அடுத்த மாதம் முதல் 9 மணிக்கே பங்குச் சந்தை திறப்பு

வெள்ளி, 18 டிசம்பர், 2009



மும்பை: வரும் ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் முதல் காலை 9 மணிக்கே மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை தொடங்கும் என செபி அறிவித்துள்ளது.

பங்குச் சந்தையின் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என சிலரும், அதிகரிக்கக் கூடாது என்று சிலரும் கோரி்க்கை விடுத்துள்ளனர். இதுபற்றி ஒரு சர்வேயும் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பங்குச் சந்தையின் வழக்கமான நேரமான காலை 9.55 முதல் மாலை 3.30 என்பதை, இனி காலை 9.44 - மாலை 3.30 என மாற்றுவதாக செபி நேற்று அறிவித்தது.

ஆனால் இந்த அறிவிப்பு எந்த விளைவையும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. 10 நிமிடம் அதிகரிப்பதால் பலன் ஒன்றும் இருக்காது என்று பங்குத் தரகர்கள் தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தை என்எஸ்இ, தனது வர்த்தக நேரத்தை காலை 9 மணிக்கு துவங்குமாறு மாற்றியது.

இதனால் மும்பை சந்தையை விட 55 நிமிடம் முன்கூட்டியே என்எஸ்இ துவங்கும் நிலை.

இதன்படி இனி காலை 9 மணிக்கே தேசிய பங்குச் சநதையிலும், மும்பை பங்குச் சந்தையிலும் வர்த்தகம் துவங்கிவிடும். மாலை 3.30 மணிக்கு முடியும்.

இந்த நேரமாற்றத்தை நாளை (வெள்ளிக்கிழமை) முதலே அமல்படுத்த உள்ளதாக செபி அறிவித்திருந்தது. ஆனால் இதை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்து செபி தற்போது உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, 2010ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை காலை 9 மணிக்கு பணிகளை துவக்கும்.

ஆசியாவின் இதர பங்குச் சந்தை நேரத்துக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செபி அறிவித்துள்ளது.





நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்தில்
செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.10 கோடி அதிகரிப்பு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவுபுதுடெல்லிநடப்பு ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.எம். செல்போன் சேவையை பெற்ற புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.10 கோடி அதிகரித்துள்ளது. இது, அக்டோபர் மாதத்தில், 1.07 கோடியாக இருந்தது. ஆக, இந்திய செல்போன் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பார்தி ஏர்டெல்வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில், சுனில் மிட்டல் தலைமையின் கீழ் செயல்படும் பார்தி ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், சென்ற நவம்பர் மாதத்தில் 28 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. ஜி.எஸ்.எம். செல்போன் சேவையில் புதிதாக அதிக வாடிக்கையாளர்களை இணைத்ததில், அம்மாதத்தில் இந்நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.வினாடி அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிப்பதில் செல்போன் சேவை நிறுவனங்களுக்கிடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இது, இத்துறை நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சப்பாடு நிலவி வருகிறது. அதேசமயம், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் நிறுவனங்கள் பின்தங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.வோடாபோன் எஸ்ஸார்வோடாபோன் எஸ்ஸார் நிறுவனம், அக்டோபர் மாதத்தில் 29 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேவையில் இணைத்துக் கொண்டது. அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றதில் அம்மாதத்தில், இந்நிறுவனம் முதலிடத்தை பிடித்து இருந்தது. எனினும், நவம்பர் மாதத்தில் இந்நிறுவனம் 27 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று இரண்டாவது இடத்திற்குச் சென்றுள்ளது.செல்போன் சேவை அளிப்பதில், இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, சென்ற நவம்பர் மாதத்தில் 25 லட்சம் அதிகரித்துள்ளது. இந்திய செல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்துள்ளன.இரண்டு தொழில்நுட்பங்கள்சென்ற நவம்பர் மாதத்தில் இணைக்கப்பட்டுள்ள மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த நிறுவனங்கள் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டீ.எம்.ஏ. ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களிலும் சேவை அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.ஜி.எஸ்.எம். மற்றும் சி.டீ.எம்.ஏ. ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களிலும் சேவை பெற்றுள்ள வாடிக்கையாளர்களையும் சேர்த்தால், நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிக வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொண்டதில் டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம் முதலிடத்தில் இருந்தது. அம்மாதத்தில், ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததில் வோடாபோன் இரண்டாவது இடத்திலும், பார்தி ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது இடத்திலும் இருந்தது.ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் ஒரே செல்போன் சாதனத்தில் இதர நிறுவனங்களின் சிம்கார்டை பயன்படுத்தலாம். அதேசமயம். சி.டீ.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் இதர நிறுவனங்களின் சிம்கார்டை பயன்படுத்த இயலாது. செல்போன் சேவை அளிக்கும் நிறுவனத்தின் சிம்கார்டை மட்டுமே பயன்படுத்த முடியும்.கடும் போட்டிவாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் நிறுவனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டி உச்சநிலையை அடைந்து வருகிறது. இதற்குச் சான்றாக, எம்.டி.எஸ். பிராண்டில் செல்போன் சேவையை அளித்து வரும் எஸ்.எஸ்.டி.எல். நிறுவனம், இரண்டு வினாடிக்கு ஒரு காசு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, ஒரு விநாடிக்கு அரை காசு வசூலிக்கும் புரட்சித் திட்டமாகும்.இதன்படி, இந்நிறுவனம், உள்ளூர் அழைப்பில் எந்த நெட்வொர்க்கிற்குள் பேசினாலும் மற்றும் எஸ்.டி.டீ.யில் இந்நிறுவனத்தின் நெட்வொர்க்கிற்குள் பேசினாலும் இரண்டு வினாடிக்கு ஒரு காசு கட்டணம் விதிக்கிறது. இதர நெட்வொர்க்கில் உள்ள வாடிக்கையாளர்களிடம் எஸ்.டி.டீ. அழைப்புகளுக்கு ஒரு வினாடிக்கு ஒரு காசு என்ற அடிப்படையில் கட்டணம் உள்ளது.இந்தியாவில் செல்போன் சேவைத் துறையில் வளமான வாய்ப்பு உள்ளது. இதனால், இத்துறையில் தனியார் முதலீடு அதிகரித்து வருகிறது. கடந்த 2006&07&ஆம் நிதி ஆண்டில் இத்துறையில் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு ரூ.1,05,448 கோடியாக இருந்தது. இது, சென்ற 2008&09&ஆம் நிதி ஆண்டில் ரூ.1,88,499 கோடியாக உயர்ந்துள்ளது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக