் சதுரடி நிலங்களை வர்த்தக நிறுவனங்கள் அமைக்கவும் விற்பனை செய்துள்ளது. சூழ்நிலையின் அடிப்படையில் டில்லியில் மட்டும் 71 சதவீதம் இடங்கள் விற்பனைக்காக புக்காகி உள்ளது குறிப்பிடத்தக்கது

கடந்த வாரத் துவக்கத்தில் சந்தை மேலே இருந்தாலும், வியாழன் மற்றும் வெள்ளியில் சந்தைகள், சரிவிலேயே இருந்தன. சரிவு மிக குறைவானது என்றாலும், அது ஏற்பட்டதற்கு இந்திய அளவு காரணங்கள் அல்ல என்பது, ஒரு கவலைக்குரிய விஷயம். வியாழனும், வெள்ளியும் சேர்ந்து, மும்பை பங்குச் சந்தை, 73 புள்ளிகள் குறைந்து முடிந்தது.வெள்ளியன்று மட்டும் மும்பை பங்குச் சந்தை, 29 புள்ளிகள் குறைந்து, 18 ஆயிரத்து 144 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, எட்டு புள்ளிகள் குறைந்து, 5,439 புள்ளிகளுடனும் முடிந்தது.
சந்தை சரிய என்ன காரணம்?:சந்தை சரியக் காரணம், உலக நடப்புகளே. அமெரிக்காவில் வேலை வாய்ப்பு டேட்டா, அவ்வளவு சாதகமாக இல்லாததும், உலகளவில் கூடி வரும் கோதுமை விலையும், சந்தை சரிவிற்கு காரணமாக இருந்தது. இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், விலை குறைந்ததும் ஒரு காரணம். சந்தை வியாழனும், வெள்ளியும் குறைந்தாலும், 18,000க்கு மேலேயே இருப்பது ஒரு சந்தோஷம் தான்.சாப்ட்வேர் பங்குகள், இந்த வாரத் துவக்கத்தில் சந்தை கூட வழி வகுத்தன. உலகின் பெரிய சாப்ட்வேர் கம்பெனிகளில் ஒன்றான காகினிசென்ட் கம்பெனியின் காலாண்டு வருமானம், மிகச்சிறப்பாக இருந்தது தான்.

ரத்தன் டாடாவை தொடர்ந்து...: டாடா குழுமத்தை இதுவரை, ரத்தன் டாடா தலைமை ஏற்று நடத்தி வந்தார். அவருக்கு பின் யார் தலைமை ஏற்று நடத்துவது என்ற தேடல் ஆரம்பித்துள்ளது. மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள, டாடா குழுமங்களின் தலைவராக வருவது, ஒரு பெரிய பொறுப்பு தான். வருபவர், சந்தைக்கும் மகிழ்ச்சி தருபவராக இருக்க வேண்டும்.

என்.டி.சி.,: வியாபாரங்கள் குறைந்ததாலும், போட்டி இருந்ததாலும், ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த என்.டி.சி.,க்கு கடைசியில் கைகொடுப்பது, அக்கம்பெனி மும்பையில் பிரதான இடங்களில் வாங்கிப் போட்டிருந்த நிலங்கள் தான்.அதாவது, ஒரு காலத்தில் தற்போதைய மும்பையின் நடுப்பகுதியான பரேலில் தான், மில்கள் இருந்தன. தற்போது, அவைகளில் பல மூடப்பட்டு விட்டதால், அவையெல்லாம் குடியிருப்புக்காக விலைக்கு வருகின்றன.அந்த நிலங்களை விற்கும் வகையில், என்.டி.சி.,க்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கிடைக்கப் போகிறது. அரசின் வருமானம் கூடுகிறது.

கோல் இந்தியா புதிய வெளியீடு: கோல் இந்தியா நிறுவனம், தன் புதிய வெளியீட்டிற்கான விண்ணப்பத்தை (அப்ளிகேஷனை) அடுத்த வாரம், செபிக்கு அனுப்பும் என தெரிகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், இவ்வெளியீடு விரைவில் வரலாம். தன் மதிப்பில் 10 சதவீதம் பங்குகளை விற்க நினைக்கிறது. இதன் மூலம், 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை, இந்த அரசு நிறுவனம் திரட்டும்.ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவும், தன் தொடர் வெளியீட்டை வெளியிட ஆயத்தங்கள் நடக்கின்றன.சந்தையில் தற்போது வெளிவரும் புதிய வெளியீடுகளுக்கு, சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய, ஒரு நாள் அதிகம் அவகாசம் கொடுக்கப்படுகிறது. இது, அவர்களுக்கு வசதியாக இருக்கும். ஏனெனில், மற்றவர்கள் எப்படி முதலீடு செய்கின்றனர் என்பதை பார்க்க அவகாசம் கிடைக்கும்.

எல்.ஐ.சி.,யின் வளர்ச்சி: தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வந்ததால், எல்.ஐ.சி.,யின் மார்க்கெட் ஷேர் குறைந்து வந்தது. ஆனால், இந்தாண்டு 3.9 கோடி பாலிசிகள் விற்று, மார்க்கெட் ஷேரில் 73 சதவீதம் அளவு வைத்திருக்கிறது. இது கடந்தாண்டை விட, 10 சதவீதத்திற்கு மேலாகக் கூடுதலாகும். பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்துள்ள அரசு நிறுவனங்களில், எல்.ஐ.சி.,யும் ஒன்று.

பணவீக்கம்: 'பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, தேவையான, போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது' என, ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னர் தெரிவித்துள்ளார். இதை, சந்தை மறைமுகமாக இனிமேல் வட்டி விகிதங்கள் கூட்டப்பட மாட்டாது என்று எடுத்து கொண்டுள்ளது. இது சந்தைக்கு ஒரு சாதகமான அறிவிப்பு என்று கருதப்படுகிறது.வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தையில் பெரிய சரிவுகள் வரவும், உடனடியாக பெரிய முன்னேற்றங்கள் வரவும் வாய்ப்பில்லை.

- சேதுராமன் சாத்தப்பன் -

இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேசன் (ஐஆர்சிடிசி), ரயில் டிக்கட்களை ஒரே நாளி் அதிகளவில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : கடந்த 3ம் தேதி, இந்த சாதனை நிகழ்ந்ததாகவும், அன்றைய ஒரு நாளில் மட்டும், ரூ. 25.16 கோடி அளவிற்கு வருவாய் ஈட்டியுள்ளதாகவும், 5.49 லட்சம் பயணிகள், 3,16,412 டிக்கட்களை முன்பதிவு செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான அம்சம் யா‌தெனில், அன்றைய தினத்தின், நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 1மணி வரையிலான ஒரு மணி நேர கால அளவில், 27,782 டிக்கட்கள், தங்களது இணையதளம் மூலம் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சதவீதத்தின் அடிப்படையில் 42 சதவீத வளர்ச்சி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம், டிக்கெட்கள் ஏஜென்ட்கள் மூலம் அதிகளவில் முன்பதிவு செய்யப்படுவதால், பயணிகளுக்கு டிக்கெட்கள் கிடைக்கப்பெறுவதில்லை, எனும் புகார்கள் வலுக்க‌வே, இந்திய ரயில்வே துறை காலை 8 மணியிலிருந்து 9 மணிவரை இதற்கு தடை விதித்தது. இதன்பின், இப்போது, ஐஆர்சிடிசியிடமிருந்து டிக்கெட் விற்பனையை முழுவதுமாக பறிக்க தி்ட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிஜன்ட் டெக்னாலஜிஸ், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 17.22 கோடி டாலரை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலாண்டை விட 22 சதவீதமும், முந்தைய ஜனவரி-மார்ச் காலாண்டை விட 13.7 சதவீதமும் அதிகமாகும். நடப்பாண்டு ஏப்ரல்-ஜுன் மாத காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய், சென்ற ஆண்டின் இதே காலத்தை விட 14.50 கோடி டாலர் அல்லது 42 சதவீதம் உயர்ந்து 110.50 கோடி டாலராக அதிகரித்துள்ளது. மேலும் முந்தைய காலாண்டை விட 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஏப்ரல்-ஜுன் மாத காலத்தில் இந்நிறுவனம் புதிதாக 3,200 பணியாளர்களை நியமித்துள்ளது. இதனையடுத்து சர்வதேச அளவில் இந்நிறுவன பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 88,700-ஆக உயர்ந்துள்ளது.



ஜப்பானின் டிஜிட்டல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கேனான், நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் அதன் விற்பனையை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை வருமானம் ரூ.1200 கோடியாகும். இதற்காக கேனான் நிறுவனம் செலவிட்டது தொகை ரூ.110 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கேனான் நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ.840 கோடியாக இருந்தது. இந்த ஆண்டின் முதல் பாதியில் விற்பனையில் 56 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பதாக கேனான் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சிறு நகரங்களில் 45 சதவீதம் அளவிற்கு விற்பனை நடைபெற்று வருவதாக இந்தியாவிற்கான கேனான் நிறுவன தலைவர் கென்சகு கோனிஷி தெரிவித்துள்ளார்.



சென்னை: கடந்த ஆண்டு மார்ச் மாதம், கடன் அட்டைகளை அறிமுகப்படுத்திய தன்லட்சுமி வங்கி, இவ்வாண்டு சில்லரை கடன் வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளது. நாடு முழுவதும் 14 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள தன்லட்சுமி வங்கி, கடந்த மார்ச் 31 வரை, 5,000 கோடி ரூபாய்க்கு அட்வான்ஸ் தந்துள்ளது.

நிர்வாக இயக்குனர் அமிதாப் சதுர்வேதி கூறியதாவது: இப்புதிய முயற்சியின் கீழ், வங்கி பலவிதமான கடன் வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாகனக் கடன், நகைக் கடன் மட்டுமல்லாமல், வீடு, மனை, படிப்பு, சொத்து மீது கடன்களும் வழங்கப்படும். மொத்த கடன் வழங்கலில் 30 சதவீதம், இம்முயற்சி மூலம் இந்த ஆண்டு அடைய உள்ளோம். இவ்வாறு அமிதாப் சதுர்வேதி கூறினார்.

]சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்று கூடி தன்னிச்சையாக சிமென்ட் விலையை உயர்த்தி வருவதாக கட்டுமான நிறுவனங்கள் கூட்டமைப்பு (பி.ஏ.ஐ.,), மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளது.

சிமென்ட் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கட்டுமான நிறுவனங்கள் கூட்டமைப்பு(பி.ஏ.ஐ.,), மத்திய விலை ஒழுங்குமுறை கமிட்டியிடம்(சி.சி.ஐ.,) புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் கூறியிருப்பதாவது: சிமென்ட் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதன் காரணமாக கட்டுமான தொழில், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. அதிரித்துக் கொண்டே செல்லும் சிமென்ட் விலையால் கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு, சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களே காரணம். முன்னணியில் உள்ள பிர்லா, கிரசிம், ஏசிசி, அம்புஜா உட்பட 11 நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, சிமென்ட் விலையை தகுந்த காரணமின்றி உயர்த்தி வருகின்றன. மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக விலை நிர்ணயம் செய்து கொள்கின்றன. இதன் காரணமாக, கட்டுமானத் தொழிலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


ஜனவரியிலிருந்து மார்ச் மாதம் வரை ஒரு மூட்டை சிமென்ட் டில்லியில் 231 ரூபாய்க்கும், மும்பையில் 267க்கும், கோல்கட்டாவில் 216க்கும் விற்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒரு மூட்டை சிமென்ட் மூட்டையின் விலை டில்லியில் 238 ரூபாயாகவும், மும்பையில் 273க்கும், கோல்கட்டாவில் 233 ரூபாயாகவும் விற்பனையானது. சிமென்ட் விலை உயர்வால், கட்டுமானப் பொருட்களின் விலையும் செயற்கையாக உயர்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், கட்டுமானத் துறை பெரும் பின்னடைவை சந்திக்கும். எனவே, விலை நிர்ணயத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; சிமென்ட் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக கிரசிம் சிமென்ட் நிறுவன இயக்குனர் ஆதிஷ் குப்தா கூறுகையில், 'சிமென்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்துவதற்கு இடமில்லை. எதிர்காலத்தில் திடீரென விலை குறையவும் சாத்தியமில்லை' என்றார்.
சிமென்ட் நிறுவனங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பாங்கர் கூறியதாவது: சிமென்ட் விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களில் சிமென்ட் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே, இந்த புகாரை மறுக்கிறேன். இவ்வாறு பாங்கர் கூறினார்.

இதுகுறித்து மத்திய கம்பெனிகள் ஒழுங்குமுறை கமிட்டி அதிகாரி கூறுகையில், 'இப்புகார் குறித்து விசாரணை நடத்தப்படும்' என்றார்.

இந்தியாவின் முன்னணி அக்ரோ கெமிக்கல், பெர்டிலைசர் மற்றும் விதைகள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான தனுகா அக்ரிடெக் நிறுவனம், சில்லரை வணிகத்தில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தனுகா அக்ரிடெக் நிறுவன தலைவர் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : பொன்விழா கொண்டாடும் தங்கள் நிறுவனம், சில்லரை வணிகத்தில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக, சில்லரை வர்த்தக மையங்களை நா‌டு முழுவதும் நிறுவி வருவதாகவும் ‌அவர் தெரிவித்தார். குஜராத்தில், கடந்த வாரத்தில் இரண்டு சில்லரை வர்த்தக மையங்கள் திறக்கப்பட்டதாகவும், உத்தரபிர‌தேச மாநிலத்தில் 7 சில்லரை விற்பனை மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், குஜராத்தில், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மேலும் 10 சில்லரை வர்த்தக மையங்கள‌ை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உத்தரபி‌ரதேசத்தில் இயங்கி வரும் அனைத்து சில்லரை விற்பனை மையங்களும் நிறுவனத்திற்கு சொந்தமானவை என்றும், குஜராத்தில் இயங்கி வரும் மையங்கள் பிரான்சசைஸ் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன என்றும், இன்னும் 2 ஆண்டுகளில்,நாடு முழுவதும் சில்லரை விற்பனை மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விவசாய நுணுக்கங்களை விவசாயிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம், புதிய திரைப்படங்கள், புத்தகங்கள், இணையதளம் மூலம் வல்லுநர்கள் எளிதாக விவசாயிகளுடன் கலந்துரையாடும் வசதியையும் விரைவில் விவசாயிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க தங்கள் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அகர்வால், அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான காக்னிஸன்ட், டிசிஎஸ், இன்போஸிஸ் போன்றவை ஐரோப்பாவில் முன்னணியில் உள்ளன. ஈக்வா டெர்ரா எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய சர்வேயின்படி, ஐரோப்பாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்திய நிறுவனமான காக்னிஸன்ட். வாடிக்கையாளர் திருப்தி, அணுகுமுறை, திறமையான நிர்வாகம் போன்றவற்றின் அடிப்படையில் 79 சதவீத புள்ளிகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. 78 புள்ளிகளுடன் அமெரிக்காவின் கம்ப்யூட்டா சென்டர் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. டிசிஎஸ் மற்றும் இன்போஸிஸ் போன்றவை முறையே 75 மற்றும் 74 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, டெபாசிட் வட்டி விகிதத்தை, 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து, அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : ஓராண்டு மற்றும் அதற்கு‌ மேற்பட்ட கால அளவிலான டெபாசி்ட்களுக்கு 0.5 சதவீதம் அளவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதாவது ஓராண்டு அல்லது 2 ஆண்டுகளுக்கும் குறைவாவ டெபாசிட்களுக்கு 7 சதவீதமும், 2 முதல் 3 ஆண்டுகள் காலஅளவிலான டிபாசிட்களுக்கு 7.25 சதவீதமும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டெபாசிட்களுக்கு 7.50 சதவீத வட்டி விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான டிபாசிட் விகிதம் 0.75 சதவீத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரையிலான நிதியாண்டில், டிபாசிட்கள் மூலம், ரூ. 1,09,461 கோடி ஈட்டியுள்ளதாகவும், இதில் 67 சதவிதம் குறுகிய கால டெபாசிட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல், கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் லார்சன் - டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.6,500 கோடி மதிப்பிற்கு புதிய ஆர்டர் கிடைத்துள்ளது.
ஜெய்பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் நிறுவனம், உத்தரபிரதேச மாநிலத்தில் தலா 660 மெகா வாட் திறனில் மூன்று மின் திட்டங்களை அமைக்க உள்ளது. இந்த மின் திட்டங்களுக்கு தேவையான மின் சாதனங்களை அளித்தல், திட்ட உருவாக்கம் மற்றும் பாய்லர் - டர்பைன் ஜெனரேட்டர் தொகுப்புகளை நிறுவி செயல்படுத்துவதற்காக இந்த ஆர்டர் கிடைத்துள்ளது.


HAPPY TRADING
BULLMARKETINDIAA

0 கருத்துகள்:

கருத்துரையிடுக