திங்கள் 273 புள்ளிகள், செவ்வாய் 74 புள்ளிகள் மற்றும் புதன் 50 புள்ளிகள் என தொடர்ந்து மூன்று நாட்களும் 400 புள்ளிகள் வரை ஏறி முடிந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை, 50 புள்ளிகள் கூடி, 17,462 புள்ளிகளு டனும், தேசிய பங்குச் சந்தை, 11 புள்ளிகள் கூடி, 5,233 புள்ளிகளுடனும் முடிந்தது.
பணவீக்கம் குறையும்: திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா, 'இரண்டு வாரங்களில் பணவீக்கம் குறைய ஆரம்பிக்கும்' எனக் கூறியுள்ளார். இது, சந்தையை இன்னும் பலப்படுத்த உதவும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், பணவீக்கம் 5 சதவீதமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு வாரங்களில் பணவீக்கம் குறையாத பட்சத்தில், ஜூலையில், ரிசர்வ் வங்கியின், 'மானிடரி பாலிசி'யில், 'ரேட்' கூட்டப்படலாம்.
உரிமைப் பங்குகள்: சென்ட்ரல் வங்கி, உரிமைப் பங்குகளை, அக்டோபர் முதல் டிசம்பருக்குள் வெளியிடும் என தெரிவித்துள்ளது. புதிய வெளியீடு வராமல், தன் பங்குதாரர்களிடமிருந்தே பணம் திரட்ட முடிவு செய்துள்ளது.
புதிய வெளியீடுகள்: இந்தியாவின் நிலக்கரி சுரங்கங்களின் அதிபதியும், அரசு நிறுவனமுமான கோல் இந்தியாவில், 10 சதவீதம் மற்றும் இந்துஸ்தான் காப்பர் கம்பெனியில் 20 சதவீதமும் பொதுமக்களுக்கு விற்கலாம் என்ற செய்தி வந்ததை தொடர்ந்து, சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அரசு நிறுவன பங்குகள் விலை, ஒரேயடியாக ஏறின. குறிப்பாக, ஒரு பங்கு, 32 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விற்கப்படும் எம்.எம்.டி.சி., அன்றைய தினம், 20 சதவீதம் வரை மேலே சென்றது.
பவரில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்:அண்ணன் - தம்பி சச்சரவுகள் முடிவுக்கு வந்து, சமரசம் ஏற்பட்டிருப்பதாலும், மேலும் ஒரு நிறுவனம் பெய்யும் வியாபாரத்தை, இன்னொரு நிறுவனம் செய்யக் கூடாது என்றிருந்த ஷரத்துக்கள் தற்போது நீக்கப்பட்டு விட்டதாலும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், தற்போது மூன்று பெரிய மின் திட்டங்களை எடுக்க, ஏலம் செய்யவுள்ளது. சந்தையில் இருவரது நிறுவன பங்குகளும், சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றன.
விப்ரோ வழங்கிய போனஸ்: விப்ரோ வழங்கிய 2:3 போனசுக்கு, நேற்று நல்ல நாளாக இருந்தது. இது போல பல போனசுகளை வழங்கியுள்ள விப்ரோ, முதலீட்டாளர்களுக்கு எப்போதும் ஒரு வரப்பிரசாதம் தான். நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கோடிகளை வழங்கிய நிறுவனங்களில், இதுவும் ஒன்று.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? மழையில், சந்தை சிரிக்கிறது. ஐரோப்பாவும், பெரிய பயமுறுத்தல்கள் இல்லாமல் இருக்கிறது. ஆகவே நாமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரம் இது. சந்தையின் இறக்கங்களில் முதலீடு செய்து ஏற்றங்களில் அமைதியாக இருக்கலாம்.
சேதுராமன் சாத்தப்பன்-
நேற்றய சந்தைகள் நிபிட்டி 20 புள்ளிகளுக்குள் உடடடி கொண்டிருப்பதை பார்த்திருபிர்கள் சில முக்கிய பங்குகள் எட்ட்ரம் இருந்தும் காளைகளால் எட்ட்ரத்தை கொண்டு செல்ல இயலவில்லை காளைகள் சற்று களைபாரியுள்ளன .சிறிது இறக்கத்திற்கு பின்பே காளைகள் எட்ட்ரத்தை கொண்டு செல்லும் ஆகவே இன்றைய சந்தையில் சிறிது தோய்வே காணப்படும் நிபிட்டி 5200 என்ற நிலை வரை கிழ இறங்கி வரலாம் நிபிட்டி 5185 -5165 ஒரு சப்போர்ட் லெவல் இந்த நிலை உடையாத வரை சந்தைக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது .தம்பியின் பங்குகள் தொடர்ந்து ஏறுவதை கவனித்ருபிர்கள் பதிவில் குற்பிட்ட நாளிலிருந்து RNRL ,RPOWER ,RCAPITAL பங்குகள் எட்ட்ரம் கண்டுள்ளன .ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் முக்கியமான 3 மின் திட்டங்களில் இறங்க முடிவு செய்துள்ளது இதற்கான ஏற்பாடுகளையும் அதற்கான ஏலத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளது ஆகவே இன்னும் சில நாட்களில் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 1200 .00 வரை செல்லும் வாய்புகள் உள்ளன
SBI பங்குகள் OVERVALUE நிலையை அடைந்துள்ளன்ன ஆஹ்வே இந்த பங்குகளை லாபத்தை பதிவு செய்து கொள்ளுங்கள் கிழ நிலையில் திரும்பவும் 2150 வரை வரலாம் .
விப்ரோ நிறுவனம், ஒர்க்போர்ஸ் மேனேஜ்மென்ட் சொலுசன்ஸ் கம்பெனிகளுள் முன்னணி நிறுவனமான க்ரோனாஸ் உடன் கைகோர்க்கிறது. இதுகுறித்து, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளி்த்த விப்ரோ இந்தியா துணை தலைவர் சாய்ரான் ஜெகன்னாதன் கூறுகையில், இந்த இணைப்பின் மூலம் தங்களது நிறுவன சேவைகள் துரிதமாவதோடு, மானுபேக்சரிங், சேவைகள், சுகாதாரத்துறை சில்லரை வர்த்தகம் , பொது மற்றும் தனியார் துறைகளில் பங்களிப்பு உள்ளிட்டவைகளில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆப்கன் தங்க சுரங்கம்
உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்கா வின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.
இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் 'ஸ்மெல் பண்ணவர்கள்' அமெரிக்காவின் பாதுகாப்பு த்துறையான பெண்டகன் தான்.
இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.
இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மதத் தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.
ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.
'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்' என்கிறார் ஒரு அதிகாரி. லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.
இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.
ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில்,
"ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.
மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்.
இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?:
அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம்.
இந்த நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சார்ந்திருப்பது... விவசாயத்தையோ, தொழிற்சாலைகளையோ அல்ல. ஓப்பியம் மற்றும் அபின் தயாரிப்பை!
சர்வதேச அளஷவில் கொடிய போதைப் பொருள்கள் அனைத்துக்கும் தாயகமாகத் திகழ்கிறது ஆப்கானிஸ்தான். மேற்கு ஆசியாவின் போதை மருந்து முக்கோணத்தின் மையப் பகுதி ஆப்கானிஸ்தான். இன்று நேற்றல்ல...பண்டைய காலத்திலிருந்தே ஓப்பியம் தயாரிப்பது ஆப்கானிஸ்தானில் குடிசைத் தொழில் மாதிரி.
இதற்கடுத்த வருவாய் ஆதாரம், முன்பு ரஷ்ய உதவி. இப்போது அமெரிக்கா தரும் நிதியுதவி.
இப்படி சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!). ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.
ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.
இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள 'பில்லியன் டாலர் கேள்வி'!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் 'ட்ரில்லியன் டாலர் கேள்வி!'.
ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை. நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.
இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.
இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.
ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.
ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.
ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.
அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், 'தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.
கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.
'Unobtanium' என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் 'அவ்தார்' என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். 3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.
இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.
STOCKS TO WATCH
RELIANCE
RELIANCE CAP
RCOM
BHARTHI
BANK OF INDIA
ICICI
HPCL
IOC
ESSAR OIL
GMDC
GUJ NRE COKE
EDUCOMP
CAIRN
STERLITE
BIOCON
RANBAXY
KFA
HUL
HINDALCO
JAIPRAKASH POWE
PETRONET LNG
LIC HOUSING
SUZLON
CROMPRON GRE
REC
POWER GRID
SIEMENS
DIVIS LAB
PIRAMAL
SCI
WELSPON COR
GAIL
NTPC
IVRCL INF
INDIA CEMEN
TATA POWER
TATA CHEM
TORRNT POWER
GREAT OFF SHORE
GLEN MARK PHARMA
ZEE ENER
SUN TV
RNRL
WIPRO
YES BANK
VOLTAS
EXIDE
M&M FIN
OPTO CIR
CIPLA
BAJAJ HOLD
HAPPY TRADING
BULLMARKETINDIAA
Blogroll
-
SENSEX : 35962.93 * 33.29 (0.09 %)7 ஆண்டுகள் முன்பு
-
-
Nifty 17-06-2010
வியாழன், 17 ஜூன், 2010இடுகையிட்டது BULLMARKETINDIA நேரம் வியாழன், ஜூன் 17, 2010 1 கருத்துகள்
NIFTY 16-06-2010
புதன், 16 ஜூன், 2010நேற்றய பதிவில் குறிப்பிட்டவாறு RNRL ,RPOWER ஆகிய பங்குகள் எட்ட்ரத்தை கண்டுள்ளன இன்றய வர்த்தகத்தில் பெரும்பான்மையான பங்குகள் இன்று எட்ட்ரம் ஆடைய வாய்புகள் உண்டு நிபிட்டி 65 புள்ளிகலிருந்து 120 புள்ளிகள் வரை எட்ட்ரம் ஆடைய வாய்புகள் உண்டு குறிப்பிட்டவாறு தம்பி பங்குகள் இன்று காற்றில் பறக்க வாய்புகள் உள்ளன இதற்கான காரணங்கள் கிழே உள்ள கட்டுரையை படிக்கவும்
STOCKS TO WATCH
RELIANCE
REL CAPITAL
RNRL
RPOWER
JET AIR
KFA
REL INFRA
SBI
BANK OF INDIA
DLF
REI AGRO
NATIONAL ALUMI
HIND COPPE
GTL LTD
IOB
STERLITE
EKC
JINDAL STEEL
JSW STEEL
ISPAT INDUS
MTNL
BHARTHI
IDEA
PUUNJ LLOYD
CROMPTON GREA
WIPRO
HCL
MPHASIS
NATIONAL FER
STC
NEYVELI LIGNITE
NMDC
HUL
UNITED SPRITS
MUNDRA PORT
BHARAT FORGE
CASTROL
ESSAR OIL
IOC
HPCL
JP ASS
JP INFRA
IRB INFRA
ICICI
JSW ENERGY
ADANI POWER
INDIA HOTELS
GUJRAT NRE COKE
GUJRAT STATE PETRO
CADILLA
FORTIS
BIOCON
RANBAXY
CIPLA
INDIABULLS FIN
M&MFIN
JUBLIANT ORG
REC
POWER FINA
POWER GRID
ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி இன்ஃபோடெல் நிறுவனத்தின் 95% பங்குகளை 4800 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார். இன்ஃபோடெல் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனம். இந்தியாவில் 22 மண்டலங்களுக்கு 3-ஜி அலைவரிசைக்கான பிராட்பேண்ட் அனுமதியை வாங்கி இருக்கிறது. இதில் வேடிக்கை என்ன தெரியுமா?
இந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கு வதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்திருக்கிறது 3-ஜி தொழில்நுட்பத்துக்காக இன்ஃபோடெல் நிறுவனம் செலவழித்த பணம்கூட (ரூ.12,847 கோடி) ரிலையன்ஸ் நிறுவனம் கொடுத்ததுதான் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அண்ணன் - தம்பி ஒரே தொழிலில் இருக்கக்கூடாது என்கிற குடும்ப ஒப்பந்தம் தடையாக இருந்ததால் இந்தத் தகவலை கமுக்கமாக வைத்திருந்தது ரிலையன்ஸ். இப்போது அந்த ஒப்பந்தத்தை மாற்றிவிட்டதால், வெளிப்படையாக தகவல் சொல்லி இருக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ரிலையன்ஸின் இந்த நடவடிக்கையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் அதிபரான அனில் வரவேற்றிருக்கிறார். 3-ஜி தொழில்நுட்பத்தை எல்லா மண்டலங்களுக்கும் வாங்குவது என அனில் ஏற்கெனவே முடிவு செய்திருந் தாராம். ஆனால் அண்ணனின் நடவடிக்கை வேறு மாதிரியாக இருந்தது கண்டு ஜகா வாங்கிவிட்டார். இன்னும் சில ஆண்டுகளில் முகேஷ் இப்போது வாங்கி இருக்கும் இன்ஃபோடெல் நிறுவனத்துடன் அனிலின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்த் தாலும் ஆச்சரியமில்லை!
இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் போட்டி காரணமாக இனி 1 எம்பிபிஎஸ் திறன் கொண்ட வரையறையில்லா பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 299 மட்டுமே கட்டணம் என்ற நிலை தோன்றியுள்ளது. இது பிராட்பேண்ட் பயனாளர்களை சந்தோஷப்படுத்தும் செய்தியாகும். சமீபத்தில் 3 ஜி பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவைக்கான ஏலம் முடிந்தது. இதில் இன்போடெல் நிறுவனம் 22 சர்க்கிள்களுக்கான உரிமத்தை வென்றுள்ளது. இந்த நிறுவனத்தைத்தான் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். அண்ணனுக்கு ஆதரவாக, ஏலத்திலிருந்தே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் விலகிக் கொண்டது. எனவே, ஏராளமான சலுகைகளுடன் முகேஷின் ரிலையன்ஸ் நிறுவனம் பிராட்பேண்ட் சேவைகளை அளிக்கப் போகிறது. அதே நேரம், இந்தப் போட்டியைச் சமாளிக்க, நிறைய சலுகைத் திட்டங்களை போட்டி நிறுவனங்களும் அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஏர்டெல், ஏர்செல், டாடா போன்ற நிறுவனங்களும் 3 ஜி பிராட்பேண்ட் சேவை அளிக்க உள்ளன. இன்னொரு பக்கம் அரசுத் துறையின் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கும் 3 ஜி பிராட்பேண்ட் சேவை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சர்க்கிள்களிலும் இந்த சேவை கிடைக்கும். தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பிராட்பேண்ட் சேவை அளிப்பதால், 1 எம்பிபிஎஸ் வரை வரையறையில்லா பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 299 மட்டும் செலுத்தினால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே, பிஎஸ்என்எல் நிறுவனம் 2 எம்பிபிஎஸ் வரை வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 1350 வசூலிக்கிறது. (பிஎஸ்என்எல்லில் மட்டுமே இந்த வசதி. மற்ற நிறுவனங்கள் 2 எம்பிபிஎஸ் வரை அன்லிமிடட் என்று கூறிவிட்டு, குறிப்பிட்ட அளவு டவுன்லோட் முடிந்ததும், 256 kbps ஆக சுருக்கி விடுகின்றன. இது வாடிக்கையாளருக்குத் தெரிவதில்லை!). இனி இந்த கட்டணமும் மாறும். 4 எம்பிபிஎஸ் வரையிலான அன்லிமிடட் பிராட் பேண்ட் இணைப்பு ரூ 800-க்கே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன்மூலம் விரைவான டவுன்லோட் மற்றும் தொலைக்காட்சி இணைப்பைப் பெற முடியும்.
சன் டிவியின் கலாநிதி மாறன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 37.75% பங்குகளை வாங்கி இருக்கிறார். இதன் மூலம் மீடியாவிலிருந்து வேறு ஒரு துறைக்கு முதன் முதலாக அடியெடுத்து வைத்திருக்கிறது சன் குழுமம். விமானத் துறையில் நுழைவதற்காக ஸ்டார் ஏவியேஷன் நிறுவனத்துடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்துவதாக முன்பு செய்தி வெளியானது. அது தோல்வி அடைந்ததால் இப்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருக்கிறது. இதற்காக சன் நிறுவனம் 750-800 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறதாம்.''
இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தன் பங்குகளை 'பைபேக்' செய்யப் போவதாக அறிவித்திருக்கிறதே இதற்கும் 25% பங்குகளைச் சந்தைக்கு அனுமதித்தே ஆகவேண்டும் என மத்திய அரசாங்கம் கொண்டு வரப்போகும் புதிய உத்தரவுக்கும் சம்பந்தமில்லை. காரணம், அந்த நிறுவனத்தின் புரமோட்டர்களிடம் 52.02% பங்குகளே இருக்கின்றன. எனவே குறைப்பது என்கிற பேச்சு இப்போது எழவில்லை. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தன் பங்குகளை 'பைபேக்' செய்யவிருக்கிறது அந்த நிறுவனம். 2007-ல் 30.2 மில்லியன் பங்குகளை 'பைபேக்' செய்தது. இப்போது ஒரு பங்கு 280 ரூபாய் என்கிற விலையில் 630 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கப் போகிறது. ஆனாலும் இந்த அறிவிப்புக்கு முதலீட்டாளர் களிடம் பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை.
கிரீஸ் பிரச்னை இப்போதைக்கு அடங்கிய மாதிரித் தெரிகிறது. கிரீஸைத் தொடர்ந்து அடுத்தடுத்து விழும் என்று எதிர்பார்த்த ஸ்பெய்ன், இத்தாலி, போர்ச்சுக்கல் தனது பொருளாதாரச் சிக்கலை இன்னும் சில வாரங்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் யூரோவின் மதிப்பும் லேசாக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக ஐரோப்பிய பங்குச்சந்தை மேலே செல்ல, அதனைத் தொடர்ந்து அமெரிக்க, ஆசியப் பங்குச் சந்தைகளும் உயர்ந்திருக்கின்றன.
ஐரோப்பிய நாட்டு பொருளாதாரச் சிக்கல் பிரச்னை காரணமாக தங்கத்தின் விலை 40% வரை குறையலாம் என சர்வதேச எலியெட் வேவ் அமைப்பின் தலைவர் ராபர்ட் பிரக்டர் சொல்லி இருக்கிறார். இவர் இப்படிச் சொன்னாலும் உலக அளவில் தங்கத்தில் முதலீடாகி இருக்கும் பணம் 0.8 டிரில்லியன் டாலர்தான். ஆனால் நிதிச் சந்தையில் மட்டும் 200 டிரில்லியன் டாலர் முதலீடாகி இருக்கிறது. ஆக எதிர்காலத்தில் தங்கத்தின் விலை இன்னும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது
கடந்த வாரம் வெளியான ஐ.ஐ.பி. டேட்டா மிகச் சிறப்பாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் தொழில் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 17.6%. கடந்த ஆண்டு டிசம்பரில் அடைந்த வளர்ச்சி 17.7%. ஆக ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு இல்லாத ஒரு வளர்ச்சியை இப்போது கண்டிருக்கிறோம். தவிர, 3ஜி தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்கத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. இதனால் நமது நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.5%லிருந்து 4.47%மாகக் குறைந்திருக்கிறது. இதெல்லாம் நம் இந்தியப் பொருளாதாரம் பலமாக இருக்கிறது .
ஜார்ஜ் சோரஸ், 'ஐரோப்பிய பொருளாதாரச் சிக்கல் நாடகத்தின் முதல் காட்சி முடிந்து இரண்டாம் காட்சி ஆரம்பமாகி இருக்கிறது. அடுத்தடுத்த காட்சிகள் முடிந்தால் முடிவு நிச்சயம் சோகமாகத்தான் இருக்கும். இன்னொரு பெரிய பொருளாதார வீழ்ச்சி நிச்சயம் ஏற்படும்' சர்வதேச நிலைமை அப்படி இருக்கிறது. ஒன்றே ஒன்றை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். நீண்ட காலத்துக்கு (5 முதல் 10 ஆண்டுகளுக்கு) பங்குச் சந்தையில் தங்கள் முதலீட்டை வைத்துக் கொள்ளப் போகிறவர்கள், இப்போதிருக்கும் நிலைமையை சட்டை செய்யாமல், நல்ல நிறுவனங்களின் பங்குகளை விலை குறையக் குறைய கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிப் போடுங்கள்.
யூரோ நாணயத்தை வடிவமைத்தபோது அந்நாடுகள் அனைத்தும் ஒரே ஒரு விதியை மனமுவந்து ஒப்புக் கொண்டன. எந்த ஒரு நாடும் தன் ஜி.டி.பி-யில், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கு மேல் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்பதே அந்த விதி. இந்த விதியை எந்தெந்த நாடுகள் பின்பற்றவில்லையோ, அந்த நாடுகள்தான் இப்போது பிரச்னையில் மாட்டிக் கொண்டு விழிக்கின்றன. கிரீஸ், போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின், லேட்டஸ்ட்டாக ஹங்கேரி ஆகிய நாடுகள் பிரச்னையில் சிக்கியுள்ளன
கிரீஸ் பிரச்னையை எடுத்துக் கொண்டால் யூரோவில் சேரும்போது அந்நாடு பல தில்லுமுல்லுகளைச் செய்துதான் உள்ளே நுழைந்தது. அதன் நிதிநிலை அறிக்கையில் மோசடியான புள்ளிவிவரங்களைக் காண்பித்தது. இதற்கு கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமும் உடந்தையாக இருந்தது. கிரீஸிடம் இருக்கும் அத்தனை கடன்களையும் டெரிவேட்டிவ்களாக மாற்றி அது விற்றுவிட்டது. அதிக ரிஸ்க் வாய்ந்த இந்த டெரிவேட்டிவ்களை விஷயம் தெரியாமல் பல நாடுகளும் வாங்கிவிட்டன. தற்போது அந்தக் கடன்கள் திரும்ப வருமா, வராதா என்பதே மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. (கிரீஸில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் இதே மாதிரி செய்திருக்கிறது கோல்ட்மேன் சாக்ஸ். இதற்காக அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது
இப்போது பிரச்னையில் மாட்டி இருக்கும் அத்தனை நாடுகளுக்கும் வரவு எட்டணா என்றால் செலவு பத்தணாவாக இருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தங்களுடைய தகுதிக்கு மீறி கடன் வாங்கித்தான் செலவு செய்கின்றன. இந்தக் கடனுக்கு அடுத்த ஆண்டு வட்டி கட்டியாக வேண்டும். இதுவரைக்கும் தன்னுடைய பற்றாக்குறை வெறும் 3 சதவிகிதம்தான் என்று சொல்லி வந்தது கிரீஸ். ஆனால் புதிதாகப் பொறுப்பேற்ற புதிய அரசாங்கம் பற்றாக்குறை 300 பில்லியன் யூரோ, அதாவது அதன் ஜி.டி.பி-யில் 13.6% என்று சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. கிரீஸ் மக்களில் பலர் பரம்பரைகளாகவே சுகவாசிகள். அதற்கு ஏற்றாற்போல அரசாங்கமும் அவர்களுக்கு சாமரம் வீசியதால்தான் இப்போது பிரச்னை'' என்றவர் மேலும் தொடர்ந்தார்.
சரியான திசையில் பொருளாதாரம் செல்லும் நாடுகளுக்குச் செலவழிப்பது என்பது பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகும். ஆனால் கிரீஸ் உள்பட இப்போது பிரச்னையில் சிக்கியிருக்கும் நாடுகள் வருமானமே இல்லாமல் செலவு மட்டும் செய்ததால்தான் இப்போது திவாலாகும் நிலைக்கு வந்திருக்கின்றன
இது மாதிரியான ஒரு சூழ்நிலை மற்ற நாடுகளுக்கு ஏற்பட்டிருந்தால் தன் நாணயத்தின் மதிப்பைக் குறைத்து ஏற்றுமதி மூலம் அதிகப் பணத்தைப் பெற முயற்சி செய்திருக்கும். ஆனால் கிரீஸ் விஷயத்தில் இதற்கு வாய்ப்பில்லை. காரணம், கிரீஸ் தன்னிச்சையாக யூரோவின் மதிப்பைக் குறைக்க முடியாது. யூரோவின் மதிப்பைக் கூட்டவோ, குறைக்கவோ வேண்டுமெனில் யூரோ புழக்கத்தில் உள்ள எல்லா நாடுகளும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். இப்படி எந்தப் பக்கம் போனாலும் இடிக்கும் என்கிற நிலையில் இந்த இடியாப்பச் சிக்கலை எப்படித்தான் தீர்ப்பது என்று தெரியாமல் தவிக்கிறது கிரீஸ்'' என்றார்.
யூரோ நாணயம் தன் மதிப்பை வேகமாக இழந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புகூட வலுவாக இருந்த யூரோ, இன்று அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ''யூரோவின் தற்போதைய நிலை என்ன? மீண்டும் அது எழுந்து வருமா?'' என ஆடிட்டர் எம்.ஆர். வெங்கடேஷிடம் கேட்டோம்...
1999, ஜனவரி 1-ம் தேதி இருபதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து யூரோ நாணயத்தை ஏற்றுக் கொண்டன. (இங்கிலாந்தும், டென்மார்க்கும் யூரோவை ஏற்கவில்லை!). இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒரே நாணயத்தைப் பயன்படுத்தும்போது அவை சரிசமமான நிலையில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் உண்மை அதுவல்ல. ஒவ்வொரு நாட்டுக்கும் அரசியல், கலாசார, பொருளாதார வேறுபாடுகள் இருக்கும்போது அவை எப்படி சரிசமமாக இருக்க முடியும்?
யூரோ நாணயத்தை வடிவமைத்தபோது அந்நாடுகள் அனைத்தும் ஒரே ஒரு விதியை மனமுவந்து ஒப்புக் கொண்டன. எந்த ஒரு நாடும் தன் ஜி.டி.பி-யில், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கு மேல் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்பதே அந்த விதி. இந்த விதியை எந்தெந்த நாடுகள் பின்பற்றவில்லையோ, அந்த நாடுகள்தான் இப்போது பிரச்னையில் மாட்டிக் கொண்டு விழிக்கின்றன. கிரீஸ், போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின், லேட்டஸ்ட்டாக ஹங்கேரி ஆகிய நாடுகள் பிரச்னையில் சிக்கியுள்ளன. இந்த நாடுகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். முதலில், எல்லா நாடுகளுக்கும் ஒரே நாணயம் என்று எப்படி முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. காரணம், இந்த நாடுகள் ஒரே விதமான நிதிச்சூழலில் இல்லை. தவிர, யூரோவின் மதிப்பை ஒரு நாட்டை மட்டுமே அடிப்படையாக வைத்து அளவிட முடியாது. இது போல பல சிக்கல்கள் இருக்கும்போது எதற்காக யூரோ என்ற பொது நாணயத்தைக் கொண்டு வரவேண்டும்?
கிரீஸ் பிரச்னையை எடுத்துக் கொண்டால் யூரோவில் சேரும்போது அந்நாடு பல தில்லுமுல்லுகளைச் செய்துதான் உள்ளே நுழைந்தது. அதன் நிதிநிலை அறிக்கையில் மோசடியான புள்ளிவிவரங்களைக் காண்பித்தது. இதற்கு கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமும் உடந்தையாக இருந்தது. கிரீஸிடம் இருக்கும் அத்தனை கடன்களையும் டெரிவேட்டிவ்களாக மாற்றி அது விற்றுவிட்டது. அதிக ரிஸ்க் வாய்ந்த இந்த டெரிவேட்டிவ்களை விஷயம் தெரியாமல் பல நாடுகளும் வாங்கிவிட்டன. தற்போது அந்தக் கடன்கள் திரும்ப வருமா, வராதா என்பதே மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. (கிரீஸில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் இதே மாதிரி செய்திருக்கிறது கோல்ட்மேன் சாக்ஸ். இதற்காக அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது அமெரிக்காவின் எஸ்.இ.சி! .
இப்போது பிரச்னையில் மாட்டி இருக்கும் அத்தனை நாடுகளுக்கும் வரவு எட்டணா என்றால் செலவு பத்தணாவாக இருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தங்களுடைய தகுதிக்கு மீறி கடன் வாங்கித்தான் செலவு செய்கின்றன. இந்தக் கடனுக்கு அடுத்த ஆண்டு வட்டி கட்டியாக வேண்டும். இதுவரைக்கும் தன்னுடைய பற்றாக்குறை வெறும் 3 சதவிகிதம்தான் என்று சொல்லி வந்தது கிரீஸ். ஆனால் புதிதாகப் பொறுப்பேற்ற புதிய அரசாங்கம் பற்றாக்குறை 300 பில்லியன் யூரோ, அதாவது அதன் ஜி.டி.பி-யில் 13.6% என்று சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. கிரீஸ் மக்களில் பலர் பரம்பரைகளாகவே சுகவாசிகள். அதற்கு ஏற்றாற்போல அரசாங்கமும் அவர்களுக்கு சாமரம் வீசியதால்தான் இப்போது பிரச்னை'' என்றவர் மேலும் தொடர்ந்தார்.
சரியான திசையில் பொருளாதாரம் செல்லும் நாடுகளுக்குச் செலவழிப்பது என்பது பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகும். ஆனால் கிரீஸ் உள்பட இப்போது பிரச்னையில் சிக்கியிருக்கும் நாடுகள் வருமானமே இல்லாமல் செலவு மட்டும் செய்ததால்தான் இப்போது திவாலாகும் நிலைக்கு வந்திருக்கின்றன.
இது மாதிரியான ஒரு சூழ்நிலை மற்ற நாடுகளுக்கு ஏற்பட்டிருந்தால் தன் நாணயத்தின் மதிப்பைக் குறைத்து ஏற்றுமதி மூலம் அதிகப் பணத்தைப் பெற முயற்சி செய்திருக்கும். ஆனால் கிரீஸ் விஷயத்தில் இதற்கு வாய்ப்பில்லை. காரணம், கிரீஸ் தன்னிச்சையாக யூரோவின் மதிப்பைக் குறைக்க முடியாது. யூரோவின் மதிப்பைக் கூட்டவோ, குறைக்கவோ வேண்டுமெனில் யூரோ புழக்கத்தில் உள்ள எல்லா நாடுகளும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். இப்படி எந்தப் பக்கம் போனாலும் இடிக்கும் என்கிற நிலையில் இந்த இடியாப்பச் சிக்கலை எப்படித்தான் தீர்ப்பது என்று தெரியாமல் தவிக்கிறது கிரீஸ்'' என்றார்.
''ஐ.எம்.எஃப். நிறுவனம் கிரீஸூக்கு 146 பில்லியன் டாலர் நிதி உதவி செய்திருக்கிறதே!'' என்று கேட்டோம். ''ஐ.எம்.எஃப். கிரீஸூக்கு உதவி செய்த மாதிரி, அடுத்தடுத்து திவாலாகக் காத்திருக்கும் அத்தனை நாடுகளுக்கும் (ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, அயர்லாந்து, ஹங்கேரி) நிதி உதவி செய்யுமா? தவிர, ஐ.எம்.எஃப். உதவியால் மட்டுமே யூரோவின் மதிப்பை உயர்த்திவிட முடியாது. எப்படி இருந்தாலும் வாங்கிய கடனை கிரீஸ் மீண்டும் திரும்பக் கொடுத்தாக வேண்டும். அதை எப்படிக் கொடுக்கப் போகிறது என்பதே முக்கியமான கேள்வி.''
யூரோ இனியும் பிழைக்க வேண்டுமெனில் மூன்று வழிகள்தான் இருக்க முடியும். ஒன்று, பொருளாதாரத்தில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கும் நாடுகள் யூரோவிலிருந்து வெளியேறும். இப்போதே ஜெர்மனியில் இந்தக் கோரிக்கை வர ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது, கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகள் யூரோவிலிருந்து வெளியேற வேண்டும். மூன்று, ஏற்கெனவே சொன்ன இரண்டு விஷயங்களும் நடக்காவிட்டால் யூரோ சிதறும்
HAPPY TRADING
BULLMARKETINDIAA
இடுகையிட்டது BULLMARKETINDIA நேரம் புதன், ஜூன் 16, 2010 0 கருத்துகள்
Stock alert
செவ்வாய், 15 ஜூன், 2010Reliance Communications (RCom) after trading hours on Monday, 14 June 2010, said its board has approved a proposal to bring investors into its tower unit, Reliance Infratel to create an independent infrastructure business. RCom is looking at options including a demerger and/or other suitable value-creating options, and would be paid in cash and stock. RCom, which had earlier planned to sell 10% of Reliance Infratel through an initial public offering, said it was in advanced stage talks with several international and local strategic and financial players for the tower unit stake and expected to announce a deal shortly.
Reliance Industries (RIL) is reportedly planning to bid for the Surguja ultra mega power project (UMPP) in Chhattisgarh. The government has set 5 July 2010 as the deadline for submitting the bid. The Chhattisgarh entry would be RIL's second major diversification plan after the Ambani brothers last month cancelled the non-compete agreements that barred them from entering each other's businesses.
Infosys Technologies is reported to have paid Rs 275 crore as advanced tax in Q1 June 2010 versus Rs 230 crore in Q1 June 2009.
Strides Arcolab has received USFDA approval for Sumatriptan Succinate injection that is used in the treatment of migraine. The injection will be launched under a partnership with Sagent Pharmaceuticals who will market it. The total market for Sumatriptan in 2009 was approximated $200 million, the company said in a statement.
Mahindra Satyam (erstwhile Satyam Computers) has sought more time from authorities to file financial statements relating to financial years 2008 and 2009. The company has sought time till 30 September 2010 to file these statements. The Company Law Board had earlier set 30 June 2010 as the deadline for the filings.
Mahindra Satyam is also seeking exemption from publishing quarterly financial results for the period beginning from the three months ended 30 December 2008, through to 31 March 2010. The company has also sought permission from the Company Law Board to publish its results for the quarter ended 30 June 2010 when it reports results for the quarter ended 30 September 2010, it said in a statement to the stock exchange.
Star India is reportedly selling its 25.99% stake in Balaji Telefilms to Reliance Big Entertainment, an Anil Dhirubhai Ambani Group company. Star India had acquired the stake in Balaji through its affiliate Asian Broadcasting FZ-LLC for Rs 123 crore in 2004.
Bajaj Hindusthan's board will meet on 17 June 2010, to consider amalgamation of Bajaj Hindusthan Sugar and Industries, a 75% listed subsidiary, with the company.
Gayatri Projects' board will meet 17 June 2010, to consider proposal to enter into solar power generation business.
Powered by Capital Market - Live News
இடுகையிட்டது BULLMARKETINDIA நேரம் செவ்வாய், ஜூன் 15, 2010 0 கருத்துகள்