நேற்றய சந்தைகளுக்கு பவர் பங்குகள் பவர் கொடுக்க முடிவில் நிபிட்டி எட்ட்ரத்தில் முடிந்தது
இன்றைய சந்தைகளை பொறுத்த வரை நிபிட்டி 5486 கடந்தால் 5520 வரையும் நிபிட்டி 5455 உடைந்தால் 5420 -5405 வரையும் கீழ் இறங்கும் வாய்ப்புகள் உள்ளன.
பவர் மற்றும் மென்பொருள் ,ரியல் எஸ்டேட் பங்குகள் இன்று விலை கூட வாய்ப்பு உள்ளன .
நீண்ட கால முதலிட்டாளர்கள் இந்த பங்குகளை சந்தை இறங்கும் பொழுது கவனிக்கலாம்
உங்கள் வருங்கால சொத்து பட்டியலில் இந்த பங்குகளை சேர்த்து கொள்ளலாம்
RELIANCE
LNT
SAIL
BHARTHI
BANK OF INDIA
SBI
REC
AXIS BANK
POWERGRID
ONGC
CROMPTON GREAVES
GAIL
NTPC
INDIAN BANK
BHEL
CENTRAL BANK OF INDIA
JINDAL STEEL
HPCL
ITC
INFOSYS
TCS
HCL TECHN
TATA STEEL
IVRCL INFRA
TATA TELE SEVICE
IOC
BPCL
PUNJAB NATIONAL BANK
NESTLE INDIA
JAIN IRRIGATION
DLF
UCO BANK
ASHOKLEYLAND
ZEE ENTER
UNION BANK OF INDIA
ICICI BANK
The key benchmark indices recovered to end a tad higher after turning negative to hit fresh intraday low in late trade. Volatility was high as traders rolled positions in the derivatives segment from the near-month August 2010 series to September 2010 series as August 2010 derivatives contracts expired today, 26 August 2010. The BSE 30-share Sensex was provisionally up 38.41 points or 0.21%, off close to 40 points from the day's high and up close to 60 points from the day's low.
Banking, FMCG and auto stocks rose. But, index heavyweights Reliance Industries (RIL) edged lower. Realty stocks fell.
Intraday volatility was high. The market edged higher in early trade as Asian stocks and US index futures rose. The market pared gains in morning trade as index heavyweight Reliance Industries (RIL) edged lower. The market moved in a narrow range in mid-morning trade. Stocks held positive zone in early afternoon trade on reports of good rains last week. The key benchmark indices pared gains in afternoon trade, soon after hitting fresh intraday highs.
The market erased almost the entire intraday gains in mid-afternoon trade. The market came off the lower level later. The market once again slipped into the red in late trade. The market soon regained positive zone.
NSE's volatility index, India VIX, a gauge of traders' perception of near-term risks in the market based on options prices, lost 9.67% at 17.09. The index had jumped 11.36% to 18.92 on Wednesday, 25 August 2010. The index had lost 0.88% to 16.99 on Tuesday, 24 August 2010. India VIX is calculated based on the S&P CNX Nifty options prices. India VIX is a measure of the market's expectation of volatility over the next 30 calendar days.
On macro front, food inflation declined further in the middle of this month even as prices of fuels remained steady, the latest data showed. Inflation in the Food Articles group stood at 10.05% for the week ended 14 August 2010, versus 10.35% in the previous week, the Commerce & Industry Ministry said. Inflation in the Primary Articles group stood at 14.75% in the week under review as against 14.85% in the week ended 7 August 2010. Inflation in the Fuel & Power group was unchanged at 12.57%. But, inflation in the Non-food Articles group rose to 22.20% from 21.70% in the preceding week.
Investors are keenly watching data on sowing for the kharif harvest. Overall, nearly 90% of the total normal kharif acreage was seeded till 20 August 2010 and the standing crops are reportedly in good shape. Water status of most reservoirs is also getting better rapidly and is now just three per cent short of normal, reports suggest.
There were good showers over the rain-deficit eastern region in the week ended 25 August 2010, reports suggest. The India Meteorological Department (IMD), had late last week, predicted widespread showers in eastern Uttar Pradesh, Bihar, sub-Himalayan West Bengal, Sikkim, Assam and Meghalaya in the rest of this month. That will help farmers in this region grow coarse cereals, pulses and fodder.
The cumulative rainfall during the period from 1 June 2010 to 25 August 2010 was 2% below normal. Rainfall over the country as a whole for the second half (August to September) of the 2010 southwest monsoon season is likely to be normal, according to the India Meteorological Department (IMD). Quantitatively, rainfall for the country as a whole during the period August-September 2010 is likely to be 107% of long period average (LPA) with a model error of plus/minus 7%, according to the weather office.
The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. If the southwest monsoon for the June-September monsoon season turns out good and if it is well distributed, it will help raise farm output, boost rural incomes and lower food inflation.
Planning Commission Deputy Chairman Montek Singh Ahluwalia on Wednesday, 25 August 2010, said that Rs 50,000-crore Infra Debt Fund for financing infrastructure projects will become operational by beginning of next fiscal. A panel constituted by the Commission to look into the changes required in the regulatory framework for facilitating the setting of the Infra Debt Fund (IDF) is expected to give its report by next week. Earlier in June this year, an expert panel headed by HDFC chief Deepak Parekh had recommended setting up of the IDF of Rs 50000 crore for financing projects in this crucial sector.
European stocks rose on Thursday, buoyed by a late-session rally on Wall Street on Wednesday, 25 August 2010. The key benchmark indices in France, Germany and UK were up by between 0.36% to 0.8%.
Most Asian stocks fell in volatile trade on Thursday on worries over global economic recovery. The key benchmark indices in South Korea, Indonesia, Hong Kong and Taiwan fell by between 0.11% to 0.61%. But, the key benchmark indices in China, Singapore and Japan were up by between 0.2% to 0.69%.
Japan's finance minister Yoshihiko Noda slightly tightened the tone of his remarks on the foreign exchange markets Wednesday, saying the government must take proper steps against the rising yen if necessary. Although he left it unclear whether he is considering intervention in the currency market, investors took his comments as a sign that the administration is ready to act soon.
Trading in US index futures indicated that the Dow could rise 28 points at the opening bell on Thursday, 26 August 2010.
US stocks staged a comeback on Wednesday, breaking a four-day losing streak by major indexes, as key technical support triggered bargain hunting that offset weak economic data. The market had sagged as much as 1% after data showed new single-family home sales slumped to a record slow pace in July and orders for manufactured durable goods rose far less than anticipated. Buying interest picked up steadily in the afternoon as traders hunted for beaten-down stocks. The Dow Jones Industrial Average rose 19.61 points, or 0.20% to 10,060.06. The Standard & Poor's 500 Index added 3.46 points, or 0.33% to 1,055.33. The Nasdaq Composite Index gained 17.78 points, or 0.84% to 2,141.54.
Growth in world trade slowed in the second quarter, as a faster expansion in advanced countries failed to outweigh slowing growth in most emerging economies, the Dutch CPB economics institute said on Wednesday.
Closer home, the lower house of parliament on Wednesday, 25 August 2010, approved a landmark bill to open up the country's $150 billion nuclear power market, after the government agreed to tougher provisions that an industry group said would hamper the sector's growth. The bill was initially opposed by the opposition Bharatiya Janata Party as inadequate in terms of accident compensation and too soft on private firms. But, the party came around after the Congress party-led coalition agreed to several amendments.
The Reserve Bank of India (RBI) said in its annual report for 2009-2010 released on Tuesday, 24 August 2010, that the relative price variability has declined since November 2009 despite inflation remaining high, which indicates that the inflation has become increasingly generalised, and hence, requiring appropriate monetary policy actions to anchor inflation expectations. Persistent large fiscal deficit has several adverse macroeconomic risks, ranging from higher inflation to lower savings, crowding-out pressures on private investment, decline in potential output, and worsening of external imbalances, the RBI said in the report.
In a globalised world, a congenial global economic environment and a sustainable balance of payments position are critical for achieving the policy goal of stable growth, the RBI said in the annual report. Despite lower trade deficit, the decline in invisibles surplus led to a higher current account deficit of 2.9% of GDP during 2009-10 as compared with 2.4% of GDP a year ago. A higher current account deficit led to stronger absorption of foreign capital, the RBI said.
Given the stronger growth outlook of India and the probability of monetary exit being delayed by the advanced economies, capital inflows could be expected to accelerate, which will have to be managed, as in the past, the central bank said. The government's borrowing programme for 2010-11 has to be managed, keeping in view the pressure on yield from the elevated inflation, gradual withdrawal of excess liquidity and stronger pick-up in the private sector credit demand, the RBI said.
Going forward, as the monetary position is normalised, addressing structural constraints in several critical sectors is necessary to sustain growth and also contain supply side risks to inflation. The Reserve Bank of India has stated its commitment to containing inflation through its calibrated monetary policy normalisation, with clarity on the direction of the policy rates in the near-term as well as timely actions in cautious steps based on careful assessment of risks to both inflation and growth.
The conduct of monetary policy of the Reserve Bank of India, while being driven by the domestic outlook, will have to recognise the possibility of sudden changes in the global outlook, the central bank said. While managing global shocks, India will also have to increase its resilience and productivity levels so as to strengthen its position in the global economy, the RBI annual report said.
The infrastructure gap of India, both in relation to other major countries and its own growing demand, has been a key factor affecting the overall productivity of investments. The requirement of high initial capital outlay, that too over longer terms, necessitates measures to address the financing constraint to capacity expansion in infrastructure, the central bank said.
The yield on the most traded, 8.13% 2022 bond was was unchanged at Wednesday's (25 August 2010) close of 8%. The yield on the second most traded benchmark 10-year 2020 bond was hovering at 8.03%, lower than Wednesday's (25 August 2010) close of 8.07%.
The Reserve Bank of India (RBI) at its Q1 monetary policy on 27 July 2010 raised a key lending rate by 25 basis points to curb surging inflation. With growth taking firm hold, the balance of policy stance has to shift decisively to containing inflation and anchoring inflationary expectations, the RBI said at that time. The RBI also at that time signaled its strong preference for tight liquidity, saying it would ensure that excess liquidity in the system doesn't dilute the effectiveness of policy-rate actions.
Coming back to stocks, foreign funds on Wednesday 25 August 2010, sold shares worth a net Rs 364.96 crore, as per provisional data from the stock exchanges. Domestic funds sold shares worth a net Rs 266.77 crore on that day.
Foreign funds have made heavy purchases of Indian stocks over the past 2-1/2 months. Foreign funds bought equities worth a net Rs 7173.16 crore so far this month, till 25 August 2010, absorbing selling of Rs 4265.67 crore from domestic funds, as per data from the stock exchanges.
Foreign funds had bought shares worth a net Rs 8320.50 crore in July 2010, absorbing selling by domestic institutional investors. Domestic funds sold shares worth a net Rs 6323.13 crore in July 2010.
Foreign funds had pumped in Rs 7713.97 crore in equities in June 2010, absorbing selling by domestic funds in that month. Domestic funds had dumped shares worth a net Rs 4777.05 crore in June 2010.
As per provisional figures, the BSE 30-share Sensex was up 38.41 points or 0.21% to 18,218.05. The Sensex rose 81.42 points at the day's low of 18,261.06 in afternoon trade. The index fell 20.51 points at the day's high of 18,159.13 in late trade.
The S&P CNX Nifty was up 15.95 points or 0.29% to 5,478.30 as per provisional figures.
The market breadth, indicating the health of the market turned negative in mid-afternoon trade. The breadth was positive earlier in the day. On BSE, 1637 shares declined while 1311 shares advanced. A total of 86 shares remained unchanged.
From the 30-share Sensex pack, 18 stocks advanced while the rest of them declined.
The BSE Mid-Cap index rose 0.32% and the BSE Small-Cap index rose 0.46%. Both the indices outperformed the Sensex.
BSE clocked turnover of Rs 4839 crore, lower than Rs 5751.03 crore on Wednesday, 25 August 2010.
Index heavyweight Reliance Industries (RIL) fell 1.28%, with the stock falling for the fourth straight day. Mukesh Ambani, chairman and promoter of Reliance Industries (RIL), has restructured his shareholding in the company by transferring his 34% stake to a set of investment firms, which include a large number of limited liability partnerships (LLPs). The company or its promoters did not disclose the reason behind the rejig in shareholding of the promoter group. Reports suggested the move is aimed at streamlining the holding of various promoter groups in a tax-friendly manner.
Meanwhile, Reliance Industries is reportedly close to inking a deal with global hedge fund DE Shaw to launch a $700-$800 million infrastructure fund.
Oil India rose 1.19%, after the company's chairman told the media that the firm is looking for shale gas opportunities in overseas markets.
India's second largest mobile services provider by sales Reliance Communications fell 1.95% and was the top loser from the Sensex pack.
Indian power utility NTPC rose 2.18% on reports the company has got four bids from consortiums including French, Japanese and Italian firms in its multi-billion dollar tender to buy boilers for five projects.
Realty giant DLF rose 2.18%. But, most other realty stocks fell. Omaxe, Ackruti City, HDIL, Omaxe, Unitech, Parsvnath Developers, Indiabulls Real Estate fell by between 0.27% to 3.64%.
Shares of software exporters recovered from initial losses. India's second largest software services exporter by sales Infosys was down 0.36% to Rs 2761.95. The stock came off the day's low of Rs 2748. India's largest software services exporter by sales TCS rose 0.16%, reversing initial losses. India's third largest software services exporter Wipro rose 0.46%, reversing initial losses.
FMCG stocks rose on good monsoon season. Rural market contributes substantial amount to the sales of FMCG firms. A good crop increases disposable income in the hand of farmers in rural areas. ITC, Nestle India, Dabur India and Britannia Industries rose by between 0.36% to 4.01%.
Banking stocks edged higher on prospects of strong lending growth in a growing economy. India's largest bank by net profit and branch network State Bank of India rose 1.03%. Chairman O.P. Bhatt said on Wednesday, 25 August 2010, the bank has no plans to raise lending rates further in the short term.
India's largest private sector bank by net profit ICICI Bank rose 0.2% at Rs 986.10. The stock came off the day's high of Rs 991.75. But, India's second largest private sector bank by net profit HDFC Bank fell 0.85%, reversing initial gains.
Auto stocks rose on renewed buying. India's top tractor maker by sales Mahindra & Mahindra rose 0.67%. The company recently signed a memorandum of understanding to buy a majority stake in troubled South Korean automaker Ssangyong.
Maruti Suzuki, India's top car maker by sales rose 0.66%, after its marketing and sales chief Mayank Pareek said the company is witnessing good sales this month. Maruti, in which Japan's Suzuki Motor Corp holds 54.2% stake, sold 3,33,001 cars in the April to July period this year, about a quarter up from a year earlier.
India's top truck maker by sales Tata Motors rose 0.59%. Chief Executive Carl-Peter Forster today, 26 August 2010, said Tata Motors may raise up to $1 billion through a mix of instruments. Tata Motors had said in June it would raise about Rs 4700 crore through shares, bonds, debentures and other equity-linked instruments to cut debt and grow its business
Two wheeler makers were mixed. India's largest bike maker by sales Hero Honda Motors rose 0.48%, reversing initial losses. But, India's second largest bike maker by sales Bajaj Auto fell 1.03 %, with the stock falling for the second straight day.
Bajaj Corp rose 2.01% after net profit rose 18.23% to Rs 22.70 crore on 14.89% increase in net sales to Rs 81.70 crore in Q1 June 2010 over Q1 June 2009.
Powered by Capital Market - Live News
HAPPY TRADING
BULLMARKETINDIAA
Blogroll
-
SENSEX : 35962.93 * 33.29 (0.09 %)5 ஆண்டுகள் முன்பு
-
-
Nifty 27-08-2010
வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010இடுகையிட்டது BULLMARKETINDIA நேரம் வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010 0 கருத்துகள்
Nifty 26-08-2010
வியாழன், 26 ஆகஸ்ட், 2010இன்றைய சந்தைகளை பொறுத்த வரை எட்டர இறக்கத்துடன் பயணிக்கலாம் நிபிட்டி 5435 கீழ் நழுவும் பட்சத்தில் சந்தையின் சரிவுகள் அதிகரிக்கலாம் சந்தையில் மென் பொருள் நிறுவன பங்குகள் விலை அதிகரிக்கலாம் நிப்த்யை பொறுத்த வரை 5366 கீழ் இறங்கும் பட்சத்தில் 4650 வரை கீழ் இறங்கும் வாய்புகள் அதிகம் .இந்திய பங்கு சந்தை இபோழ்து செலவு மிக்கதாக
வெளிநாட்டினர் கருத தொடங்கி விட்டனர் ஆகவே இவர்கள் விற்க ஆரம்பித்தால் நமது சந்தைகள் விழ்ச்சி மிக கடுமையானதாக இருக்கும் ஆகவே கவனமுடன் செயல் படவும் .
சந்தைகளில் திங்கள் முதல் புதன் வரை ஒரு இறக்கம் தான் தெரிந்தது. மொத்தமாக 221 புள்ளிகள்இறங்கி முடிவடைந்தது. இருந்தாலும் 18,000க்கு கீழே வரவில்லைஎன்பது தான் ஒரு ஆறுதல்.திங்களன்று சந்தை லாபமும் இல்லாமல், நஷ்டமும் இல்லாமல் முடிவடைந்தது. உலகளவுசந்தைகள் கீழேயே இருந்ததால்அதன் சென்டிமென்ட் இந்திய சந்தைகளிலும் இருந்தது. ஆதலால்செவ்வாய்அன்று சந்தை 97 புள்ளிகள் கீழே இறங்கி முடிவடைந்தது. வியாழனன்று சந்தையில்ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருந்தன.புதனன்று இறுதியாக மும்பைபங்குச் சந்தை 131 புள்ளிகள்குறைந்து 18,179 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை42 புள்ளிகள் குறைந்து 5,456 புள்ளி களுடனும் முடிவடைந்ததுசெவ்வாயும், புதனும் உலகளவில்மெட்டல் பங்குகள் உருகியதால் சந்தையும் உருகி யது என்றுதான் கூறவேண்டும்.
பவர் டிரேடிங்: பவர் டிரேடிங்கார்ப்பரேஷன் (பி.டி.சி.,) கம்பெனிக்கு இன்பிரா பைனான்சியல்கம்பெனி தகுதி அளி
க்கப்பட்டுஇருக்கிறது. இது இந்த கம்பெனிஇன்பிரா பாண்டுகள் மூலம் சந்தையில் இருந்து பணம் திரட்ட வழி வகுக்கும்.இதன் மூலம் ஆயிரக்கணக்கானகோடி ரூபாய், 10 வருடவரம்பு என்ற அளவில் முதலீட்டாளர் களிடமிருந்து குறைந்த வட்டியில் திரட்ட முடியும். அதே சமயம், முதலீட்டாளர்களுக்கு வருமான வரி சலுகைகளும் கிடைக்கும். ஆதலால், வருங்காலங்களில்பவர் டிரேடிங் பங்குகள்மேலே செல்ல வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
தொடரும் ஏற்றுமதிசலுகைகள்: 2010-11ம் வருட ஏற்றுமதியை 200 பில்லியன் டாலர்அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும், அதை எட்டுவதற்காகஏற்றுமதிக்கு வழங்கப்பட்டுவந்த சலுகைகள் தொடரும் என்றும், மேலும் 1,050 கோடி ரூபாய்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் 179 பில்லியன்டாலர் அள விற்கு ஏற்றுமதி செய்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், அடுத்த வருடம்முதல் வருடத்திற்கு 25 சதவீதம் கூடுதலாக ஏற்றுமதி டார்கெட்இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கெய்ர்ன் - வேதாந்தா டீல்:கெய்ர்ன் -வேதாந்தா டீல் நடப்பதில் பல நடைமுறை சிக்கல்கள்இருக்கின்றன. கெய்ர்ன், இந்தியாவில்தற்போது 30 சதவீதம் பங்குகள்வைத்திருக்கும் ஓ.என்.சி.ஜி.,தனது உரிமைகள் காக்கப்படவேண்டும் என்று கருதுகிறது.ஆதலால், ஒருவேளைஓ.என்.சி.ஜி., ஒரு கவுன்டர் ஆபர்கொடுக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன. டீலில் என்ன நடந்தாலும், கெய்ர்ன் இந்தியா இன்னொரு எண்ணெய்வளத்தை கண்டுபிடித்துள்ளது. ஆதலால், சரிவுகளில்முதலீடு செய்ய ஏற்ற பங்கு.வேதாந்தாவுக்கு இன்னொருஅதிர்ச்சி என்னவென்றால், ஒரிசாவில்7,800 கோடி ரூபாய் மதிப்பில் பாக்øசைட் தோண்டும் சுரங்ககம்பெனி துவங்க கேட்டிருந்தஅனுமதியை மத்திய அரசு, சுற்றுபுறச் சூழ்நிலை காரணங்களைகாட்டி மறுத்துள்ளது.
புதிய வெளியீடுகள்: குஜராத்பிப்பாவ் போர்ட் கம்பெனியின்புதிய வெளியீடு, கடந்த 23ம்தேதி ஆரம்பித்து இன்றுடன் முடிகிறது.ரூபாய்42 முதல் 48 வரைவிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.500 கோடி ரூபாய் வெளியீடு இது.புதனன்று இறுதியாக 7.23தடவை செலுத்தப்பட்டுள்ளது.சிறிய முதலீட்டாளர்கள் பகுதி0.92 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது.42 முதல் 48 ரூபாய் வரைவிலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் 42 முதல் 45 ரூபாய்க்குள்விலை நிர்ணயிக்கப்படலாம்.சிறிய முதலீட்டாளர்கள் இன்றுவரை போடலாம்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இதுவரை சந்தைக்கு வராதவங்கி பஞ்சாப் அண்டு சிந்துவங்கி மட்டும் தான். அந்த வங்கியும் தனது புதிய வெளியீட்டைகொண்டுவர, 'செபி'க்கு விண் ணப்பிக்கவுள்ளது.சமீபகாலத்தில் வெளியீட்டைகொண்டு வந்த வங்கி கோல்கட்டாவைசேர்ந்த யுனைடெட்பாங்க் ஆப் இந்தியா. இந்த வங்கி63 ரூபாய் விலையில் கொண்டுவந்த வெளியீடு, தற்போது 95ரூபாய் அளவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பறந்து சென்ற வங்கிப் பங்குகள்:சமீபத்தில் ஸ்டேட் பாங்க்ஆப் இந்தூர், ஸ்டேட் பாங்க்குடன் இணைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்டேட்பாங்கின் மற்ற துணை வங்கிகளும் இணைக்கப்படும் மேலும்,உரிமை பங்குகள் வெளியீடு இருக்கும் என்ற நம்பிக்கையில்ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்,ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்,ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர்அண்டு ஜெய்ப்பூர் ஆகியவை திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில்முறையே 20 சதவீதம் வரைகூடியது.
மொத்தமாக 40 சதவீதம் வரைஅந்த வங்கிகளின் பங்குகள்விலை கூடின. நெருப்பில்லாமல்புகையுமா?வரும் நாட்கள் எப்படிஇருக்கும்? சந்தையில் எந்த பாதகமும் இல்லை. மெதுமெதுவாகமேலே செல்லும். இறக்கங்களைப் பற்றி கவலைப்படவேண்டாம்.
இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு கே.வி.காமத் நியமி்க்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் நாராயணமூர்த்தியின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தற்போதே துவங்கி உள்ளது. இன்போசிஸ் நிறுவன தலைவராக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி கே.வி.காமத் நியமிக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அந்த வட்டாரங்கள் அளித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கே.வி.காமத் சிறந்த தொழில் நிர்வாகி என்றும், உலகளாவிய தொடர்பு கொண்டவர் , சர்வதேச அளவில் அனைவராலும் அறியப்பட்ட பிரபல மனிதர், இக்கட்டான தருணங்களில் சிந்தித்துச் செயல்பட்டு சிறந்த முடிவை சரியான நேரத்தில் எடுக்கும் திறன் பெற்றவர் மற்றும் நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபடுபவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 62 வயதாகும் காமத், இன்போசிஸ் நிறுவன தலைவராக தேர்ந்தெடுக்க உள்ளவர்களின் பட்டியலில் முதல் இடத்திற்கு உள்ளதாகவும், அவரை தலைவராக்குவது இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திற்கு 2010-ஆம் ஆண்டு இறுதிக்குள் மகாரத்னா அந்தஸ்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு அரசு நிறுவனமான பெல் அடுத்த ஓராண்டில் இந்த அந்தஸ்தினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத் துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி., செயில், என்.டி.பி.சி. மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நான்கு பெரிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே சூமகா ரத்னா' அந்தஸ்து வழங்கியுள்ளது. இதனையடுத்து நிதி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் இந்த நிறுவனங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மகாரத்னா அந்தஸ்தைப் பெறுவதற்கு இந்த நான்கு நிறுவனங்களும் மத்திய அரசு வகுத்துள்ள கடுமையான விதிமுறைகளை நிறைவு செய்துள்ளன. இந்த அந்தஸ்தை பெறும் நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டவையாக இருக்க வேண்டும். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ரூ.5,000 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்க வேண்டும். நிகர சொத்து மதிப்பு ரூ.15,000 கோடியாகவும், ஆண்டு வருவாய் ரூ.25,000 கோடியாகவும் இருக்க வேண்டும். இது போன்ற மேலும் சில விதிமுறைகள் உள்ளன. மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனங்கள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்தி, சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களாக உருவெடுக்க செய்வதே மகா ரத்னா அந்தஸ்து வழங்கப்படுவதன் முக்கிய நோக்கம் என உயர் அரசு அதிகாரி ஒருவர் கூறினார். கோல் இந்தியா, உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தில் தற்பொழுது மத்திய அரசு 100 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இதில், 10 சதவீத பங்குகளை வெளியிட்டு ரூ.15,000 கோடி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு அக்டோபர் 18-ந் தேதி தொடங்கி 21-ந் தேதியுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோல் இந்தியா நிறுவனம் சுமார் 4 லட்சம் பணியாளர்களைக் கொண்டுள்ளது. சென்ற நிதி ஆண்டில் ரூ.52,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.5,000 கோடிக்கும் அதிகமான அளவில் லாபம் ஈட்டி வருகிறது.
-சேதுராமன் சாத்தப்பன் -
புதிய முதலிடுகள் தவிர்க்கவும் .
STOCK TO WATCH
RELIANCE
HCL TECH
INFOSYS
PTC
POWERGRID
TORRENT POWER
GLAXO
ITC
MARICO
GODREJ IND
TCS
WIPRO
CAIRN
ONGC
MRPL
OIL INDIA
UNION BANK OF IND
ACC
JUBLIANT ORG
SIEMENS
HAVELLS
CIPLA
RANBAXY
NTPC
NATIONAL ALUM
ISPAT
BHARTHI AIR
TECH MAHINDRA
MAH SATHYAM
TATA GLOBAL BEVE
DIVIS LAB
PNB
CENTRAL BANK
LNT
PANTALOON RETA
பிக் பஜார் மூலம், இந்த ஆண்டில் ரூ. 180 முதல் 200 கோடி வரை வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாக, பியூச்சர் குழும நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கிஷோர் பியானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கிஷோர் பியானி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தங்களது பியூச்சர் குழுமம், பிக் பஜார் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வர்த்தகத்தை மேற்கொண்டு வருவதாகவும், இதில் பிக் பஜாரில் மட்டும் ரூ.180 முதல் 200 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும், மொத்தமாக ரூ. 300 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 78 நகரங்களில், 134 விற்பனை அவுட்லெட்களை கொண்டுள்ள பிக் பஜார், ஆகஸ்ட் 15ம் தேதி மட்டும் ரூ. 100 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிறுவன நிர்வாக மேலாண்மை வல்லுனர் நபாங்குர் குப்தா கூறுகையில், ஜனவரி 26 மற்றும் ஆகஸ்டு 15ம் தேதி அரசு விடுமுறை தினங்களையொட்டி, தங்கள் நிறுவனம் மகா பசாட் (மெகா விற்பனை) என்ற பெயரில் 5 நாட்கள் சிறப்பு விற்பனையை ஆண்டுதோறும் நடத்தி வருவதாகவும், ஓவ்வொரு ஆணண்டிலும் இத்ததைய தினங்களில் நிறுவனத்தின் விற்பனை 4 முதல் 6 சதவீத அளவிற்கு உயர்ந்து வருவதாகவும், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியையொட்டி நடைபெற்ற மெகா விற்பனையில் ஒரு லட்சம் மொபைல் போன்களும், ஒரு லட்சம் கிலோ டிடர்ஜென்ட்டும், 1.75 லட்சம் நான்ஸ்டிக் குக்வேர் உபகரணங்களும், 2.5 லட்சம் 5 கிலோ அளவிலான எண்ணெய், சர்க்கரை மற்றும் அரிசி பாக்கெட்களும் விற்பனை ஆகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், சாப்ட்வேர் ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு, ஐந்தாவது டெலிவரி சென்டரை சீனாவில் துவககியுள்ளது. இதுதொடர்பாக, டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளதாவது : ஐந்தாவது புதிய டெலிவரி சென்டர் சென்ஜென் நகரில் அமைக்கப்பட இருப்பதாகவும், தங்கள் நிறுவனத்திற்கு சீனாவில் பீஜிங், ஷாங்காய், ஹோங்சூ, மற்றும் தியான்ஜின் நகரங்களில் ஏற்கனவே டெலிவரி சென்டர்கள் உள்ளதாகவும், தற்போது சென்ஜென் நகரில் துவக்கப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனம், 2002ம் ஆண்டில் சீனாவில் கால்பதித்ததாகவும், தங்களது சென்டர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருவதாகவும், இவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சீனர்களே என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஓபராய் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் நிறுவனம், தாய்லாந்தில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஓபராய் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் நிறுவன தலைவர் லியாம் லாம்பெர்ட் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : தாய்லாந்தில் ஓட்டல் துறையில் நுழைய இருப்பதாகவும், அடுத்த 3 ஆண்டு கால அளவிற்காக இந்த ஒப்பந்தம், அந்நாட்டுடன் செய்துகொண்டிருப்பதாகவும், இன்னும் 5 ஆண்டுகளில், தங்கள் நிறுவன ஹோட்டல்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம், தங்கள் நிறுவனத்தின் நீண்டகால கனவு நனவாகி உள்ளதாகவும், இதன்மூலம், உலகின் தலைசிறந்த நகரங்களான பாரீஸ், நியூயார்க்கைப் போல அதேபோல, அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலும் தடம்பதித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஸ்டீல் நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனம், ஒரிசாவில் தொழிற்பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்த டாடா ஸ்டீல் நிறுவன நிர்வாக இயக்குனர் நேருகர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : 1,000 கோடி ரூபாய் செலவில் 3,200 ஏக்கர் பரப்பளவில் மெகா தொழிற்பூங்கா அமைக்கப்பட இருப்பதாகவும், இதற்காக, நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், தொழிற்பூங்கா, ஒரிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கோபால்பூரில் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த புதிய பூங்கா மூலம் நேரடியாக ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், இந்த பூங்காவில் தங்கள் நிறுவனங்களை அமைக்க, தற்போதே பல முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாகவும், விரைவில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
டாடா நானோவைத் தொடர்ந்து குட்டிக் கார்களை களத்தில் இறக்குகிறது ஸ்கோடா. ஆனால் இது ஒரு லட்சம் ரூபாய் கார் அல்ல, மாறாக ரூ.3 முதல் 5 லட்சத்திற்குள் விலை இருக்குமாம். இது இந்தியாவுக்கான கார். 2012ம் ஆண்டில் இந்த கார் அறிமுகம் செய்யப்படவுள்ளதாம். அதேபோல தனது எஸ்யுவி டைப் காரான எட்டியை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா. டொயோட்டா பார்ச்சூனர், ஹோன்டா சிஆர்வி, செவி கேப்டிவா, நிஸ்ஸான் எக்ஸ் டிரையல் ஆகிய வரிசையில் சேரக் கூடிய வகையிலான கார்தான் எட்டி. ஸ்கோடாவின் லாரா கார்களுக்கு நல்ல வெற்றி ங்சீசி கிடைத்துள்ளது. செடான் வகை காரான இது சமீப காலமாக நன்றாக விற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த செடான் காரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா. இதன் விலை ரூ. 6 முதல் 10 லட்சமாக இருக்கும். இந்தக் கார், வோக்ஸ்வோகனின் செடான் வென்டா தொழில்நுட்பத்தை சார்ந்திருக்குமாம். ஸ்கோடாவின் திட்டங்கள் குறித்து அதன் இந்தியப் பிரிவின் போர்டு உறுப்பினர் மற்றும் இயக்குநர் ங்சீசி தாமஸ் குயல் கூறுகையில், ஆண்டுதோறும் ஒரு மாடலை அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. எங்களது குட்டிக் கார் 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே இது தொடர்பான பணிகள் தொடங்கி விட்டது. இந்தியச் சந்தைக்கேற்ற வகையில் இது இருக்கும். பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வகையிலான காராக இது இருக்கும் என்றார். ஸ்கோடாவின் குட்டிக் கார் இந்திய சந்தைக்குள் நுழையும்போது மாருதி, ஹூண்டாய், டாடா ஆகியவற்றின் கார்களோடு கடும் போட்டியில் ஈடுபட நேரிடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுபோக சமீபத்தில் நுழைந்துள்ள போர்டு பிகோ மற்றும் ஜெனரல் மோட்டார்ஸின் பீட், வோக்ஸ்வேகனின் போலோ ஆகியவையும் கடும் போட்டியைக் கொடுக்க தயாராக உள்ளன. இவை அடுத்த 2 ஆண்டுகளில் களத்தில் குதிக்கவுள்ளன. ஸ்கோடா தனது புதுப்பிக்கப்பட்ட பேபியா காரை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்குக் கொண்டு வருகிறதாம். இதன் விலை ரூ. 6 முதல் 7.84 லட்சமாக இருக்கும். ஸ்கோடாவின் திட்டங்கள் அதி தீவிரமாக உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் ஸ்கோடாவின் கார்கள் இந்திய சாலைகளில் தீப்பொறி பறக்க பறக்கத் தயாராகி வருகின்றன. இந்த ஆண்டு பேபியா, அடுத்த ஆண்டு செடான், 2012ல் குட்டிக் கார் என திட்டமிட்டு செயலாற்றும் ஸ்கோடா, மற்ற நிறுவனங்களுக்கு நிச்சயம் நல்ல போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
HAPPY TRADING
BULLMARKETINDIAA
இடுகையிட்டது BULLMARKETINDIA நேரம் வியாழன், ஆகஸ்ட் 26, 2010 0 கருத்துகள்
Nifty 25-08-2010
புதன், 25 ஆகஸ்ட், 2010வரும் நாட்கள் சந்தைக்கு போதாதா காலம்மகா இருக்கலாம் .சந்தை 10 லிருந்து 20 சதவிதம் வரை கீழிறங்க வாய்புகள் அதிகம் அமெரிக்கவில் பூகம்பம் கிளம்பினால் உலக சந்தைகள் அனைத்திலும் பூகம்ப அதிர்வுகள் காணப்படும் இந்த அதிர்வினால் நமது சந்தைகள் சீட்டு கட்டு சரிவது போல் சரிய வாய்ப்புண்டு நமது சந்தைகள் 30 மாத உச்சத்தில் உள்ளது .
அடுத்த மாதம் நிச்சயம் அமெரிக்கப் பொருளாதாரம் பலத்த அடியைச் சந்திக்கும் என்கிறார் அமெரிக்க பொருளாத நிபுணர் ஜின் மெய்க்கா.
இந்த வீழ்ச்சிக்கு 'ஹிண்டன்பர்க் பயங்கரம்' எனப் பெயரிட்டிருக்கிறார் ஜின் மெய்க்கா. அமெரிக்க மார்க்கெட் வீழ்ச்சி எப்படி சாத்தியம் என்று தெரிந்து கொள்ளுமுன் ஹிண்டன்பர்க் பயங்கரம் பற்றி...
ஹிண்டன்பர்க் என்பது ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் தயாரான விமானம். 1936-ம் ஆண்டு முதல் அமெரிக்கா வுக்கும் ஜெர்மனிக்கும் பயணிகள் சேவையைத் துவங்கியது. முதல் ஆண்டு வெற்றிகரமாக சேவையைப் பூர்த்தி செய்த இந்த விமானம், 1937-ம் ஆண்டு நியூஜெர்ஸியின் லேக்கர்ஸ்ட் கடற்படை விமான தளத்தில் தரையிறங்கும்போது வெடித்துச் சிதறியது.
இதில் 36 பேர் உயிரிழந்தனர். அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியைத் ஏற்படுத்திய விமான விபத்து இது. தரையிறங்குவதற்கு மிக சமீபத்தில் விமானம் வந்தபோது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் வெடித்தது ஹிண்டன்பர்க். இதற்கான சரியான காரணத்தை யாரும் இதுவரை கூறவில்லை.
இப்போது சாதாரணமாகத் தெரியும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கும் இதுபோன்ற பெரும் விபத்து நேரும் வாய்ப்பு அதிகம் என்கிறார் ஜிம் மெய்க்கா.
அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பொருளியல் நிலவரங்களை, பல்வேறு கணக்கீடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரும் வீழ்ச்சியை அமெரிக்க பங்குச் சந்தையும், பொருளாதாரமும் சந்திக்கும் என்பதை உறுதி செய்துள்ளார் ஜிம்.
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க பங்குச் சந்தை பெரும் ஊசலாட்டத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் அமெரிக்காவின் 92 நிறுவனங்களின் பங்குகள் 52 வார உச்ச கட்ட விலைக்குக் கைமாறின. அதேபோல 81 நிறுவனங்கள் இதுவரை காணாத பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
மெக்லீன் ஆஸிலேட்டர் (பங்குச் சந்தைப்போக்கைக் கணிக்கும் முறை) முறையில் பங்குச் சந்தை போக்குகள் அடுத்த சில மாதங்களுக்கு மிக மோசமாகவே இருப்பதாகவும், இந்த மோசமான போக்கின் துவக்கம் செப்டம்பர் மாதம் என்றும் ஜிம் தெரிவித்துள்ளார்.
பொருளியல் வீழ்ச்சியோ வளர்ச்சியோ, இதுவரை ஜிம் கணித்துச் சொன்ன எதுவும் பொய்யானதில்லை என்பதால், இந்த முறை அவர் கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள அமெரிக்கர்கள் விரும்பவில்லை.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் பாதிப்பு எதுவும் இருக்காதாம். பங்குச் சந்தையில் அடுத்த சில மாதங்களில் 10 சதவிகித வீழ்ச்சி சாத்தியம் என்றாலும் அதனால் பாதிப்பு பெரிதாக இருக்காதாம்.
அதேநேரம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தை இப்போதைக்கு மிகவும் செலவுமிக்கது என்றே கருதுவதாக ஜிம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
"இந்திய சந்தையில் பெரிய அளவு கரெக்ஷன் இருந்தாலும், அது வீழ்ச்சிக்குக் காரணமாக அமையாது. வரும் டிசம்பர் 2014 வரை, எந்த அளவு பங்குச் சந்தை வீழ்ந்தாலும் அதை முதலீட்டுக்கான வாய்ப்பாகவே கருதுவார்கள். ஆனால் அமெரிக்காவில் நிலைமை தலைகீழ்" என்கிறார் ஜிம்.
வெளிநாடு வாழ் இந்தியரான 'வேதாந்தா' குழுமத் தலைவர் அனில் அகர்வால், எண்ணெய் நிறுவனமான 'கெய்ர்ன் எனர்ஜி' நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளார். அந்நிறுவனத்தை அகர்வால் வாங்கும் பட்சத்தில், முகேஷ் அம்பானியை விட அவரது நிறுவனங்களின் சொத்து சந்தை மதிப்பில் உயர்ந்து, அவர் இரண்டாமிடத்தை பிடித்து விடுவார்.
'வேதாந்தா' குழுமத் தலைவர் அனில் அகர்வால் நிறுவனங்களின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பு தற்போது ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 465 கோடி ரூபாய் ஆகும். முகேஷ் அம்பானியின் மொத்த சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 276 கோடி ரூபாய் ஆகும். இவர்கள் இருவரையும் விட அதிகமாக, டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு மூன்று லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உள்ளது. இன்றைய நிலையில் டாடா குழுமம் தான் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் அனில் அகர்வால், 'கெய்ர்ன் எனர்ஜி' நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளார். அப்படி அந்நிறுவனத்தை வாங்கும் பட்சத்தில் அகர்வாலின் சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 938 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இதனால், நீண்ட காலமாக இரண்டாமிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, மூன்றாமிடத்துக்கு தள்ளப்படுவார். அனில் அகர்வால் இரண்டாமிடத்தை பிடிப்பார். சர்வதேச அளவில், உலோகங்கள் மற்றும் சுரங்கத் தொழில்களில் அகர்வால் முன்னணியில் இருக்கிறார். அதேநேரம், பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் உற்பத்தி மற்றும் எண்ணெய் தொழிலில், முகேஷ் அம்பானி முன்னணியில் உள்ளார். 'கெய்ர்ன் எனர்ஜி' நிறுவனத்தை வாங்குவதன் மூலம் அகர்வாலும் எண்ணெய் தொழிலில் காலடி எடுத்து வைக்கிறார்.
சர்வதேச சந்தையில், தங்கத்துக்கு மவுசு ஏற்பட்டு வரும் நிலையில், ஆன்-லைன் வர்த்தகத்தில் சீனா தற்போது நுழைந்துள்ளது, இந்திய தங்க சந்தையில் கடும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக, இன்று முதல் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்கள் உடனுக்கு உடன் இந்திய மார்க்கெட்டில் எதிரொலிக்கிறது. 2003ல் கிராம் 523 ரூபாய்க்கும், 2004ல் 620, 2007ல் 1,000, 2008ல் 1,250, 2009ல் 1,550 ரூபாய்க்கும் விற்ற தங்கம், 2010 ஜூலையில் அதிகபட்சமாக, கிராம், 1,790 ரூபாய்க்கு விற்றது. இந்நிலையில், கடந்த மாதம் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தங்கம், கிராம், 1,687 ரூபாய்க்கும், சவரன் 13 ஆயிரத்து 496 ரூபாய்க்கும் விற்றது. இந்த சரிவு காரணமாக ஆபரணத் தங்கத்தின் விற்பனையில் சுறுசுறுப்பு ஏற்பட்டது. திருணம சீசன் மாதமான ஆவணி பிறந்த நிலையில், தங்கத்தின் விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆன்-லைன் வர்த்தகத்தில், தங்கம் உள்ளதால், தற்போது சீனாவும் ஆன்-லைன் வர்த்தகத்தில் நுழைந்துள்ளது. இது தங்க வியாபாரிகள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிய நாடுகளில் பொருளாதாரத்தில் இந்தியாவை வீழ்த்தும் வகையில் சீனா பல்வேறு வியூகங்களை அமைத்து எதிரி போல் செயல்படுகிறது. தங்க மார்க்கெட்டில் இதுநாள் வரையில் ஐரோப்பியா, அரபு நாடுகள், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளே ஆன்-லைன் வர்த்தகம் மூலம் தங்கம் கொள்முதல், விற்பனையில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில் சீனா, முதல் முறையாக ஆன்-லைன் வர்த்தகத்தில் நுழைந்துள்ளது. அத்துடன், இந்த வர்த்தக முறையில் அந்நாட்டு மக்களையும் நகைகள் வாங்கிக் கொள்ள இருந்த கெடுபிடிகளையும் குறைத்துள்ளதோடு அதிகளவில் தங்கத்தை கொள்முதல் செய்து கொள்ளும்படி அறவித்து உள்ளது. கடந்த வாரம் சீனாவில் தங்கத்தை கொண்டு ஈ.டி.எப்., பண்டு துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சீன வங்கிகள், நகைகளுக்கு மாற்றாக தங்கத்தாலான பேப்பர் மீது முதலீடு செய்ய வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக சீனாவில் தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் உள்ளவர்களில், 1 சதவீத மக்கள், ஆன்-லைன் மூலம் தங்க பரிவர்த்தனையில் ஈடுபட்டால், தங்கத்தின் விலை கடும் உயர்வு ஏற்படும். அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை மற்றும் அமெரிக்காவில் செயல்படும் தனியார் வங்கிகள் நஷ்டம் என்ற பெயரில் மூடு விழா காண்டு வருவது சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், விரைவில் ஆபரணத் தங்கம் கிராம், 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவில் 82 சதவீத மிடில் கிளாஸ் குடும்பத்தினர் மாதம் ரூ. 1000 முதல் ரூ. 2000 வரையே சம்பளம் வாங்குகின்றனர். அதேசமயம், ரூ. 10,000க்கு மேல் பெறுபவர்கள் பணக்காரர்கள் என்ற அந்தஸ்தினைப் பெறுகிறார்கள் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆய்வு தெரிவித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில், ஆசிய மக்களின் பொருளாதார நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆசியாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவு்ம், அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்க, ஐரோப்பிய மிடில் கிளாஸ் குடும்பத்தினர்களின் இடத்தை ஆசியர்கள் பிடித்து விடுவார்கள் என்றும், உலக அளவில் இவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடில் கிளாஸ் குடும்பத்தினர் என்பது பொதுவான சொல்லாக இருந்தாலும் அவர்களை அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் , லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் மற்றும் மிடில் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் என ரயிலில் பெர்த் பிரிப்பது போல பிரித்து வைத்துள்ளனர். இதில் மாதம் ரூ.1,035ல் இருந்து ரூ.2,070 வரை சம்பாதிப்பவர்களை லோயர் மிடில் கிளாஸ் என்றும், ரூ.2070ல் இருந்து ரூ.5,177 வரை சம்பாதிப்பவர்களை மிடில் மிடில் கிளாஸ் என்றும், ரூ.5177ல் இருந்து ரூ.10,354 வரை சம்பாதிப்பவர்களை அப்பர் மிடில் கிளாஸ் என்றும் அளவிட்டுள்ளனர். இதன்மூலம் மாதம் ரூ. 10,354க்கு மேல் சம்பாதிப்பவர்களை பணக்காரர்களாக்கியுள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி. இந்தியாவைப் பொறுத்தவரை 82 சதவீத நடுத்தர வர்க்கத்தினர் கீழ் நடுத்தர வர்க்கத்தினரே. அதாவது இவர்களது மாதச் சம்பளம் அதிகபட்சம் ரூ. 2,070. இவர்களின் எண்ணிக்கை 22.40 கோடியாகும். மத்திய நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 4.50 கோடி. மேல் நடுத்தர வர்க்கத்தினர் 50 லட்சம் பேர் உள்ளனர். பணக்காரர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேராகும். மாதம் ரூ. 10,000க்கு மேல் சம்பளம் வாங்குவோரின் எண்ணிக்கை 0.0009 சதவீதம் மட்டுமே என்கிறது அந்த ஆய்வு.
இந்தியாவில், ரியல் எஸ்டேட் துறையில் அன்னிய நேரடி முதலீடு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 80 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டில், இத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு ரூ.171 கோடியாக இருந்தது. இது, சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டில் வியக்கத்தக்க வகையில் ரூ.13,586 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் இத்துறை ஈர்த்த நேரடி முதலீடு ரூ.737 கோடியாக உள்ளது. இது, இந்திய ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி மீது வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அன்னிய நேரடி முதலீட்டால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில் நுணுக்கங்களை இந்திய நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள முடியும். சென்ற ஐந்து ஆண்டுகளில், வெளிநாட்டினர், இந்திய வீட்டு வசதி துறையில் ரூ.37,986 கோடியை நேரடியாக முதலீடு செய்துள்ளனர். இவ்வாண்டில் இதுவரையிலான காலத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.13,586 கோடியாகும்.
இந்தியாவில், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி குறித்து கிரிசில் அமைப்பின் தலைவர் (கார்ப்பரேட் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி தர நிர்ணயம்) ஆகாஷ் தீப் ஜோதி கூறும்போது, 'கடந்த 2008-ஆம் ஆண்டில், உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார உருக்குலைவை எதிர்கொண்டு இந்திய ரியல் எஸ்டேட் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் அதிவேக வளர்ச்சியால், வீடு மற்றும் வர்த்தக வளாகங்களுக்கான தேவைப்பாடு அதிகரிக்கும்'' என்று தெரிவித்தார். வரும் 2011-ஆம் ஆண்டில், நாட்டின் பொருளாதாரத்தில் 8.5 சதவீத வளர்ச்சி ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் மாபெரும் எழுச்சி ஏற்படும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இது குறித்து ரியல் எஸ்டேட் நிபுணர் ஒருவர் கூறும்போது, 'நம் நாட்டில், கூடுதலாக 2.60 கோடி வீடுகள் தேவைப்படுகிறது. இந்நிலையில், நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, ரியல் எஸ்டேட் துறையில் மீண்டும் எழுச்சி ஏற்படும்'' என்று தெரிவித்தார்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சட்ட விரோதமாக தங்களிடம் சேர்த்து வைத்துள்ள கறுப்புப் பணம் பற்றிய விவரங்களை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அளிக்க சுவிட்சர்லாந்து வங்கிகள் ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சட்ட விரோதமாக தங்கள் பணத்தை, சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில் கறுப்புப் பணமாக போட்டு வைத்துள்ளனர். யார் யார் எவ்வளவு பணம் போட்டுள்ளனர் என்று தெரிந்து கொள்வதற்காக, பல நாடுகளும் சுவிஸ் வங்கிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.அமெரிக்காவினர் வைத்திருக்கும் பணம் பற்றிய விவரங்களைத் தர சுவிஸ் வங்கிகள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளன. ஜெர்மனி உள்ளிட்ட முன்னணி நாடுகள் இதில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில், இந்தியாவும் அந்த விவரங்களைப் பெறும் ஆரம்பகட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சுவிஸ் வங்கிகள், தெள்ளத் தெளிவாக கேட்டதும் பட்டியலைத் தர முடியாது என்று கூறி சில சட்ட நுணுக்கங்களுடன் கூடிய தகவல்களைக் கேட்டன. இந்நிலையில், சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பான, 'சுவிஸ் வங்கிகள் அசோசியேஷன்' (எஸ்.பி.ஏ.,), வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான அறிக்கையில், தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள, நான்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.நாடுகள் சந்தேகப்படும் நபர்களைப் பற்றிய விவரங்கள், அவர்கள் செய்த முறைகேடுகள் பற்றிய விவரங்கள், ஏன் அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது என்பது பற்றிய ஆதார விவரங்கள், எந்தெந்த வங்கிகளில் அவர்கள் பணம் போட்டிருக்கின்றனர் என்ற தகவல்களைத் தரும்படி கேட்டிருக்கிறது. இதுகுறித்து அந்தந்த நாட்டு வருமான வரித்துறையினர் சுவிஸ் வங்கிகள் கூட்டமைப்புக்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும்.இதுவரை, தங்கள் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களைத் தரமாட்டோம் என்று ஒரே குரலில் கூறிய நிலையில் இருந்து, சுவிஸ் வங்கிகள் சற்று கீழிறங்கியுள்ளன.
கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் விற்பனை அசுர வளர்ச்சி கண்டு வரும் நிலையில், வாகன பாகங்கள் தயாரிக்கும் துறையில், அடுத்த ஆண்டு முதல், ஆண்டுதோறும் சுமார் ரூ.15,000 கோடி (300 கோடி டாலர்) முதலீடு மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது என இந்திய மோட்டார் வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் (அக்மா) தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த பத்து ஆண்டுகளில் இத்துறையில் 3,000 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஜுலை மாதத்தில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அம்மாதத்தில் வாகனங்கள் விற்பனை, இதுவரை இல்லாத வகையில், 32 சதவீதம் உயர்ந்து 12,37,461-ஆக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 9,41,070 வாகனங்களாக இருந்தது. மோட்டார் வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் வாகன நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன.
இதனால் வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் மொத்த விற்பனையும் அதிகரித்து வருகிறது. சில்லரை விற்பனையும் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால் மோட்டார் வாகன பாகங்களுக்கான தேவை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இத்துறை நிறுவனங்கள் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திறனை உயர்த்தும் வகையில் விரிவாக்கம் மேற்கொள்ள தயாராகி உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் இந்நிறுவனங்கள் 200 கோடி டாலர் (சுமார் ரூ.9,000 கோடி) முதலீடு செய்ய உள்ளன. இத்துறை ஆண்டுதோறும் 20 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வாண்டில் இத்துறையின் மொத்த வருவாய் 2,500 கோடி டாலராக (ரூ.1.15 லட்சம் கோடி) அதிகரிக்கும் என அக்மா குறிப்பிட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை 2,200 கோடி டாலர் மதிப்பிற்கு உயர்ந்துள்ளது. அவ்வாண்டில் ஏற்றுமதி வாயிலாக மட்டும் இத்துறை 380 கோடி டாலர் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதி ஆண்டில் இத்துறை நிறுவனங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஈட்டும் வருவாய் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெல்சிங்கி/புதுடில்லி : சர்வதேச அளவில் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மொபைல் அனாலிடிக்ஸ் சேவை வழங்கும் நிறுவனமான மோடல்லியை தன்வசப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், டெவலப்பர்ஸ் மற்றும் பப்ளிசர்களுக்கு இனிய வரப்பிரசாதமாக விளங்கும் என்றும், இதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்தாண்டின் பிற்பகுதியில் முடிவுக்கு வரும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி பாசுமதி அரிசி ஏற்றுமதி நிறுவனமான அமைரா புட்ஸ் நிறுவனம், தனது ஏற்றுமதியை மத்திய கிழக்கு நாடுகளிலும் விரிவுபடுத்தும் பொருட்டு, துபாயின் முன்னணி வணிக குழுமமான சோய்த்ராம்சுடன் கைகோர்க்கிறது. இதுகுறித்து, அமைரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கரண் சனானா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : துபாய் நாட்டுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி அரிசிறை ஏற்றுமதி செய்ததன் மூலம், தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி 10 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி 70 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதன்மூலம், ரூ. ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும், வரும் கால்ஙகளில் 70 ஆயிரம் டன் பாசுமதி அரிசியை 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கும் அரிசியை ஏற்றுமதி செய்ய உத்தேசித்திருப்பதாகவும், இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி என்பது சோய்த்ராவுடனான கைகோர்ப்பின் மூலம் சாத்தியம் ஆகும் என்று அந்த அறிக்கையில் சனானா தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆக. 24: தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் பெயரில் ரிசர்வ் வங்கியில் கணக்கு உள்ளதாகக் கூறி வரும் போலி மின்னஞ்சல்கள், கடிதங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பாரத ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் கே.ஆர். ஆனந்தா தெரிவித்தார்.
÷இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
லாட்டரியில் பெரிய தொகை பரிசாக வழங்குவது, வெளிநாட்டில் உள்ள பணத்தை இலவசமாக தருதல், வேலை வாய்ப்பு அளிப்பது, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர அனுமதி உள்ளிட்டவை வழங்குவதாகக் கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறி வரும் மோசடி மின்னஞ்சல்கள், கடிதங்கள் அண்மைக்காலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது.
இது தொடர்பான புகார்களும் அதிகரித்து வருகின்றன.
÷இதில் வழக்கமான நடைமுறைகள் மாறி தற்போது ரிசர்வ் வங்கியின் பெயரிலேயே பல்வேறு மோசடி மின்னஞ்சல்கள், கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதாகப் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.
÷ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ கடித ஏட்டில், உயர் அதிகாரிகளின் பெயர், பதவி, கையெழுத்து உள்ளிட்ட விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தி பொது மக்களை மோசடி செய்வதில் சிலர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
÷ரிசர்வ் வங்கியில் எந்த தனிப்பட்ட நபரின் பெயரிலோ, நிறுவனத்தின் பெயரிலோ, அறக்கட்டளை பெயரிலோ கணக்குகள் பராமரிக்கப்படுவது கிடையாது.
÷ரிசர்வ் வங்கியில் உங்கள் பெயரில் ஒரு குறிப்பிட்டத் தொகை வெளிநாட்டில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பெற நீங்கள் இந்த வங்கியில் உள்ள இந்த கணக்கில் இவ்வளவு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறி மின்னஞ்சல்கள், கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன.
÷இவ்வாறு வரும் அழைப்புகள் எதையும் பொது மக்கள் நம்பி ஏமாற வேண்டாம். ரிசர்வ் வங்கி வைப்புத் தொகை விஷயமாக எந்த தனிப்பட்ட நபரையும் தொடர்பு கொள்வது இல்லை.
÷இது தொடர்பாக மோசடியாளர்களை கண்டுபிடிக்க போலீஸôர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இவை அனைத்தும் இணையதளம் வாயிலாகவே வருகின்றன என்பதாலும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ள ஒருவரின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி இந்த மோசடிகள் நடைபெறுவதால் சம்பந்தப்பட்டவர்களை யார் என அடையாளம் காண்பதே பெரும் சிரமமாக உள்ளது.
÷எனவே, இத்தகைய மோசடிகளில் சிக்காமல் இருக்க பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு வரும் மின்னஞ்சல்கள், கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் அனைத்துக்கும் பொதுமக்கள் பொருட்படுத்தாமல், புறக்கணிப்பதன் மூலமே இந்த மோசடியில் சிக்காமல் இருக்கலாம்.
÷மேலும், பொது மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளை வேறு ஒருவர் அவரது தேவைக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அனுமதிப்பவர்களையே மோசடியாளர்கள் துருப்புச்சீட்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
÷தொடர்ந்து இது போன்று அழைப்புகள் வரும் நிலையில் அது சரியானதா என ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகத்தில் வெளிநாட்டு பண பரிமாற்ற பிரிவு பொது மேலாளரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
÷செப்டம்பர் 8-ம் தேதி கோவையிலும், 9-ம் தேதி கரூரிலும் இந்த மோசடிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது என்றார் கே.ஆர். ஆனந்தா.
இடுகையிட்டது BULLMARKETINDIA நேரம் புதன், ஆகஸ்ட் 25, 2010 0 கருத்துகள்