டெல்லி: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 3ஜி ஸ்பெக்ட்ரம் குறித்த விளம்பரங்கள் இடம் பெறுகின்றன.
3ஜி ஸ்பெக்ட்ரத்தின் சிறப்பம்சங்களுடன் கூடிய விளம்பரங்களை தெற்கு நோக்கி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இடம்பெறச் செய்யவுள்ளனர்.
வினைல் விளம்பர போர்டுகள் மூலம் இந்த விளம்பரங்கள் வைக்கப்படவுள்ளன. ரயில்களின் உள்ளேயும், வெளியிலும் இவை இடம் பெறும்.
இந்த விளம்பரங்களை இடம் பெறச் செய்வதற்காக சென்னை , பெங்களூர் , திருவனந்தபுரம் ராஜ்தானி ரயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனவாம்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 17 பெட்டிகள் வரை இருக்கும். அனைத்தும் இந்த 3ஜி விளம்பரங்கள் இடம் பெறப் போகின்றன.
இந்த விளம்பரங்கள் மூலம் ஒரு பெட்டிக்கு ரூ. 33 லட்சம் வரை ரயில்வே துறைக்கு வருவாய் கிடைக்குமாம்.
பிரிட்டனிலிருந்து முக்கிய பணிகளை இந்தியாவுக்கு மாற்றியது பார்க்லேஸ்
லண்டன்: பிரிட்டனில் புதிய கன்சர்வேடிவ் அரசு பதவியேற்ற கையோடு, வங்கித் துறை கட்டுப்பாடுகள் மற்றும் வரி விதிப்பை தீவிரமாக்கியுள்ளது. இதனால் பிரிட்டனின் பிரபலமான பார்க்லேஸ் வங்கி, தனது செயல்பாடுகளை இந்தியா வுக்கு மாற்றிக் கொள்ளத் துவங்கியுள்ளது.
முதல் கட்டமாக, பிரிட்டனின் நார்த்தாம்ப்டன் நகர அலுவலகத்திலிருந்து 140 முக்கியப் பணிகளை இந்தியாவுக்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது பார்க்லேஸ்.
இதுகுறித்து பார்க்லேஸ் வங்கியின் சிஇஓ ஜான் வார்லி கூறுகையில், "பிரிட்டனில், குறிப்பாக லண்டனில் அதிகரிக்கும் வரி விதிப்புகள் மற்றும் நெருக்கடிகள் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இத்தகைய வரிவிதிப்புகள் லண்டனை கடும் பாதிப்புக்குள்ளாக்கும்.
இந்தியா எங்களுக்கு வசதியான நாடாக உள்ளது. ஏற்கெனவே இந்தியர்களுக்கு சேவையைத் தொடங்கியுள்ளோம். பல நாடுகளில் என்ஆர்ஐ பிரிவைக் கூடத் துவக்கியுள்ளோம்.
இந்தியாவில் எமது நடவடிக்கையை அதிகரிக்கக் காரணம் சிக்கனம்தான் என்றாலும், இந்தியாவையே இனி சர்வதேச சேவை மையமாக்க மாற்ற விரும்புகிறோம்", என்றார்.
SENSEX : 35962.93 * 33.29 (0.09 %)
6 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக