வரும் நாட்கள் சந்தைக்கு போதாதா காலம்மகா இருக்கலாம் .சந்தை 10 லிருந்து 20 சதவிதம் வரை கீழிறங்க வாய்புகள் அதிகம் அமெரிக்கவில் பூகம்பம் கிளம்பினால் உலக சந்தைகள் அனைத்திலும் பூகம்ப அதிர்வுகள் காணப்படும் இந்த அதிர்வினால் நமது சந்தைகள் சீட்டு கட்டு சரிவது போல் சரிய வாய்ப்புண்டு நமது சந்தைகள் 30 மாத உச்சத்தில் உள்ளது .
அடுத்த மாதம் நிச்சயம் அமெரிக்கப் பொருளாதாரம் பலத்த அடியைச் சந்திக்கும் என்கிறார் அமெரிக்க பொருளாத நிபுணர் ஜின் மெய்க்கா.
இந்த வீழ்ச்சிக்கு 'ஹிண்டன்பர்க் பயங்கரம்' எனப் பெயரிட்டிருக்கிறார் ஜின் மெய்க்கா. அமெரிக்க மார்க்கெட் வீழ்ச்சி எப்படி சாத்தியம் என்று தெரிந்து கொள்ளுமுன் ஹிண்டன்பர்க் பயங்கரம் பற்றி...
ஹிண்டன்பர்க் என்பது ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் தயாரான விமானம். 1936-ம் ஆண்டு முதல் அமெரிக்கா வுக்கும் ஜெர்மனிக்கும் பயணிகள் சேவையைத் துவங்கியது. முதல் ஆண்டு வெற்றிகரமாக சேவையைப் பூர்த்தி செய்த இந்த விமானம், 1937-ம் ஆண்டு நியூஜெர்ஸியின் லேக்கர்ஸ்ட் கடற்படை விமான தளத்தில் தரையிறங்கும்போது வெடித்துச் சிதறியது.
இதில் 36 பேர் உயிரிழந்தனர். அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியைத் ஏற்படுத்திய விமான விபத்து இது. தரையிறங்குவதற்கு மிக சமீபத்தில் விமானம் வந்தபோது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் வெடித்தது ஹிண்டன்பர்க். இதற்கான சரியான காரணத்தை யாரும் இதுவரை கூறவில்லை.
இப்போது சாதாரணமாகத் தெரியும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கும் இதுபோன்ற பெரும் விபத்து நேரும் வாய்ப்பு அதிகம் என்கிறார் ஜிம் மெய்க்கா.
அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பொருளியல் நிலவரங்களை, பல்வேறு கணக்கீடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரும் வீழ்ச்சியை அமெரிக்க பங்குச் சந்தையும், பொருளாதாரமும் சந்திக்கும் என்பதை உறுதி செய்துள்ளார் ஜிம்.
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க பங்குச் சந்தை பெரும் ஊசலாட்டத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் அமெரிக்காவின் 92 நிறுவனங்களின் பங்குகள் 52 வார உச்ச கட்ட விலைக்குக் கைமாறின. அதேபோல 81 நிறுவனங்கள் இதுவரை காணாத பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
மெக்லீன் ஆஸிலேட்டர் (பங்குச் சந்தைப்போக்கைக் கணிக்கும் முறை) முறையில் பங்குச் சந்தை போக்குகள் அடுத்த சில மாதங்களுக்கு மிக மோசமாகவே இருப்பதாகவும், இந்த மோசமான போக்கின் துவக்கம் செப்டம்பர் மாதம் என்றும் ஜிம் தெரிவித்துள்ளார்.
பொருளியல் வீழ்ச்சியோ வளர்ச்சியோ, இதுவரை ஜிம் கணித்துச் சொன்ன எதுவும் பொய்யானதில்லை என்பதால், இந்த முறை அவர் கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள அமெரிக்கர்கள் விரும்பவில்லை.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் பாதிப்பு எதுவும் இருக்காதாம். பங்குச் சந்தையில் அடுத்த சில மாதங்களில் 10 சதவிகித வீழ்ச்சி சாத்தியம் என்றாலும் அதனால் பாதிப்பு பெரிதாக இருக்காதாம்.
அதேநேரம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தை இப்போதைக்கு மிகவும் செலவுமிக்கது என்றே கருதுவதாக ஜிம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
"இந்திய சந்தையில் பெரிய அளவு கரெக்ஷன் இருந்தாலும், அது வீழ்ச்சிக்குக் காரணமாக அமையாது. வரும் டிசம்பர் 2014 வரை, எந்த அளவு பங்குச் சந்தை வீழ்ந்தாலும் அதை முதலீட்டுக்கான வாய்ப்பாகவே கருதுவார்கள். ஆனால் அமெரிக்காவில் நிலைமை தலைகீழ்" என்கிறார் ஜிம்.
வெளிநாடு வாழ் இந்தியரான 'வேதாந்தா' குழுமத் தலைவர் அனில் அகர்வால், எண்ணெய் நிறுவனமான 'கெய்ர்ன் எனர்ஜி' நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளார். அந்நிறுவனத்தை அகர்வால் வாங்கும் பட்சத்தில், முகேஷ் அம்பானியை விட அவரது நிறுவனங்களின் சொத்து சந்தை மதிப்பில் உயர்ந்து, அவர் இரண்டாமிடத்தை பிடித்து விடுவார்.
'வேதாந்தா' குழுமத் தலைவர் அனில் அகர்வால் நிறுவனங்களின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பு தற்போது ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 465 கோடி ரூபாய் ஆகும். முகேஷ் அம்பானியின் மொத்த சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 276 கோடி ரூபாய் ஆகும். இவர்கள் இருவரையும் விட அதிகமாக, டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு மூன்று லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உள்ளது. இன்றைய நிலையில் டாடா குழுமம் தான் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் அனில் அகர்வால், 'கெய்ர்ன் எனர்ஜி' நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளார். அப்படி அந்நிறுவனத்தை வாங்கும் பட்சத்தில் அகர்வாலின் சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 938 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இதனால், நீண்ட காலமாக இரண்டாமிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, மூன்றாமிடத்துக்கு தள்ளப்படுவார். அனில் அகர்வால் இரண்டாமிடத்தை பிடிப்பார். சர்வதேச அளவில், உலோகங்கள் மற்றும் சுரங்கத் தொழில்களில் அகர்வால் முன்னணியில் இருக்கிறார். அதேநேரம், பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் உற்பத்தி மற்றும் எண்ணெய் தொழிலில், முகேஷ் அம்பானி முன்னணியில் உள்ளார். 'கெய்ர்ன் எனர்ஜி' நிறுவனத்தை வாங்குவதன் மூலம் அகர்வாலும் எண்ணெய் தொழிலில் காலடி எடுத்து வைக்கிறார்.
சர்வதேச சந்தையில், தங்கத்துக்கு மவுசு ஏற்பட்டு வரும் நிலையில், ஆன்-லைன் வர்த்தகத்தில் சீனா தற்போது நுழைந்துள்ளது, இந்திய தங்க சந்தையில் கடும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக, இன்று முதல் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்கள் உடனுக்கு உடன் இந்திய மார்க்கெட்டில் எதிரொலிக்கிறது. 2003ல் கிராம் 523 ரூபாய்க்கும், 2004ல் 620, 2007ல் 1,000, 2008ல் 1,250, 2009ல் 1,550 ரூபாய்க்கும் விற்ற தங்கம், 2010 ஜூலையில் அதிகபட்சமாக, கிராம், 1,790 ரூபாய்க்கு விற்றது. இந்நிலையில், கடந்த மாதம் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தங்கம், கிராம், 1,687 ரூபாய்க்கும், சவரன் 13 ஆயிரத்து 496 ரூபாய்க்கும் விற்றது. இந்த சரிவு காரணமாக ஆபரணத் தங்கத்தின் விற்பனையில் சுறுசுறுப்பு ஏற்பட்டது. திருணம சீசன் மாதமான ஆவணி பிறந்த நிலையில், தங்கத்தின் விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆன்-லைன் வர்த்தகத்தில், தங்கம் உள்ளதால், தற்போது சீனாவும் ஆன்-லைன் வர்த்தகத்தில் நுழைந்துள்ளது. இது தங்க வியாபாரிகள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிய நாடுகளில் பொருளாதாரத்தில் இந்தியாவை வீழ்த்தும் வகையில் சீனா பல்வேறு வியூகங்களை அமைத்து எதிரி போல் செயல்படுகிறது. தங்க மார்க்கெட்டில் இதுநாள் வரையில் ஐரோப்பியா, அரபு நாடுகள், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளே ஆன்-லைன் வர்த்தகம் மூலம் தங்கம் கொள்முதல், விற்பனையில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில் சீனா, முதல் முறையாக ஆன்-லைன் வர்த்தகத்தில் நுழைந்துள்ளது. அத்துடன், இந்த வர்த்தக முறையில் அந்நாட்டு மக்களையும் நகைகள் வாங்கிக் கொள்ள இருந்த கெடுபிடிகளையும் குறைத்துள்ளதோடு அதிகளவில் தங்கத்தை கொள்முதல் செய்து கொள்ளும்படி அறவித்து உள்ளது. கடந்த வாரம் சீனாவில் தங்கத்தை கொண்டு ஈ.டி.எப்., பண்டு துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சீன வங்கிகள், நகைகளுக்கு மாற்றாக தங்கத்தாலான பேப்பர் மீது முதலீடு செய்ய வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக சீனாவில் தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் உள்ளவர்களில், 1 சதவீத மக்கள், ஆன்-லைன் மூலம் தங்க பரிவர்த்தனையில் ஈடுபட்டால், தங்கத்தின் விலை கடும் உயர்வு ஏற்படும். அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை மற்றும் அமெரிக்காவில் செயல்படும் தனியார் வங்கிகள் நஷ்டம் என்ற பெயரில் மூடு விழா காண்டு வருவது சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், விரைவில் ஆபரணத் தங்கம் கிராம், 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவில் 82 சதவீத மிடில் கிளாஸ் குடும்பத்தினர் மாதம் ரூ. 1000 முதல் ரூ. 2000 வரையே சம்பளம் வாங்குகின்றனர். அதேசமயம், ரூ. 10,000க்கு மேல் பெறுபவர்கள் பணக்காரர்கள் என்ற அந்தஸ்தினைப் பெறுகிறார்கள் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆய்வு தெரிவித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில், ஆசிய மக்களின் பொருளாதார நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆசியாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவு்ம், அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்க, ஐரோப்பிய மிடில் கிளாஸ் குடும்பத்தினர்களின் இடத்தை ஆசியர்கள் பிடித்து விடுவார்கள் என்றும், உலக அளவில் இவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடில் கிளாஸ் குடும்பத்தினர் என்பது பொதுவான சொல்லாக இருந்தாலும் அவர்களை அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் , லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் மற்றும் மிடில் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் என ரயிலில் பெர்த் பிரிப்பது போல பிரித்து வைத்துள்ளனர். இதில் மாதம் ரூ.1,035ல் இருந்து ரூ.2,070 வரை சம்பாதிப்பவர்களை லோயர் மிடில் கிளாஸ் என்றும், ரூ.2070ல் இருந்து ரூ.5,177 வரை சம்பாதிப்பவர்களை மிடில் மிடில் கிளாஸ் என்றும், ரூ.5177ல் இருந்து ரூ.10,354 வரை சம்பாதிப்பவர்களை அப்பர் மிடில் கிளாஸ் என்றும் அளவிட்டுள்ளனர். இதன்மூலம் மாதம் ரூ. 10,354க்கு மேல் சம்பாதிப்பவர்களை பணக்காரர்களாக்கியுள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி. இந்தியாவைப் பொறுத்தவரை 82 சதவீத நடுத்தர வர்க்கத்தினர் கீழ் நடுத்தர வர்க்கத்தினரே. அதாவது இவர்களது மாதச் சம்பளம் அதிகபட்சம் ரூ. 2,070. இவர்களின் எண்ணிக்கை 22.40 கோடியாகும். மத்திய நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 4.50 கோடி. மேல் நடுத்தர வர்க்கத்தினர் 50 லட்சம் பேர் உள்ளனர். பணக்காரர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேராகும். மாதம் ரூ. 10,000க்கு மேல் சம்பளம் வாங்குவோரின் எண்ணிக்கை 0.0009 சதவீதம் மட்டுமே என்கிறது அந்த ஆய்வு.
இந்தியாவில், ரியல் எஸ்டேட் துறையில் அன்னிய நேரடி முதலீடு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 80 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டில், இத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு ரூ.171 கோடியாக இருந்தது. இது, சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டில் வியக்கத்தக்க வகையில் ரூ.13,586 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் இத்துறை ஈர்த்த நேரடி முதலீடு ரூ.737 கோடியாக உள்ளது. இது, இந்திய ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி மீது வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அன்னிய நேரடி முதலீட்டால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில் நுணுக்கங்களை இந்திய நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள முடியும். சென்ற ஐந்து ஆண்டுகளில், வெளிநாட்டினர், இந்திய வீட்டு வசதி துறையில் ரூ.37,986 கோடியை நேரடியாக முதலீடு செய்துள்ளனர். இவ்வாண்டில் இதுவரையிலான காலத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.13,586 கோடியாகும்.
இந்தியாவில், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி குறித்து கிரிசில் அமைப்பின் தலைவர் (கார்ப்பரேட் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி தர நிர்ணயம்) ஆகாஷ் தீப் ஜோதி கூறும்போது, 'கடந்த 2008-ஆம் ஆண்டில், உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார உருக்குலைவை எதிர்கொண்டு இந்திய ரியல் எஸ்டேட் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் அதிவேக வளர்ச்சியால், வீடு மற்றும் வர்த்தக வளாகங்களுக்கான தேவைப்பாடு அதிகரிக்கும்'' என்று தெரிவித்தார். வரும் 2011-ஆம் ஆண்டில், நாட்டின் பொருளாதாரத்தில் 8.5 சதவீத வளர்ச்சி ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் மாபெரும் எழுச்சி ஏற்படும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இது குறித்து ரியல் எஸ்டேட் நிபுணர் ஒருவர் கூறும்போது, 'நம் நாட்டில், கூடுதலாக 2.60 கோடி வீடுகள் தேவைப்படுகிறது. இந்நிலையில், நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, ரியல் எஸ்டேட் துறையில் மீண்டும் எழுச்சி ஏற்படும்'' என்று தெரிவித்தார்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சட்ட விரோதமாக தங்களிடம் சேர்த்து வைத்துள்ள கறுப்புப் பணம் பற்றிய விவரங்களை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அளிக்க சுவிட்சர்லாந்து வங்கிகள் ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சட்ட விரோதமாக தங்கள் பணத்தை, சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில் கறுப்புப் பணமாக போட்டு வைத்துள்ளனர். யார் யார் எவ்வளவு பணம் போட்டுள்ளனர் என்று தெரிந்து கொள்வதற்காக, பல நாடுகளும் சுவிஸ் வங்கிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.அமெரிக்காவினர் வைத்திருக்கும் பணம் பற்றிய விவரங்களைத் தர சுவிஸ் வங்கிகள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளன. ஜெர்மனி உள்ளிட்ட முன்னணி நாடுகள் இதில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில், இந்தியாவும் அந்த விவரங்களைப் பெறும் ஆரம்பகட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சுவிஸ் வங்கிகள், தெள்ளத் தெளிவாக கேட்டதும் பட்டியலைத் தர முடியாது என்று கூறி சில சட்ட நுணுக்கங்களுடன் கூடிய தகவல்களைக் கேட்டன. இந்நிலையில், சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பான, 'சுவிஸ் வங்கிகள் அசோசியேஷன்' (எஸ்.பி.ஏ.,), வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான அறிக்கையில், தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள, நான்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.நாடுகள் சந்தேகப்படும் நபர்களைப் பற்றிய விவரங்கள், அவர்கள் செய்த முறைகேடுகள் பற்றிய விவரங்கள், ஏன் அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது என்பது பற்றிய ஆதார விவரங்கள், எந்தெந்த வங்கிகளில் அவர்கள் பணம் போட்டிருக்கின்றனர் என்ற தகவல்களைத் தரும்படி கேட்டிருக்கிறது. இதுகுறித்து அந்தந்த நாட்டு வருமான வரித்துறையினர் சுவிஸ் வங்கிகள் கூட்டமைப்புக்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும்.இதுவரை, தங்கள் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களைத் தரமாட்டோம் என்று ஒரே குரலில் கூறிய நிலையில் இருந்து, சுவிஸ் வங்கிகள் சற்று கீழிறங்கியுள்ளன.
கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் விற்பனை அசுர வளர்ச்சி கண்டு வரும் நிலையில், வாகன பாகங்கள் தயாரிக்கும் துறையில், அடுத்த ஆண்டு முதல், ஆண்டுதோறும் சுமார் ரூ.15,000 கோடி (300 கோடி டாலர்) முதலீடு மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது என இந்திய மோட்டார் வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் (அக்மா) தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த பத்து ஆண்டுகளில் இத்துறையில் 3,000 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஜுலை மாதத்தில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அம்மாதத்தில் வாகனங்கள் விற்பனை, இதுவரை இல்லாத வகையில், 32 சதவீதம் உயர்ந்து 12,37,461-ஆக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 9,41,070 வாகனங்களாக இருந்தது. மோட்டார் வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் வாகன நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன.
இதனால் வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் மொத்த விற்பனையும் அதிகரித்து வருகிறது. சில்லரை விற்பனையும் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால் மோட்டார் வாகன பாகங்களுக்கான தேவை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இத்துறை நிறுவனங்கள் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திறனை உயர்த்தும் வகையில் விரிவாக்கம் மேற்கொள்ள தயாராகி உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் இந்நிறுவனங்கள் 200 கோடி டாலர் (சுமார் ரூ.9,000 கோடி) முதலீடு செய்ய உள்ளன. இத்துறை ஆண்டுதோறும் 20 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வாண்டில் இத்துறையின் மொத்த வருவாய் 2,500 கோடி டாலராக (ரூ.1.15 லட்சம் கோடி) அதிகரிக்கும் என அக்மா குறிப்பிட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை 2,200 கோடி டாலர் மதிப்பிற்கு உயர்ந்துள்ளது. அவ்வாண்டில் ஏற்றுமதி வாயிலாக மட்டும் இத்துறை 380 கோடி டாலர் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதி ஆண்டில் இத்துறை நிறுவனங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஈட்டும் வருவாய் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெல்சிங்கி/புதுடில்லி : சர்வதேச அளவில் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மொபைல் அனாலிடிக்ஸ் சேவை வழங்கும் நிறுவனமான மோடல்லியை தன்வசப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், டெவலப்பர்ஸ் மற்றும் பப்ளிசர்களுக்கு இனிய வரப்பிரசாதமாக விளங்கும் என்றும், இதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்தாண்டின் பிற்பகுதியில் முடிவுக்கு வரும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி பாசுமதி அரிசி ஏற்றுமதி நிறுவனமான அமைரா புட்ஸ் நிறுவனம், தனது ஏற்றுமதியை மத்திய கிழக்கு நாடுகளிலும் விரிவுபடுத்தும் பொருட்டு, துபாயின் முன்னணி வணிக குழுமமான சோய்த்ராம்சுடன் கைகோர்க்கிறது. இதுகுறித்து, அமைரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கரண் சனானா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : துபாய் நாட்டுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி அரிசிறை ஏற்றுமதி செய்ததன் மூலம், தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி 10 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி 70 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதன்மூலம், ரூ. ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும், வரும் கால்ஙகளில் 70 ஆயிரம் டன் பாசுமதி அரிசியை 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கும் அரிசியை ஏற்றுமதி செய்ய உத்தேசித்திருப்பதாகவும், இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி என்பது சோய்த்ராவுடனான கைகோர்ப்பின் மூலம் சாத்தியம் ஆகும் என்று அந்த அறிக்கையில் சனானா தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆக. 24: தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் பெயரில் ரிசர்வ் வங்கியில் கணக்கு உள்ளதாகக் கூறி வரும் போலி மின்னஞ்சல்கள், கடிதங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பாரத ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் கே.ஆர். ஆனந்தா தெரிவித்தார்.
÷இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
லாட்டரியில் பெரிய தொகை பரிசாக வழங்குவது, வெளிநாட்டில் உள்ள பணத்தை இலவசமாக தருதல், வேலை வாய்ப்பு அளிப்பது, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர அனுமதி உள்ளிட்டவை வழங்குவதாகக் கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறி வரும் மோசடி மின்னஞ்சல்கள், கடிதங்கள் அண்மைக்காலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது.
இது தொடர்பான புகார்களும் அதிகரித்து வருகின்றன.
÷இதில் வழக்கமான நடைமுறைகள் மாறி தற்போது ரிசர்வ் வங்கியின் பெயரிலேயே பல்வேறு மோசடி மின்னஞ்சல்கள், கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதாகப் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.
÷ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ கடித ஏட்டில், உயர் அதிகாரிகளின் பெயர், பதவி, கையெழுத்து உள்ளிட்ட விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தி பொது மக்களை மோசடி செய்வதில் சிலர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
÷ரிசர்வ் வங்கியில் எந்த தனிப்பட்ட நபரின் பெயரிலோ, நிறுவனத்தின் பெயரிலோ, அறக்கட்டளை பெயரிலோ கணக்குகள் பராமரிக்கப்படுவது கிடையாது.
÷ரிசர்வ் வங்கியில் உங்கள் பெயரில் ஒரு குறிப்பிட்டத் தொகை வெளிநாட்டில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பெற நீங்கள் இந்த வங்கியில் உள்ள இந்த கணக்கில் இவ்வளவு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறி மின்னஞ்சல்கள், கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன.
÷இவ்வாறு வரும் அழைப்புகள் எதையும் பொது மக்கள் நம்பி ஏமாற வேண்டாம். ரிசர்வ் வங்கி வைப்புத் தொகை விஷயமாக எந்த தனிப்பட்ட நபரையும் தொடர்பு கொள்வது இல்லை.
÷இது தொடர்பாக மோசடியாளர்களை கண்டுபிடிக்க போலீஸôர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இவை அனைத்தும் இணையதளம் வாயிலாகவே வருகின்றன என்பதாலும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ள ஒருவரின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி இந்த மோசடிகள் நடைபெறுவதால் சம்பந்தப்பட்டவர்களை யார் என அடையாளம் காண்பதே பெரும் சிரமமாக உள்ளது.
÷எனவே, இத்தகைய மோசடிகளில் சிக்காமல் இருக்க பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு வரும் மின்னஞ்சல்கள், கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் அனைத்துக்கும் பொதுமக்கள் பொருட்படுத்தாமல், புறக்கணிப்பதன் மூலமே இந்த மோசடியில் சிக்காமல் இருக்கலாம்.
÷மேலும், பொது மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளை வேறு ஒருவர் அவரது தேவைக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அனுமதிப்பவர்களையே மோசடியாளர்கள் துருப்புச்சீட்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
÷தொடர்ந்து இது போன்று அழைப்புகள் வரும் நிலையில் அது சரியானதா என ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகத்தில் வெளிநாட்டு பண பரிமாற்ற பிரிவு பொது மேலாளரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
÷செப்டம்பர் 8-ம் தேதி கோவையிலும், 9-ம் தேதி கரூரிலும் இந்த மோசடிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது என்றார் கே.ஆர். ஆனந்தா.
Blogroll
-
SENSEX : 35962.93 * 33.29 (0.09 %)7 ஆண்டுகள் முன்பு
-
-
Nifty 25-08-2010
புதன், 25 ஆகஸ்ட், 2010இடுகையிட்டது BULLMARKETINDIA நேரம் புதன், ஆகஸ்ட் 25, 2010 0 கருத்துகள்
Nifty 17-08-2010
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010இன்றைய சந்தைகள் எட்டர இறக்கத்துடன் பயணிக்க வாய்ப்பு உண்டு சந்தையின் ஆடுத்த கட்ட நகர்வுகள் நிபிட்டி 4475 கடந்தால் மட்டுமே எட்ட்ரங்களுடன் பயணிக்கலாம் நிபிட்டி கீழ் நிலையில் 5320 உடையத வரை பெரிய சறுக்கல்கள் இருக்காது
STOCKS TO WATCH
RELIANCE
STERLITE
LNT
CENTRAL BANK
IOB
MAH&MAH FIN
TECH MAHINDRA
WIPRO
BHARTHI
WELSPUN COR
MAH LIFE
ULTRA TECH
ACC
JINDAL STEEL
EDUCOMP
REC
LANCO INFRA
MARICO
HUL
IOC
MRPL
BIOCON
CROMPTON GRE
POWER GRID
PFC
GUJARAT STATE PETRO
HERO HONDA
MARUTHI
GMR INF
PIRAMAL HEA
IDBI
MOSERBAER
ISPAT INDUS
REL CAPIT
CAIRN
'நவரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா' (சி.ஐ.எல்.,) நிறுவனம், நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டத்தை இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஒரிசா மாநிலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டம், ஒரிசா மாநிலம் தல்சார் என்ற இடத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இத்திட்டத்தில், 'கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' மற்றும் 'ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ்' என்ற பொதுத் துறை நிறுவனங்களோடு இணைந்து சி.ஐ.எல்., செயல்படத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சி.ஐ.எல்., சேர்மன் எஸ்.பட்டாச்சார்யா கூறியதாவது: தல்சாரில் தற்போது இயங்காமல் இருக்கும் ஆர்.சி.எப்., நிறுவனத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு 'மகாநதி கோல்பீல்ட்ஸ்' நிறுவனம், 50 லட்சம் டன் நிலக்கரியை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. சி.ஐ.எல்., ஏற்கனவே இத்திட்டத்தை பூமிக்கடியில் செயல்படுத்தியது. ஆனால், ரஷ்யாவில் மக்கள் வசிக்காத உள்ளடங்கிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதைப் போல் அல்லாமல், நம் நாட்டில் மக்கள் வசிக்கும் இடங்களிலேயே செயல்படுத்த வேண்டியிருப்பதால், நீர் விரைவில் மாசுபட்டு விடுகிறது. நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் அமோனியம் நைட்ரேட்டிலிருந்து தான் யூரியா உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். தற்போது நிலக்கரித் துறையில் 7 சதவீதம் வரை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பட்டாச்சார்யா தெரிவித்தார். நிலக்கரியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வாயு, தொழிற்சாலைகளுக்குப் பயன்படும்.
இதுவரை நாட்டின் முன்னணி நிறுவனங்களில் முதலிடத்தில் இருந்த அம்பானி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி விட்டு, இப்போது டாடா நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன் சமீபத்திய சந்தை மதிப்பு மூன்று லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி நிறுவனமாக முதலில் ரிலையன்ஸ் நிறுவனம் இருந்தது. அதன் நிறுவனர் திருபாய் அம்பானியின் இறப்புக்கு பின், முகேஷ் மற்றும் அனில் அம்பானிக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இந்த நிறுவனம் இரண்டாக பிரிந்தது.சமீபத்தில் கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு பங்கிடுவது சம்பந்தமாக நடந்த வழக்குக்கு பின், அம்பானி சகோதரர்கள் இணைந்து விட்டனர்.
இந்நிலையில், அம்பானி சகோதரர்களின் தனிப்பட்ட சந்தை மதிப்பை விட, டாடா நிறுவனத்தின் சந்தை மதிப்பு மூன்று லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து முன்னிலையில் உள்ளது. உப்பு முதல் தகவல் தொடர்பு சாதனங்கள் வரை உற்பத்தி செய்யும் டாடா நிறுவனத்துக்கு 30க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன. இந்த 30 நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு தான் சமீபத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் டாடா நிறுவனத்தின் சந்தை மதிப்பு, மூன்று லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயாக தான் இருந்தது. அதற்கடுத்த காலாண்டின் முதல் மாதமான ஜூலையிலேயே அந்நிறுவனத்தின் மதிப்பு மளமளவென மூன்று லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 லட்சத்து 21 ஆயிரத்து 750 கோடியாக உள்ளது. கடந்த காலாண்டில் அவரது ஆர்.ஐ.எல்., மற்றும் ஆர்.ஐ.ஐ.எல்., நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு மூன்று லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போதைய நடப்புக் காலாண்டில் இதில் 37 ஆயிரம் கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளது. அனில் அம்பானி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இருவரது மொத்த சந்தை மதிப்பைக் கூட்டினால் நான்கு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது டாடா நிறுவனத்தை விட 77 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாகும். எனினும், தனிப்பட்ட சந்தை மதிப்பு நிலவரப்படி தற்போது நாட்டின் அதிக சந்தை மதிப்புடைய நிறுவனமாக டாடா குழுமம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்ட பிரிவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. அதேபோல், அனில் அகர்வாலின் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 300 கோடியாக உள்ளது. சுனில் மித்தலின் பாரதி குழுமத்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உள்ளது
கம்ப்யூட்டர் உபகரணங்கள் தயாரிப்பில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், புதிய ரூபாய் குறியீடுடன் கூடிய கீபோர்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : டிவிஎஸ் கோல்ட் பாரத் கீபோர்ட் (சுருக்கமாக டிவிஎஸ் - இ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கீபோர்டின் உதவி கொண்டு எளிதாக புதிய ரூபாய் குறியீடை எளிதாக இடம்பெறச் செய்யலாம் என்றும், 490மிமீ நீளம், 180மிமீ அகலம் மற்றும் 20மிமீ உயரம் கொண்ட இந்த புதிய கீபோர்டு, யுஎஸ்பி மற்றும் பிஎஸ்2 சப்போர்டை பெறும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்ரேடிங் சிஸ்டங்களில் இந்த புதிய கீபோர்டு தங்குதடையின்றி இயங்கும் என்றும், இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட டிவிஎஸ் - இ கீபோர்டின் விலை ரூ. 1,495 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம், புதிய ரூபாய் குறியீடு கொண்டுள்ள கீபோர்டை வடிவமைத்த முதல் மற்றும் இந்தியாவின் ஒரே நிறுவனம் என்ற பெருமையை டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெறுவதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முனன்ணி ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமான பர்ஸ்வ்நாத் டெவலப்பர்ஸ் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.32 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 129 சதவீதம் (ரூ.14 கோடி) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 118 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.259 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான மாரிகோ, தென்னாப்ரிக்காவின் ஹெல்த்கேர் நிறுவனமான இங்வியை வாங்க திட்டமிட்டுள்ளது. மாரிகோ, மாரிகோ தென்னாப்ரிக்கா (எம்.எஸ்.ஏ.)என்ற பெயரில் 2007ம் ஆண்டு முதல் தென்னாப்ரிக்காவில் ஹோர் கேர் பிராண்டுகள் கெய்வில் மற்றும் பிளாக் சிக் பொருட்களையும், ஹெல்த்கேர் பிராண்ட் ஹெர்குலிஸையும் விற்பனை செய்து வருகிறது. இதனை தொடர்ந்து தென்னாப்ரிக்காவின் ஹெல்த்கேர் நிறுவனமான இங்வியை வாங்க திட்டமிட்டுள்ளது. ரூ. 15 கோடி விற்பனை இலக்கை கொண்டுள்ள இங்வியை வாங்குவதன் மூலம் தென்னாப்ரிக்காவில் குறிப்பிட்ட இடத்தை மாரிகோ பெறமுடியும் என எம்.எஸ்.ஏ. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜான் மேசன் குறிப்பிட்டார்.
இரும்பு, ஸ்டீல், மின்சக்தி, மினரல்ஸ் என பல துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள இந்தியாவின் முன்னணி நிறுவனமான மோனட் குழுமத்தின் ஒர அங்கமான மோனட் இஸ்பத் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், ரூ.72.71 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.72.47 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.438.39 கோடியிலிருந்து ரூ.420.38 கோடியாக குறைந்துள்ளது.
முதலீட்டாளர்களின் வர்த்தக் கணக்குளில் இருந்து பணத்தை புரோக்கர்கள் தவறுதலாக பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு மாதமோ அல்லது காலாண்டிலோ, முதலீட்டாளர்களின் பயன்படுத்தாத பணத்தை திருப்பியளித்து விடவேண்டும் என்று 'செபி' எச்சரித்துள்ளது. முதலீட்டாளர்களின் வர்த்தகக் கணக்குகளில் இருந்து, புரோக்கர்கள், பங்குச் சந்தை நிலவரத்தை பொருத்து முதலீடு செய்வர். ஆனால், முதலீடு செய்தது போக மிச்சமுள்ள பணத்தை தவறுதலாக கையாள்வதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து, 'செபி' பங்குச் சந்தை புரோக்கர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களின் தேர்வுப்படி, ஒவ்வொரு மாதமோ அல்லது காலாண்டிலோ, வாடிக்கையாளர்களின் பயன்படுத்தப்படாத பணம் உள்ளிட்ட அவர்களின் மொத்த வர்த்தகக் கணக்கையும் வாடிக்கையாளர்களிடம் கொடுத்து விட வேண்டும். வர்த்தகக் கணக்குடன் கணினி மூலம் இணைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இனி புரோக்கர்கள் மிச்சமுள்ள பணத்தைச் செலுத்தி விட வேண்டும். இ-பேங்கிங் வசதி இல்லாத வாடிக்கையாளர்களுக்கு 'செக்' மூலம் பணத்தை அனுப்பி விட வேண்டும். இதன் மூலம், புரோக்கர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையிலான பரிவர்த்தனையில் வெளிப்படைத் தன்மை ஏற்படும். மேலும் முதலீட்டாளர்களின் பணம் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும்.
இந்தியன் வங்கி, குறுகிய கால, 'மெச்சூரிட்டி' கொண்ட நிரந்தர வைப்புநிதி திட்டத்தில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கான நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில், 'இன்டபுள்' மற்றும் 'இன்டபுள் சீனியர்' என்ற இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியன் வங்கி. அதன்படி, 'இன்டபுள்' திட்டத்தில் வைப்பு நிதி செலுத்தும் பொதுமக்களுக்கு அத்தொகை 108 மாதங்களில் இரண்டு மடங்கு ஆகும். மூத்த குடிமக்களுக்கான 'இன்டபுள் சீனியர்' திட்டத்தில், வைப்பு நிதி 100 மாதங்களில் இரண்டு மடங்கு ஆகும். மற்ற சாதாரண வைப்பு நிதி திட்டங்களுக்கு பொருந்தக் கூடிய அனைத்து விதிகளும் இத்திட்டத்துக்கும் பொருந்தும். அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட 'மெச்சூரிட்டி' காலகட்டத்தில் செலுத்தப்படும் ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட வைப்புத் தொகைக்கு, 7.25 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதம் ஆக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம், இயற்கை எரிவாயு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் புதிய ரக கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில், மாருதி சுசுகி நிறுவனத்தின் இயற்கை எரிவாயு தொழில்நுட்பம் (சி.என்.ஜி.,) மூலம் இயங்கும் கார்களை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிமுகப்படுத்தி வைத்தார். இவ்விழாவில், மாருதி குழும அதிகாரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இயற்கை எரிவாயு தொழில்நுட்பம், மாருதியின் எஸ்.எக்ஸ்.4, எக்கோ, வேகன் ஆர், எஸ்டிலோ மற்றும் ஆல்டோ ஆகிய கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகைக் கார் இன்ஜின்களில் 'இன்டெலிஜன்ட்- கேஸ் போர்ட் இன்ஜெக்ஷன்' என்ற புதிய தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்
மத்திய அரசின், 'நவரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா' (சி.ஐ.எல்.,) நிறுவனம், நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டத்தை இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஒரிசா மாநிலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டம், ஒரிசா மாநிலம் தல்சார் என்ற இடத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இத்திட்டத்தில், 'கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' மற்றும் 'ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ்' என்ற பொதுத் துறை நிறுவனங்களோடு இணைந்து சி.ஐ.எல்., செயல்படத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சி.ஐ.எல்., சேர்மன் எஸ்.பட்டாச்சார்யா கூறியதாவது: தல்சாரில் தற்போது இயங்காமல் இருக்கும் ஆர்.சி.எப்., நிறுவனத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு 'மகாநதி கோல்பீல்ட்ஸ்' நிறுவனம், 50 லட்சம் டன் நிலக்கரியை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. சி.ஐ.எல்., ஏற்கனவே இத்திட்டத்தை பூமிக்கடியில் செயல்படுத்தியது. ஆனால், ரஷ்யாவில் மக்கள் வசிக்காத உள்ளடங்கிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதைப் போல் அல்லாமல், நம் நாட்டில் மக்கள் வசிக்கும் இடங்களிலேயே செயல்படுத்த வேண்டியிருப்பதால், நீர் விரைவில் மாசுபட்டு விடுகிறது. நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் அமோனியம் நைட்ரேட்டிலிருந்து தான் யூரியா உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். தற்போது நிலக்கரித் துறையில் 7 சதவீதம் வரை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பட்டாச்சார்யா தெரிவித்தார். நிலக்கரியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வாயு, தொழிற்சாலைகளுக்குப் பயன்படும்.
HAPPY TRADING
BULLMARKETINDIAA
இடுகையிட்டது BULLMARKETINDIA நேரம் செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010 0 கருத்துகள்
Nifty 16-08-2010
திங்கள், 16 ஆகஸ்ட், 2010சந்தைகள் புதிய எட்ட்ரதுடன் பயணிக்க வாய்ப்பு கூடியுள்ளது 5475 கடந்தால் 5650 வரை செல்லும் வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை பவர் வங்கி ரியல் எஸ்டேட் , ப்ஹர்ர்மா மற்றும் ஆட்டோ ,மெட்டல் பங்குகள் விலை கூட வாய்புள்ளது புதிய முதலிடுகள் தவிர்க்கவும் .
STOCKS TO WATCH
RELIANCE
BHARTHI
LANCO INFRA
DENA BANK
KFA
SUN TV
IOB
STERLITE INDUS
MUNDRA PORT
PHIPAVAV SHIPYARD
UNION BANK
POWER GRID
BIOCON
ALLAHABAD BANK
CANARA BANK
CPCL
HERO HONDA
EXIDE INDUS
STERLING BIO
LNT
OPTO CIR
GUJNRE COKE
COLGATE PAL
HUL
TATA CHEM
EKC
GMDC
JINDAL STEEL
TATA STEEL
GAIL
MRPL
PETRONET LNG
CROMPTON GRE
ABAN
JP ASSO
JAI PRAKASH POWER
LUPIN
HCC
IFCI
MAH&MAH FIN
REL CAP
LIC FIN
ADITYA BIRLA NUVO
IDEA
CAIRN
BOMBAY DYEING
சரிந்து கொண்டிருந்த சந்தை, எப்படி நிமிர்ந்தது என்பது எல்லாருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இரண்டு, மூன்று நல்ல காலாண்டு முடிவுகள், சந்தையை நிமிர வைக்கும் என்பதற்கு, இவ்வார சந்தை ஒரு உதாரணம். ஸ்டேட் பாங்க், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய மிகப்பெரிய கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள், சந்தையை நிமிர வைத்தன; முதலீட்டாளர்களையும் தான். ஸ்டேட் பாங்கின் முடிவுகளை தொடர்ந்து, எல்லா வங்கிப் பங்குகளும் மேலே சென்றன.
வியாழனும், வெள்ளியும் சேர்ந்து, மும்பை பங்குச் சந்தை, 96 புள்ளிகள் கூடி முடிந்தது. வெள்ளியன்று மட்டும் மும்பை பங்குச் சந்தை, 93 புள்ளிகள் கூடி, 18 ஆயிரத்து 167 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 35 புள்ளிகள் கூடி, 5,452 புள்ளிகளுடனும் முடிந்தது.ஸ்டெர்லைட் - கெய்ர்ன் இந்தியா கெய்ர்ன் இந்தியா கம்பெனியை வாங்க ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் முயற்சிக்கிறது என்பது தான், சந்தையின் தற்போதைய, 'ஹாட் டாபிக்!' இந்தியாவில் பல எண்ணெய் கிணறுகளை வைத்துள்ள கெய்ர்ன் இந்தியா, மேலும் பல இடங்களில் ஆய்வுகள் நடத்தி வருகிறது.
லாபத்தில் நடக்கும், ஒரு எண்ணெய் இக்கம்பெனியை ஸ்டெர்லைட் வாங்குவதற்கு முயலுகிறது என்ற செய்தி, சந்தையை இரண்டு நாட்களாக கலக்கிக் கொண்டிருக்கிறது.இதே போல, தென் கொரியாவில் திவாலான மோட்டார் கம்பெனியான, 'சாங்யாங்' என்ற கம்பெனியில், 70 சதவீதத்தை வாங்க, மகேந்திரா அண்ட் மகேந்திரா கம்பெனி முயற்சிக்கிறது. இக்கம்பெனி சிறிய மோட்டார் வாகனங்களை தயாரித்து வருகிறது.புதிய வெளியீடு குஜராத் பிப்பாவ் போர்ட் கம்பெனியின் புதிய வெளியீடு இந்த மாதம் வருமென தெரிகிறது. எஸ்.கே.எஸ்., மைக்ரோ பைனான்ஸ் வெளியீடு வந்துவிட்டது. சிறிய முதலீட்டாளர்களில் ஏழு பங்குகள் விண்ணப்பித்தவர்களுக்கு, 16ல் ஏழு பேருக்கும், 14 பங்குகள் விண்ணப்பித்தவர்களுக்கு 10ல் எட்டு பேருக்கு, எட்டு பங்குகளும், அதற்கு மேல், விண்ணப்பித்தவர்களுக்கு குறைந்தபட்சம் எட்டு பங்குகளும் கிடைத்துள்ளன. 50 ரூபாய் அதிகமாக பட்டியலிடப்படலாம்.இன்ஜினியர்ஸ் இந்தியா வெளியீடு வெளிவந்து விட்டது. இது கிடைத்தவர்களுக்கு, நல்ல லாபங்கள் கிடைத்துள்ளன.உஜாலா ஜோதி லாபரெட்டரீஸ் (உஜாலா) கம்பெனி, 250 கோடி முதலீட்டில் இயங்கிக் கொண்டிருக்கும், இரண்டு கம்பெனிகளை வாங்கப் போவதாக அறிவித்து உள்ளது. சமீபகாலத்தில் இந்தக் கம்பெனியின் பங்குகள், நல்லவிதமாக மேலே சென்று கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது. சரிவுகளில் வாங்கலாம்.
இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்கார குழுமமாக டாடா குரூப் நிறுவனம் உருவெடுத்துள்ளது.
முகேஷ் அம்பானி நிறுவனங்களின் சந்தை மதிப்பை விட டாடா குரூப்பின் மதிப்பு மிக அதிகமாகும். டாடா குரூப்பின் சொத்துக்கள் மார்க்கெட் நிலவரப்படி ரூ. 3,71,000 கோடியாகும்.
2வது இடத்தை முகேஷ் அம்பானியின் ரிலைன்ய்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குரூப் பெறுகிறது. இதன் மதிப்பு ரூ. 3, 21, 750 கோடியாகும். 3வது இடத்தை அனில்அகர்வாலின் ஸ்டெர்லைட் குரூப் பெறுகிறது. அதன் மதிப்பு ரூ. 1,35,300 கோடியாகும்.
4வது இடத்தில் இருக்கிறார் அனில் அம்பானி. இவரதுநிறுவனத்தின் மதிப்பு ரூ. 1,25,000 கோடியாகும். சுனில் மிட்டலின் பார்தி குரூப் ரூ 1,20,500 கோடியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
காலாண்டு முடிவுகள் டாடா மோட்டார்சின் நல்ல காலாண்டு முடிவுகளைத் தொடர்ந்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்தாண்டு இதே காலாண்டை விட, இவ்வருடம் ஜூன் காலாண்டில் 25 சதவீதம் அதிகமாக லாபம் ஈட்டியுள்ளது. மற்ற வருமானங்கள் கூடியுள்ளதால், இந்த லாபம் கிடைத்துள்ளது.இது தவிர, டாடா ஸ்டீல், மைக்ரோ டெக்னாலஜிஸ், ஆப்டோ சர்க்கியூட், எஸ்டி அலுமினியம், அதுனிக் மெட்டல்ஸ் கம்பெனிகளும், கடந்தாண்டு இதே காலாண்டை விட, இந்தாண்டு ஜூன் வரை காலாண்டில் நல்ல முடிவுகளை தந்துள்ளன.மேக் மை டிரிப்'மேக் மை டிரிப்' என்ற டிராவல் போர்ட்டல் கம்பெனி தன் ஏ.டி.ஆரை, அமெரிக்காவில் ஒரு ஏ.டி.ஆர்.,க்கு (அமெரிக்கன் டேபொசிடோரி ரெசிப்ட்) 14 அமெரிக்க டாலர் என்ற மதிப்பில் விற்றது. இது, அங்கு பட்டியலிடப்பட்ட போது, 75 சதவீத லாபத்தை பெற்றது. இந்தியர் ஒருவர் நடத்தி வரும் கம்பெனி இது என்பது குறிப்பிடதக்கது. இந்தியாவிலும் டிராவல் சம்பந்தமாக புக்கிங்குகள்செய்ய, இக்கம்பெனியின் ஆன்-லைன் வெப்சைட் உதவுகிறது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்:சந்தையில் சிறிது தெம்பும், முன்னேற்றமும் தெரிகிறது. ஆசிய அளவிலும் சந்தைகள் மேலே சென்றுள்ளன. இது, சந்தையை அடுத்த வாரம் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா விலகக் கூடாது என்று டாடா நிறுவனப் பங்குதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருவேளை பதவி விலகினாலும், கவுரவ தலைவராகத் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
வரும் டிசம்பர் 2012-ம் ஆண்டு டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா தனது தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்குள் அவரது இடத்துக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணி ஆரம்பித்துள்ளது.
தனக்குப் பிறகு தலைவர் பதவிக்கு வரும் நபர் முற்றிலும் தகுதி வாய்ந்தவராக இருந்தால் மட்டுமே தேர்வு செய்யப்படுவார் என்று ரத்தன் டாடா கூறியுள்ளார்.
இந்த நிலையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ரத்தன் டாடா பதவி விலகக் கூடாது என்று கோரியுள்ளனர்.
"டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து தாங்கள் விலகக் கூடாது என்பதே எங்கள் ஒருமித்த கோரிக்கை. ஒருவேளை தாங்கள் விலகுவதாக இருந்தாலும். டாடா குழுமத்தின் கவுரவத் தலைவராக தொடர வேண்டும். முக்கிய பொறுப்புகளை நிர்வகிக்க வேண்டும்.
டாடா குழுமத்துக்கு தங்களின் பங்களிப்பு அசாதாரணமானது. உலகின் 10வது பெரிய ஸ்டீல் நிறுவனமாக டாடா ஸ்டீலை உருவாக்கிய பெருமை உங்களுக்கே உரியது..." என்று பங்குதாரர்கள் கூறினர்.
பின்னர் டாடா கூறுகையில், "தலைவர் பதவிக்கான பொருத்தமான நபர் தேர்வு குறித்து இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். டாடா ஸ்டீலைப் பொறுத்த வரை, கோரஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது உலகில் பெரிய நிறுவனங்களுள் டாடா ஸ்டீலும் ஒன்றாக மாற உதவியது...," என்றார்.
- சேதுராமன் சாத்தப்பன் -
இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளை சர்வதேச அளவில் கட்டிப்போட்டுள்ள பெப்சிகோ நிறுவனம், டயட் கோலா பிரிவில் புதியதெரு 'நோ சுகர்' கோலா மேக்சை அறிமுகப்படுத்துகிறது. இதன் முதற்கட்டமாக, பெப்சிகோ இந்தியா நிறுவனம், டில்லியில் கோலா மேக்சை அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம், ஏற்கவவே, டயட் பெப்சியை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பெப்சிகோ இந்தியா நிறுவன மார்க்கெட்டிங் பிரிவின் நிர்வாக இயக்குனர் புனிதா லால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : ரூ. 10 ஆயிரம் கோடி முதலீட்டிலான குளிர்பான சந்தையில், ஒரு சிறுபிரிவாக டயட் கோலா பிரிவை துவக்கி உள்ளதாகவும், ஆண்டிற்கு 3 மில்லியன் கேஸ்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், தங்கள் நிறுவனம், உற்பத்தி மற்றும் விற்பனையை பன்மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக, டில்லியில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 250 மிலி, 300 மிலி மற்றும் 500 மிலி பெட் பாட்டில்களில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், 2011ம் ஆண்டின் முற்பகுதியில், இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
பிஸ்கெட்டுகள் உள்ளிட்ட நுகர் பொருள் துறையைச் சேர்ந்த பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.32.83 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.47.37 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.731.24 கோடியிலிருந்து ரூ.912.83 கோடியாக அதிகரித்துள்ளது
விமானப் போக்குவரத்தில் இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது இந்தியா. முன்பு தூங்கி வழிந்து கொண்டிருந்து இந்திய விமான நிலையங்கள் மகா சுறுசுறுப்பாகக் காட்சியளிக்கின்றன. முக்கிய, பெரிய விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீனப்படுத்தி வருகிறது விமானப் போக்குவரத்து இயக்ககம். இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம், சமீபத்தில் இந்தியாவின் சிறந்த விமான நிலையமாக ஹைதராபாத்தை தேர்வு செய்துள்ளது. வாடிக்கையர் திருப்தி, விமானங்களின் வருகை, செக் இன் செய்யப்படும் முறை என பல்வேறு விஷயங்களில் பயணிகளின் திருப்தியை அடிப்படையாகக் கொண்டு ஹைதராபாத்துக்கு இந்த கவுரவத்தை அளித்துள்ளது இந்த நிறுவனம். இது தவிர இந்தியாவின் சிறந்த 10 விமான நிலையங்களையும் அறிவித்துள்ளனர். ஆனால் இவற்றுக்கு ரேங்க் எதுவும் வழங்கப்படவில்லை. இந்தியாவின் சிறந்தவிமான நிலையங்களில் ஐந்தாம் இடத்தை சென்னை சர்வதேச விமான நிலையம் பெற்றுள்ளது. நகருக்குள்ளேயே அமைந்துள்ள ஒரே விமான நிலையம் என்ற பெருமை கொண்டது சென்னை விமான நிலையம். புதிதாக இரண்டாவது டெர்மினல் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ 2350 கோடி செலவில் அதிநவீனமயமாக்கப்பட்டு வருகிறது.கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு ஆண்டுக்கு 50 மில்லியன் பயணிகளைக் கயாளும் திறன் கொண்ட முன்னணி விமான நிலையமாகத் திகழவிருக்கிறது சென்னை.
கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இரும்புத் தாது வெட்டி எடுக்கும் சுரங்கம் மூடப்பட்டுள்ளதால், சென்னை துறைமுகத்தில் அவற்றின் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை துறைமுகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதுக்கள், இரும்பாக மாற்றப்பட்டு, 'ஸ்டீல்' பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இங்கு வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதுக்கள், கட்டிகள் மற்றும், துகள்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன.இதில், கட்டியான கற்கள் போன்ற தோற்றம் கொண்ட இரும்புத் தாது. நம் நாட்டில், ஒரிசா மாநிலம், கியாஞ்சோர் மாவட்டத்தில் உள்ள, பர்ப்பில் சுரங்கத்தில், முதல் தர இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றன.தென் மாநிலங்களில், கர்நாடக மாநிலம் பெல்லாரி, ஹாஸ்பெட், ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஓபலாபுரம் மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் இருந்தும் இரும்புத் தாதுக்கள் அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டு, ஜப்பான், கொரியா நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.மத்திய அரசு சார்பு நிறுவனமாக செயல்பட்ட, 'மினரல் மெட்டல் டிரேடிங் கார்பரேஷன்' (எம்.எம்.டி.சி.,) மூலம் மட்டுமே இரும்புத் தாதுக்கள் வெட்டி எடுக்கும் பணி முன்பு நடந்தது. அப்போது, துகள்களாக உள்ள தாதின் பயன்பாட்டை உணராமல், உள் நாட்டிலும் அது பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டது.மத்திய அரசின் புதிய கொள்கை மூலம், 2003ம் ஆண்டுக்கு பின், தனியாரும் சுரங்கத் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு, இங்கிருந்து சீன நாட்டிற்கு, கட்டிகள் போன்ற இரும்புத் தாது ஏற்றுமதி துவங்கியது. சீன நாட்டின் இறக்குமதியாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, துகள் தாதுகளும் ஏற்றுமதியாகத் துவங்கியது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் ஆந்திர மாநிலம் ஓபலாபுரம் சுரங்கங்களில், கடந்த ஆண்டு ஜூலை முதல் அரசியல் காரணங்களுக்காக இரும்புத் தாது வெட்டி எடுக்கும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு வந்த இரும்புத் தாதுக்கள், சென்னை துறைமுகம் வழியாகவே, அதிகளவில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதற்காக நாள்தோறும் அங்கிருந்து தலா 50 வேகன் கொண்ட ஐந்து சரக்கு ரயில்கள் மூலம் 11 ஆயிரத்து 200 டன் அளவிற்கு இரும்புத் தாதுக்கள் இங்கு எடுத்து வரப்பட்டன.இதுபோல் ஆண்டிற்கு சராசரியாக சென்னை துறைமுகத்தில் இருந்து 80 லட்சம் டன் வரை, சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஏற்றுமதி தொழிலில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், சென்னை துறைமுகத்தில், 'பிளாட்' எனப்படும் யார்டுகளை டெண்டர் மற்றும் வாடகைக்கு எடுத்து அங்கு ரயில் மூலம் எடுத்து வரப்படும் இரும்புத் தாதுக்களை தேக்கி வைத்து ஏற்றுமதி செய்து வந்தனர். இவர்களின் வசதிக்காக சென்னை துறைமுகத்தில் 24 யார்டுகள் உள்ளன. ஒவ்வொரு யார்டு மூலமும் மாதத்திற்கு 25 லட்சம் ரூபாய் வரை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு வருமானமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.இரும்புத் தாது ஏற்றுமதி குறைந்ததால், யார்டுகளை ஏற்றுமதியாளர்கள் துறைமுக பொறுப்பு கழகத்திடம் திரும்ப ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் துறைமுக பொறுப்பு கழகத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இது மட்டுமின்றி இரும்புத் தாது சரக்குகளை கையாள்வதன் மூலம் ஆண்டிற்கு 83 கோடியே 20 லட்சம் ரூபாய், சென்னை துறைமுகத்திற்கு வருமானமாக கிடைத்தது. ஓர் ஆண்டாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருமானமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.ஏற்றுமதி மூலம் துறைமுகத்திற்கு மட்டுமின்றி, இரும்புத் தாதுக்களை ஏற்றி வந்ததன் மூலம் ரயில்வே துறைக்கு மாதம்தோறும் கிடைத்து வந்த மூன்று கோடியே 75 லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இது மட்டுமின்றி, மத்திய வருவாய்த் துறைக்கு ஒரு டன் இரும்புத் தாது ஏற்றுமதி மூலம் கஸ்டம்ஸ் வரியாக 650 ரூபாயும், 'செஸ்' வரி மூலம் ஒரு ரூபாயும் கிடைத்து வந்தது. இவ்வாறு, மாதம் பல கோடி ரூபாய் அளவிற்கு கிடைத்த இந்த வருமானமும் முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் சென்னை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு மட்டுமின்றி மத்திய அரசுக்கும், இரும்பு தாது ஏற்றுமதியாளர்களுக்கும் அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய மருந்து துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், நடப்பு 2010-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியாவில் மருந்துகள் விற்பனை வாயிலாக அதிக வருவாயை ஈட்டியதில் அமெரிக்காவைச் சேர்ந்த அப்பாட் லேபரட்டரீஸ் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டின் முதல் ஐந்து முன்னணி மருந்து நிறுவனங்களில், மூன்று இடங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. நாட்டின் மருந்துகள் விற்பனை வாயிலான மொத்த வருவாயில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு 15 சதவீதமாக இருந்தது. இது, தற்போது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. நடப்பு 2010-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள், இந்தியாவில் மருந்துகள் விற்பனை வாயிலாக ஈட்டப்பட்ட மொத்த வருவாய், சென்ற ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 19.6 சதவீதம் அதிகரித்து ரூ.21,895 கோடியாக உயர்ந்தள்ளது. சென்ற ஆண்டிலும் மருந்துகள் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. மருந்துகள் வர்த்தகத்தில் அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இத்துறையில் பின்தங்கிய நிலையில் உள்ளன. இதுபோன்ற காரணங்களால், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திடும் வகையில் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்தி வருகின்றன.
இணையதளம் மூலம் தொலைபேசி சேவை தரும் நிறுவனமான வோனேஜ் நிறுவனம், பேஸ்புக் நண்பர்களுக்குள்ளே இலவசமாக பேசிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்து, வோனேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இணையதளத்தின் மூலமமான தொலைபேச வசதியை பிரபலப்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் இந்த வசதி அறிமுகப்படு்த்தப்பட உள்ளதாகவும், இந்த வசதியைப் பெற, வோனேஜ் இணையதளத்திற்கு சென்று, அதற்குரிய சாப்ட்வேரை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும், அதன்பின், அவர்கள் வழக்கம்போல, பேஸ்புக்கை லாக் இன் செய்தால், அதில் அவர்களின் நண்பர்களின் தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தகவல் தொலைதொடர்பு வரலாற்றின் முக்கிய மைல்கல் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
பில்வாரா எனர்ஜி நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்வதற்காக பங்கு வெளியீட்டில் களம் இறங்க முடிவு செய்துள்ளது. பில்வாரா எனர்ஜி நிறுவனம், அடுத்த நான்கு ஆண்டுகளில், 1,000 மெகா வாட் அளவிற்கு நீர் மின் திட்ட பணிகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. வரும் 2014-ஆம் ஆண்டிற்குள் அருணாச்சல பிரதேசம், நேபாளம் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் ரூ.8,000 கோடி முதலீட்டுச் செலவில் நீர் மின் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என பில்வாரா குழுமத்தின் தலைவர் ரவி ஜூஜூன்வாலா தெரிவித்தார். மொத்த திட்டச் செலவில், ரூ.2,500 கோடி பங்கு மூலதனமாக இடப்படுகிறது.இதில் பங்கு வெளியீட்டின் வாயிலாக ரூ.1,000-1,200 கோடி திரட்டப்பட உள்ளது. பங்கு வெளியீடு வரும் 2011-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் என ஜூஜூன்வாலா மேலும் தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னணி மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், நிகர லாபம் 32 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், ரூ. 16.82 பில்லியன் நிகர லாபமாக ஈட்டியுள்ளதாகவும், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 24.75 பில்லியன் நிகர லாபமாக ஈட்டியதாகவும், சதவீதத்தின் அடிப்படையில் இது 32 சதவீதம் சரிவு என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் 137 மில்லியன் மக்களை வாடிக்கையாளர்களைக் கொண்ட ஏர்டெல் நிறுவனம், ஆப்ரிக்க நாடுகளில் செயல்பாட்டிற்காக, குவைத் தொலைதொடர்பு நிறுவனமான ஜைய்னை 9 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியதாகவும், இதன்மூலம், சர்வதேச அளவில் ஐந்தாவது மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளதாகவும் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமல்லாமல், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் தங்களது சேவை உள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தகவல் தொடர்பு சேவைகள் வழங்கும் தலையாய நிறுவனங்களுள் ஒன்றான, வோடபோன் எஸ்ஸார், தமிழ்நாட்டில் உள்ள அதன் பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு “வோடபோன் அவசர கிரெடிட்” திட்டத்தை இன்று அறிவித்துள்ளது. இச்சேவையின் வழியாக, வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்ள நிகர மதிப்பிலிருந்து தங்களது அன்புக்குரிய நபர்களது மொபைல் கணக்கிற்கு ரூ.5-ஐ மாற்ற முடியும். இந்த உடனடி “வோடபோன் அவசர கிரெடிட்” திட்டத்தின் வழியாக, நடுவழியில் ரயில் அல்லது பேருந்தில் பயணம் தடைபட்டு, தத்தளிக்கின்ற நிலைபோன்ற அவசரகால சூழல்களில்கூட வாடிக்கையாளர்கள், தடையற்ற தகவல் தொடர்பை பயன்படுத்த இயலும். 5ரூ. பேலன்ஸ் தொகையை நன்கொடையாளர் மாற்றமுடியும். இம்மாற்ற பரிவர்த்தணையை தொடங்குகின்ற நபர் கணக்கில் 1ரூ. கட்டணம் வசூலிக்கப்படும். இம்மாற்ற பரிவர்த்தனையை கொடுப்பவர் அல்லது பெறுபவர் யாராயினும் தொடங்க இயலும். இச்சலுகைத் திட்டத்தைப் பயன்படுத்த, தொடங்கிவைக்கும் நபரது கணக்கில் குறைந்தபட்ச தொகையாக ரூ.6 இருக்கவேண்டும் மற்றும் பெறுபவர் மற்றும் தொடங்கி வைப்பவர் ஆகிய இருவரும் வோடஃபோன் நெட்வொர்க்கில் குறைந்தது 3 மாதங்கள் இணைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியாக இருந்த பாங்க் ஆப் ராஜஸ்தான் இன்று (ஆகஸ்ட் 13ம் தேதி) முதல், முன்னணி தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐயின் கிளையாக செயல்படும் என்று தெரிவித்துள்ளது. சமீபத்தில், பாங்க் ஆப் ராஜஸ்தானும், ஐசிஐசிஐயும் இணைவதற்கான கோரிக்கையை ரிசர்வ் வங்கியிடம் அளித்திருந்ததது. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்ததையடுத்து, இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த இணைப்பின் மூலம், தங்கள் வங்கியின் பிராஞ்ச் நெட்வொர்க் 25 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தேசிய அளவில், தங்கள் வங்கிக்கு 2 ஆயிரம் கிளைகள் உள்ளதாகவும், பாங்க் ஆப் ராஜஸ்தானி்ற்கு 463 கிளைகள் உள்ளதாகவும், இனிமேல், இந்த 463 கிளைகளும், ஐசிஐசிஐ வங்கியின் கிளைகளாக செயல்படும் என்றும், இதன்மூலம், நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில், தாங்கள் காலூன்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஐசிஐசிஐ வங்கி கையகப்படுத்திக்கொள்ளும் மூன்றாவது பொதுத்துறை வங்கி என்ற பெருமையை பாங்க் ஆப் ராஜஸ்தான் பெறுவதாகவும், கடந்த 2004ம் ஆண்டில் பாங்க் ஆப் மதுராவையும், 2007ம் ஆண்டில், மகாராஷ்டிராவைத் தலைமையிடமாகக் கொண்ட சங்லி வங்கியையும் கையகப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள ஷைன் ஹோண்டா கார் ஷோரூமில் புதிய ரக 'ஹோண்டா ஜாஸ் கார் அறிமுக விழா நேற்று நடந்தது. ஷைன் ஹோண்டா ஷோரூமின் நிர்வாக இயக் குனர் வகிதா ஷாஜகான் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். பொதுப் பணித் துறை அமைச்சர் ஷாஜகான், ஹோண்டா ஜாஸ் காரை அறிமுகம் செய்து வைத்தார்.புதுச்சேரி தினமலர் நிர்வாகி கே.வெங்கட்ராமன், முதல் விற்பனையை துவக்கி வைத்து கார் சாவியை வாடிக்கையாளர் செல்வத்திடம் வழங்கினார்.ஹோண்டா ஜாஸ் காரில் புதிய சிறப்பு அம்சங்களாக கவர்ச்சியான உள்தோற்றம், வடிவமைப்பு, அலாய் வீல், ஆடியோ சிஸ்டத்துடன் கூடிய யு.எஸ்.பி. வசதி, டிரைவர் சீட் அட்ஜஸ் மென்ட், போக் லேம்ஸ் போன்றவற்றை கொண் டுள்ளது. புதிய கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது.ஷைன் ஹோண்டா ஷோரூமில் ஹோண்டா ஜாஸ் மற்றும் அனைத்து ரக கார்களும் வாடிக்கையாளர்களுக்கு 'டெஸ்ட் டிரைவ்' வசதி செய் யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கார்களுக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் தரமான சர்வீஸ் செய்து தரப்படுகிறது. ஹோண்டா கார்களின் வரிசையில் ஹோண்டா ஜாஸ், ஜாஸ் சிட்டி, சிவிக், சி.ஆர்.வீ., மற்றும் ஹோண்டா அக்கார்டு ஆகிய கார்கள் ஷோரூமில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.ஹோண்டா ஜாஸ் கார் அறிமுக விழாவிற்கான ஏற்பாடுகளை ஷைன் ஹோண்டா பொதுமேலாளர் ஸ்ரீதர் செய்திருந்தார்.
இந்தியாவின் உணவுப் பணவீக்கம் மீண்டும் இரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது. கடந்த வாரம் 9.53 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், இந்த வாரம் 11.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. பால் பொருள்கள், தானிய வகைள் மற்றும் பழங்களின் விலை அதிக அளவில் உயர்ந்ததன் காரணமாக உணவுப் பணவீக்கத்தில் இந்த அளவு அதிக உயர்வு ஏற்பட்டுள்ளது. அடிப்படை உணவுப் பொருள்களின் விலை 15.66 சதவீதமாக உயர்ந்ததும், தானிய வகைகளின் விலை 20.74 சதவீதம் உயர்ந்ததும், பால் 19.4 சதவீதமாக உயர்ந்ததும் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகும். மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப்பணவீக்கம், 10.55 சதவீதமாக உள்ளது
இந்திய கன்ஸ்ட்ரக்சன் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் நாகார்ஜூனா கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி, சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.41.38 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.56.23 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.1,363.33 கோடியிலிருந்து ரூ.1,085.06 கோடியாக குறைந்துள்ளது.
:வாடிக்கையாளர்கள் குறிப்பிடும் நேரத்தில் சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யும் புதிய சேவையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஐ.ஓ.சி.,) நேற்று அறிமுகம் செய்தது.இது தொடர்பாக ஐ.ஓ.சி., நிர்வாக இயக்குனர்ஸ்ரீகுமார் கூறியதாவது:நகரங்களில் கணவன்-மனைவி இருவரும்வேலைக்கு செல்லும் வீடுகளில் சிலிண்டரை வினியோகம் செய்வதில் பிரச்னைகள் எழுந்தது.இதற்கு தீர்வு காணும் விதமாக புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வாடிக்கையாளர்கள் வசதிகேற்ப அவர்கள் குறிப்பிடும் நேரத்தில் சிலிண்டர்கள் வீட்டில்வினியோகம் செய்யப்படும். இந்த புதிய சேவை ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பயனடைவர்.இதற்கு கட்டணமாக 25 முதல் 50 ரூபாய் வரைவசூலிக்கப்படும். இது தவிர இந்த புதிய சேவையின் மூலம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாடிக்கையாளர்கள் குடோன்களில் சிலிண்டர்களைமாற்றிக் கொண்டு புதிய சிலிண்டரை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
நிர்வாகத்தில் பெண்களை விட ஆண்களே சிறந்தவர்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகிஉள்ளது. இங்கிலாந்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என மூன்றாயிரம் பேரிடம் நடத்திய கருத்துகணிப்பில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது : தலைமை பொறுப்பில் ஆண்கள் இருக்கும் பட்சத்தில் நிர்வாகத்திறமை சிறப்புடன் இருப்பதாக பலர் அதில் தெரிவித்திருந்தனர். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களது தலைமைப் பொறுப்பில் பெண்கள் இருப்பதை விரும்பவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வின் முடிவில், உயர் அதிகாரிகளாக பெண்கள் இருப்பதை 63 சதவீதத்தினர் ஆதரித்தும், ஆண்கள் உயர் அதிகாரிகளாக இருப்பதை 75 சதவீத த்தினர் ஆதரித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்
ஸ்ரீரேணுகா சுகர்ஸ் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.90.20 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.78.10 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.893.50 கோடியிலிருந்து ரூ.1,999.50 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது
கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.118 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இந்நிறுவனம் அதன் ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றை ரூ.5 முகமதிப்பில் இரண்டு பங்குகளாக பிரித்தளிக்க உள்ளது. மேலும், இந்நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு 30 சதவீத இறுதி டிவிடெண்டை வழங்க உள்ளது. இது தவிர, 75 சதவீத சிறப்பு டிவிடெண்டும் வழங்கப்பட உள்ளது.
சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.22.55 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 33 சதவீதம் அதிகமாகும். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.283.56 கோடியிலிருந்து ரூ.406 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி தனியார் துறை காப்பீட்டு நிறுவனமான டாடா குழுமத்தின் ஒரு அங்கமான டாடா ஏஐஜி லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களின் வசதிக்காக, எலெக்ட்ரானிக் பண்ட் டிரான்ஸ்பர் (இஎப்டி) திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த புதிய இஎப்டி திட்டத்தின் மூலம், பணபரிவர்த்தனை எளிதாக நடைபெறும் என்றும், நாடு முழுவதும், 62 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கி கிளைகளில் இந்த இஎப்டி திட்டம் நடைமுறையில் உள்ளதால், அதன் மூலம், தங்கள் நிறுவன வாடிக்கையாளர்கள், பிரிமீயம் பணம் செலுத்துவது எளிதாகிறது என்றும், இந்த இஎப்டி திட்டத்தின் மூலம், அவர்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், அதன் மூலமே, எளிதாக பணம் கட்டிவிடலாம் என்றும், இதன்மூலம், தேவையற்ற இடையூறுகள் தவிர்க்கப்படும் என்று அந்த செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
உள்நாட்டில் தேவை அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு உரங்களின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்ற ஜுலை மாதத்தின் பிற்பகுதியில், உலக சந்தையில் ஹீரியா, டீ.ஏ.பி., பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் ஆகிய முக்கிய உரங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது, விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு கவலையளிப்பதாக உள்ளது. உலக அளவில், உரங்கள் இறக்குமதியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சர்வதேச அளவில் உரங்கள் விலை அதிகரித்தபோது, நம் நாட்டின் உர மானிய சுமை சுமார் ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு 2010-11-ஆம் நிதி ஆண்டில் நம் நாட்டில் உரங்களுக்கான தேவைப்பாடு 5 சதவீதம் உயர்ந்து 5.60 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டில் 5.34 கோடி டன்னாக இருந்தது. சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில் நம் நாடு 50 லட்சம் டன்னுக்கும் அதிகமான அளவில் உரங்களை இறக்குமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 120 கோடி டாலராகும் (சுமார் ரூ.5,600 கோடி). அதற்கு முந்தைய நிதி ஆண்டில் 240 கோடி டாலர் மதிப்பில் 57 லட்சம் டன் உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஜுலை மாதத்தில், 16 முதல் 29-ந் தேதி வரையிலான இரண்டு வாரங்களில், பாஸ்பேட் உரம் மட்டும் டன் ஒன்றுக்கு 22 டாலர் (சுமார் ரூ.1,000) உயர்ந்து 533 டாலராக (ரூ.24,500) அதிகரித்துள்ளது. இறக்குமதியாகும் டீ.ஏ.பி. உரத்தின் விலை டன் ஒன்றுக்கு 20 டாலர் அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு டன் ஹீரியாவின் விலை 10 டாலர் அதிகரித்து 280 டாலராக உயர்ந்துள்ளது. இது, ஜுன் மாத தொடக்கத்தில் 270 டாலராக இருந்தது. பொட்டாஷ் உரத்தின் விலை மட்டும் குறைந்தபட்சமாக 4-5 டாலர் மட்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தற்போது ஒரு டன் பொட்டாஷ் உரத்தின் விலை சுமார் 370 டாலராக உள்ளது. உலக அளவில் இதற்கான தேவை 5.50 கோடி டன்னாக உள்ளது. எனினும் உற்பத்தி 6 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், இந்த உரத்தின் விலை மட்டும் ஓரளவு கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.வி.ஆர்.சி.எல். இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் - புராஜக்ட்ஸ் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.28.07 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.35.11 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.1,080.71 கோடியிலிருந்து ரூ.1,106.15 கோடியாக உயர்ந்துள்ளது
கோயம்புத்தூரைத் தலைமையடமாகக் கொண்ட சுகுணா கோழிப்பண்ணை நிறுவனம், சர்வதேச அளவில் கால்நடை நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த லோக்மானுடன் கைகோர்க்கிறது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகுணா கோழிப்பண்ணை நிறுவன நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையி்ல் தெரிவித்துள்ளதாவது ; இந்த கைகோர்ப்பின் மூலம், புதியவகை கால்நடை நோய் தடுப்பு மருந்துகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இது தங்கள் நிறுவன வளர்ச்சியின் மற்றொரு மைல்கல்லாக விளங்கும் என்று அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், முதற்கட்டமாக, தாங்கள் புதிய கால்நடை நோய் தடுப்பு மருந்துகளை புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்க உள்ளதாகவும், உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டிருப்பதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்
டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமான டாட்டா பவர் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.311.67 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.572.65 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.4,701.70 கோடியிலிருந்து ரூ.5,151.62 கோடியாக உயர்ந்துள்ளது.
மும்பை அருகே பனாமா நாட்டு கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட எண் ணெய் கசிவால், இங்குள்ள துறைமுகத்துக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, பாரதிய ஜனதா உறுப்பினர் கோபிநாத் முண்டே கூறியதாவது:மும்பை அருகே கடந்த வாரம் பனாமா நாட்டு கப்பல் கள் சித்ராவும், கலீஜாவும் மோதிக் கொண்டதில் சித்ரா கப்பலில் இருந்து கசிந்த எண் ணெய், 100 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரவியுள்ளது. இதனால், மீனவர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மும்பை துறைமுகத்தில் ஒரு லட்சம் கன்டெய்னர்கள் தேங்கியுள்ளன.
மோசமான நாசத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர். அரசு துறைகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது தான் இதற்கு காரணம்.கப்பல்கள் மோதல் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு கோபிநாத் முண்டே கூறினார்.
நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வட்டி விகிதத்தை 25 அடிப்படை கொள்ளைகளின் படி உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு 2 நாட்களில் அமலுக்கு வரும் எனவும் அவ்வங்கி தெரிவித்துள்ளது. இதற்கான அசட் லையபிளிட்டி கமிட்டி நாளை அல்லது நாளை மறுநாள் கூட உள்ளதாக எஸ்.பி.ஐ., தலைவர் ஓ.பி.பட் தெரிவித்துள்ளார். எஸ்.பி.ஐ., வங்கி தனது முதல் காலாண்டு அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. அதில் காலாண்டு வருமானம் பெருமளவில் அதிகரித்திருப்பதால், வட்டி விகிதத்தையும் உயர்த்த இவ்வங்கி தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்தார்
HAPPY TRADING
BULLMARKETINDIAA
இடுகையிட்டது BULLMARKETINDIA நேரம் திங்கள், ஆகஸ்ட் 16, 2010 0 கருத்துகள்