கடந்த வார பங்குச் சந்தை, லாப வாரமாகவே இருந்தது. சந்தை, கடந்த மூன்று வார உச்சத்தில் சென்று முடிந்தது. சந்தை நன்றாக இருந்ததற்கு காரணம், இந்திய பொருளாதார வளர்ச்சி, 9.4 சதவீதம் இருக்கும் என ஐ.எம்.எப்., கணித்திருந்ததும், டெலிகாம் பங்குகள் விலை கூடியதும், உலகளவில் சந்தைகள் சிறிது நிலையாக இருந்ததும் ஆகும். வெள்ளியன்று சந்தை மேலே செல்ல, டெலிகாம் பங்குகள் காரணமாக இருந்தன. சந்தையில் சமீபகாலமாக அதிகம் மேலே ஏறாமல் இருந்தவை, இந்த பங்குகள்.கம்பெனிகளிடையே போட்டி ஏற்பட்டதால், லாபங்கள் அதிகம் ஈட்ட முடியாதது தான் இதற்கு காரணம். தற்போது கிரெடிட் சுசி என்ற பெரிய வங்கி, இந்த கம்பெனிகளுக்கான ரேட்டிங்கை, 'அப்கிரேட்' செய்திருந்தது. இதனால் டெலிகாம் கம்பெனிகளின் பங்குகள் (பாரதி ஏர்டெல், ஐடியா செல்லுலர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்) ஆகியவை, 3 முதல் 13 சதவீதம் வரை கூடின. இது, சந்தை மேலே செல்ல வழிவகுத்தது. வெள்ளியன்று இறுதியாக, மும்பை பங்குச் சந்தை 182 புள்ளிகள் கூடி, 17 ஆயிரத்து 833 புள்ளிகளுடன் முடிந்தது.ஐ.எம்.எப்., கணிப்பு: அதிகம் வேலைவாய்ப்புகள், முதலீட்டுக்கு அதிக வருமானம், நல்ல வாய்ப்புகள் ஆகியவை இந்தியாவை 9.4 சதவீத வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் என, ஐ.எம்.எப்., தெரிவித்துள்ளது.அதே சமயம், சீனாவின் வளர்ச்சி, 10.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. இது நாட்டுக்கும், சந்தைக்கும் நல்லது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், இந்த 9.4 சதவீத வளர்ச்சியையும் நிச்சயம் தாண்டலாம். ரிலையன்ஸ் வாங்க நினைக்கும் பாம்பே டையிங்: நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பாம்பே டையிங் கம்பெனியின் பாலியஸ்டர் பிசினசை, பல கம்பெனிகள் வாங்க நினைக்கின்றன. போட்டியில் தற்போது ரிலையன்சும் நுழைந்துள்ளது. காத்திருக்க வேண்டும் யார் ஜெயிக்கின்றனர் என்று பார்க்க.விலை கூடும் என்.பி.எப்.சி., கம்பெனிகள்: பைனான்ஸ் கம்பெனிகளுக்கு தான் சந்தையில் தற்போது மவுசு. அந்த கம்பெனிகள், வங்கிகள் ஆரம்பிப்பதற்கான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்ற செய்திகள் வந்தவுடன் சந்தையில் அந்த கம்பெனிகளின் பங்குகள் விலை கூடிக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக ரிலையன்ஸ், மகேந்திரா போன்றவை. வங்கிகளில் வேலை வாய்ப்புகளும் பெருகும்.நல்ல மழை: இந்தாண்டு பொய்க்காமல் பெய்த மழை, பங்குச் சந்தையையும் பசுமையாக்கி சென்றுள்ளது. முதலீட்டாளர்கள் பலர், மழையை நம்பி இருக்கும் கம்பெனிகளின் பங்குகளை அதிகம் விரும்பி வாங்கினர். விவசாயம் சம்பந்தப்பட்ட பங்குகள் அதிகம் விரும்பி வாங்கப்பட்டன. காலாண்டு முடிவுகள்: சந்தையில் முதல் காலாண்டு முடிவுகள் வரத்துவங்கி விட்டன. இந்தஸ் இந்த் வங்கி, தன் முடிவுகளை வெளியிட்டது. கடந்தாண்டு இதே காலாண்டை விட, 37 சதவீதம் லாபம் அதிகமாக ஈட்டியுள்ளது.அடுத்த வாரம் ஜாம்பவான்களின் முடிவுகள் வெளிவரவுள்ளன. அவை சந்தையின் போக்கை தீர்மானிக்கும். குறிப்பாக இன்போசிஸ், எச்.டி.எப்.சி., - எக்சைடு, ஹோட்டல் லீலா ஆகிய முடிவுகள் வரவுள்ளன.புரோக்கரேஜ் கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள் சிறிது குறைவாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கம்பெனிகளின் காலாண்டு வருமானம். எடில்விஸ், இந்தியா இன்போலைன், மோத்திலால் ஒஸ்வல் போன்ற கம்பெனிகள்.காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் - ஏன்? கடந்தாண்டு இதே காலாண்டை விட, இந்தாண்டு முதல் காலாண்டில் கஸ்டம்ஸ் டியூட்டி, எக்சைஸ் டியூட்டி, சர்வீஸ் டாக்ஸ் ஆகியவை அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளன. இது, பொருளாதார வளர்ச்சியையே காட்டுகிறது. ஆதலால் இந்த காலாண்டு முடிவுகள் கம்பெனிகளுக்கு நன்றாக இருக்கவே நல்ல வாய்ப்புகள் உண்டு.அடுத்த வாரம் எப்படி இருக்கும்? காலாண்டு முடிவுகள் அடுத்த வாரம் வரத்துவங்கும். அது சந்தையின் போக்கை தீர்மானிக்கும். தொடக்கம் நன்றாக இருக்கும் பட்சத்தில் சந்தை 18 ஆயிரம் புள்ளிகளை தாண்டி போகும்.
- சேதுராமன் சாத்தப்பன்
இந்திய பொருளாதார வளர்ச்சி, 9.4 சதவீதம் இருக்கும் என ஐ.எம்.எப்., கணித்திருந்ததும், டெலிகாம் பங்குகள் விலை கூடியதும், உலகளவில் சந்தைகள் சிறிது நிலையாக இருந்ததும் ஆகும். வெள்ளியன்று சந்தை மேலே செல்ல, டெலிகாம் பங்குகள் காரணமாக இருந்தன
ரிலையன்ஸ் வாங்க நினைக்கும் பாம்பே டையிங்: நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பாம்பே டையிங் கம்பெனியின் பாலியஸ்டர் பிசினசை, பல கம்பெனிகள் வாங்க நினைக்கின்றன. போட்டியில் தற்போது ரிலையன்சும் நுழைந்துள்ளது.
என்.பி.எப்.சி., கம்பெனிகள்: பைனான்ஸ் கம்பெனிகளுக்கு வங்கிகள் ஆரம்பிப்பதற்கான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்ற செய்திகள் வந்தவுடன் சந்தையில் அந்த கம்பெனிகளின் பங்குகள் விலை கூடிக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக ரிலையன்ஸ், மகேந்திரா போன்றவை.
காலாண்டு முடிவுகள்: சந்தையில் முதல் காலாண்டு முடிவுகள் வரத்துவங்கி விட்டன. இந்தஸ் இந்த் வங்கி, தன் முடிவுகளை வெளியிட்டது. கடந்தாண்டு இதே காலாண்டை விட, 37 சதவீதம் லாபம் அதிகமாக ஈட்டியுள்ளது
இந்த வாரம் ஜாம்பவான்களின் முடிவுகள் வெளிவரவுள்ளன. அவை சந்தையின் போக்கை தீர்மானிக்கும். குறிப்பாக இன்போசிஸ், எச்.டி.எப்.சி., - எக்சைடு, ஹோட்டல் லீலா ஆகிய முடிவுகள் வரவுள்ளன.புரோக்கரேஜ் கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள் சிறிது குறைவாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கம்பெனிகளின் காலாண்டு வருமானம். எடில்விஸ், இந்தியா இன்போலைன், மோத்திலால் ஒஸ்வல் போன்ற கம்பெனிகள்.காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் - ஏன்? கடந்தாண்டு இதே காலாண்டை விட, இந்தாண்டு முதல் காலாண்டில் கஸ்டம்ஸ் டியூட்டி, எக்சைஸ் டியூட்டி, சர்வீஸ் டாக்ஸ் ஆகியவை அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளன.
இது, பொருளாதார வளர்ச்சியையே காட்டுகிறது. ஆதலால் இந்த காலாண்டு முடிவுகள் கம்பெனிகளுக்கு நன்றாக
இருக்கவே நல்ல வாய்ப்புகள் உண்டு.
காலாண்டு முடிவுகள் இந்த வாரம் சந்தையின் போக்கை தீர்மானிக்கும். தொடக்கம் நன்றாக இருக்கும் பட்சத்தில் சந்தை 18000 புள்ளிகளையும் நிபிட்டி 5450 புள்ளிகளையும் தாண்ட வாய்ப்பு உலக சந்தைகளும் ஒத்துழைக்கும் பட்சத்தில் இந்த வாரம் முதலிடளர்களுக்கு கொண்டாட்டமான வாரமாக அமைய வாய்ப்புண்டு பயன் படுத்தி கொள்ளவும்
STOCKS TO WATCH
RELIANCE
TATA STEEL
BOMBAY DYEING
IFCI
REL CAPITAL
INDIABULL FIN
MARUTHI
BAJAJ AUTO
SHRIRAM FIN
TECH MAHINDRA
ADITYA BIRLA NUVO
TATA TELE
PETRONET LNG
HCC
MOSERBAER
SINTEX INDUS
YES BANK
PIRAMAL
ESSAR OIL
EDUCOMP
MTNL
FORTIS
JINDAL STEEL
JP POWER
CROMPTEN GRE
PNG
HDIL
ICICI BANK
MRPL
JSW STEEL
GREAT EAST
MRPL
NEYVELI LIG
TATA CHEM
BAJAJ HOLD
JAIN IRR
KOTAK MAHIND
HCL
GUJ NRE COKE
CAIRN
ADANI POWE
REL POWER
UNITECH
DLF
Bajaj Auto and the Renault-Nissan alliance has reportedly signed a memorandum of understanding (MoU) on 8 July 2010 to produce the ultra-low-cost car, which is likely to hit the market by 2012 in India and overseas.
ICICI Bank is reportedly planning to raise between $500 million and $700 million in the international market through a five and a half year bonds issue. The bonds are expected to be priced around 320 basis points over 5-year US treasuries.
HCL Infosystems has acquired a 60% stake in NTS Group, a leading IT services and solutions provider based in Dubai involving an investment of about $6.5 million.
Kpit Cummins Infosystems has scheduled a meeting of the board of directors of the company on 13 July 2010 to consider the strategic acquisition of a Germany based niche automotive product company.
உலகின் 6வது பெரிய இரும்பு உற்பத்தியாளரான டாடா ஸ்டீல் நிறுவனம் விரைவில் இரும்பு விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.முத்துராமன் கூறுகையில், இரும்பு உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. எனவே அதை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வேண்டிய நிர்ப்பந்தம் அதிகரித்துள்ளது. உலக அளவில் மூலப் பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. எனவே இதை சமாளிக்க விலையை உயர்த்த வேண்டியே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூரிலும், சர்வதேச சந்தையிலும் இரும்பிற்கு நல்ல கிராக்கி உள்ளது. இது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேசமயம், சீனாவிலிருந்து விலை குறைந்த இரும்பு பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவதால் நமக்கு அது சவாலாக மாறியுள்ளது என்றார்
பசுமை புரட்சி திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.400 கோடி ஒதுக்கி உள்ளதாக மத்திய அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கோல்கட்டாவில் நடைபெற்ற பசுமை புரட்சி திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாநிலங்களில் அடுத்த 2 ஆண்டுகளில் பசுமை புரட்சி ற்பேடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீட்டில் 5 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மேற்கொள்ள மத்திய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டங்களின் படி 71 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இத்தகவலை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரம்ம தத் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தியில், தென் அமெரிக்க நாடான பிரேசில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும் சர்க்கரை பயன்பாட்டில் இந்தியாவே உலகில் முன்னிலையில் உள்ளது. உலகம் முழுவதுமாக 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. உலகின் மொத்த கரும்பு உற்பத்தியில் பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் பங்களிப்பு 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. கரும்பு என்பது ஒரு நீண்ட கால பயிராகும். இது, தென் மாநிலங்களில் ஜனவரி, பிப்ரவரி, ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களில் பயிரிடப்படுகிறது. வட மாநிலங்களில் பிப்ரவரி, மார்ச், அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் பயிர் செய்யப்படுகிறது. அறுவடைப் பணிகள் அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாத காலம் முழுவதுமாக மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டின் கரும்பு உற்பத்தியில், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிராவில், பெரும்பாலான விவசாயிகள், ஜூன் மாதத்தில் (பருவமழை தொடங்கும்போது) விதைப்பு பணிகளை தொடங்குகின்றனர். ஆனால் உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி மற்றும் மே மாத காலத்திலும், அதற்குப் பிறகு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத காலத்திலும் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு 2009-10ம் ஆண்டு பருவத்தில் நாட்டின் சர்க்கரை உற்பத்தி 1.85 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் சர்க்கரை பருவத்தில் இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி 2.50 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
The key benchmark indices gained for the second straight day as expectations of strong Q1 June 2010 results, a recent upward revision in India's GDP growth forecast by the International Monetary Fund and the stock market regulator Securities & Exchange Board of India (Sebi)'s recent decision to cut exposure margins on stock derivatives, boosted sentiments. Except the BSE FMCG index, all the other sectoral indices on BSE were in green. The BSE 30-share Sensex was provisionally up 189.25 points or 1.07%, off close to 15 points from the day's high. Metal, banking, auto and realty stocks rose. Index heavyweight Reliance Industries edged lower in volatile trade.
The market jumped in early trade on firm Asian stocks. The market extended gains to hit fresh intraday highs in morning trade as Asian stocks extended initial gains. The market continued the uptrend to hit fresh intraday high in mid-morning trade. The market trimmed gains in early afternoon trade as index heavyweight RIL came off the higher level. The market regained strength in mid-afternoon trade, with the Sensex hitting a fresh intraday high. It, soon, pared gains.
European shares rose, tracking gains on Wall Street on Thursday, which was boosted by jobless claims falling and a handful of large retailers reporting solid sales. The key benchmark indices in UK, France and Germany were up by 0.01% to 0.39%.
Asian stocks rallied for a second day on Friday, supported on positive US economic data. The key benchmark indices in Hong Kong, Indonesia, China, Taiwan, Singapore, Japan and South Korea rose by between 0.5% to 2.31%.
South Korea's central bank raised its key interest rate Friday from a record low amid prospects for faster growth in the country's economy. The Bank of Korea announced that it lifted the benchmark seven-day repurchase rate to 2.25% from 2%.
Trading in US index futures indicated that the Dow could fall 17 points at the opening bell on Friday, 9 July 2010.
Wall Street rose for a third straight day on Thursday, 8 July 2010, as investors were encouraged to see jobless claims fall and a handful of large retailers report solid sales. The Dow Jones Industrial Average was up 120.71 points, or 1.20% at 10,138.99. The Standard & Poor's 500 Index was up 9.98 points or 0.94% at 1,070.25. The Nasdaq Composite Index was up 15.93 points, or 0.74% at 2,175.40.
Sales at stores open at least a year rose 3.1% in June 2010, according to company reports which was better than expected. Initial claims for state unemployment benefits dropped 21,000 to a seasonally adjusted 454,000 in the week ended 3 July 2010, the lowest level since early May, the Labor Department said.
The International Monetary Fund (IMF) on Thursday raised its world output forecast for 2010, citing solid growth in the first half, especially in Asia, but warned of significant downside risks flowing from Europe. The IMF revised its 2010 world gross domestic product forecast to 4.6%, up from a previous forecast in April of 4.2%. The 2011 GDP forecast was unchanged at 4.3%.
The IMF raised India's growth forecast for 2010 to 9.5%, stating that favourable financing conditions and robust corporate profits will accelerate economic expansion. The IMF expects India's economy to grow 8.5% in 2011.
The Dun & Bradstreet (D&B) Composite Business Optimism Index (BOI) for Q3 September 2010 rose to a two-year high of 150 from 132.1 in Q3 September 2009, recording an increase of almost 13.6% on a year-on-year (YoY) basis. The sustained improvement in the BOI is reflective of the continuous strengthening of confidence amongst the corporates, D&B said.
Robust growth in industrial production, stabilising domestic consumption-demand, rapidly-growing investment demand coupled with increase in imports and exports seems to have supported growing business confidence, D&B said. Improvement in hiring intentions of the corporates, as reflected in a 10 quarter high resultant optimism for employees, is a positive development and augurs well for the future growth prospects of the economy, it said.
The latest data showed the food price index rose 12.63% in the year to 26 June 2010, while the fuel price index climbed 18.02%. The pace of increase in food prices slowed from the previous week's annual rise of 12.92% while fuel price inflation accelerated from last week's 12.90%. The primary articles index was up at 16.08% compared with the previous week's reading of 14.75%.
The next major trigger for the market is Q1 June 2010 results of India Inc, which will start trickling in from the second week of July 2010. Advance tax collections for the first quarter of the current financial year point to a strong growth in corporate sector profits. Advance tax payments by companies during the April-June quarter account for 15% of the total advance tax payable in the fiscal year. Corporate advance tax for the first quarter stood at Rs 26,876 crore, against Rs 20,456 crore in the year-ago period, a rise of 31.4%, the fastest since 2005.
Auto firms are seen reporting strong Q1 results on the back of healthy volume growth. However, margins could be under pressure due to higher input costs. Improved lending growth will spur bottom line growth of banks whereas healthy order book will drive earnings of capital goods and engineering giants L&T and Bharat Heavy Electricals (Bhel). Higher sales realisation would boost boom line of metal firms.
As far as the IT sector is concerned, the focus is on whether the IT bellwether Infosys revises its annual guidance when it announces the first quarter results on 13 July 2010. The IT bellwether will issue guidance for the second quarter ending September 2010 at the time of announcing the first quarter results.
Investors are also closely watching the progress of the monsoon rains. Rains have revived after weak monsoon last month. Crop planting suffered last month as rainfall was 16% below normal, but rainfall deficit for the country as a whole has narrowed down to 10% for the period 1 June-8 July after heavy rains in the past few days. Rains were 2% above normal in the week ended 8 July 2010.
The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The south-west monsoon usually covers the entire country by mid-July. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.
The Reserve Bank of India (RBI) on 2 July 2010, hiked the repo rate by 25 basis points to 5.5% from 5.25%, with immediate effect. It also hiked the reverse repo rate, at which it absorbs excess cash from the banking system, by an equal 25 basis points to 4% from 3.75%. The central bank said the latest rate hike is a part of the calibrated exit from the expansionary monetary policy.
Two-thirds of WPI inflation in May 2010 was contributed by non-food items, suggesting that inflation is now very much generalised and that demand-side pressures are evident, the central bank said in a statement. WPI inflation increased to 10.2% in May 2010, up from 9.6% in April 2010.
In its April 2010 policy review, the Reserve Bank projected real GDP growth for 2010-11 at 8% with an upside bias. More recent data suggest that the upside bias has largely materialized, thecentral bank said. The growth projection will be reviewed in the first quarter review on 27 July 2010, RBI said.
Analysts expect another 25 basis points rate hike by the central bank at its quarterly review on 27 July 2010.
The government on Tuesday, 6 July 2010, took the first step towards opening up foreign direct investment (FDI) in multi-brand retail. Advocating that FDI in retail would bolster farmers' income, tame inflation and bring technical knowhow, the government has kicked off a discussion to formulate the rules of the game, including imposition of FDI cap and riders for local sourcing and rural job creation. While foreign investment in multi-brand retail is prohibited now, the Government allows 51% FDI in single brand retail and 100% in wholesale cash-and-carry trade.
Meanwhile, government officials are reportedly in the process of finalising the constitutional amendments required for the rollout of the goods and services tax from 1 April 2011. The new tax, it is proposed, will replace excise duty and service tax at the Centre and VAT and local taxes at the states' level.
Coming back to stocks, foreign funds have bought equities worth a net Rs 563.78 crore in the first few days this month. Foreign funds had pumped in Rs 7713.97 crore in equities in June 2010
Domestic funds have sold shares worth a net Rs 251.76 crore in the first few days this month. They had sold equities worth a net Rs 4777.05 crore in June 2010.
The stock market regulator Securities & Exchange Board of India (Sebi) has relaxed the exposure margin requirement for stock derivatives, based on the feedback received from market participants. After trading hours on Wednesday, 7 July 2010, Sebi issued a circular saying that the exposure margin would be higher of 5% or 1.5 times the standard deviation of the notional value of the gross open position in single stock futures and gross short open position in stock options in a particular underlying.
The revised exposure margin requirement would be effective from 15 July 2010. The exposure margin requirement was similar prior October 2008, after which Sebi increased the exposure margin requirement to higher of 10%, or 1.5 times the standard deviation, to promote market safety and safeguard investor interest.
As per provisional figures, the BSE 30-share Sensex was up 189.25 points or 1.07% at 17,840.98. The Sensex rose 205.85 points at the day's high of 17,857.58 in mid-afternoon trade. The index rose 16.12 points at the day's low of 17,667.85 in early trade.
The S&P CNX Nifty was up 55.25 points or 1.04% at 5,352.10 as per provisional figures.
The BSE Mid-Cap index was up 0.8%. The BSE Small-Cap index was up 0.44%. Both the indices underperformed the Sensex.
The market breadth, indicating the strength of the broader market, was positive. On BSE, 1,563 shares advanced while 1,360 shares declined. A total of 88 shares remained unchanged. The breadth was much stronger earlier in the day.
From the 30 share Sensex pack, 21 stocks rose and rest fell.
BSE clocked turnover of Rs 4227 crore, higher than Rs 3913.47 crore on Thursday, 8 July 2010.
Telecom stocks jumped after a foreign brokerage raised its rating on the telecom sector, citing an improvement in the competitive environment. Tariffs had been stable in the last eight months and high cost for 3G mobile spectrum had crimped mobile operators' ability to go for further price war, the brokerage said.
India's largest mobile services provider by sales Bharti Airtel jumped 9.3% and was the top gainer from the Sensex pack. The stock rose on huge volume of 91.9 lakh shares on BSE. Singapore Telecommunications, Southeast Asia's largest telecoms firm, said on Friday it bought around 1.6 million shares of Bharti Airtel on the open market for about Singapore dollar 12.45 million ($9.03 million).
Reliance Communications rose 2.2% to Rs 192.25. On BSE, 36.8 lakh shares changed hands in the counter. Idea Cellular jumped 13.5% to Rs 67. The scrip vaulted on massive volume of 1.2 crore shares.
India's largest FMCG maker by sales Hindustan Unilever fell 1.66% and was the top loser from the Sensex pack.
Index heavyweight Reliance Industries (RIL) fell 0.18% to Rs 1054.60. The stock hit a high of Rs 1,066 and a low of Rs 1052.40. RIL and Reliance Natural Resources (RNRL) on 25 June 2010, entered into a new gas supply agreement, as directed by the Supreme Court. The Supreme Court had ordered the two companies to renegotiate the Gas Supply Master Agreement, which was signed between the Ambani brothers as part of the business demerger in 2005.
RIL also recently announced its seventh oil discovery in Cambay basin in Gujarat.
Cipla fell 0.59%. The company today said news report about its chief executive leaving the company is speculative. The executive Amar Lulla is on medical leave, company said.
Metal and mining stocks rose on positive economic data in US, the world's biggest economy. Sterlite Industries, Hindalco Industries, Jindal Steel & Power, Jindal Saw, Sesa Goa, Steel Authority of India, JSW Steel and Hindustan Zinc rose by between 0.41% to 2.73%.
Tata Steel, the world's eighth-largest steelmaker, rose 2.51% to Rs 496.30, with the stock gaining for the second straight day. Sales from its Indian operations stood at 1.4 million tonnes in the April-June 2010 quarter, nearly flat compared with the same period last year. Sales in the quarter were hurt by weak market sentiment in the flat products segment and excessive imports of hot rolled coil from China, Tata Steel said.
Sales of long products, primarily used in construction, rose 8% Tata Steel said. It did not disclose growth for flat products, but said within this segment, demand from the auto sector rose 20%. The Indian operations account for about a quarter of the group's total annual global capacity of 30 million tonnes, which includes unit Corus, Europe's second-largest steelmaker. The company's crude steel production in India rose 8.3% to 1.63 million tonnes for the quarter.
Steelcast rose 6.54%, after the company said its board will meet on 14 July 2010 to consider forming joint venture with Michigan Steel of USA, a leading steel foundry, for marketing of steel castings in United States.
Bank stocks rose on a pick up in credit offtake. India's largest private sector bank by market capitalisation ICICI Bank rose 1.03%, with the stock gaining for the second straight day. The bank today announced the pricing of an international bond offering of $500 million. The bank, last week, set its base rate for loans at 7.5% effective 1 July 2010 as part of a new rule to set minimum lending rates.
India's second largest private sector bank by operating income HDFC Bank rose 3.44% to Rs 2010 with the stock gaining for the second straight day. The stock hit the record high of Rs 2010.90 today. HDFC Bank announced during market hours on Thursday that the bank has issued on a private placement basis unsecured, redeemable, non-convertible, subordinated bonds in the nature of debentures towards Tier-II Capital for an amount aggregating Rs 1105 crore. HDFC Bank, last week, set its base rate at 7.25%.
India's biggest commercial bank in terms of branch network, State Bank of India, rose 0.57% with the stock gaining for the second straight day. SBI announced last week it has fixed the base rate at 7.5% per annum with effect from 1 July 2010.
The Reserve Bank of India introduced the new lending rate system with effect from 1 July 2010 to ensure that larger borrowers do not bargain for cheaper rates from banks, distorting their asset liability management.
India's largest dedicated housing finance firm by revenue HDFC rose 1.18%, with the stock gaining for the second straight day. HDFC recently launched Dual Rate Product - 3, a special home loan product at a fixed rate of 8.25% per annum up to 31 March 2011, 9.25% for the period between 1 April 2011 and 31 March 2012 and the applicable floating rate for the balance term. This special offer is applicable to all new home loan customers who apply before 31 August 2010 and take at least part disbursement before 30 September 2010, HDFC said.
Interest rate sensitive realty stocks rose on bargain hunting after a recent slide triggered by rate hike worries. Mahindra Lifespace Developers, Unitech, Indiabulls Real Estate, Omaxe, Orbit Corporation, DLF, Peninsula Land and HDIL rose by between 0.02% to 4.73%.
IT stocks rose on positive economic data in the US, which is the biggest market for Indian IT firms. India's second largest IT exporter by sales Infosys rose 1.63%, with the stock gaining for the second straight day. The stock today hit a record high of Rs 2,882.
India's third largest IT exporter by sales Wipro rose 0.97%, with the stock gaining for the second straight day. India's largest IT exporter by sales TCS fell 0.33%, reversing early gains.
Auto stocks rose on expectations of good Q1 results. India's largest tractor maker by sales Mahindra & Mahindra (M&M) rose 2.46%, with the stock gaining for the second straight day. The company, last week, reported an increase of 19.84% in auto sales to 27,562 units in June 2010 over June 2009. Despite the annual shutdown in the first week of June, the auto division posted strong growth rates, M&M said in a press release. Tractor sales declined 9% to 16,590 units in June 2010 over June 2009, as the company is facing supply constraints from component makers (casting and tyres).
India's largest commercial vehicle maker by sales Tata Motors rose 1.92%, with the stock gaining for the second straight day. Tata Motors' total sales jumped 49% to 67,730 in June 2010 over June 2009. Domestic sales rose 45% to 62,602 and exports jumped 138% to 5,128 in June 2010 over June 2009. The figures do not include the luxury Jaguar, Land Rover brands it makes in Britain.
Ashok Leyland rose 0.22%, extending last four days' gains. The company reported an over two-fold jump in total commercial vehicle sales to 8,400 units in June 2010 compared to the same month last year.
India's largest car maker by sales Maruti Suzuki India rose 1.39%, with the stock gaining for the second straight day. The company's total vehicle sales rose 17.3% to 88,091 vehicles in June 2010 over June 2009.
Car sales in India rose an annual 30.8% in June 2010, an industry body said on Thursday. Firms sold 141,184 cars in the month, compared with 107,948 units a year ago, data from the Society of Indian Automobile Manufacturers (SIAM) showed. Sales of trucks and buses, a barometer of economic activity, rose 44% to 52,211 units in June, SIAM said.
The country's largest two-wheeler maker Hero Honda Motors rose 0.51%, with the stock snapping last three days' losses. The company reported a 16.6% jump in its sales at 4,26,454 in June 2010 over June 2009.
Bajaj Auto gained 0.65% to Rs 2,417.60 after the two-wheeler major signed an agreement with Renault-Nissan alliance to manufacture an ultra low-cost car to be sold in India and other emerging markets, which would be a rival to Tata Motors' Nano.
Powered by Capital Market - Live News
HAPPY TRADING
BULMARKETINDIAA
Blogroll
-
SENSEX : 35962.93 * 33.29 (0.09 %)7 ஆண்டுகள் முன்பு
-
-
Nifty 12-07-2010
திங்கள், 12 ஜூலை, 2010இடுகையிட்டது BULLMARKETINDIA நேரம் திங்கள், ஜூலை 12, 2010 0 கருத்துகள்
MarketNews
சனி, 10 ஜூலை, 2010உலகமே டுவிட்டர், பேஸ்புக் , ஆர்குட் எனும் சோஷியல் நெட்வொர்க் தளங்களில் மூழ்கியிருக்கையில் தாங்களும் இணைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : அரசுத்துறை அமைச்சகம், புதுயுக தொழில்நுட்பத்தை தகவமைத்துக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், தங்களை பின்தொடர்ந்து நிறைய பேர் வருவர் எனறு எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதேபோல் மத்திய உள்துறை அமைச்சகமும், பேஸ்புக் அக்கவுண்டை துவக்க உள்ளதாகவும், ஊழியர்கள் எந்த விஷயத்தையும் அதில் தெரிவிக்கக் கூடாது என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட போது, அங்கு வெளியுறவுக் கொள்கைகள், வெளியுறவுக் கொள்கைகளின் முக்கியத்துவம், கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தல் முதலிய விஷயங்கள் டுவிட்டர் மூலம் பரிமாறப்படுவது கண்டு, இந்த முறையை இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும் என்று அரசிற்கு வேண்டுகோள் விடுத்தார். அவரும் சிறந்த சோஷியல் நெட்வொர்க் வாடிக்கையாளராக இருந்தார். ஆனால் அவர் டுவிட்டரில் கூறிய சில கருத்துக்கள் காரணமாக அவர் பதவி விலக நேரிட்டது குறிப்பிடத்தக்கது
இந்தியாவின் முன்னணி தனியார்துறை ரெக்குரூட்மெண்ட் பிராசஸ் அவுட்சோர்சிங் நிறுவனம், ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த தி்ட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 400 புதிய ஊழியர்களை பணியமர்த்த தி்ட்டமிட்டுள்ளது. தேசிய அளவில் அனைத்து நகரங்களிலும் கிளைகளை துவக்க திட்டமிட்டுள்ளதாகவும், தற்போதைய அளவில் 10 அலுவலகங்களை வைத்துள்ள தங்களது எலிக்சர் நிறுவனம், இந்த ஆண்டின் இறுதியில் 22 அலுவலகங்களை துவக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வேலை பார்க்கச் செல்லும் தொழில்துறை நிபுணர்களுக்கு தரப்படும் எச்-1 பி விசாக்கள் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 23 ஆயிரம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற தொழில் செய்பவர்களுக்கான எச்1-பி விசாக்கள் கடந்த ஆண்டு மூன்று லட்சத்து 39 ஆயிரத்து 243 பேருக்கு வழங்கப்பட்டது. இந்த விசாக்களை பெற்றவர் களில் இந்தியர்கள் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து இரண்டு பேர். மூன்றில் ஒரு பகுதி இந்தியர்களே இந்த விசாக்களை பெற்றுள்ளனர். கடந்த 2007-2009ம் ஆண்டுகளில் பொருளாதார மந்த நிலை காணப் பட்டதால் இக்கால கட் டத்தில் 34 ஆயிரம் எச்-1பி விசாக்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்த கால கட்டத்திலும் இந்த விசாக்களை பெறுவதில் இந்தியர்களே முன்னிலை வகித்தனர். கடந்த 2007ல் இந்தியர்கள், ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 613 பேரும், கடந்த 2008ல் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 725 பேரும் இந்த விசாக்களை பெற்றனர். தற்காலிகமாக தொழிற் சாலை சார்பில், அமெரிக்கா சென்று(எல்1 விசா) வேலை பார்த்தவர்களில் இந்தியர்கள் தான் முதலிடம் வகிக்கின்றனர். கடந்த ஆண்டு இந்தியர்கள் 16 சதவீதம் பேர் எல்1 விசாவில் அமெரிக்கா சென்றுள்ளனர். இதற்கு அடுத்த படியாக பிரிட்டன் மற்றும் ஜப்பானை சேர்ந்தவர்கள் இந்த விசாக்களை பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு 80 ஆயிரத்து 251 இந்தியர்கள், மாணவர்கள் விசாவில் (எப்1) அமெரிக்கா சென்றுள்ளனர். இந்த எப்1 விசா பெற்றதில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதாவது, 14 சதவீத சீன மாணவர்கள் இந்த விசா பெற்றுள்ளனர். தென்கொரியா 13 சதவீதம் இந்த எப்1 விசாவை பயன்படுத்தியுள்ளது. இந்தியா சார்பில் 9 சதவீதம் பேர் எப்1 விசாவை பெற்றுள்ளனர். இவ்வாறு அமெரிக்க உள்துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதால் விவசாயிகள் பலனடைவதோடு விலைவாசியை கட்டுக்குள் வைக்கவும் உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி தேவைப்படுகிறது. இதற்கு சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களை ஈடுபடுத்துவதன் மூலம் அதிக நிதி கிடைக்கும். உள்நாட்டு தொழில் நிறுவனங்களைக் காப்பதற்கு போதுமான வழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம் என வெளிநாட்டு முதலீட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய முடிவினால் அதிக வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 2006-ம் ஆண்டில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும் பன்முக பிராண்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருமுக பிராண்ட் விற்பனைக்கு அனுமதித்ததன் மூலம் ரூ. 900 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வேளாண் துறையில் காய்கறிகள், பழங்கள் சார்ந்த பொருள்கள் அழுகுவதால் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கு குளிர்பதன கிடங்கு வசதி இல்லாதது முக்கிய காரணமாகும். அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் இதுபோன்ற கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும். அன்னிய நிறுவனங்களை அனுமதித்தால் உள்ளூர் மளிகைக் கடை வியாபாரம் நலிந்து விடும் என்ற அச்சம் காரணமாக இதற்கு எதிர்ப்பு உள்ளது. தற்போது பொருள்களின் விற்பனை விலையில் மூன்றில் ஒரு பங்குதான் விவசாயிக்குக் கிடைக்கிறது. அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கையை அரசுக்கு இம்மாத இறுதியில் அளிக்கப் போவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் சிறந்த 15 ஹோட்டல்களில் ஓபராய் குரூப் நடத்தும் 4 ஹோட்டல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக ரன்தாம்பூரில் உள்ள தி ஓபராய் வன்யவிலாஸ் ஹோட்டல் தான் இந்த ஆண்டிற்கான சிறந்த ஹோட்டல்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தகவலை டராவல் பிளஸ் லீசர் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ரன்தாம்பூரில் உள்ள தி ஓபராய் வன்யவிலாஸ் ஹோட்டல், ஆக்ராவில் உள்ள அமர்விலாஸ் ஹோட்டல், ஜெய்பூரில் உள்ள ராஜ்விலாஸ் ஹோட்டல் மற்றும் உதய்பூரில் உள்ள உதய்விலாஸ் ஹோட்டல் 2010-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 15 ஹோட்டல்கள் பட்டியலில் 1, 5, 13, 15 ஆகிய இடங்களை பிடித்துள்ளது. இந்த 4 ஹோட்டல்கள் தான் ஆசியாவின் தலைசிறந்த ஹோட்டல்கள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த மாதத்தில் ஸ்டீலின் விலை டன்னிற்கு ஆயிரம் ரூபாய் குறைய வாய்ப்பு உள்ளதாக ஸ்டீல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்டீல் கம்பெனி உரிமையாளர்களின் சங்க செயலாளர் அதுல் சதுர்வேதி கூறுகையில், இந்த மாதத்தில் கட்டிடத்துறை மற்றும் இன்ப்ராஸ்ட்ரெக்ஷர் துறையில் தொய்வு நிலை நீடிப்பதால், ஸ்டீல் நிறுவனங்கள் போட்டி உலகில் சவால்களைச் சமாளிப்பதற்காக டன்னிற்கு ஆயிரம் ரூபாய் வரை குறைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவி்த்தார். ஸ்டீல் தயாரிக்க பயன்படும் மூல்பபொருட்களின் விலை தொடர் அதிகரிப்பு, கட்டுமானத்துறையில் தொய்வு நிலை போன்றவை காரணமாக, தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் வி்ற்பனையை திறம்படசெய்யாவிடில், இத்துறையை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு ஸ்டீலின் விலையைக் குறைக்க நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த சிலகாலமாகவே, ஸ்டீல் நிறுவனங்கள் விலையை தொடர்ந்து குறைத்து வருவதாகவும், டன் ஒன்றுக்கு 33 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஸ்டீல் தற்போது 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார். எனினும், டாடா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் சிலவற்றின் விலையை இந்த மாதம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தலில் புதிய விதிமுறைகளை, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கிரெடிட் கார்டு பயன்பாடு குறித்த புதிய வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாகவும், இந்த வழிமுறைகளை மீறும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது : சமீபகாலமாக, கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்களிடமிருந்து அதிகளவில் புகார்கள் வருவதாகவும், அந்த புகார்கள் பெரும்பாலும், அதிகளவில் பணம் வசூலிப்பதாகவும், அதற்கு உரிய விளக்கம் வழங்கப்படுவதில்லை என்று உள்ளதாகவும் அது தெரிவி்த்துள்ளது. கிரெடிட் கார்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதை தெரிவித்து, பின் ஆண்டுக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், புதிய லோன்கள் குறித்த அழைப்புகள் அடிக்கடி போன் மூலம் வருவதாகவும், பில் தவறாக அனுப்பப்படுவதாகவும், உரிய நிறுவனத்திடம் சென்று விசாரித்தால், அதற்குரிய விளக்கம் அளிக்கப்படுவதில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைகளை நிவர்த்தி செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி 2007ம் ஆண்டே, கிரெடிட் கார்டுகளுக்கான வழிமுறைகளை வகுத்து வெளியிட்டதாகவும் , ஆனால் அதனை சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளது. தற்போது, புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு வெளி்யிடப்பட்டள்ளதாகவும், இந்த வழிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய வழிமுறைகளாவன : உபயோகிப்பாளர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படுவதற்கு முன்னரே, வட்டி விகிதங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், தங்கள் நிறுவனம் வசூலிக்கப்படும் முறைகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், வட்டி , பணம் வசூலிக்கப்படும் முறைகள் ஒளிவுமறைவில்லாததாக இருக்க வேண்டும் என்றும், இதுகுறித்த விபரங்களை வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், வட்டி விகித மாற்றத்தை, அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம், கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் ஏதாவது புகாரைத் தெரிவித்தால், அதிகபட்சம் 60 நாட்களுக்குள் அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும், உபயோகிப்பாளர்களுக்கு உரிய விளக்கத்தை உரிய நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 1.9 கோடி கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் உள்ளதாகவும், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, வெளிநாட்டு வங்கிகளான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, ஹெச்எஸ்பிசி வங்கி, சிட்டிபாங்க் உள்ளிட்ட வங்கிகள் தற்போது கிரெடிட் கார்டுகளை வழங்கி வருவதில் முன்னணி வகிப்பது குறிப்பிடத்தக்கது
துவங்கிய சில மாதங்களிலேயே அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக்கின் வரவையடு்த்து, மற்ற சோஷியல் நெட்வொர்க்களான கூகுள் உள்ளிட்ட மற்ற தளங்கள் கதிகலங்கியுள்ள நிலையில், மும்பையைச் சேர்ந்த ஏகேஜி டெக்னாலஜிஸ் என்ற நிறவனம், புதிய ஆன்லைன் சோஷியல் டிவியை அறிமுகம் செய்துள்ளது. ன்யோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சோஷியல் டிவி அறிமுக விழா நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஏகேஜி டெக்னாலஜிஸ் நிறுவன தலைவர் கவுரவ் மெண்டிராட்டா கூறுகையில், இது இந்தியாவின் முதல் ஆன்லைன் சோஷியல் டிவி என்றும், விரைவில் இது இந்திய பார்வையாளர்களை ஆக்கிரமி்க்கும் என்பதில் ஐயமில்லை என்று அவர் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போ்னற நாடுகளிலும் தங்களது சேவையை துவக்க உள்ளதாக தெரிவித்த அவர், இது உபயோகிப்பாளர்களுக்கு கணக்கிலடங்கா சேவை அளிக்க உள்ளதாக தெரிவி்ததார். பாலிவுட் படங்கள், இசை வீடியோக்கள், டிவி நிகழ்ச்சிகள் , ஆவணப்படங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உபயோகிப்பாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமம், அடுத்த 3மற்றும் 4 ஆண்டுகளில், ரூ.1,800 கோடி திட்டச் செலவில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதனையடுத்து, இக்காலத்தில் புதிதாக 23,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இருப்பதாக இக்குழுமத்தின் செயல் இயக்குனர் சங்கீதா ரெட்டி தெரிவித்தார்.
அண்மையில், புதுடெல்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கீதா ரெட்டி கூறியதாவது, தற்பொழுது நிறுவனத்தின் மருத்துவமனைகள் அனைத்திலுமாக 9,000 படுக்கை வசதிகள் உள்ளன. இதனை 12,000 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மருத்துவமனைகளில், தற்பொழுது 62,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை 85,000 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்
'அமெரிக்க பொருளாதாரம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது' என்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் உலகப் பொருளாதார நெருக்கடியில் இந்தியா பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தின் கன்சாஸ் நகரத்தில் நடந்த பொருளாதார மீட்சி பற்றிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அதிபர் ஒபாமா கூறியதாவது: அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டில் 6 சதவீதமாக சுருங்கிய அமெரிக்கப் பொருளாதாரம், இப்போது வளர்ச்சி அடைந்து வருகிறது. இவ்வளர்ச்சியால் நாம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இந்த நடவடிக்கைகள் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட விளைவுகளை குறுகிய காலத்துக்குள் சரிசெய்து விடும் என்று நான் கூறவில்லை. இன்று ம், ஒரு வேலைக்கு ஐந்து வேலையில்லா நபர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், ஆற்றல் துறையில் மட்டும் அடுத்த சில ஆண்டுகளில் ஏழு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம். இது நம் பொருளாதாரத்தை குறுகிய காலத்துக்குள் வளர்க்கும் நடவடிக்கை அல்ல; ஆனால் எதிர்காலத்துக்கான அடித்தளம். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார். இதற்கிடையில் ஒபாமா அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 'உலகளாவிய அளவில் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. குறிப்பாக ஆசியாவில் பொருளாதாரம் உறுதியான வகையில் வளர்ந்து வருகிறது. உலக பொருளாதார பாதிப்பில் இந்தியா பாதிக்கப்படவில்லை. காரணம், வெளியில் இருந்து வரும் பண அளவுத்தேவை அங்கே குறைவு. நிதித்துறைமற்றும் நிதி ஊக்குவிப்பு சலுகைகள் மூலம் அங்கே பாதிப்பு ஏற்படவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பொதுத் துறையைச் சேர்ந்த பவர் கிரிட் கார்ப்பரேஷன், மின் பகிர்மான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.2,035 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. பவர் கிரிட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, இம்மாதம் 2ம் தேதியன்று கூடியது. நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் மின் பகிர்மான கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்காக மட்டும் ரூ.1,273 கோடி முதலீடு மேற்கொள்ள இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் வட பகுதியில் மின் பகிர்மான நடவடிக்கைகளை மேம்படுத்த ரூ.753 கோடி முதலீடு மேற்கொள்ளவும், மேலும் மத்தியபிரதேசம் ராஜ்கார் துணை மின்நிலையத்தில் இயந்திர சாதனம் ஒன்றை நிறுவுவதற்காக ரூ.9.37 கோடி செலவிடவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. பவர் கிரிட் நிறுவனம், பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12), மேலும் 37,000 மெகா வாட் மின்சாரத்தை பகிர்மானம் செய்யும் அளவிற்கு விரிவாக்கத் திட்டத்தில் ஈடுபட உள்ளது. இதற்காக ரூ.55,000 கோடி செலவிட உத்தேசித்துள்ளது. இந்நிறுவனத்தின் தற்போதைய மின் பகிர்மான திறன் 19,800 மெகா வாட்டாக உள்ளது. இதனை, நடப்பு நிதி ஆண்டில் 23,400 மெகா வாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
எலெக்ட்ரானிக்ஸ், நெட்வொர்க்கிங் மற்றும் கமயூனிகேஷன் டெக்னாலஜி துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துக் கொண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம், அடுத்த 2 ஆண்டுகளில் 3 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில், தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும், கலிபோர்னியாவிற்கு அடுத்து தங்களுக்கு பெங்களூருவில் மட்டுமே அலுவலகம் இருப்பதாகவும், பெங்களூரு அலுவலகத்தில், தற்போது 7 ஆயிரம் பேர் பணியாற்றுவதாகவும், இன்னும் 2 ஆண்டுகளில் ஊழியர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், அதேபோல், பெங்களூருவில் 1 மில்லியன் சதுர அடி பரப்பளவில் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளதாகவும் அவர் தெரிவி்த்தார்
உலக வங்கி, இந்தியாவுகு நடப்பாண்டு ஜூன் மாதம் வரை வழங்கியுள்ள மொத்த கடன் தொகை 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கிக்கான இந்திய தலைவர் ராபர்ட்டோ ஜாஹா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் இந்தியாவுக்கு அளிக்கப்படும் மொத்த கடனில், 2.6 பில்லியன் டாலர் வட்டி இல்லா கடனாகவும், 6.7 பில்லியன் டாலர், குறைந்த வட்டியுடன் கூடிய நீண்ட கால கடனாகவும் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை, இந்தியாவின் வளர்ச்சி தாளாண்மைக்கு உதவும்விதமாக மேற்கொள்ளப்படும் ஐந்து புதிய திட்டங்களுக்கு, குறிப்பாக உள்கட்டமைப்புக்கான தடைகளை களைய உதவும்விதமாக பயன்படுத்தப்படும் என்றும் அதில் உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
சுங்கம் உள்ளிட்ட பல்வேறு வகைகள் மூலம் வசூலிக்கப்படும் மறைமுக வரி, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 43 சதவீதமாக அதிகரித்துள்ளது.சுங்கம், கலால் மற்றும் சேவை வரிகள் மூலம் மறைமுக வரி வசூலிக்கப்படுகிறது. 2010-11ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மொத்தம் 56 ஆயிரத்து 930 கோடி ரூபாய் மறைமுக வரி வசூலாகியுள்ளது. மொத்தத்தில் இது 43 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 39 ஆயிரத்து 693 கோடி ரூபாய் வசூலானது.இதில், சுங்க வரி மூலம் 28 ஆயிரத்து 135 கோடி ரூபாயும், கலால் வரி மூலம் 19 ஆயிரத்து 536 கோடி ரூபாயும், சேவை வரி மூலம் ஒன்பதாயிரத்து 258 கோடி ரூபாயும் அரசுக்கு வந்துள்ளது.இந்த நிதியாண்டுக்கான மறைமுக வரி இலக்காக ஏழு லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் நேர்முக வரி மூலமும், நான்கு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மறைமுக வரி மூலமும் வர வேண்டும் என்று இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது .அதேபோல், இந்தக் காலாண்டுக்கான ரயில்வேயின் வருமான வளர்ச்சி 7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் ரயில்வே 22 ஆயிரத்து 61 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில் 20 ஆயிரத்து 610 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது
நாட்டின் தொழில்துறை உற்பத்தி சிறப்பாக இருப்பதால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனங்கள் செலுத்திய நேரடி வரி வசூல் 15.49 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் ரூ.68,675 கோடி வரி வசூலாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் நேரடி வரி மற்றும் மறைமுக வரி மூலம் மொத்தம் ரூ.7.46 லட்சம் கோடி வருவாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், நேரடி வரிகள் வாயிலாக திரட்டப்பட உள்ள தொகை மட்டும் ரூ.4.30 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இது, சென்ற நிதியாண்டை விட 13 சதவீதம் அதிகம். ஆண்டின் முதல் காலாண்டில் நேரடி வரி வசூல் 15.49 சதவீதம் அதிகரித்துள்ளதால், நேரடி வரி வசூல் இலக்கை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு உள்ளது. மேலும் இந்த நிதியாண்டில் 3ஜி அலைவரிசை ஒதுக்கீடு வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.67,720 கோடி வருவாய் கிடைத்தது. மேலும், வயர்லெஸ் பிராண்ட்பாண்ட் அலைவரிசை ஒதுக்கீடு வாயிலாக ரூ.38,540 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன்மூலம் எதிர்பார்க்கப்பட்டதைவிட ரூ.65,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதனால் நாட்டின் நிதிப் பற்றாக்குறையும் ஓரளவு குறையும். அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் மீதான கட்டுப்பாட்டை நீக்கியது, சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது ஆகியவற்றின் மூலம் வருவாய் பற்றாக்குறையும் பெருமளவில் குறையவுள்ளது. இதனால் பட்ஜெட்டில் விழுந்த பற்றாக்குறையை சமாளிக்க வெளியில் கடன் வாங்குவதையும் மத்திய அரசு பெருமளவில் குறைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
எல்.ஐ.சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ஆயுள் காப்பீடு கழகம், காப்பீடு செய்து கொண்டுள்ளவர்களிடம் இருந்து, பிரிமியத் தொகையை வசூலிக்க ஒன் ஸ்டாப் ஷாப் ரீடெய்ல் நிறுவனத்தை நியமித்துள்ளது. இந்தியாவின் பெரிய காப்பீடு நிறுவனமும், பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சியில் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் காப்பீடு செய்து கொண்டுள்ளனர். இனி இவர்கள் பிரிமியத்தை ஒன் ஸ்டாப் ஷாப் கிளைகளில் செலுத்தலாம். இது குறித்து ஒன் ஸ்டாப் ஷாப் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அந்தோனி ஜோஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எங்கள் கிளைகளில் பாலிசிக்கு உரிய தவணைத் தொகை செலுத்தலாம். இதற்கு உடனடியாக ரசீதையும் பெறலாம். இந்த ரசீதுகளை வருமான வரி படிவம் தாக்கல் செய்யும் போது சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகி டி. சிகால் கூறுகையில், காப்பீடு செய்து கொண்டுள்ளவர்கள், பிரிமியம் கட்டணத்தை வசிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள எங்கள் கிளைகளில் எந்த நேரத்திலும், வாரத்தின் 7 நாட்களிலும் ரொக்கமாக செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்தியா முழுவதும் பரந்த அளவில் ஒன் ஸ்டாப் ஷாப் நிறுவனத்தின் கிளைகள் 50 ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. இவை கணினி வசதியுடன் இயங்குகின்றன. தற்போது ரயில், பேருந்து, விமான டிக்கட், செல் போன் போன்றவைகளின் கட்டணம் செலுத்தும் வசதி ஆகியவை உள்ளன. இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து அந்தோனி ஜோஸ் கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் வருவாய் தற்போது ரூ.2 ஆயிரம் கோடியாக உள்ளது. இதை 2011 ஆம் ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடியாகவும், 2012 ஆண்டில் ரூ.6,000 கோடியாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதே போல் தற்போதுள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற கிளைகளை, 2 இலட்சமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தியா முழுவதும் பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள் முதல் கிராமப்புறங்களிலும் விரிவுபடுத்த உள்ளோம். எங்கள் முக்கிய நோக்கம் ஒவ்வொரு கிராமத்திலும் எங்கள் சேவை கிடைப்பதுடன் விவசாயிகள் உட்பட எல்லோருக்கும் சேவை கிடைக்க வேண்டுமென்பதே என்று தெரிவித்தார்.
தங்களது நிறுவனத்தின் இரண்டாவது பிளாக்ஷிப் ஸ்டோரை சீனாவின் ஷாங்காய் நகரில் திறக்க தி்ட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆப்பிள் நிறுவன ரீடெயில் வர்த்தக பிரிவின் துணை தலைவர் ரான் ஜான்சன் கூறுகையில், சீனாவில் இரண்டாவது ஸ்டோரை திறக்க உள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், அதுவும் வர்த்தக நகரமான ஷாங்காய் நகரின் ஓரியண்டல் பேர்ல் டவரில் திறக்க உள்ளது சந்தோஷமாக இருப்பதாக அவர் தெரிவி்த்தார். சீனாவில், கடந்த 2008ம் ஆண்டில் பீஜிங் நகரில் முதல் ஸ்டோர் திறக்கப்பட்டு வெற்றிகரமாக விற்பனை நடைபெற்று வருவதாகவும், ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் விற்பனை சீனாவில், ரீசெல்லர்கள் மூலமே நடைபெற்று வருவதாகவும், தற்போது திறக்கப்பட உள்ள ஸ்டோர், தங்களது நிறுவனத்தின் நேரடி விற்பனையகம் என்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் தெரிவி்த்தார்
கன்ஸ்யூமர் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் லிமிடெட், அர்ஜென்டினாவின் ஹேர் கேர் நிறுவனமான அர்ஜென்காசை வாங்க தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக கோத்ரெஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : அர்ஜென்காஸ் நிறுவனத்தை, ஏற்கனவே 2 முறை பன்னாட்டு வாகனங்கள் வாங்க முயன்றதாகவும், ஆனால் அது தோல்வியில் முடிந்தததாக தெரிவித்துள்ளது. கோத்ரெஜ் நிறுவனம், பல நிறுவனங்கள் வாங்கும் மற்றும் கைகோர்க்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருவதாகவும், நைஜீரியாவின் டுரா சோப் நிறுவனத்தையும், இந்தோனேஷியாவின் வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை வாங்க தீர்மானித்துள்ளதாகவும், சாரா லீ நிறுவனத்ததுடன் கைகோர்க்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தில் கெய்ர்ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் எண்ணைக் கிணற்றில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெயை இந்திய எண்ணெய் கழகம் வாங்கத் துவங்கியுள்ளது. இராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் கெய்ர்ன்ஸ் இந்தியா நிறுவனம் ஆழ் துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. நாள் ஒன்றிற்கு ஒரு இலட்சம் பீப்பாய் அளவிற்கு கச்சா எடுக்கப்படுகிறது. இதில் பெரும் பகுதி, குஜராத் மாநிலம் ஜாம் நகரிலுள்ள ரிலையன்சின் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கும், வாடினாரில் உள்ள எஸ்ஸார் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இப்போது கெய்ர்ன்ஸின் உற்பத்தி ஒரு இலட்சத்தை தொட்டுள்ளதால், நாளுக்கு 13,000 பீப்பாய்கள் வீதம் இந்திய எண்ணெய் கழகமும் வாங்கத் துவங்கியுள்ளது. தங்களுடைய குழாயில் சில தொழில் நுட்பச் சிக்கல் இருப்பதால் தற்போது குறைவான அளவிற்கே வாங்கி வருவதாக ஐஓசி அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிஏஎஸ்எப் தகவல் தொழில்நுட்ப சேவைக்காக, ஆப்ஷோர் டெவலப்மெண்ட் சென்டரை (ஓடீசி)சென்னையில் அமைத்துள்ளது மகிந்திரா சத்யம் நிறுவனம். சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தின் புதிய பரிணாமமாக அவதரித்துள்ள மகிந்திரா சத்யம் நிறுவனம் மீண்டும் காலடி எடுத்து வைக்கிறது. ஓடிசி திறப்பு விழாவில் பங்கேற்ற பிஏஎஸ்எப் ஐடி நிர்வாக இயக்குனர் ரால்ப் சான்பெர்கர் கூறுகையில், இந்த முடிவு வரவேற்கத்தக்கது எனும், இந்த ஓடிசி அலுவலகம், வியாபார மற்றும் வர்த்தக வேலைவாய்ப்புகளுக்கு சிறந்த பிளாட்பாரமாக அமையும் என்றும், இத்துறையில் நன்கு அனுபவம் பெற்ற மகிந்திரா சத்யம் நிறுவன ஒத்துழைப்போடு துவங்கியுள்ள இந்த ஓடிசி அலுவலகம் தற்போது 1500 அசோசியேட்டுகளளுடன் செயல்பட உள்ளதாகவும், 2011ம் ஆண்டு வாக்கில் இதன் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயரும் என்று அவர் தெரிவித்தார்.
பங்குச் சந்தையின் மூலம் வெளியிட்ட பத்திரங்களின் மூலம் ரூ.500 கோடி திரட்டியுள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. கடன் வழங்கலை உயர்த்துவதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி பங்குச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பத்திரங்கள்மூலம் ரூ.500 கோடி திரட்டியுள்ள இந்தியன் வங்கி, அடுத்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் ரூ.500 கோடி திரட்டவுள்ளது. இதனை மும்பை பங்குச் சந்தைக்குத் தெரிவித்துள்ளது
எங்கும் யூடியூப், எதிலும் யூடியூப் என்ற காலம் தோன்றியள்ள இந்நிலையில், இனி போனிலும் யூடியூப் வீடியோக்களை காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக யூடியூப் நிறுவனம், புதிதாக மொபைல் வெப்சைட்டை துவக்கியுள்ளதாகவும், இந்த வெப்சைட்டை ஏற்றுக்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக ஆப்பிள் ஐபோன் 4 வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் யூடியூப் வீடியோக்களை இனி ஆப்பிள் ஐபோன்4 ல் எளிதாக காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்த வெப்சைட்டுக்கான சர்ப்ட்வேர்கள் , ஆப்பிள் ஐபோன் 4 உள்ளிட்ட உயர்தர போன்களில் மட்டுமே பயன்படுத்தப்படுமாறு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் எல்லா ஸ்மார்ட் போன்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் சாப்ட்வேர்கள் உருவாக்கப்பட உள்ளதாக யூடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது
கண் சிகிச்சை மருந்துகள் , குளுகோமா தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்த தங்கள் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக, பயோகான் லிமிடெட் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தங்கள் நிறுவனம் பிராண்டட் பார்முலேஷன்ஸ் அடிப்படையில் பல்வேற வித மருந்துகளை உற்பத்தி செய்து வர்த்தகப்படுத்தி வருவதாகவும், இந்த ஆண்டு முதல் காம்பிரிஹென்சிவ் கேர் மற்றும் இம்முனோதெரபி பிரிவில் 4 புதிய அங்கங்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், தற்போதைய அளவில் தங்கள் நிறுவனம் 36 பிராண்டுகளில் மருந்துகளை வர்த்தகப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண் சிகிச்சைக்கான மருந்துகள், குளுகோமா, புரோஸ்டோகிளாண்டின்ஸ், இன்ஜெக்டபிள் ஏபிஐஸ், போன்றவை தயாரிப்பிலும் ஈடுபடப் போவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சாப்ட் டிரிங் குளிர்பான தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்கும் ரஸ்னா நிறுவனம், ஆப்ரிக்காவில் புதிய உற்பத்தி யூனிட்டை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தி்த்த ரஸ்னா நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குனருமான பிரூஜ் காம்பட்டா கூறுகையில், தங்கள் நிறுவனம் புதிய பொருட்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே, தங்கள் நிறுவனத்திற்கு வங்கதேசம், எகிப்து உள்ளிட்டவைகளில் யூனிட் உள்ளதாகவும், இதனைத்தொடர்நது ஆப்ரிக்காவிலும் உற்பத்தி யூனிட் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஹோம் லோன் மற்றும் கார் லோன்களுக்கான சிறப்பு வட்டி வீதத்திற்கான கால அளவை நீட்டித்தது ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத். இந்திய பொதுத்துறை வங்கிகளுள் முதன்மையானதான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஒரு அங்கமான ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், வீடு மற்றும் கார்களை வாங்க கடனுதவிகளை வழங்கி வருகிறது. இதன்படி ஹோம் லோனில், 50 லட்சத்திற்கு உட்பட்ட கடனுதவி என்றால், முதல் ஆண்டு 8.5 சதவீதமாகவும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் 9.25 சதவீதமாகவும், நான்காம் ஆண்டு துவக்கம் முதல் 9.75 சதவீதமாகவும் வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. 50 லட்சத்திற்கு மேற்பட்ட கடனுதவி என்றால் முதல் ஆண்டு 8.5 சதவீதமாகவும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் 9.25 சதவீதமாகவும், நான்காம் ஆண்டு துவக்கம் முதல் 10.75 சதவீதம் வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது.கார் லோன்கள் தரப்பில் 5 லட்சத்திற்கு உட்பட்ட கடனுதவி என்றால் முதல் ஆண்டு 8.5 சதவீதமாகவும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் 10.5 சதவீதமாகவும், நான்காம் ஆண்டு துவக்கம் முதல் 11.5 சதவீதமாகவும், 5 லட்சத்திற்கு மேற்பட்ட கடனுதவி என்றால் முதல் ஆண்டு 8.5 சதவீதமாகவும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் 10.5 சதவீதமாகவும், நான்காம் ஆண்டு துவக்கம் முதல் 11.25 சதவீதமாகவும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், இந்த மாதம் முதல் தேதி முதல், அடிப்படை வட்டி வீதத்தை 7.75 சதவீதமாக அறிவித்துள்ள போதிலும், ஹோம் லோன் மற்றும் கார் லோனுக்கான சிறப்பு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும், இதற்கான கால அளவு நீட்டிக்கப்படுவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையில், 300 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான, 'டைடல் பார்க்', ஆகஸ்ட் 2ம் தேதி திறக்கப்படவுள்ளது. தற்போதுள்ள தி.மு.க., அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றதும் வெளியிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளில், கோவை தகவல் தொழில் நுட்பப் பூங்காவும் ஒன்று. இதற்காக, கோவை அவினாசி ரோட்டில் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த 62 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது.தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் (டிட்கோ), 'எல்காட்' இணைந்து 300 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து வசதிகளும் கொண்ட, 'டைடல் பார்க்' அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. இந்த பூங்கா அமைக்கப்படும் பகுதி, சிறப்புப் பொருளாதார மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டது. 'எல்காட்' மற்றும் 'டிட்கோ' இணைந்து அமைக்கும், 'டைடல் பார்க்' தவிர, டி.சி.எஸ்., விப்ரோ நிறுவனங்களுக்கு தலா 9.5 ஏக்கர் நிலமும், எச்.சி.எல்., நிறுவனத்துக்கு நான்கு ஏக்கரும் ஒதுக்கப்பட்டன. இது தவிர, 12.9 ஏக்கரில், குடியிருப்பு பகுதியும் அமைக்க திட்டமிடப்பட்டது.தகவல் தொழில்நுட்பத்துறை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், அதாவது 2007 பிப்., 24ல் இந்த, 'டைடல் பார்க்' கட்டுமானத்துக்கு, கோவையில் நடந்த பிரமாண்டமான விழாவில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இதனால், கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தின் விலை பல மடங்கு எகிறியது.எல்காட் நிர்வாக இயக்குனராக இருந்த உமாசங்கர், ஆய்வுக்காக கோவை அடிக்கடி வர, அடிக்கடி நில மதிப்பு உயர்ந்தது. ஆனால், பணிகள் மட்டும் ஆமை வேகத்தில் நடந்தன. தி.மு.க., ஆட்சி முடிவதற்குள்ளாவது இது திறக்கப்படுமா என்ற கேள்வி, கோவை மக்களிடம் கிளம்பியது; ஒரு வழியாக இப்போது பணிகள் முடிந்துள்ளன. இங்கு முதலில் 15 தள கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது. விமான நிலையம் அருகில் இருப்பதால் அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப, மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, கட்டடத்தின் உயரம் குறைக்கப்பட்டு, பரப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது தரைக்கு அடியில் 3, தரைக்கு மேல் 5 என 8 தளங்கள் கட்டப்பட்டுள்ளன.ஒரு தளத்துக்கு இரண்டு லட்சம் சதுர அடி வீதம், மொத்தம் 17 லட்சம் சதுர அடியில் பிரமாண்டமான கட்டடமாக, 'டைடல் பார்க்' உருவாகியுள்ளது. பூமிக்கு அடியிலுள்ள மூன்று தளங்களும், 'பார்க்கிங்' பகுதி. அங்கு, ஆயிரத்து 114 கார்களையும், 2,000 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம்.
கிராமப்புற மக்கள், சிறு தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக, சோலார் உபகரணங்கள் தயாரிப்பில் இறங்க உள்ளதாக பிபிஎல் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : இதற்காக லேட்டஸ்ட் தொழில் நுடபம், மற்றும் டிசைன்களை தங்கள் நிறுவனம் வைத்துள்ளதாகவும், சோலார் பல்புகள் , சோலார் சக்தி சேமிப்பு கருவிகள், எல்இடி லைட்ஸ்களை அடிபப்டையாகக் கொண்ட சிஎப்எல் பல்புகள், நிக்கல் மெட்டல் ஹைட்ரைடுடன் க;டிய காரீய (லெட்) ஆசிட் பேட்டரிகள், லி்த்தியம் அயான் பேட்டரிகள் உள்ளிட்டவைகளை தயாரி்க்கவும் தீர்மானித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது தொழில்நுடபம் மற்றும் டிசைன், ஜெர்மனியிலன் சிறந்த தொழில்நுட்பத்திற்கான விருது பெற்றுள்ளதாகவும் அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது
மகாராஷ்டிராவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு குடிநீர் பாட்டிலுக்கும், தலா ஒரு ரூபாய் வரி விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வரி வருவாய் மூலம் கிடைக்கும் நிதியை, நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு பயன்படுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் லக்ஷ்மண்ராவ் தோப்லே கூறியதாவது: மகாராஷ்டிரா மாநில நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களின் சுகாதாரம் படுமோசமாக உள்ளது. இங்கு குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் போதிய சுகாதார வசதியின்றி உள்ளனர். இவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது சிரமமாக உள்ளது. இதனால், நகர்ப்புற ஏழை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரத்தை திரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக, மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்கள் ஒவ்வொன்றுக்கும், தலா ஒரு ரூபாய் வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வருவாய், ஏழைமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். இருந்தாலும், இதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவை கூட்டத்தில் விரைவில் இதுகுறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு தோப்லே கூறினார்.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய துணை இயக்குனர் சந்திர பூஷண் கூறியதாவது: மாநில அரசின் இந்த திட்டம் நல்ல திட்டம் தான். ஆனால், குடிநீர் பாட்டில்களுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக உறுதியான சட்டம் கொண்டு வரவேண்டும். இல்லையெனில் இதை நடைமுறைப்படுத்த முடியாது. குளிர்பானங்கள், பழச்சாறு போன்றவைக்கும் வரி விதிக்க வேண்டும் என, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். குடிநீர் பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்கள், இந்த பிரச்னையை கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சந்திர பூஷண் கூறி
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தமிழ்நாடு மற்றும் கேரள தலைவர் சோமசேகர் கணபதி மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டிலேயே முதன்முறையாக, மறைமுக கட்டணம் இல்லாத 'சிம்ப்ளி' திட்டத்தை ரிலையன்ஸ் மட்டுமே அறிமுகம் செய்தது. நாட்டில் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்று இரண்டாவது இடத்தில் ரிலையன்ஸ் இருக்கிறது. தற்போது ஒரு நொடி பேச ஒரு காசு, ஒரு நிமிடத்திற்கு 50 காசு, ஒரு காலுக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை நேற்று முதல் மதுரையில் இருந்து தமிழகம் முழுமைக்கும் அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டங்களின் கீழ், நாடு முழுவதும் எங்கு பேசினாலும் ஒரே கட்டணம் தான். 19 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், ஒரு காசுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம். 39 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 500 எஸ்.எம்.எஸ்., இலவசம். இன்டர்நெட் இணைப்புக்கு 29 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கு 500 எம்.பி., 'டவுன்லோட்' செய்யலாம். 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், ஒரு மாதத்தில் 2.5 ஜி.பி., 'டவுன்லோட்' செய்யலாம். 30 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 25 ரூபாய்க்கு 'டாக்டைம்', ஆயுள் கால வேலிடிட்டி பெறலாம். இவையும் புதிய திட்டங்களில் கிடைக்கும் சலுகைகள் என்றார். தமிழ்நாடு வட்ட மேலாளர் சுபாஷ் ராவ், மதுரை வட்ட மேலாளர் ராஜா அந்தோணி உடன் இருந்தனர்.
இடுகையிட்டது BULLMARKETINDIA நேரம் சனி, ஜூலை 10, 2010 0 கருத்துகள்
Nifty - 09-07-2010
வெள்ளி, 9 ஜூலை, 2010நேற்றய எட்ட்ரத்தை தக்க வைக்க முயன்றும் முடியாதது சந்தைக்கு ஏமாற்றமே,இன்றைய சந்தையை பொறுத்தவரை
நிபிட்டி 5320 -5335 ஐ கடந்தால் மட்டுமே அடுத்த கட்ட நகர்வுகளுக்கு சாத்தியம்.இன்றைய சந்தையில் காளைகள்
5335 கடக்க போராடும் ,அப்படி போராடி தோற்கும் பட்சத்தில் சந்தையை கரடிகள் அலுமைகுட்படும் .இன்றைக்கு சந்தை எட்டர இறக்கத்துடன் பயணிக்கலாம்.
கிழ நிலையில் 5265 உடைந்தால் சந்தையின் நேற்றைய எட்ட்ரம் காணமல் போகும் வாய்புகள் உருவாகும்.
STOCKS TO WATCH
RELIANCE
RELCAPITAL
AMTEK AUTO
CUMMINS INDIA
BAJAJ AUTO
EXIDE INDUS
MAH&MAH
MARUTHI
ALLAHABAD BANK
CANARA BANK
IDBI
IOB
KOTAK MAHINDRA
YES BANK
ALSTOM PROJ
EKC
BHEL
GAMMON INDIA
L&T
HUL
MARICO
TATA TEA
RUCHI SOYA
APOLLO HOS
BIOCON
DR REDYS
GLENMARK PHARMA
IPCA LAB
ORCHID CHEM
SUNPHARMA ADV
KFA
GUJ NRE COKE
ISPAT INDUS
SAIL
NMDC
JSW STEEL
HINDALCO
TATA STEEL
WELSPUN CORP
CAIRN
ESSAR OIL
DLF
MAHINDRA LIFE
HDIL
HCL TEC
EDUCOMP
WIPRO
NEYVELI LIG
REC
CROMPTON GRE
TORREN POWER
INDIABULL FIN
P&G
MUNDRA PORT
JINDAL STEEL
Aviation stocks may hog limelight on reports the government will consider allowing foreign airlines to invest up to 26% in local carriers.
Reliance Communications may reportedly raise about Rs 4,000 crore via a combination of strategic stake sale and qualified institutional placement of shares. The stake sale is likely to take place at Rs 200-210 per share.
Mahindra & Mahindra stock turns ex-dividend today. The company had announced dividend of Rs 9.5 per share for the year ended March 2010. Bajaj Auto stock turns ex-dividend today. The company had announced dividend of Rs 40 per share for the year ended March 2010. Hindustan Unilever stock turns ex-dividend today. The company had announced dividend of Rs 3.5 per share for the financial year 2010.
NMDC may reportedly buy four coking coal mines controlled by Russian billionaire Mikhail Prokhorov, to source raw material supplies for two planned steel mills in India.
The Reserve Bank of India barred fresh buying of shares by foreign investors in Rural Electrification as they have reached the trigger limit of 10%.
The board of directors of Aegis Logistics at its meeting held on 7 July 2010, has recommended issue of bonus shares in the ratio of 2 equity shares for every 3 shares held.
Godrej Consumer Products has raised Rs 531.30 crore from a qualified institutions placement, which was priced at Rs 345 per share.
லக்சுரி கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆடி நிறுவனம், ஜீன் மாதத்தில், தங்களது நிறுவன கார் விற்பனை 8.7சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம், சர்வதேச அளவில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 99,250 கார்களை விற்பனை செய்துள்ளதாகவும், இதில் சீனாவில் 21,436 கார்களும், அமெரிக்காவில் 8,601 கார்களும், பிரிட்டனில் 8,665 கார்களும் விற்பனையாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது சதவீதத்தின் அடிபப்டையில் சீனாவில் 61.6 சதவீதமும், அமெரிக்காவில் 14.3 சதவீதமும், பிரிட்டனில் 11.6 சதவீதமும் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவன கார்களுக்கு சீனா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் கிராக்கி அதிகமாக இருப்பதாகவும், ஆனால் ஐரோப்பாவில் 5.3 சதவீத விற்பனை சரிந்து 55,400 கார்கள் விற்பனையானதாகவும், ஜெர்மனியில் 19.9 சதவீதம் விற்பனை சரிந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 69.40 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.திருப்பூர் கலால் மாவட்டத்தில் 250 மதுக்கடைகள் செயல்படுகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் 69.40 கோடி ரூபாய்க்கு மதுவகைகள் விற்பனையாயின. பீர் விற்பனை ஆறு கோடி ரூபாயை கடந்தது. மே மாத மது விற்பனை 72.66 கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்த மாத சரக்கு விற்பனையில் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் குறைந்ததால், பீர் விற்பனை சரிந்துள்ளது.கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்ததையொட்டி, அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை மதுவகைகளின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கமான மது விற்பனையே இருந்ததாக மதுக்கடை விற்பனையாளர்கள் கூறினர்
டிஜிட்டல் சிங்கிள் லென்ஸ் ரெப்ளக்ஸ் கேமராக்கள், இன்டர்சேஞ்சபிள் லென்ஸ்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள நிகான் கார்ப்பரேஷன் நிறுவனம், மற்ற நிறுவனங்களுடன் கைகோர்க்கத் தயார் என்று அறிவித்துள்ளது. நிகான் நிறுவனம், ஏற்கனவே, போட்டோக்களை சேமித்தல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதலில் ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிகான் கார்ப்பரேஷன் நிறுவனம், மேலும் ஆன்லைன் மற்றும் மொபைல் உபகரண நிறுவனங்களுடன் கைகோர்க்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
ரெனால்ட் நிறுவனத்துக்காக பஜாஜ் நிறுவனம் குறைந்த விலை கார்களை தயாரிதது வழங்கவுள்ளது. இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ள நிறுவனம் பஜாஜ். ஆட்டோ ரிக்ஷா தயாரிப்பில் முன்னோடியான பஜாஜ், தான் தயாரிக்கவுள்ள குறைந்த விலை கார்களின் விற்பனை தொடர்பான விவகாரங்களை ரெனால்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்க போவதாக அறிவித்துள்ளது. முன்னதாக ரெனால்ட்-நிஸ்ஸான் நிறுவனங்களுடன் இணைந்து டாடாவி்ன் நானோ காருக்குப் போட்டியாக குறைந்த விலை கார்களை தயாரித்து விற்க பஜாஜ் திட்டமிட்டது. இப்போது அந்தத் திட்டத்தை பஜாஜ் கைவிட்டுவிட்டது. கார்களை பஜாஜ் தயாரிக்க, அதை ரெனால்ட் இந்தியாவில் விற்பனை செய்வது என்று இரு நிறுவனங்களும் புதிய உடன்பாடு செய்து கொண்டுள்ளன. இது குறித்து பஜாஜ் ஆட்டோ லிமிடெட்டின் தலைவர் ராஜீவ் பஜாஜ் கூறுகையில், தயாரிப்பிற்காகவோ, விளம்பர பிரசாரத்திற்காகவோ பிறருடன் கூட்டணி அமைக்கும் தேவை எங்களுக்கு இல்லை. குறைந்த விலை கார்கள் தயாரிக்கும் முடிவின் மூலம், இதுவரை இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே தயாரித்துக் கொண்டிருந்த நாங்கள் நான்கு சக்கர வாகன தயாரிப்பிலும் கால் வைத்துள்ளோம். முன்னதாக, ரெனால்ட்-நிஸ்ஸான் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து 50% பங்குகளை வாங்கி நானோ காருக்கு சவாலாக ஒரு காரை தயாரிக்க நினைத்தோம். ஆனால், அது நடக்கவில்லை என்றார். சிறிய கார் தயாரிப்புக்காக ரூ. 500 கோடி முதலீடு செய்யும் பஜாஜ், இதற்க்கா புனேவில் தொழிற்சாலையை தொடங்கவுள்ளது.இந்த புதிய சிறிய வகை கார் 2012 விற்பனக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஜா மலர்கள் ஏற்றுமதியில் தேசிய அளவில் முன்னணியில் உள்ள கருதூரி குளோபல் லிமிடெட் (கேஜிஎல்) நிறுவனம், எத்தியோப்பியாவில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தி்த்த கேஜிஎல் புரோமோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ண கருதூரி கூறுகையில், தங்கள் நிறுவனம் எத்தியோப்பியாவில் கரும்பு தொழிற்சாலை அமைக்க உள்ளதாகவும், இதற்காக, 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் கரும்பு பிழியும் இயந்திரம் நிறுவ உள்ளதாகவும், இந்த ஆண்டின் அக்டோபர் இறுதிக்குள் இந்த யூனிட்டின் பணிகள் துவங்க இருப்பதாகவும், இந்த யூனிட், நாள் ஒன்றுக்கு 7,000 டன் கரும்புகளை பிழியும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதற்கென கரும்பு உற்பத்திக்காக, எத்தியோப்பியாவில் தங்களுக்கு சொந்தமான 3 லட்சம் ஹெக்டேர் நிலத்தில், 15,000 ஹெக்டேர் நிலத்தை பயன்படுத்த இருப்பதாகவும் அரவ் தெரிவி்த்தார். தங்கள் நிறுவனம், இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் முன்னணியில் இருப்பதாக அவர் தெரிவி்த்தார். தங்கள் நிறுவனம் ரோஜா மலர்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருவதாகவும், எத்தியோப்பியா, கென்யா, ஐரோப்பா, தென் கிழக்கு ஆசிய நாடுகள், மேற்காசிய நாடுகள், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் இந்தியாவின் உட்பகுதிகளில் தாங்கள் ஏற்றுமதி வர்த்தகம் நிகழ்த்தி வருவதாகவும், இந்த ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலமே, தங்கள் நிறுவனத்திற்கு 90 சதவீதம் வருவாய் வருவதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த வாரம் முதல் பெட்ரோல்- டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாறும் என்று தெரிகிறது. 10 நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது. இதன்மூலம் சர்வதேச அளவில் பெட்ரோலியம் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது நிர்ணயித்துக் கொள்ள அனுமதி தரப்பட்டது. ஆனால், என்று முதல் இந்த அரசு கட்டுப்பாட்டில்லாத விலை அமலுக்கு வரும் என்பதை மத்திய அரசு அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் முதல் கட்டமாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.73 உயர்த்தியது மத்திய அரசு. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2ம், சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.35ம் உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலைகளை சர்வதேச விலை நிலவரத்தைப் பொறுத்து மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிட்ட நிலையில், அதை அமல்படுத்துவது குறித்த வழிமுறைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வேகவேகமாக வகுத்து வருகின்றன. இது குறித்து ஆலோசிக்க இந்திய எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளின் கூட்டம் நடக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனியார் பெட்ரோலிய நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் தினந்தோறும் மாறுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் தினந்தோறும் ஒரு விலைக்கு பெட்ரோல், டீசலை விற்க முடியாது என்பதால், வாரத்துக்கு ஒருமுறையோ அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறையோ புதிய விலை நிர்ணயிக்கப்படலாம் என்று தெரிகிறது. வரும் 14ம் தேதிக்குள் இந்த விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை உருவாக்கிவிடுவோம் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 14ம் தேதிக்குப் பின் எந்த நேரத்திலும் பெட்ரோல், டீசல் விலைகள் சர்வதேச சந்தை விலையை பிரதிபலிக்கும் வகையில் மாறலாம். இதனால் தங்கம்-வெள்ளி விலை நிலவரம் மாதிரி இனி பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் குறித்தும் இனி வாரவாரம் மத்திய பெட்ரோலியத்துறையும் எண்ணெய் நிறுவனங்களும் செய்திக் குறிப்புகள் வெளியிடும் நிலை வரலாம்.
பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான பிஎஸ்ஏ பியூஜியாட் சிட்ரோய்ன், சீனாவின் ஷாங்கன் ஆட்டோமோட்டிவ் குழுமத்துடன் கைகோர்க்கிறது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த பியூஜியாட் பிராண்ட் இயக்குனர் ஜீன் மார்க் கேல்ஸ் கூறுகையில், ஐரோப்பாவில் கார் விற்பனையில் இரண்டாம் இடத்தில் உள்ள தஙகளது பியூஜியாட் நிறுவனம், சீனாவின் ஷாங்கன் நிறுவனத்துடன் 50-50 எனற அளவில் இணைய உள்ளதாகவம், தங்களது இந்த இணைப்பின் மூலம் சர்வதேச அளவில் சந்தையை கலக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மே மாதத்தில் துவங்கி நடைபெற்று வந்ததாகவும், தற்போது தான் அது இறுதிக்கட்டத்தை எட்டியதாக அவர் தெரிவி்ததார். சீனாவில் கார்களின் விற்பனை நன்கு நடைபெற்று வருவதாகவும், கடந்த 2009ம் ஆண்டில், 13.64 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும், இது அமெரிக்காவின் விற்பனையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது என்றும், சீனாவில் தற்போது கார் உற்பத்திக்கு ஏற்ற சாதகமான சூழல் நிலவுவதாகவும், இதனை கருத்தில் கொண்டே, ஷாங்கன் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். பியூஜியாட் நிறுவனம் மட்டுமல்லாமல், சீனாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாங்க்பெங் மோட்டார் கார்ப்பரேஷனுடனும் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தின்படி, ஹூவான் நகரில் 2 உற்பத்தி யூனிட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 4,50,000 வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கேல்ஸ் தெரிவித்தார்.
வாகனங்களுக்கு தேவையான டயர்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜே.கே. டயர் இண்டஸ்ட்ரீஸ், தமிழ்நாட்டில் டயர் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இது குறித்து கே.கே டயர் நிறுவனத்தின் துணைத் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான ரகுபதி சின்ஹானியா கூறுகையில், தமிழ்நாட்டில் ரூ.930 கோடி முதலீட்டில் டயர் தொழிற்சாலையை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலை வருடத்திற்கு 29 லட்சம் டயர்கள் தயாரிப்பு திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்நிறுவனத்தின் இயக்குனரும், தலைவருமான அருண் கே. பஜோரியா கூறுகையில், இந்த புதிய தொழிற்சாலை கட்டுமான பணிகள் 2012 ஆம் ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழிற்சாலையில் ஆண்டுக்கு கார்களுக்கு பயன்படுத்தப்படும் 25 லட்சம் ரேடியல் வகை டயர்களும், கனரக வாகனங்கள், பேருந்துகளில் பயன்படுத்தப்படும் டயர்கள் 4 லட்சம் தயாரிக்கப்படும். இந்த தொழிற்சாலை அமைப்பதற்காக 100 ஏக்கர் நிலம் ஏற்கனவே வாங்கப்பட்டுள்ளது. இப்புதிய தொழிற்சாலைக்கான மொத்த திட்ட செலவில் ரூ.300 கோடி உள் நிதி ஆதாரங்கள் மூலம் திரட்டிக் கொள்ளப்படும். மீதமுள்ளவை நிதி, வங்கி நிறுவனங்களிடமிருந்து கடனாக பெறப்படும் என்று தெரிவித்தார். ஜே.கே. டயர் நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் வருடத்திற்கு 1.63 கோடி டயர்கள் உற்பத்தியாகின்றன. இதில் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் 97 லட்சம் டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு மெக்சிகோ நாட்டில் சொந்தமாக உள்ள தொழிற்சாலையில் வருடத்திற்கு 66 லட்சம் டயர்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவின் முன்னணி உணவு எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான ருச்சி சோயா நிறுவனம், ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் விளை நிலத்தை குத்ததைக்கு எடுக்க தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த ருச்சி சோயா நிறுவன நிர்வாக இயக்குனர் தினேஷ் சாஹ்ரா கூறுகையில், தங்கள் நிறுவனம் பிரமாண்ட அளவில் பனை மர சாகுபடி செய்ய உள்ளதாகவும், இதற்காக அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு, ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் 1,50,000 ஹெக்டேர் அளவில் நிலங்களை குத்தகைக்கு எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தங்கள் நிறுவனம், சிங்கப்பூர் மற்றும் துபாயில் யூனிட்களை அமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவி்த்தார்
12 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வேளாண் துறை வளர்ச்சி 4 சதவீதமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார். வேளாண் துறை வளர்ச்சி 10, 11 வது ஐந்தாண்டு திட்ட காலங்களில் அரசு நிர்ணயித்த அளவை எட்டவில்லை. இந்நிலையில் மான்டேக் சிங் அலுவாலியா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் , 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு திட்ட காலத்தில் வேளாண் துறை வளர்ச்சி 4 சதவீதமாக இருக்க வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நல்ல வளர்ச்சி ஆகும். இது வரை வேளாண் துறையில் இந்த அளவு வளர்ச்சி அடைந்ததில்லை. அத்துடன் இது 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தை விட அதிகம். 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், இதற்கு முந்தைய பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தைவிட (2002-07) வேளாண் துறை வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளோம். இத்துறையில் இது வரை 4 சதவீதமாக வளர்ச்சி அடைந்ததில்லை என்று கூறினார்
The key benchmark indices pared gains after a strong intraday surge, as US index futures fell. Index heavyweight Reliance Industries (RIL) pared gains. Banking, metal, realty and IT stocks rose. The BSE 30-share Sensex was provisionally up 172.74 points or 0.99%, off close to 85 points from the day's high. All the sectoral indices on BSE were in green. The market breadth was strong. A hike in 2010 global growth forecast from the International Monetary Fund, firm Asian stocks and stock market regulator Securities & Exchange Board of India (Sebi)'s decision to reduce exposure margins for stock derivatives boosted sentiments.
The market opened on a firm note tracking higher Asian stocks. The market extended gains in morning trade. The market held firm in mid-morning trade. The Sensex hit a fresh intraday high in early afternoon trade. The market held firm at higher level in afternoon trade. The market came off highs in mid-afternoon trade. It further pared gains in late trade.
Sebi on Wednesday relaxed the exposure margin requirement for stock derivatives, based on the feedback received from market participants. After trading hours on Wednesday, 7 July 2010, Sebi issued a circular saying that the exposure margin would be higher of 5% or 1.5 times the standard deviation of the notional value of the gross open position in single stock futures and gross short open position in stock options in a particular underlying.
The revised exposure margin requirement would be effective from 15 July 2010. The exposure margin requirement was similar prior October 2008, after which Sebi increased the exposure margin requirement to higher of 10%, or 1.5 times the standard deviation, to promote market safety and safeguard investor interest.
On the macro front, the latest data showed the food price index rose 12.63% in the year to 26 June 2010, while the fuel price index climbed 18.02%. The pace of increase in food prices slowed from the previous week's annual rise of 12.92% while fuel price inflation accelerated from last week's 12.90%. The primary articles index was up at 16.08% compared with the previous week's reading of 14.75%.
The International Monetary Fund on Thursday raised its world output forecast for 2010, citing solid growth in the first half, especially in Asia, but warned of significant downside risks flowing from Europe. The IMF revised its 2010 world gross domestic product forecast to 4.6%, up from a previous forecast in April of 4.2%. The 2011 GDP forecast was unchanged at 4.3%.
European stocks rallied for a second day on Thursday, lifted by a combination of corporate profit hopes, emerging details of stress tests and a broker upgrade for the banking sector. The key benchmark indices in UK, France and Germany were up by 0.3% to 1.11%.
The European Central Bank is set to leave its benchmark interest rate at a record low of 1% for the 14th straight month as it meets Thursday amid lingering concerns over the health of the continent's banking sector. The Bank of England (BoE) also meets on Thursday. BoE is also widely expected to leave its base interest rate at a record low of 0.5% for the 17th consecutive month.
Germany's exports surged by more than 9 per cent in May as the country's industry-led recovery gained momentum.
Asian stocks surged on Thursday as US retail sales grew at the fastest pace in four years and as investors speculated European banks will pass stress tests. The key benchmark indices in Hong Kong, Indonesia, Taiwan, Singapore, Japan and South Korea rose by between 0.48% to 2.76%. However, China's Shanghai Composite was down 0.25%.
Taiwan's exports surged 34% to $23 billion in June amid the global economic recovery, the Finance Ministry said Thursday. Imports for the month rose 40% from a year earlier to $21.3 billion, the ministry said.
Trading in US index futures indicated that the Dow could fall 16 points at the opening bell on Thursday, 8 July 2010.
US stocks logged their best one-day gain in about six weeks on Wednesday, 7 July 2010 after a bullish forecast from financial company State Street Corp fueled optimism about the coming earnings season and helped the S&P 500 break above a major resistance level. The Dow Jones Industrial Average rose 274.66 points, or 2.82% to 10,018.28. The Standard & Poor's 500 Index gained 32.21 points, or 3.13% to 1,060.27. The Nasdaq Composite Index advanced 65.59 points or 3.13% to 2,159.47.
A retail trade group said sales were growing at the fastest pace since 2006, easing concern that a slump in consumer confidence will scuttle the economic recovery.
Closer home, the next major trigger for the market is Q1 June 2010 results of India Inc, which will start trickling in from the second week of July 2010. Advance tax collections for the first quarter of the current financial year point to a strong growth in corporate sector profits. Advance tax payments by companies during the April-June quarter account for 15% of the total advance tax payable in the fiscal year. Corporate advance tax for the first quarter stood at Rs 26,876 crore, against Rs 20,456 crore in the year-ago period, a rise of 31.4%, the fastest since 2005.
Auto firms are seen reporting strong Q1 results on the back of healthy volume growth. However, margins could be under pressure due to higher input costs. Improved lending growth will spur bottom line growth of banks whereas healthy order book will drive earnings of capital goods and engineering giants L&T and Bharat Heavy Electricals (Bhel). Higher sales realisation would boost boom line of metal firms.
As far as the IT sector is concerned, the focus is on whether the IT bellwether Infosys revises its annual guidance when it announces the first quarter results on 13 July 2010. The IT bellwether will issue guidance for the second quarter ending September 2010 at the time of announcing the first quarter results.
Investors are also closely watching the progress of the monsoon rains. Rains have revived after weak monsoon last month. Crop planting suffered last month as rainfall was 16% below normal, but rainfall deficit for the country as a whole has narrowed down to 11% for the period 1 June -6 July after heavy rains.
The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The south-west monsoon usually covers the entire country by mid-July. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.
The Reserve Bank of India (RBI) on 2 July 2010, hiked the repo rate by 25 basis points to 5.5% from 5.25%, with immediate effect. It also hiked the reverse repo rate, at which it absorbs excess cash from the banking system, by an equal 25 basis points to 4% from 3.75%. The central bank said the latest rate hike is a part of the calibrated exit from the expansionary monetary policy.
Two-thirds of WPI inflation in May 2010 was contributed by non-food items, suggesting that inflation is now very much generalised and that demand-side pressures are evident, the central bank said in a statement. WPI inflation increased to 10.2% in May 2010, up from 9.6% in April 2010.
In its April 2010 policy review, the Reserve Bank projected real GDP growth for 2010-11 at 8% with an upside bias. More recent data suggest that the upside bias has largely materialized, thecentral bank said. The growth projection will be reviewed in the first quarter review on 27 July 2010, RBI said.
Analysts expect another 25 basis points rate hike by the central bank at its quarterly review on 27 July 2010.
The government on Tuesday, 6 July 2010, took the first step towards opening up foreign direct investment (FDI) in multi-brand retail. Advocating that FDI in retail would bolster farmers' income, tame inflation and bring technical knowhow, the government has kicked off a discussion to formulate the rules of the game, including imposition of FDI cap and riders for local sourcing and rural job creation. While foreign investment in multi-brand retail is prohibited now, the Government allows 51% FDI in single brand retail and 100% in wholesale cash-and-carry trade.
Meanwhile, government officials are reportedly in the process of finalising the constitutional amendments required for the rollout of the goods and services tax from 1 April 2011. The new tax, it is proposed, will replace excise duty and service tax at the Centre and VAT and local taxes at the states' level.
As per provisional figures, the BSE 30-share Sensex was up 172.74 points or 0.99% at 17,643.77. The Sensex jumped 257.34 points at the day's high of 17,728.37 in early afternoon trade. The index rose 65.45 points at the day's low of 17,536.48 in early trade.
The S&P CNX Nifty was up 51.15 points or 0.98% at 5,292.25 as per provisional figures.
The BSE Mid-Cap index was up 0.83%. The BSE Small-Cap index was up 0.59%. Both the indices underperformed the Sensex.
The market breadth, indicating the strength of the broader market, was strong. On BSE, 1,779 shares advanced while 1,138 shares declined. A total of 95 shares remained unchanged.
From the 30 share Sensex pack, 25 stocks rose and rest fell.
BSE clocked turnover of Rs 3889 crore, higher than Rs 3774.14 crore on Wednesday, 7 July 2010.
Index heavyweight Reliance Industries (RIL) rose 0.26% to Rs 1055.70. The stock came off the day's high of Rs 1070. RIL and Reliance Natural Resources (RNRL) on 25 June 2010, entered into a new gas supply agreement, as directed by the Supreme Court. The Supreme Court had ordered the two companies to renegotiate the Gas Supply Master Agreement, which was signed between the Ambani brothers as part of the business demerger in 2005.
RIL also recently announced its seventh oil discovery in Cambay basin in Gujarat.
India's largest cement maker by sales ACC fell 1% and was the top loser from the Sensex pack.
FMCG major Hindustan Unilever fell 0.52% after the stock turned ex-dividend today. The company had announced dividend of Rs 3.5 per share for the financial year 2010.
Consumer durables stocks rose. Gitanjali Gems, Rajesh Exports, Blue Star and Titan Industries were up by between 0.47% to 4.67%.
Bank stocks rose on a pick up in credit offtake. India's largest private sector bank by market capitalisation ICICI Bank rose 1.99%. The bank, last week, set its base rate for loans at 7.5% effective 1 July 2010 as part of a new rule to set minimum lending rates.
India's second largest private sector bank by operating income HDFC Bank rose 0.43%. HDFC Bank announced during market hours today that the bank has issued on a private placement basis unsecured, redeemable, non-convertible, subordinated bonds in the nature of debentures towards Tier-II Capital for an amount aggregating Rs 1105 crore. HDFC Bank, last week, set its base rate at 7.25%.
India's biggest commercial bank in terms of branch network, State Bank of India, rose 2.22%. SBI announced last week it has fixed the base rate at 7.5% per annum with effect from 1 July 2010.
But, other PSU banks fell. Punjab National Bank and Bank of India, Bank of Baroda fell by between 0.07% to 0.14%.
The Reserve Bank of India introduced the new lending rate system with effect from 1 July 2010 to ensure that larger borrowers do not bargain for cheaper rates from banks, distorting their asset liability management.
India's largest dedicated housing finance firm by revenue HDFC rose 1.15%. HDFC recently launched Dual Rate Product - 3, a special home loan product at a fixed rate of 8.25% per annum up to 31 March 2011, 9.25% for the period between 1 April 2011 and 31 March 2012 and the applicable floating rate for the balance term. This special offer is applicable to all new home loan customers who apply before 31 August 2010 and take at least part disbursement before 30 September 2010, HDFC said.
Metal and mining stocks rose after LMEX, a gauge of six metals traded on the London Metal Exchange rose 0.45% on Wednesday, 7 July 2010. Sterlite Industries, Sesa Goa, Hindalco Industries, JSW Steel, Hindustan Zinc, Steel Authority of India rose by between 0.48% to 3.36%.
Tata Steel, the world's eighth-largest steelmaker, rose 1.45%. Sales from its Indian operations stood at 1.4 million tonnes in the April-June 2010 quarter, nearly flat compared with the same period last year. Sales in the quarter were hurt by weak market sentiment in the flat products segment and excessive imports of hot rolled coil from China, Tata Steel said.
Sales of long products, primarily used in construction, rose 8% Tata Steel said. It did not disclose growth for flat products, but said within this segment, demand from the auto sector rose 20%. The Indian operations account for about a quarter of the group's total annual global capacity of 30 million tonnes, which includes unit Corus, Europe's second-largest steelmaker. The company's crude steel production in India rose 8.3% to 1.63 million tonnes for the quarter.
Interest rate sensitive realty stocks rose on bargain hunting after a recent slide triggered by rate hike worries. Omaxe, Phoenix Mills, DLF, Peninsula Land, Unitech, Indiabulls Real Estate, Sobha Developers rose by between 0.05% to 3.65%.
IT stocks rose on positive economic data in the US, which is the biggest market for Indian IT firms. India's largest IT exporter by sales TCS rose 1.9%, with the stock gaining for the third straight day. India's second largest IT exporter by sales Infosys rose 1.51%. India's third largest IT exporter by sales Wipro rose 0.8%.
Bajaj Holdings & Investment lost 5.16%, after the stock turned ex-dividend today, 8 July 2010, for a dividend of Rs 30 per share for the year ended March 2010.
Mukand fell 1.15%, after the stock turned ex-dividend today, 8 July 2010, for dividend of Rs 1 per share for the year ended March 2010.
Zenotech Laboratories plunged 12.64% after the Supreme Court upheld Daiichi Sankyo's plea against the Securities Appellate Tribunal order.
Powered by Capital Market - Live News
HAPPY TRADING
BULLMARKETINDIAA
இடுகையிட்டது BULLMARKETINDIA நேரம் வெள்ளி, ஜூலை 09, 2010 0 கருத்துகள்