அமெரிக்க பொருளாதாரம் 5.7 சதவீதமாக வளர்ச்சி

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

புதுடில்லி: சென்ற 2009ம் ஆண்டு, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, இந்த காலகட்டத்தில் அமெரிக்க பொருளாதாரம் 4.6 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், எதிர்பார்ப்புகளையும் மீறி அமெரிக்க பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கு பிறகு தற்போதுதான் அங்கு இந்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பொருளாதார சரிவு காரணமாக, சென்ற 2009ம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில், அமெரிக்க பொருளா தாரத்தில் சரிவு ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில், மூன்றாவது, நான்காவது காலாண்டு களில் இதில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்தத்தில் சென்ற 2009-ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரத்தில் 2.4 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

பெங்களூர் வேண்டாம்; பஃபல்லோ போதும்!-இது ஒபாமா
வாஷிங்டன்: தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை முழுமையாக நிறைவேற்றியுள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா.

அமெரிக்க வேலைகளை வெளிநாட்டில் கொடுத்துச் செய்வதற்கு பதில், அதை அமெரிக்காவிலேயே செய்து, வேலை வாய்ப்புகளை அதிகரிப்போம் என ஒபாமா கூறியிருந்தார்.

இப்போது அதை செயல்படுத்த ஆரம்பித்துள்ளார். இது இந்தியாவுக்கு பாதகமானது என்றாலும், அமெரிக்கப் பார்வையில் அவர்களுக்கு பெரும் நன்மை தரக்கூடியதாக உள்ளது என பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நிறுவனங்கள் பெங்களூர், சென்னை, புனே, ஹைதரபாத் போன்ற இந்திய நகரங்களில் அவுட்சோர்ஸிங் மூலம் தங்கள் நிறுவனங்களுக்கான பணிகளைச் செய்து கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு வரிச் சலுகையும் கொடுத்து வந்தது அமெரிக்கா.

இந் நிலையில் வெளிநாடுகளில் அவுட்சோர்ஸிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகை கிடையாது என திட்டவட்டமாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

'இனி பெங்களூருக்கு நோ சொல்லுங்க, பஃபல்லோ சிட்டிக்கு யெஸ் சொல்லுங்க' எனும் புதிய முழக்கம் அமெரிக்காவில் ஒலிக்கத் துவங்கியுள்ளது. அதுவே ஒபாமா அரசின் கொள்கையாகவும் உள்ளதால், அமெரிக்க நிறுவனங்கள் உடனடியாக செயல்படுத்த துவங்கியுள்ளன.

அதன்படி முழுக்க முழுக்க அமெரிக்காவில் இயங்கும், அனைத்து வேலைகளையும் அமெரிக்காவிலேயே செய்து கொள்ளும் நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச் சலுகை கிடைக்குமாம். இதை ஒபாமா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அவர் கூறியுள்ளதாவது:

"வெளிநாட்டில் பணிகளைச் செய்து கொண்டு , பெரும் லாபம் சம்பாதித்து, அமெரிக்காவில் வரிச் சலுகையை அனுபவிக்கும் நிறுவனங்களுக்கான சலுகைகள் அனைத்தையும் இன்றுடன் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த நிறுவனங்களுக்கு வேண்டிய அளவு அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த வரிச்சலுகைகள் மக்களின் பணம்தான். அதை வீணடிக்க மாட்டோம்.

இதற்குமுன், அமெரிக்காவின் பஃபல்லோ சிட்டியைவிட, இந்தியாவின் பெங்களூரில் ஒரு புதிய வேலையை உருவாக்கினால் செலவு குறைவு என்ற முட்டாள்தனமான வரித் திட்டம் இருந்தது. இப்போது அதை அடியோடு மாற்றியுள்ளோம்... " என்று கூறியுள்ளார்.

அமெரிக்க நிறுவனங்களில் வேலை இழக்கும் நபர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ள நிலையில், ஒபாமாவின் இந்தத் திட்டம் உடனடிப் பலன் தரும் என நம்புகின்றனர் அமெரிக்கர்கள்.

எச்-1பி விசா வெட்டு: 'வேலை'யை ஆரம்பித்தது ஒபாமா அரசு!
வாஷிங்டன்: நிதி நெருக்கடியிலிருந்து தப்பிக்க அமெரிக்க அரசிடம் இருந்து உதவி பெறும் நிறுவனங்கள், எச்-1பி விசாக்களை பெற்று, வெளிநாட்டவர்களை வேலைக்கு அழைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்தியப் பணியாளர்கள் பெருமளவில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலையால் அமெரிக்கப் பொருளாதாரமே முடங்கியுள்ளது. எங்கும் வேலை இழப்புகள், நிறுவன மூடல், வங்கி மோசடி என கட்டுப்பாடிழந்த நிலையில் உள்ளது அமெரிக்கப் பொருளாதாரம்.

இதைச் சீர் செய்வதற்காக, பொருளாதார சலுகை திட்ட மசோதா ஒன்று, அமெரிக்க செனட் சபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நிதி உதவி பெறலாம்.

ஆனால் இப்படி நிதி உதவி பெறும் நிறுவனங்கள் எச்-1 பி விசாக்கள் மூலம் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்தமும் நேற்று அமெரிக்க செனட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சட்டப்படி இனி, அமெரிக்க அரசிடம் உதவி நிதி பெறும் நிறுவனங்கள், அமெரிக்கர்களை மட்டுமே வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். மிகமிக அவசியம் எனக் கருதினால் மட்டுமே வெளிநாட்டவர் ஓரிரிருவரை பணியில் அமர்த்திக் கொள்ளலாம் என அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த சட்டத் திருத்தம் மற்ற நாட்டுப் பணியாளர்களை இந்தியர்களையே அதிகம் பாதிக்கும் என்று தெரிகிறது.

அமெரிக்க நிறுவனங்களுக்கு 33 பில்லியன் வரிச்சலுகை! - ஒபாமா அறிவிப்பு!
பால்டிமோர்: சிறிய வர்த்தக நிறுவனங்கள் அதிக பணியாளர்களை, குறிப்பாக அமெரிக்கர்களை, பணியிலமர்த்தும் வகையில் புதிய நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. இதன் மதிப்பு மட்டும் 33 பில்லியன் டாலர்கள்.

இதன் மூலம் அமெரிக்காவில் 10 சதவிகித அளவுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா பதவிக்கு வந்து 1 ஆண்டு பூர்த்தியடைந்து விட்டது. இந்த ஒரு ஆண்டு காலத்தில் 60 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மாறாக புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் முயற்சி போதிய வெற்றியை அடையவில்லை.

இந்த நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிபிஓ பணிகளைத் தரும் அமெரிக்க கம்பெனிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிச் சலுகைகளை ரத்து செய்துவிட்டார் ஒபாமா. இதனால் அமெரிக்கர்களுக்கு இனி வரும் நாட்களில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் கூடுதல் வரிச் சலுகையாக 33 பில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்துள்ளார் ஒபாமா. இதன்படி புதிதாக நியமிக்கப்படும் ஒவ்வொரு பணியாளருக்கும் 5000 டாலர் புதிய சலுகை தருவதோடு, ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் சிறு நிறுவனங்கள் தங்களுக்கான வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

'இந்த சலுகை மூலம் அமெரிக்காவை மீண்டும் அதன் பழைய நிலைக்கு கொண்டுவருவதை துரிதப்படுத்துகிறோம்' என்கிறார் ஒபாமா.

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில்
முன்னணி நிறுவனங்களின் வாகனங்கள் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், முன்னணி நிறுவனங்களின் கார்கள், இரு சக்கர வாகனங்கள் விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதனால், நாட்டின் தொழில் துறை உற்பத்தி மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சியில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாருதி சுசுகி
மாருதி சுசுகி இந்தியா, நாட்டில் கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை ஒட்டுமொத்தத்தில் சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 33.3 சதவீதம் உயர்ந்து 95,649 என்ற எண்ணிக்கைகளாக அதிகரித்துள்ளது. அம்மாதத்தில், இந்நிறுவனம் 14,562 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்நிறுவனத்தின், ஆல்டோ, வேகன்ஆர், ஸென், ஸ்விஃப்ட், ரிட்ஸ் மற்றும் ஏ&ஸ்டார் ஆகிய வகை கார்கள் விற்பனை 24.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில், இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 31.8 சதவீதம் உயர்ந்து 8,26,592&ஆக அதிகரித்துள்ளது.
ஹ¨ண்டாய் மோட்டார்
இந்தியாவில், கார்கள் ஏற்றுமதியில் முதலிடத்திலும், தயாரிப்பில் இரண்டாவது இடத்திலும் உள்ள ஹ¨ண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனையில் சென்ற ஜனவரி மாதத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை 40.8 சதவீதம் (21,016 எண்ணிக்கைகள்) அதிகரித்து 29,601&ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 1998&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனம் சான்ட்ரோ காரை அறிமுகம் செய்தது. அதனையடுத்து, அவ்வாண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார்கள் விற்பனை ஓரளவிற்கு அதிகரித்திருந்தது. அதன் பிறகு, சென்ற ஜனவரி மாதத்தில்தான் இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை 29,600 என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி
சென்ற ஜனவரி மாதத்தில், இந்நிறுவனம் 23,034 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2009&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் (16,155) ஒப்பிடும்போது ஏற்றுமதியில் 42.60 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்ற ஜனவரி மாதத்தில் இந்நிறுவனம், உள்நாடு மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டு வகையிலுமாக 52,635 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 41.60 சதவீதம் அதிகமாகும்.
இது குறித்து ஹ¨ண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) அரவிந்த் சக்சேனா கூறும்போது, Òகடந்த 2008&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு மூன்று முறை சலுகை திட்டங்களை அறிவித்தது. பாரத ரிசர்வ் வங்கியும், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதுபோன்ற காரணங்களால், மோட்டார் வாகனங்கள் விற்பனையில் விறுவிறுப்பு ஏற்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் நிறுவனத்தின் கார்கள் விற்பனையில் உள்நாட்டில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளதுÓ என்று தெரிவித்தார்.
இரு சக்கர வாகனங்கள்
இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,25,578 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற 2009&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, இவற்றின் விற்பனையில் 34 சதவீதம் (93,729 எண்ணிக்கைகள்) வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டில் இந்நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 37.3 சதவீதம் உயர்ந்து 79,729 என்ற எண்ணிக்கையிலிருந்து 1,09,504&ஆக அதிகரித்துள்ளது. இதே மாதத்தில், இந்நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்து 16,074&ஆக வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை 11,00,453 என்ற எண்ணிக்கையிலிருந்து 12,34,632&ஆக உயர்ந்துள்ளது.
நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் (466 எண்ணிக்கைகள்) சுமார் நான்கு மடங்கு அதிகரித்து 1,710&ஆக உயர்ந்துள்ளது.
மகிந்திரா & மகிந்திரா
சென்ற ஜனவரி மாதத்தில், மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்தின் மோட்டார் வாகனங்கள் விற்பனை இதுவரை கண்டிராத வகையில் 67.4 சதவீதம் அதிகரித்து 17,320 என்ற எண்ணிக்கையிலிருந்து 28,988&ஆக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் ஆகியவற்றின் விற்பனையிலும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் (மோட்டார் வாகனப் பிரிவு) பவான் கோயங்கா தெரிவிக்கையில், Òநிறுவனத்தின் தயாரிப்புகள் தரத்தில் சிறந்து விளங்குகின்றன. இந்நிலையில், நாட்டில் வாகன கடனிற்கான வட்டி விகிதம் குறைவாக இருப்பது, வாகனங்கள் விற்பனைக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளதுÓ என்று கூறினார்.

ஐ.டி.சி. நிறுவனம்

பல்வேறு மாற்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி. நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. நீண்ட கால முதலீட்டிற்கு இதன் பங்குகள் ஏற்றவை.

கிரண் காப்தா சோம்வான்ஷி
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
ஐ.டி.சி. நிறுவனம், சிகரெட், நுகர்பொருள்கள், ஹோட்டல்கள், காகிதம் மற்றும் அட்டைகள், வேளாண் பொருள்கள் என பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
நாட்டில் சிகரெட் வர்த்தகத்திற்கு அதிக எதிர்ப்பு இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, இந்நிறுவனம் இதர பிரிவுகளின் வாயிலான வணிகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இருப்பினும், இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில், சிகரெட் வர்த்தகத்தின் வாயிலான வருவாய் 45 சதவீத அளவிற்கும், நிகர லாபத்தில் 85 சதவீத அளவிற்கும் உள்ளது. இப்பிரிவு, ஆண்டுக்கு 9&10 சதவீத அளவிற்கு வளர்ச்சி கண்டு வருகிறது.
உணவு பொருள்கள்
இந்நிறுவனத்தின் நுகர்பொருள்கள் பிரிவு, கடந்த ஒரு சில ஆண்டுகளாக இழப்பை கண்டு வருகிறது. இருப்பினும், அளவின் அடிப்படையிலான வர்த்தகம் அதிகரித்து வருவதால், நீண்ட கால அடிப்படையில் இப்பிரிவின் வாயிலான வருவாய் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்கள், ஆரோக்கிய பராமரிப்பு பொருள்கள் போன்றவற்றின் வாயிலான வருவாய் நல்ல அளவில் அதிகரித்து வருகிறது.
அண்மையில், இந்நிறுவனம் அதன் நுகர்பொருள்களின் விலையை உயர்த்தியது. இதனால், லாப வரம்பு மேம்பட்டுள்ளதுடன், வரும் ஆண்டுகளில் இப்பிரிவின் வாயிலான இழப்பும் குறைந்துவிடும் என்ற மதிப்பீடும் உள்ளது.
ஹோட்டல் வர்த்தகம்
ஐ.டி.சி. நிறுவனத்தின் ஹோட்டல் பிரிவு தற்பொழுது மேம்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்கநிலையால், விருந்தோம்பல் துறையில் மந்தநிலை ஏற்பட்டு இருந்தது. தற்போது, இத்துறை முன்னேற்ற பாதைக்கு திரும்பி வருகிறது. நிறுவனத்தின் ஹோட்டல்களில் தங்குவோரின் எண்ணிக்கை 60 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்த நிலையில், இந்நிறுவனம் ஹோட்டல் அறைகளுக்கான கட்டணத்தை 15&20 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனால், இப்பிரிவின் வாயிலான வருவாயும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இவ்வாண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் மற்றும் 2011&ஆம் ஆண்டில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் போன்றவற்றால், இந்நிறுவனத்தின் ஹோட்டல் அறைகளில் தங்குவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி காணும்.
ஐ.டி.சி. நிறுவனத்தின் காகிதம், காகித அட்டைகள் மற்றும் பேக்கேஜிங் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் பிரிவும் சிறப்பான அளவில் மேம்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, இந்நிறுவனம் இப்பிரிவில் அதிக அளவில் முதலீடு மேற்கொண்டுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் காகித கூழ் உற்பத்தி திறன் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் வேளாண் வணிக பிரிவும் நல்ல அளவில் செயல்பட்டு வருகிறது.
நிதி நிலை
ஐ.டி.சி. நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர விற்பனை, கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஆண்டுக்கு 19 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. சென்ற 2008&09&ஆம் நிதி ஆண்டில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.16,500 கோடியாக இருந்தது. மேலும், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபமும் ஆண்டுக்கு 16 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு, சென்ற நிதி ஆண்டில் ரூ.3,300 கோடியாக உயர்ந்திருந்தது.
இந்நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு சிறப்பான அளவில் டிவிடெண்டு வழங்கி வருகிறது. இதே காலத்தில், இந்நிறுவனம் வழங்கும் ஒட்டுமொத்த டிவிடெண்டு ஆண்டுக்கு 23 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது.
ஐ.டி.சி. நிறுவனத்தின் பங்கு ஒன்று தற்பொழுது ரூ.250 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. இது, இந்நிறுவனத்தின் ஒரு பங்கு சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது 25 மடங்குகள் என்ற அளவில் உள்ளது. இந்நிறுவனத்தின் நிகர விற்பனையுடன் ஒப்பிடும்போது, இதன் பங்குகளின் சந்தை மதிப்பு ஆறு மடங்குகளுக்கும் அதிகமாக உள்ளது. அதேசமயம், நுகர்பொருள்கள் வணிகத்தில் ஈடுபட்டு வரும் இதர நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு குறைவாகவே உள்ளது.
பரிந்துரை
நிறுவனம், புகையிலை தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டு, இதர வணிக நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளது.
மேற்கண்டவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில், இந்நிறுவனத்தின் பங்குகளில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம்.

அசோக் லேலண்டு நிகர லாபம் 450% வளர்ச்சி

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
சென்னை
இந்துஜா குழுமத்தின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான அசோக் லேலண்டு, சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.104.63 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 450 சதவீதம் (ரூ.18.86 கோடி) அதிகமாகும்.
இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை 81 சதவீதம் அதிகரித்து ரூ.1,004.49 கோடியிலிருந்து ரூ.1,815.53 கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் 47 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.136.68 கோடியிலிருந்து ரூ.201.01 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இதே காலத்தில் இந்நிறுவனத்தின் நிகர விற்பனை 10 சதவீதம் குறைந்து ரூ.4,762.95 கோடியிலிருந்து ரூ.4,305.67 கோடியாக குறைந்துள்ளது.
வாகனங்கள் விற்பனை
சென்ற மூன்றாவது காலாண்டில், நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 101 சதவீதம் வளர்ச்சி கண்டு 8,011 என்ற எண்ணிக்கையிலிருந்து 16,129&ஆக அதிகரித்துள்ளது. இதே காலாண்டுகளில், நிறுவனத்தின் வாகன பாகங்கள் விற்பனையும் 91 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்ற நிதி ஆண்டில், சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் வாகனங்கள் விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் மோட்டார் வாகனங்கள் துறையில் மீண்டும் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால்தான் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனையும், நிதி நிலை செயல்பாடும் மேம்பட்டுள்ளது என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.சேஷசாயி தெரிவித்தார்.
நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனையில் எழுச்சி ஏற்பட்டுள்ள அதே நேரத்தில், இதே காலாண்டுகளில் நிறுவனத்தின் சிறந்த நிர்வாக நடவடிக்கைகளால், நிதிச் செலவினம் ரூ.39.40 கோடியிலிருந்து ரூ.16.21 கோடியாக குறைந்துள்ளது என சேஷசாயி மேலும் கூறினார்.

உணவு பொருள்கள் விலை குறையும்
மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் நம்பிக்கை



உணவு பொருள்களின் விலை படிப்படியாக குறையும் என மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல முக்கிய மாநிலங்களில், ரபி பருவத்தில் பருப்பு வகைகள், கரும்பு, கோதுமை மற்றும் நெல் போன்றவற்றின் உற்பத்தி மேம்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இப்பொருள்களின் விலை குறையும் என அமைச்சர் தெரிவித்தார்.
நெல் கொள்முதல்
ஜனவரி 20&ந் தேதி வரையிலுமாக 1.93 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 1.98 கோடி டன்னை விட சற்று குறைவாக உள்ளது. என்றாலும், போதிய அளவிற்கு உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளது. எனவே, அத்தியாவசிய பொருள்களின் விலை இனி குறையத் தொடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், Òஉணவு பொருள்கள் விலை படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. விலை குறைவு என்பது மிகவும் குறைவாகத்தான் உள்ளது. பருப்பு வகைகள், சர்க்கரை போன்றவற்றின் விலை கிலோவுக்கு ரூ.2&3 அளவிற்கு குறைந்துள்ளது. இவற்றின் விலை மேலும் குறையத் தொடங்கும். குறிப்பாக, சர்வதேச முன்பேர வர்த்தக சந்தையில் சர்க்கரையின் விலை குறையத் தொடங்கி உள்ளது. கடந்த ஒரு சில தினங்களுக்கும் முன்பாக, மொத்த விலை சந்தையில் ஒரு குவிண்டால் ரூ.4,000 என்ற அளவில் இருந்த சர்க்கரையின் விலை தற்போது ரூ.3,600&ஆக குறைந்துள்ளது. இனி, சில்லரை விற்பனை மையங்களிலும் இதன் விலை குறையத் தொடங்கும்Ó என்று தெரிவித்தார்.
உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்து வருகிறது. இருப்பினும், சர்வதேச சந்தைகளில் இவற்றின் விலை அதிகமாக இருப்பதால்தான், உள்நாட்டு சந்தைகளிலும் இவற்றின் விலை அதிகமாக உள்ளது.
பருப்பு வகைகள்
எம்.எம்.டி.சி. மற்றும் எஸ்.டி.சி. ஆகிய அமைப்புகள், பருப்பு வகைகளை இறக்குமதி செய்து வருகின்றன. மத்திய அரசுக்கு ஒரு கிலோ பருப்பு விற்பனையின் வாயிலாக ரூ.50 இழப்பு ஏற்படுகிறது. இவ்வகையில், ஒட்டுமொத்தமாக அரசுக்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்படுகிறது. பொது நலன் கருதி, மத்திய அரசு தனியார் துறை நிறுவனங்களும் பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.
சர்க்கரை, பருப்பு வகைகள் போன்றவற்றின் விலை உயர்வால், மாதச் சம்பளம் வாங்குவோர் மற்றும் சாதாரண மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர் என்பதை அரசு உணர்ந்துள்ளது என பவார் தெரிவித்தார்.
கடந்த 2009&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து, இதுவரையிலுமாக சர்க்கரை விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது டெல்லி வெளிச் சந்தையில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.43 என்ற அளவிலும், துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.85 என்ற அளவிலும் விலை போய்க் கொண்டுள்ளது.
சர்க்கரை உற்பத்தி
கரும்பு சாகுபடியில் போதிய அளவிற்கு வருமானம் கிடைக்கவில்லை என்பதால், பல விவசாயிகள் இதர பயிர்கள் சாகுபடிக்கு மாறினர். ஆனால், தற்பொழுது மகாராஷ்டிர மாநிலத்தில் பல விவசாயிகள் மீண்டும் அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர். பொதுவாக, சர்க்கரை துறையில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. இதனால், 2 ஆண்டுகளுக்கு நுகர்வோருக்கும், மூன்று ஆண்டுகளுக்கு கரும்பு சாகுபடியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. உலக அளவில், சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ள பிரேசில் நாட்டில், கரும்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இக்கரும்புகள் கூடிய விரைவில் ஆலைகளுக்கு வரும் நிலையில், சர்வதேச சந்தையில் சர்க்கரையின் விலை குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

பவர் பைனான்ஸ்

வெளிநாட்டு வணிக கடன் மூலம் ரூ.1,380 கோடி திரட்டுகிறது



இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
பொதுத் துறையைச் சேர்ந்த பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (பி.எஃப்.சி) நிறுவனம், வெளிநாட்டு வணிக கடன்கள் வாயிலாக ரூ.1,380 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
நாட்டில் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்து வரும் இந்நிறுவனம், மேற்கண்ட தொகையை இவ்வாண்டு மார்ச் மாதம் 31&ந் தேதிக்குள் திரட்டும் என இந்நிறுவனத்தின் இயக்குனர் (நிதி மற்றும் நிதி செயல்பாடுகள்) ஆர்.நாகராஜன் தெரிவித்தார்.
பி.எஃப்.சி. நிறுவனம், வெளிநாட்டு வணிக கடன்கள் மூலம் நிதி திரட்ட, பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. இதற்கான அனுமதி காலம் மார்ச் 31&ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிறுவனம், நடப்பு நிதி ஆண்டில் பல்வேறு வழிமுறைகள் வாயிலாக ரூ.21,000 கோடியை திரட்ட திட்டமிட்டிருந்து. இதில், இதுவரை ரூ.16,000 கோடி திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.563.60 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 66 சதவீதம் (ரூ.338.90 கோடி) அதிகமாகும்.
மூன்றாவது காலாண்டில், இந்நிறுவனம் ரூ.15,355 கோடியை கடனாக வழங்கி உள்ளது. இது, சென்ற ஆண்டு இதே காலாண்டில் ரூ.14,101 கோடியாக இருந்தது.

எஸ்ஸார் ஸ்டீல்
உருக்கு உற்பத்தி திறனை உயர்த்த ரூ.10,000 கோடி செலவிட திட்டம்



இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
ஐதராபாத்
உருக்கு உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான எஸ்ஸார் ஸ்டீல், அதன் உருக்கு உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் 250 கோடி டாலர் (சுமார் ரூ.10,000 கோடி) முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இத்தகவலை, இந்நிறுவனத்தின் செயல் இயக்குனர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) விக்ரம் அமின் அண்மையில் வெளியிட்டார்.
46 லட்சம் டன்
எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் பல்வேறு விரிவாக்க திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி திறன் 46 லட்சம் டன்னாக உள்ளது. இதனை ஒரு கோடி டன்னாக அதிகரிக்கும் வகையில் பெரும் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது.
எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் டீலர்கள் Ôஎக்ஸ்பிரஸ் மார்ட்ஸ்Õ மற்றும் Ôஎக்ஸ்பிரஸ் பாயிண்ட்ஸ்Õ என்ற விற்பனை மையங்களை நிர்வகித்து வருகின்றனர். இவற்றின் வாயிலாக அதன் விநியோக ஒருங்கிணைப்பு வசதிகளையும் விரிவுபடுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் நாடு முழுவதுமாக 300 விற்பனை நிலையங்களை உரிமக் கிளை அடிப்படையில் நிர்வகித்து வருகிறது. இதனை 500&ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. சொந்தமாக 85 ஹைபர்மால்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இதனை 150&ஆக உயர்த்தவும் உத்தேசித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில், சில்லரை விற்பனைக்கான விநியோக வசதிகளை 50 சதவீதம் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
விநியோக ஒருங்கிணைப்பு
இந்த விநியோக ஒருங்கிணைப்பு வசதி வாயிலாக, நடப்பு நிதி ஆண்டுக்குள் உருக்குப் பொருள்கள் விற்பனையை ஒரு கோடி டன்னாக அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதம் உருக்கு குழாய்களை அறிமுகம் செய்ய உள்ளதாக எஸ்ஸார் ஹைபர்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரீஷ் ராவ் கூறினார்.

சுபெக்ஸ் நிறுவனம்

நிறுவனத்தின் செயல்திறன் நன்கு உள்ளது. நீண்ட கால அடிப்படையில் இதன் பங்குகளில் முதலீடு செய்யலாம்.


ரஞ்சித் ஷிண்டே
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
பெங்களூரில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் சுபெக்ஸ் நிறுவனம், சர்வதேச தொலை தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளை அளித்து வருகிறது.
வர்த்தகம்
சுபெக்ஸ் நிறுவனம், சென்ற நிதி ஆண்டில் ரூ.600 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இதில், தகவல் தொழில்நுட்ப தீர்வுகள் வாயிலாக ஈட்டப்படும் வருவாயின் அளவு 10 சதவீதம் என்ற அளவில் குறைவாக உள்ளது. அதேசமயம், இச்சேவைதான் அதிக லாபத்தை ஈட்டித் தரக்கூடியது ஆகும். எனவே, இச்சேவையில் தீவிரமாக ஈடுபட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
சுபெக்ஸ் நிறுவனத்திற்கு அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்கும் 70 தொலை தொடர்புச் சேவை நிறுவனங்களில், 35&க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சுபெக்ஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளை அளித்து வருகிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பீ.எஸ்.என்.எல்., வோடாபோன், காம்காஸ்ட், டிமொபைல், டெலிஃபோனிக்கா, வெரிசோன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு உள்நாட்டிலும், அமெரிக்கா ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் வாடிக்கை நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனத்தில் 1,200 பேர் பணிபுரிந்து வருகின்றனர். சென்ற ஐந்து ஆண்டுகளில் இந்நிறுவனம், நான்கு நிறுவனங்களை கையகப்படுத்தி உள்ளது.
நிதி நிலை
கடந்த 2003&04 மற்றும் 2006&07&ஆம் நிதி ஆண்டுகளுக்கிடையில் இந்நிறுவனத்தின் வருவாயும், நிகர லாபமும் நான்கு மடங்கு அதிகரித்து இருந்தது. இந்நிலையில், உலக அளவில் ஏற்பட்ட நெருக்கடியால், சென்ற 2 நிதி ஆண்டுகள் இந்நிறுவனத்திற்கு ஒரு சவாலாக அமைந்தது. இந்த நிதி ஆண்டுகளில், வருவாய் அதிகரித்துள்ள நிலையில், செயல்பாடுகளில் இழப்பைக் கண்டு வந்தது.
சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த, மூன்றாவது காலாண்டில் இந்நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளது. இந்நிறுவனம், அன்னியச் செலாவணியில் பங்குகளாக மாறக்கூடிய கடன்பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டி இருந்தது. இதனை மறு சீரமைப்பு செய்துள்ளதால், இந்நிறுவனத்தின் வட்டிச் சுமை 24 சதவீதம் குறைந்துள்ளது.
மதிப்பீடு
தற்போது, இந்நிறுவனப் பங்கின் விலை ரூ.66 என்ற அளவில் உள்ளது. வரும் 2010&11&ஆம் நிதி ஆண்டிற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஒரு பங்குச் சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது, பங்கின் விலை 6.7 மடங்குகள் என்ற அளவில்தான் உள்ளது.
மேற்கண்டவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில், நீண்ட கால அடிப்படையில் இதன்பங்குகளில் முதலீடு செய்யலாம்.


அகண்ட அலைவரிசை இணைப்பு 78.30 லட்சம்
டிராய் அமைப்பு தகவல்


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
சென்ற டிசம்பர் மாதம் வரையில் அகண்ட அலைவரிசை சேவையைப் பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 78.30 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, நவம்பர் மாதத்தில் 75.70 லட்சமாக இருந்தது. ஆக, சென்ற மாதத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3.56 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் சாதாரண தொலைபேசி (லேண்டுலைன்) இணைப்புகளின் எண்ணிக்கை 3.70 கோடியாக குறைந்துள்ளது. இது, முந்தைய நவம்பர் மாதத்தில் 3.71 கோடியாக இருந்தது. செல்போன் பயன்பாடு அசுர வளர்ச்சி கண்டு வருவதால் சாதாரண தொலைபேசி இணைப்புகளை சரண் செய்வது அதிகரித்து வருகிறது.
தற்போது நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தொலைபேசி பயன்பாடு 100 சதவீதத்தை தாண்டியுள்ளது. தேசிய அளவில் செல்போன் பயன்பாடு சுமார் 48 சதவீதமாகவும், சாதாரண தொலைபேசி பயன்பாடு 3.16 சதவீதமாகவும் உள்ளது.

பங்குச் சந்தைகளில் கடும் ஏற்றத் தாழ்வுகள்
புதிய பங்கு வெளியீடுகளுக்கு போதிய ஆதரவு கிடைக்குமா?


தீப்தா ராஜ்குமார்
மும்பை
பங்குச் சந்தைகளில் தற்போது கடும் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன. இதனால் புதிய பங்கு வெளியீடுகளுக்கு ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2008&ஆம் ஆண்டில், பங்கு வர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டது. அப்போது, மூலதனச் சந்தையில் களமிறங்கிய பல நிறுவனங்கள் பங்கின் வெளியீட்டு விலையைக் குறைப்பது மற்றும் பங்கு வெளியீட்டு காலத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கின.
அக்வா லாஜிஸ்டிக்ஸ்
இந்நிலையில், நடப்பு ஆண்டில், மும்பையைச் சேர்ந்த அக்வா லாஜிஸ்டிக்ஸ், முதன் முதலாக இவ்வகை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிறுவனம் ஜனவரி 25&ந் தேதி அன்று அதன் பங்கு வெளியீட்டை தொடங்கியது. 28&ந் தேதி மாலை 5 மணி நிலவரப்படி 55 சதவீத அளவிற்கே முதலீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்கள் 10 சதவீத அளவிற்கே விண்ணப்பித்துள்ளன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சரக்குப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் அக்வா லாஜிஸ்டிக்ஸ் ரூ.150 கோடியை திரட்டிக் கொள்ளும் நோக்கத்துடன் மூலதனச் சந்தையில் இறங்கியுள்ளது. பங்கு வெளியீட்டுக்கு போதிய வரவேற்பு இல்லாத நிலையில் இந்நிறுவனம் வெளியீட்டு காலத்தை பிப்ரவரி மாதம் 2&ந் தேதி வரை நீட்டித்துள்ளது. அத்துடன் பங்கின் வெளியீட்டு விலையை ரூ.200&225&ஆக குறைத்துள்ளது. முன்பு இதனை ரூ.220&230 என்ற அளவில் நிர்ணயம் செய்திருந்தது.
வாஸ்கான் இன்ஜினியரிங்
இந்நிலையில், தற்போது மூலதனச் சந்தையில் இறங்கியுள்ள வேறு சில நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் குறித்தும் ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. பங்குகள் வேண்டி போதிய அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்படாத நிலையில், இந்த நிறுவனங்களின் பங்கு வெளியீட்டு காலம் நீட்டிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எனினும் வாஸ்கான் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு போதிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிறுவனம் ரூ.200 கோடியை திரட்டும் நோக்கத்துடன் 1.08 கோடி பங்குகளை வெளியிட்டது. அதே சமயம் 1.21 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனையடுத்து இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு திட்டமிட்டபடி சென்ற வெள்ளிக்கிழமையன்று நிறைவடைந்தது.

இந்துஸ்தான் பெட்ரோலியம்


ரூ.25,000 கோடியில் புதிய சுத்திகரிப்பு ஆலை நிறுவ முடிவு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்.பி.சி.எல்), நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில், ரூ.25,000 கோடி செலவில், ஒரு புதிய எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டுள்ளது. இது, மும்பை மற்றும் கோவா ஆகிய நகரங்களுக்கிடையில் நிறுவப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதை எச்.பி.சி.எல். நிறுவனத்தின் தலைவர் அருண் பாலகிருஷ்ணன் உறுதி செய்தார்.
இட பற்றாக்குறை
எச்.பி.சி.எல். நிறுவனம், தற்போது மும்பையில் ஓர் சுத்திகரிப்பு ஆலையைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 65 லட்சம் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும திறன் கொண்ட இவ்வாலையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் புதிதாக ஒரு தொழிற்சாலையை உருவாக்கும் முடிவுக்கு இந்நிறுவனம் வந்துள்ளதாக தெரிகிறது. புதிய ஆலை மும்பை தொழிற்சாலையின் விரிவுபடுத்தப்பட்ட பகுதியாகவே செயல்படும். இத்திட்டத்துக்காக, மகாராஷ்ர மாநில அரசிடம் சுமார் 3,000 ஏக்கர் நிலம் வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எச்.பி.சி.எல். நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, Òநிறுவனத்தின் மும்பை ஆலை ஆண்டுக்கு 65 லட்சம் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இந்த அளவு சுத்திகரிப்பு திறன் கொண்ட ஒரு தொழிற்சாலை 2,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் அமைக்கப்பட வேண்டும். ஆனால் நிறுவனத்தின் ஆலையோ 350 ஏக்கர் பரப்பளவில்தான் அமைந்துள்ளது. ஆக, இங்கு கடும் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் நிறுவனத்தின் செயல்திறன் குறைந்து போயுள்ளதுÓ என்று தெரிவித்தார்.
விசாகப்பட்டினம்
எச்.பி.சி.எல். நிறுவனம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலும் ஒரு சுத்திகரிப்பு ஆலையைக் கொண்டுள்ளது. இது, ஆண்டுக்கு 75 லட்சம் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாகும். இந்நிறுவனம் பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் மேலும் ஒரு சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணித்து வருகிறது. இவ்வாலை ஆண்டுக்கு 90 லட்சம் டன் எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது, உருக்கு துறையில் ஜாம்பவானாக திகழும் லட்சுமி மிட்டலின் கூட்டுடன் அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எச்.பி.சி.எல். நிறுவனம் ஆண்டுக்கு 1&2 கோடி டன் எண்ணெய் சுத்திகரிப்பு திறனுடன் ஆலை ஒன்றை நிறுவ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.


செடான் வகை கார்களை திரும்ப பெறுகிறது ஹோண்டா நிறுவனம்

புதுடில்லி: ஹோண்டா இந்தியா நிறுவனம், கடந்த 2007ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்த செடான் 8532 வகை கார்களை திரும்ப பெற்று வருகிறது. இதுகுறித்து, ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், செடான் 8532 வகை கார்களில் பவர் விண்டோ சுவிட்ச்சில் தொடர்ந்து பிரச்சினை இருந்துவருகிறது. இதனால், கார் எரிந்து போகும் அளவுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக ஹோண்டா 8532 வகை காரை திரும்ப பெறுகிறோம் என் தெரிவித்துள்ளது.

2007-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட செடான்கள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டு, பிரச்சினை சரி செய்யப்பட்ட பிறகு தரப்படுமாம். புதிதாக தயாரிக்கப்பட்ட செடான்களில் இந்த பிரச்சினை இல்லை என்று கூறப்படுகிறது.


இதே பிரச்சினை, ஹோண்டாவின் மற்ற மாடல்களான ஃபிட் மற்றும் ஜாஸ் கார்களிலும் தொடர்வதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில்தான் டொயோட்டா நிறுவனம் தனது 8 மாடல்களில் விற்கப்பட்ட 18 லட்சம் கார்களை அமெரிக்காவில் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.

வர்த்தகமைய தாக்குதல் - பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு 200 மில்லியன் : ஒபாமா

‌டிச., 31 வரை 17 ஆயிரம் யுனிட் நானோ கார் விற்பனை
மும்பை: 2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையில் சுமார் 17 ஆயிரம் யுனிட்களுக்கும் மேற்பட்ட நானோ கார்கள் விற்பனை செய்யப் பட்டு இருப்பதாக ‌டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவத்தின் மேலாண்மை இயக்குனர் டெலாங் கூறும்போது, உத்ரகாண்டில் உள்ள நானோ கார் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து , 17 ஆயிரத்து 537 யுனிட் கார்கள் விறப்னை செய்யப் பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, எங்களது புதிய திட்டத்தை குஜராத்தில் தொடங்க உள்ளோம். இந்த புதிய திட்டத்திற்கு சனான்த் திட்டம் என்று பெயரிட்டுள்‌ளோம். இன்னும் இரண்டு மாதங்களில் இத்திட்டம் தொடங்கப் படும். இதன் விலை 2.5 லட்சமாக இருக்கும் என்றார்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் டிபாசிட் 17 சதவீதம் உயர்வு
சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மொத்த,'டிபாசிட்', முந்தைய ஆண்டைவிட 16.93 சதவீதம் அதிகரித்து, ஒரு லட்சத்து ஆறாயிரத்து 249 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, டிசம்பர் வரையிலான, நடப்பு நிதியாண்டின் நிதிநிலை குறித்து, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிசம்பர் 31ம் தேதி வரையிலான ஓராண்டில், ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 656 கோடி ரூபாய் மொத்த வர்த்தகம் நடந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட இது 14.20 சதவீதம் அதிகம். வங்கியின் மொத்த,'டிபாசிட்', முந்தைய ஆண்டைவிட 16.93 சதவீதம் அதிகரித்து, ஒரு லட்சத்து ஆறாயிரத்து 249 கோடி ரூபாயாக உள்ளது. நடப்பு நிதியாண்டின், முதல் ஒன்பது மாதங்களில், வங்கியின் மொத்த வருவாய் 2 ,828 கோடியே 65 லட்சம் ரூபாய். இது, 2008-09ம் நிதியாண்டின் இதே காலத்தை ஒப்பிடும்போது, 11.74 சதவீதம் குறைவு. வங்கியின் நிகர லாபம், 579 கோடியே 52 லட்சம் ரூபாயாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், நிகர லாபம் 1,003 கோடியே 42 லட்சம் ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த செலவு 3.65 சதவீதம் அதிகரித்து, 2 ,422 கோடியே 56 லட்சம் ரூபாயாக உள்ளது. 'டிபாசிட்' களுக்கான வட்டி, 2.82 சதவீதம் குறைந்து, 1,566 கோடியே 40 லட்சம் ரூபாயாக உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தி்ல் முதல் நடமாடும் ஏ.டி.எம்.,: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் முதல் நடமாடும் ஏ.டி.எம்., சேவையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று தொடங்கியுள்ளது. இதனை துணை மு‌தல்வர் ஸ்டாலின் கொடி‌யசைத்து துவங்கி வைத்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பட் தலைமை தாங்கினார். புதிய நடமாடும் ஏ.டி.எம்., குறித்து பட் கூறும்போது, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி சார்பில் சென்னையில் 70 இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இப்போது தமிழகத்திலேயே முதல் முறையாக ஐ.ஒ.பி. நடமாடும் ஏ.டி.எம். மையத்தை தொடங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, இது செயற்கை கோள் மூலம் செயல்படுகிறது. இந்த திட்டத்திற்கு வரவேற்பு இருந்தால் மேலும் பல நடமாடும் ஏ.டி.எம். சேவை தொடங்கப்படும்.

இந்த ஏ.டி.எம். மையம் ராயபுரம், வண் ணாரப்பேட்டை , பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும்.

ஒவ்வொரு இடத்திலும் 2 மணி நேரம் இந்த நடமாடும் ஏ.டி.எம். நிலையம் நின்று செல்லும். தமிழகம் முழுவதும் மார்ச் மாதத்திற்குள் 1000 ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.

ஓஎன்ஜிசி, என்டிபிசி, ஐஓசிக்கு மகாரத்னா அந்தஸ்து
புதுடெல்லி : ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., ஐ.ஓ.சி., உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மகாரத்னா அந்தஸ்து கிடைத்துள்ளது.
தொடர்ச்சியாக லாபத்துடன் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் நவரத்ன அந்தஸ்திலிருந்து மகாரத்னா அந்தஸ்துக்கு உயர்த்தப்படும் என்று சமீபத்தில் அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில், இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அரசு நிறுவனங்கள் துறைச் செயலாளர் பாஸ்கர் சாட்டர்ஜி , எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கார்ப்பரேஷன், தேசிய அனல் மின்சார கார்ப்பரேஷன், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நான்கு அரசு நிறுவனங்களும் விரைவில் மகாரத்னா அந்தஸ்துக்கு உயர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாஸ்டாக் பங்குச்சந்தையை தொடங்கி வைக்கின்றனர் ஷாருக், கஜோல்
வாஷிங்டன் : உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தை அமெரிக்காவில் நாஸ்டாக் பங்குச்சந்தை. இந்த பங்குச்சந்தையில் பிப்ரவரி மாதம் முதல் நாள் வர்த்தகத்தை பாலிவுட் பிரபலங்களான ஷாருக் - கஜோல் தொடங்கி வைக்கின்றனர். நாஸ்டாக் வர்த்தகத்தை துவக்க இதுவரை பெரிய கம்பெனிகளின் சி.இ.ஓ,.க்களுக்கு தான் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாஸ்டாக் வர்த்தக மையத்தில் பாலிவுட் நடிகர், நடிகைக்கு கிடைத்துள்ள இந்த கவுரவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பிப்ரவரி 1ம் தேதி வர்த்தகத்தை மணியடித்து தொடங்கி வைப்பர் என தெரிகிறது.

முக்கிய பொருட்கள் இறக்குமதி அதிகரிப்பு
புதுடில்லி: கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில், முக்கியப் பொருட்களின் இறக்குமதி 34.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக, வர்த்தகத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வர்த்தகத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவல்: கடந்தாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில், பால் மற்றும் பால் பொருட்கள் 131.16 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டன. டீ மற்றும் காபி ஆகிய பொருட்கள் 185.39 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டன. இவை அனைத்தும், அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகம். சமையல் எண்ணெய், 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு, 8,195 கோடி ரூபாய்க்கு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது.


கச்சா சமையல் எண்ணெய் மற்றும் ரிபைன்ட் எண்ணெயின் இறக்குமதி முறையே 83 சதவீதம் மற்றும் 36 சதவீதம் அதிகரித்துள்ளது. இதைத்தவிர பருப்புகள், ரப்பர், மசாலா பொருட்கள், உணவு தானியங்கள், உட்பட பல பொருட்களின் இறக்குமதியும் அதிகரித்துள்ளன. மதுபானங்கள் மற்றும் ஆட்டோமொபைல் இறக்குமதி சிறிது குறைந்துள்ளது. எனினும், கடந்தாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் இறக்குமதி செய்யப் பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 7.16 லட்சம் கோடி ரூபாய். இது, அதற்கு முந்தைய ஆண்டு மதிப்பான 9.16 லட்சம் கோடி ரூபாயை விட குறைவு. பொருட்களின் மொத்த இறக்குமதி மதிப்பான 5 சதவீதத்தில், முக்கியப் பொருட்களின் இறக்குமதி 2.9 சதவீதம். இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணல் தேவை அதிகரிப்பு: விலை உயரும் அபாயம்
திருச்சி: மணல் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
திருச்சி மாவட்டம் ஏவூர், வாசலை, நொச்சியம், மகேந்திரமங்கலம், ஏளூர் பட்டி ஆகிய இடங்களில், அரசு மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இங்கு அள்ளப்படும் மணல் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. மூன்று யூனிட் கொண்ட ஒன்பது டன் மணல், 1,200 ரூபாய் வரை அங்கு விற்பனை செய்யப்படுகிறது. மேற்குறிப்பிட்ட மாவட்ட பகுதியில், ஒரு லோடு மணல் ஐயாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கட்டுமானப்பணி அதிகரித்து வருவதால், மணல் தேவையும் அதிகரித்துள்ளது. அதை குறிவைத்து, மணல் விலையும் அதிகரிப்பது, கட்டுமான தொழிலில் ஈடுபடுவோரை கலங்கச் செய்துள்ளது. விற்பனையாளர் சிலர் கூறியதாவது: தற்போது, ஒரு லோடு மணல் ஐயாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்விலை லாரி உரிமையாளர்களுக்கு கட்டுபடியானதில்லை. கட்டுமான பணி அதிகளவில் நடப்பதால் தற்போது மணல் தேவை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில், மணல் விலை மேலும் அதிகரிக்க வாயப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கட்டட கட்டுமான தொழிலில் ஈடுபடுவோர் கூறியதாவது: கடந்த ஆண்டு, இதே மாதம் ஒரு லோடு மணல் மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே அளவு மணல், சென்ற மாதம் ஆயிரம் ரூபாய் ஏற்றம் கண்டு நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதம் ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு லோடு விற்கிறது. விலையேற்றத்துக்கு மணல் தட்டுப்பாடு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மணல் விலையேற்றம் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட கட்டடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் தொழில் சரிவில் உள்ள நிலையில், மணல் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது, கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் அனைவரையும் கலங்கச் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் வேலையற்ற படித்த இளைஞர்களுக்கு ரூ.250 கோடி
சென்னை: தமிழகத்தில் வேலையற்ற படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகையாக கடந்த 3 மூன்றாண்டுகளில் ரூ.250 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக 5 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கும் படித்த இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை ழங்கும் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150, பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200, பட்டதாரிகளுக்கு ரூ.300 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில், 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். ரூ.250 கோடி இத்திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடம் கழித்தவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. எஸ்.சி, எஸ்.டி, பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 45 வயது வரையிலும் மற்றவர்களுக்கு 40 வயது வரையும் உதவித்தொகை கிடைக்கும்.

தற்போது சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு அலுவலகம், கிண்டியில் உள்ள மகளிர் ஐ.டி.ஐ வளாகத்துக்கு மாற்றப்படுகிறது.

சாந்தோமில் தற்போது செயல்படும் அனைத்து அலுவலகங்களும் இனி கிண்டியில் ஒரே இடத்தில் செயல்படும் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையாளர் ஜீவரத்தினம் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக